செவ்வாய் தோஷம் (ஒர் ஆய்வு)
செவ்வாய் தோஷம் (ஆய்வு)
சூரியன் சோமன் செவ்வாய் சொற்புதன் வியாழன் வெள்ளி காரியும் ராகு கேது கடவுளர் ஒன்பானிவர் நாரியல் காக்க ஆவதுத் தரித்தின் பூசித்தாலும் பாரினில் புத்திரர் உண்டாம் பாக்கியம் நல்கும் தானே !
செவ்வாய் ஆங்கிலத்தில் மார்ஸ் என்றும் தமிழில் அங்காரகன் என்று பெயர். சூரியனிடமிருந்து 4- வது கோளாகும். இரண்டாவது சிறிய கோள்.ரோமானிய போர்க்கடவுளின் பெயாரல் அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிவப்புக்கோள் என்கின்றனார்
மணவாழ்க்கையில் முக்கியத்துவம் பெறும் பாவங்கள் லக்கினம்,இரண்டாம் வீடு, நான்கம் வீடு,ஏழாம் வீடு,எட்டாம் வீடு, பன்னிரண்டாம் வீடு ஆகிய வீடுகளில்
ஒன்றில் இயற்கை பாவக்கிரகங்கள் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது இருந்தால் தோஷங்களைத் தருவாரகள் ஆண்/பெண் ஆகிய இருவரின் ஜாதகத்தில் பன்னிரு பாவங்களையும் ஒன்று படுத்தி ஆராய்ச்சி செய வேண்டும் அல்லது இல்வாழ்க்கை பாவங்களகிய 1-2-4-7-8-12 ஆம் பாவங்களை இணத்து பார்க்க வேண்டும். இருவரின் இல்லற பாவ ஒற்றுமையைக் கவனிக்க வேண்டும்.
நவக்கிரகங்களில் அங்ககாரகன் எனும் செவ்வாய் இருக்கும் இடங்களைப் பொறுத்து ஆண்/பெண்களுக்கு செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணத் தடை ,திருமண வாழ்வில் பாதிப்பை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷத்தால் பாதிப்புகள் உண்டா?பாதிப்புகளில் இருந்து விடுபட என்ன? வழிகள் உள்ளது என்று ஆராய்வேம்.
செவ்வாயின் ராணுவ கண்டிப்பான வாழ்கையை யாரும் விரும்புவதில்லை .
ஒரு குடுப்பபத்தில் பல உறுப்பினர்கள் இருப்பர்கள் அவர்களின் மென்மையான/ முரட்டுத்தனமான குணங்கள் கொண்டவர்கள் இருப்பர்கள் எல்லோரும் முரட்டுத்தனமான பிள்ளைகளின் திருப்தி படுத்தவே முயல்வார்கள் இது இயற்கை அதுபோலவே செவ்வாய் அமர்வினை சமன்படுத்த ஜாதக ரீதியாக அதே அமைவுள்ள ஜாதகங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.
லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஒன்றில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும். பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பதும் தோஷம்தான்.
செவ்வாய் தோஷத்திற்கு பலன்கள் பொதுப்படையாகவே கூறியுள்ளர்கள் ஆனால் பலன்கள் எந்த காலங்களில் ஏற்படும் என்பதை விளக்கவில்லை. திரு.பி.எஸ்.ஐயர் அவர்கள்
செவ்வாய் தோஷத்தால் எந்தவித தீமையும் அமைந்து விடுவதில்லை அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஜோதிட ஆசான்கள் தீவிரமாக ஆராய்து முடிவு செய்ய வேண்டும்.
நம்மிடையே செவ்வாய் தோஷம் என்ற ஒரு பயம் உணர்வு முதலில் நீங்க வேண்டும் ?
ஜோதிடரைச் சந்தித்தவுடன் இந்த இரண்டு ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் உண்டா? என முதலில் கேடகின்ற கேள்வியை நிறுத்த வேண்டும்.
