Posts

Showing posts from August, 2025

ஜோதிடத்தில் உறவுகள்

Image
  ஜோதிடத்தில் உறவுகள் மனிந வாழ்வில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்பை இணைப்பை உறவு எனலாம். பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு, குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. கணவன்- மனைவி அல்லது சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு மிருகங்களுக்கிடையேயும் உண்டு. சிலர் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் இயற்கைக்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒப்பு நோக்குவதுமுண்டு. தனிநபர்களுடன் ஒருவருடைய தனிப்பட்ட உறவு. சில நபர்களுடன் உங்கள் தனிப்பட்ட உறவைப் பற்றிய அறிவதற்கு பிறந்த ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அடிப்படையில் சில ராசிகளில் கிரகங்களை இருந்தால் என்ன விளைவுகள் தரும் என்பதை ஆராய்வேம். மேஷம்/விருச்சிகத்தில் செவ்வாயின் ராசிகளில் சனி , ராகு & கேது இருந்தால் (...

ஜோதிடத்தில் அடிப்படைகள்

Image
  ஜோதிடத்தில் அடிப்படைகள் சூரிய குடும்பம் சூரியனை மையமாகக் கொண்டுள்ளது. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகிய ஒன்பது கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. வேத ஜோதிடத்தில் பொதுவாக யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகியவை கிரகங்களாக கருதப்படுவதில்லை. புதன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்கள் உள் கோள்கள் என்றும், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் வெளி கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சந்திரன் குறிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நிழல் கோள்களான ராகு மற்றும் கேதுவும் கிரகங்களாகக் கருதப்படுகின்றன, மேலும் இவை உண்மையில் சந்திரனின் சுற்றுப்பாதைகள் மற்றும் பூமியின் சுற்றுப்பாதைகளின் வெட்டும் புள்ளிகளாகும். பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதன் அச்சில் சுழன்று வருவதால், சூரியனும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்வது போல் தெரிகிறது. பூமியின் அச்சு அதன் சுற்றுப்பாதையின் தளத்திற்கு செங்குத்தாக இருந்து சுமார் 23.5° கோணத்தில் சாய்ந்துள்ளது. பூமியின் சுற்றுப்பாதை தளம் கிடைமட்டமாகக் கருதப்பட்டால், இந்தக் கோட்டிற்கு...