சுப - அசுப பலன்களை அளிக்கும் 20 ஆகிருதி யோகங்கள் !
சுப - அசுப பலன்களை அளிக்கும் 20 ஆகிருதி யோகங்கள் ! கிரகங்கள் குறிப்பிட்ட வீடுகளில் அல்லது ராசிகளில் இருப்பதால் ஏற்படும் யோகங்கள் ஆகிருதி யோகங்கள் எனப்படும் . இதில் ஒரு சில சுப யோகங்களும் ஒரு சில அசுப யோகங்களும் உண்டு . ஜோதிட மேதை வராகமிகிரர் தந்த பிருஹத் ஜாதகம் என்ற நூல் இன்றைய நவீன ஜோதிட நூல்களுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளது. அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நாபஸ யோகங்களில் உள்ள 20 ஆகிருதி யோகங்களில் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். 1 - யூப யோகம் "சுகமொடு மூன்றிரண்டு தூயநற் சென்மந்தன்னில் பகலவன் முதலேழ் கோளும் பற்றிட யூபயோகம் மகமுடன் யாகஞ்செய்து மகிழவிற் பாகமீவேன் மிகுவிதரணை யினோடு மேவுமிங்கு தகுணத்தான்" (இ-ள்) லக்னம் , இரண்டு , மூன்று , நான்கில் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு சுக்கிரன் , சனி இருந்தால் யூப யோகம் எனப்படும் . இந்த யோகம் உடையவர்கள் தன்னலமற்ற குணமுடையவர்கள் . தர்ம காரியங்களுக்கு உதவுவார்கள் . பொதுச் சேவைகள் செய்பவர்கள் புகழ் சுகவாழ்வு அமையும் 2 - சர யோகம் "நாலுடனைந் தாறேழில் நாடுமேழ் கோவேநிற்க ஞாலமீதுதித்த சேய்க்கு நண்ணி சரயோகந்தான் சாலவு மரனிரி...