பெற்றோர்கள் தன்னுடைய மக்களுக்கு திருமணம் நிச்சயிக்க முற்படும்போது திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக ஜோதிடரை அணுகும்போது மணமகன் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார், மணமகள் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார். இரு வீட்டாரும் அவரவர் ஜோதிடர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு குழம்பிவிடுகின்றனர்.
லக்கினம் சந்திரன் சுக்கிரன் மூவருக்கும் 2-4-7-8-12-ஆம் வீடுகளில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.
லக்கினத்திற்கு 2-4-7-8-12-ல் ஆகிய இடங்களில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் முழுப் பங்கு தோஷம்.
சந்திரனுக்கு 2-4-7-8-12-ல் ஆகிய இடங்களில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் முக்கால் பங்கு தோஷம்.
சுக்கிரனுக்கு 2-4-7-8-12-ல் ஆகியவீடுகளில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் அரைப் பங்கு தோஷம்.
தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்தால் செவ்வாய் செவ்வாய் திசா/ புக்தி காலங்களில் வாழ்கைத் துணைவர்களுக்கு பாதிப்பைத் தரும்.
மேல் கண்ட அமைப்பில் ஒருவரின் ஜாதகத்தில் தோஷ நிலை உருதியாக அமைந்துவிடும்.
இரண்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு மரகத்தை தரக்கூடிய இடமாகும். முன்கோபம் ,எடுத்தெரிந்து பேசுதல்,குடும்ப தொடர்பன சச்சரவும்,வீபரீதங்கள், துணைவர்களின் ஆயுள் பாதிக்கும், குடுப்ப உறுப்பினர்களையும் பகைத்துக் கொள்வர்கள், திருமணத் தாமதமாகும்.
பிற கிரக சேர்கையிருந்தால் தோஷமில்லை
“ஆரல் முக்குரவன் இரண்டிலே யிருந்தால் அற்ப மாம் திரவிய கேடு “ (சுகர் நடி)
(இ-ள்) இரண்டில் செவ்வாய் இருந்தால் செல்வச் சேர்க்கை பாதிக்கப்படும்.
நான்கில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு குடும்பத்தின் சமூக சூழ்நிலைகளைக் குறிக்கும்.வாகனம், வீடும், சுக வாழ்விற்கு பாதிப்பும் .உறவினர் பகையும்,தொழில் வகையில் சச்சரவு ஏற்படும்.வீடுகள் பாதிப்படையும்,அடிக்கடி தொழில் மாற்றம், தாய்யின் நலன் பாதிக்கும். பிற கிரகச் சேர்க்கை இருந்தால் தோஷமில்லை.
நாலிலே செவ்வாய் நயந்துமே யிருந்தால் சகைபட வாழ்வனீனன் (சுகர் நடி)
(இ-ள்) நான்கில் செவ்வாய் இருந்தால் வாழ்வில் சிறமத்துடன் கஷ்டப்பட்டு கீழ்நிலையில் வாழ்வர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மரகத்தை தரக்கூடிய இடமாகும்.ஜாதகர் /ஜாதகிக்கு வாழ்கைத் துணைவர்கள் முரட்டு தைரியம், ஆணவம், நெறிதவருவர்கள், குடும்ப உறவுகள் பாதிக்கும். அன்னியோன்னியம் குறையும். துணைவரின் உடல் அடிக்கடி நோய்வய் படும்.குடியிருப்பு அடிக்கடி மாற்றம் ஏற்படும்.ஜாதகர் பிற பெண்களின் சேர்க்கை (விதவைகள் தொடர்பு) மனதில் நல்சிந்தனை இருக்காது. தீய வர்த்தை
பேசுவர்கள்.அதி காம உணர்ச்சி உள்ளவர்கள் சுய இன்பம் கன்பார்கள்.முறை தவறிய உறவு பல பூமி, நிலங்களை அதிகமாக சம்பாத்தியம் செய்வர்கள்.
செவ்வாய் ஆட்சி /உச்சம் /நீச்சம் /பிற கிரகங்களின் சேர்க்கை இருந்தால் செவ்வாய் தோஷமில்லை.
காட்டுமாம் ஏழதிலே செவ்வாய் நிற்க காளையிவன் விதவை தன்னைச் சேரவல்லான் பூட்டகமாய் நயவாக்கேனன் கபடுடையான் பூமிக்களை விசஷமாய்த் தேடிவைப்பான்
(இ-ள்) ஏழில் செவ்வாய் இருந்தால் ஜாதகன் பல பெண்களை சேர்வான்.சிறப்பபாக தந்திரமாக பேசுவர்கள்.மனதில் நல்ல எண்ணம் இருக்காது.
எட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளால் தொள்ளை மாரடைப்பு,காய்ச்சல் ஏற்பட்டு குணமாகும்.உஷ்ண தொடர்பன நோய்கள் அடிக்கடி வரும்.மாமன் உறவு பாதிக்கும். பலருடன் சுகம் கண்பர்கள்.
குருவின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் செவ்வாய் தோஷத்தை தருவர்.
செவ்வாய் / ராகு சேர்க்கை மாதவிடாய்க் கோளாறு ஏற்படுத்தும்.
உண்டாகும் எட்டதிலே சேயிருக்க. உண்மையது அற்பமாம் தாரம் மூன்றோன் கொண்ட மங்கை தனக்குமே கர்ப்ப கண்டம் கொடுத்துவிடுமதனாலே குற்றமுண்டு
எட்டில் செவ்வாய் இருந்தால் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க மாட்டர்கள்.மூன்று திருமணம் நடக்கும். மனைவிக்கு கர்ப்ப காலத்தில் கண்டம் ஏற்படும்.
பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் ஆண்/பெண் சிற்றின்பம் அனுபவிக்கும் இடமாகும்.கோள் சொல்லும் குணம் காரியங்களுக்கு முயற்ச்சி அதிகம். ஜாதகர்/ஜாதகிக்கு படுக்கை அறை தகராறுகள் அதிகம் ஏற்படுத்தும்.ஆண்கள் சுய இன்பம் கண்பார்கள்.பெண்களுக் அதன் மிது வெறுப்பு ஏற்படும்.சுகம் பாதிக்கும் . சுகமின்மை,பயமும் துக்கமின்மையும் ஏற்படுத்தும். தோல்விக்குப் பின் வெற்றி கிட்டும்.
பன்னிரண்டில் செவ்வாய் பதிந்திடத் தாரம் பலித்திடும் ரெண்டுடன் பகருமே
மைந்தனே ஈராறில் மரணகாலம் அவஸ்தை நேரா
சுகந்தரன்வீர சுகர்க்கமுடை யோனாகும்
(இ-ள்) செவ்வாய் 12-ல் இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும்.12-வயதில் மரணம் ஏற்பட வாய்புள்ளது.பலவிதமான துன்பம் ஏற்படும். வீர சுவர்க்கம் அடைவர்கள். (கசுபர்கள் சேர்க்கை பார்வையிருந்தால் ஆயுள் பலம்)
“வாக்கினும் நாலேழெட்டு மறுவுமீறாரில் செவ்வாய்
தோக்கிய வரன் தனக்கு வந்து நிற்கில்
ஆக்கிய மனையாள் சாவாள் ஆயிழை தனக்கு நிற்கில்
பாக்கியம் சேர் புருஷன் செத்து பார்தனில் விதவையமே “
(இ-ள்) ஆண்களின் ஜாதகத்தில் 2-4-7-8-12 -ஆம் வீடுகளில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் ஜாதகரின் மனைவி மரணத்தை அடைவாள். பெண்களின 2-4-7-8-12 – ஆம் வீடுகளில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் ஜாதகியின் கணவன் மரணத்தை அடைவர்கள் .
“உதிக்கும் சப்தமம் தனிலேனும் ஒரெட்டிலும் வியத்திலும்
மதிக்கும் நான்கு இரண்டிலும் மங்கலனிருக்க தோஷமென்பார்
(இ-ள்) லக்கினத்திற்கு 7-8-12-ஆம் வீடுகளில் செவ்வாய் இருந்தால் / சந்திரனுக்கு 2-4-ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷத்தை தருரவர்.
சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்
சுக சப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்
அல்லப்பா அத்தலத்தில் ஆரல் நிற்க
அப்பனே சுகமும் பொருளும் நிலமும் நஷ்டம்
குள்ளப்பா குடும்பமது சிதறிப் போகும்
கெற்றவனே குருவுக்கும் தோஷமுண்டாம்
வல்லப்பா போகருட கடாஷத்தாலே
வளமாகப் புலிப்பாணி வாசனித்தேனே
(இ-ள்) இன்னும் ஒன்று கூறுகிறோன் கேட்பாயாக 6-8-12-ல் / கேந்திரம் எஎனப்படும் 4-7-ல் / 2-9-ல் ஆகிய வீடுகளில் ஒன்றில் செவ்வாய் இருந்தால் ஜாதகரின் சுகம், பொருட்களும்,நிலங்களும் பாதிப்படையும். குடும்பத்தில் குழப்பமும், சச்சரவு ஏற்பட்டு பிரிவினைகள் ஏற்ப்படுத்தும்.குருவுக்கும் (ஆசிரியர் பாதிப்பு தரும். போருடைய அருளால் சிறப்பாக புலிப்பாணி கூறுகிறோன்.
செவ்வாய் 2-7-8-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் முழுப் பாவி ஆவர்.
செவ்வாய் 4-12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் அரைப் பாவி ஆவர்.
செவ்வாய் 2-4-7-8-12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் செவ்வாய் திசா/புக்தி காலங்களில் பாதிப்பை தருவர்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன்/செவ்வாய் /சனி/ராகு /கேது இவர்கள் இணைந்தே
அல்லது தனித்தனியாகவே ஏழாம் வீட்டில் இருந்தால் திருமண வாழ்வில் கானல்நீராய் காட்சி அளிக்கும்.
தசவித பொருத்தங்கள் பார்பதற்கு முன் செவ்வாய் தோஷ ஆராய்ச்சிக்கு வருவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றது அவைகளை கண்போம்.
சில ஜோதிட நூல்களில் செவ்வாய் தோஷத்திற்கு விதி விளக்குகள் கூறப்பட்டுள்ளது. விதிமுறைப்படி அமைந்துள்ள ஜாதகங்களில் மட்டுமே செவ்வாய் தோஷத்தை தருவர்
போதுவாக தோஷங்களை சரியான முறையில் ஆராய்து ஆலோசித்து முடிவுகள் செய்வது வாழ்வில் நலம் சேர்க்கும்.
1) என்பதிற் தோடத்திற்கு ஏற்றதோர் பரிகாரங்கேள்
அன்புள வேழின் குற்றம் மாடுதேள் மகரம் நன்டு
இன்பமாம் மிதுனங்கன்னி யிவைகட்கே யில்லையென்றார்
என்றூழ் சேய் பாம்புகூட எதிர் நோக்கில் தோடமில்லை
(இ-ள்) தோஷ நிவர்த்திகள் ரிஷபம் /மிதுனம் /கடகம் /கன்னி/ விருச்சிகம் /மகரம் ஆகிய ராசிகள் ஏழாம் வீடாக அமைந்து செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
செவ்வாய் மேஷம் / விருச்சிகம் ஆட்சி பொற்றால் செவ்வாய் தோஷமில்லை.
மேஷம் /விருச்சிகம் 4 - 8 – 12 ஆம் வீடாக அமைந்து அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
2)செவ்வாய் மகரத்தில் உச்சம் பொற்றிருந்தால் தோஷமில்லை.
மகரம் 7 – 8 ஆம் வீடாக அமைந்து அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
3)செவ்வாய் கடகத்தில் நீச்சம் பொற்றிருந்தால் தோஷமில்லை.
கடகம் 7 ஆம் வீடாக அமைந்து அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
4) செவ்வாய் சிம்மத்தில் இருந்தால் தோஷமில்லை .
சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை.
சிம்மம் 8 – 12 ஆம் வீடாகி அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
5)கன்னி/மிதுனம் 2 ஆம் வீடாகி அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
மிதனம்/கன்னி லக்கினத்திற்கு 12 -ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
6)ரிஷபம் /துலாம் லக்கினத்திற்கு செவ்வாய் 4 -ல் இருந்தால் தோஷமில்லை.
ரிஷப லக்கினத்திற்கு 12- ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
ரிஷபம் /துலாம் 12 -ஆம் வீடாக அமைந்து செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.
7) இல்லையே யெட்டிற் செவ்வாய் யிருக்கமீன் சிலைக்கு மிலையாம்
தொல்லையாம் பன்னிரண்டிற் துலை விட ராசிக்கே தான்
நல்லதே ரறி கும்பத்தில் நாடாதித் தோடமென்பார்
சல்லியன் குருவும் நோக்கில் சமுசயமில்லை நன்றாம்
(இ-ள்) எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்து தனுசு மீனமாக இருப்பின் தோஷமில்லை. ரிஷபம் /துலாம் பன்னிரண்டாம் வீடாகி செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. சிம்மம் /கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. தோஷம் தரும் செவ்வாயை சூரு/சுக்கிரன் பார்த்தால் தோஷமில்லை.
தனுசு /மீனம் லக்கினத்திற்கு 8- ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
தனுசு/மீனத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.
8)கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும்தோஷமில்லை.
9)சந்திரன் /செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் தோமில்லை.
10)புதன்/செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் தோஷமில்லை.
11)செவ்வாய்/குரு சேர்க்கை இருந்தாலும் தோஷமில்லை.
12)செவ்வாய் பரிவர்த்தனை பொற்றிருந்தால் தோஷமில்லை.
13)செவ்வாய் நீச்சம்/வக்கிரம்/ அஸ்தமனம்/ பொற்றிருந்தால் தோஷமில்லை.
14)செவ்வாய் மிது குரு/சுக்கிரன் பார்வையிருந்தால் தோஷமில்லை.
15 )செவ்வாய் 2-4-8-12- ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்து அது சர ராசியாக இருந்தால் தோஷமில்லை
சர ராஷிக. தோபௌமசது ரஷ்டவ்யயேத்வயே லக்னே பாவி நாஷஸ்யாத் :தருஷ்டே வாநைவஸம்பவேத்
1-2-4-8-12-ஆம் வீடுகள் சர ராசியாக இருந்து செவ்வாய் அதில் இருந்தால் செவ்வாய் தோஷத்தை தராது.
நன்றாகும் மெட்டுரண்டு நான் குடனீ ராரதனில்
நின்றாம் சரராசிக்கு நிலைத்திட சேயின் தோஷம்
குன்றாத செல்வம்மக்கள் குவலய சுகங்ளோங்கும்
குன்றதான் கேரளத்தில் எடுத்துரை செய்தார்தானே
(இ-ள்) 2-4-8-12- ஆம் வீடுகள் சரராசியாக அமைந்து செவ்வாய் இருந்தால் தோஷமில்லை செல்வ வளமையும் நன்மனை/மக்கள் சுகபோகமுடன் வாழ்வர்கள்.
1-2-4-8-12-ஆம் வீடுகள் ஸ்திர/உபய ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷத்தை தருவர்கள்.
16) சூரியன், புதன், குரு, சனி, ராகு, கேது முதலிய கிரகங்களில் ஏதோ ஒன்றுடன் செவ்வாய் இணைந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ தோஷமில்லை.
17) செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி, லக்கினத்திற்கு கேந்திரத்திலோ 1-4-7-10-ல் அல்லது திரிகோணத்திலோ5 5-9- ல் இருந்தாலும் செவ்வாய் தோஷமில்லை.
18) செவ்வாய் மற்ற கிரகங்களுடன் பரிவர்த்தனையில் இருந்தாலும் தோஷமில்லை. அதாவது செவ்வாயின் சொந்த வீடுகளாகிய மேஷம், விருச்சிகத்தில் ஏதேனும் கிரகங்கள் அமர்ந்திருக்க, அந்த கிரகத்தின் வீட்டில் செவ்வாய் இருப்பது பரிவர்த்தனை எனப்படும். உதாரணத்திற்கு சூரியன் விருச்சிகத்தில் இருக்க, செவ்வாய் சிம்மத்தில் இருப்பது பரிவர்த்தனை யோகமாகும்.
மேஷ லக்கினம் ;-
இரண்டாம் இடம் ரிஷபம் செவ்வாய் பாதிக்கும்
நான்காவது இடம் கடகம் சரராசி,நட்பு வீடு தோஷமில்லை .
ஏழாம் இடம் துலாம் சரராசி லக்கினாதிதி ஏழில் தோஷமில்லை.
எட்டாம் இடம் விருச்சிகம் ஆட்சி வீடு தோஷமில்லை.
பன்னிரெண்டாம் இடம் மீனம் நட்பு வீடு தோஷமில்லை.
மேஷ லக்கினத்திற்கு இரண்டில் செவ்வாய் தோஷம் தருவர்கள்.
ரிஷப லக்கினம் :-
இரண்டாம் வீடு கடகம் நட்பு வீடு தோஷமில்லை
நான்காவது வீடு சிம்மம் நட்பு வீடு தோஷமில்லை
ஏழாம் வீடு விருச்சிகம் ஆட்சி வீடு தோஷமில்லை
எட்டாம் வீடு தனுசு நட்பு வீடு தோஷமில்லை
பன்னிரெண்டாம் வீடு மேஷம் ஆட்சி வீடு தோஷமில்லை
ரிஷபம் லக்கினத்திற்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை.
மிதுன லக்கினம் ;-

நான்காவது வீடு கன்னி தோஷமுண்டு
ஏழாம் வீடு தனுசு நட்பு வீடு தோஷமில்லை
எட்டாம் வீடு மகரம் உச்ச வீடு & சரராசி தோஷமில்லை
பன்னிரெண்டாம் வீடு ரிஷபம் தோஷமில்லை
ரிஷப லக்கினத்திற்கு நான்கில் மட்டும் தோஷம் ..
கடக லக்கினம் ;-
செவ்வாய் யோகாதிபத்தியம் அடைவதால் எங்கிருந்தாலும் தோஷமில்லை
சிம்ம லக்கினம்
செவ்வாய் யோகாதிபத்தியம் அடைவதால் எங்கிருந்தாலும் தோஷமில்லை .
கன்னி லக்கினம் ;-
இரண்டாம் வீடு துலாம் சரராசி தோஷமில்லை
நான்காவது வீடு தனுசு நட்பு வீடு தோஷமில்லை
ஏழாம் வீடு மீனம் நட்பு வீடு தோஷமில்லை
எட்டாம் வீடு மேஷம் ஆட்சி வீடு தோஷமில்லை
பன்னிரெண்டாம் வீடு சிம்மம் நட்பு வீடு தோஷமில்லை
கன்னி லக்கினத்திற்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை .
துலா லக்கினம் ;-
இரண்டாம் வீடு விருச்சிகம் ஆட்சி வீடு தோஷமில்லை
நான்காவது வீடு மகரம் சரராசி உச்ச வீடு தோஷமில்லை
ஏழாம் வீடு மேஷம் ஆட்சி வீடு தோஷமில்லை
எட்டாம் வீடு ரிஷபம் தோஷம் உண்டு
பன்ரெண்டாம் வீடு கன்னி தோஷம் உண்டு
துலா லக்கினத்திற்கு 8-12-ல் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டு.
விருசிக லக்கினம் ;-
இரண்டாம் வீடு தனுசு நட்பு வீடு தோஷமில்லை
நான்காவது வீடு கும்பம் தோஷமில்லை
ஏழாம் வீடு ரிஷபம் தோஷம் உண்டு
எட்டாம் வீடு மிதுனம் தோஷம் உண்டு
பன்னிரெண்டாம் வீடு துலாம் சரராசி தோஷமில்லை
துலா லக்கினத்திற்கு 7-8-ல் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டு .
தனுசு லக்கினம் ;-
இரண்டாம் வீடு மகரம் சரராசி தோஷமில்லை
நான்காவது வீடு மீனம் நட்பு வீடு தோஷமில்லை
ஏழாம் வீடு மிதுனம் தோஷம் உண்டு
எட்டாம் வீடு கடகம் சரராசி நட்பு வீடு தோஷமில்லை
பன்னிரெண்டாம் வீடு விருச்சிகம் ஆட்சி வீடு தோஷமில்லை
தனுசு லக்கினத்திற்கு செவ்வாய் 7-ல் தோஷம் உண்டு .
மகரம லக்கினம் ;-
இரண்டாம் வீடு கும்பம் தோஷமில்லை
நான்காவது வீடு மேஷம் சரராசி ஆட்சி வீடு தோஷமில்லை
ஏழாம் வீடு கடகம் சரராசி நீச்ச வீடு தோஷமில்லை
எட்டாம் வீடு சிம்மம் நட்பு வீடு தோஷமில்லை
பன்னிரெண்டாம் வீடு தனுசு நட்பு வீடு தோஷமில்லை
மகர லக்கினத்திற்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை .
கும்பம் லக்கினம் ;-
இரண்டாம் வீடு மீனம் நட்பு வீடு தோஷமில்லை
நான்காவது வீடு ரிஷபம் தோஷமில்லை
ஏழாழ் வீடு சிம்மம் நட்பு வீட தோஷமில்லை
எட்டாம் வீடு கன்னி தோஷமில்லை
பன்னிரெண்டாம் வீடு மகரம் சரராசி உச்ச வீடு தோஷமில்லை
கும்ப லக்கினத்திற்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை
மீனம் லக்கினம் ;-
இரண்டாம் வீடு ஆட்சி வீடு தோஷமில்லை
நான்காவது வீடு மிதுனம் தோஷம் உண்டு ஏழாம் வீடு கன்னி தோஷம் உண்டு
எட்டாம் வீடுதுலாம் சரராசி தோஷமில்லை
பன்னிரெண்டாம் வீடு கும்பம் தோஷமில்லை
மீன லக்கினத்திற்கு செவ்வாய் 4-7-ல் இருந்தால் தோஷம் உண்டு
பெண்கள் ஜனன ஜாதக பலபோதினி
செவ்வாய் தோஷம்
உண்டென லக்கி னத்தோ டுகந்திடு மிரன்டு நான்கு
அண்டின தேழு யெட்டு ஆனதோர் பன்னி ரண்டுத்
தன்னிலும் மதியுள் ராசித் தானவ குருவேர் வீட்டிற்
கின்னில மைந்தன் நிற்கி லிழுக்குடை தோடந் தீதே
(இ-ள்) ஜாதகத்தில் லக்கினம்/இரண்டு/ நான்கு / எட்டு/பன்னிரண்டு வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம். சந்திரனுக்கும்&சுக்கிரனுக்கும் மேற் கண்ட வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் ஏற்படுத்தும்.
தீதுருந் நான்கு ரண்டுத் திக்குட னேழ் பன்னிரண்டிற்
கோதுருந் சனியும் பாம்புக் குளிகளுந் நிற்பா னாகில்
வேதிக்குங் குச தோடம்போல் விதித்தனர் முனிவரென்று
சோதித்தே யுரைத்தார் முன்னோர் சூட்சமு மறிவீரே
(இ-ள்) தீமைகளைத் தரும் கிரகங்கள் சனி/ராகு/கேது /மாந்தி இவர்கள் இரண்டு/ நான்கு/ஏழு/எட்டு/பன்னிரண்டு வீடுகளில் இருந்தால் செவ்வாய் தோஷத்தை போல் தோஷங்களைத் தருவர்கள்.
அறிய மூவகையா யுள்ள யவனி சேய் குற்றந் தானுந்
தெரிவையர்க் குள்ள தாகில் தீங்குளாள் பர்த்தா வுக்கு
புருடனுக் கமய நில்லாள் பூவையிக் கோது மிருபால்
லிருக்கினும் மக்களின்ப மெழில் சுகம் பெருகு மென்பார்
(இ-ள்) லக்கினம் /சந்திரன் /சுக்கிரன் ஆகிய மூன்று விதமாக செவ்வாய் தோஷம் ஏற்படும் பெண்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்து ஆணுக்கு இல்லை என்றால் பெண்களின் கணவனுக்கு பாதிப்பைத் தரும்.
ஆண்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்து பெண்களுக்கு இல்லை என்றால் மனைவிக்கு பாதிப்பைத் தரும்.ஒருவருக்கு செவ்வாய் தோஷம் அதிகமாக இருந்து மாற்றவர்கு குறைவாக இருந்தால் சற்றுகாலம் தாமதமாகி தோஷம் தரும்.இருவருக்கும் சமமாக இருந்தால் பாதிப்பின்றி சிறப்பாக அனைத்து சுக போகமும் செல்வ வளமும் கிடைக்கும்.
தானே விரண்டுயேமும் தான்தோடம் புருடனுக்காம்
மானினி தனக்குநாளும் மாதமும் தோடமென்பார்
ஆனியா மிருவருக்கும் அட்டம மென்றேசொன்னார்
மானிலத்திவ் வாரேபார் மகன்தோட மரிகுவீரே
(இ-ள்) சிலர் செவ்வாய் தோஷத்தை பிரித்துப்பார்ப்பது அவசியம் என்று கூறினார்கள்.அதாவது 2 / 7 ஆம் வீடுகள் ஆண்களுக்கு தோஷம். பெண்களுக்கு 4 / 12 வீடுகள் தோஷம். எட்டாம் வீடு இருவருக்கும் தோஷம் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
செவ்வாய் தோஷமும் விஞ்ஞானமும்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 – 4 – 7 – 8 - 12 ஆகிய இடங்களில் செவ்வாய் நின்றால் அதை செவ்வாய் தோஷம் என்பார்கள் அவர்களுக்கு செவ்வாய் தோசம் உடையவர்களாகவே மணமுடித்து வைக்க வேண்டும் இவ்வாறு நமது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது இதைப்பற்றி மருத்துவ விஞ்ஞானம் என்ன சொல்கிறது செவ்வாய் நமது உடலில் ஓடும் ரத்தத்தில் காரணமாகிறார் செவ்வாய் தோஷம் உள்ள ஆண் அல்லது பெண்ணின் ரத்தத்தை ஆராய்ந்தால் அவர்கள் ரத்தத்தில் HO கிருமிகள் அதிக அளவில் இருக்கும் ஆனால் அவை அவர்களை பாதிக்காது காரணம் அவற்றை எதிர்க்கும் சக்தி அவர்கள் உடலில் இயற்கையாக இருக்கும் எனவே செவ்வாய் தோஷம் உடையவனை செவ்வாய் தோஷம் இல்லாத பெண்ணுக்கு மணம் முடித்தால் கணவனின் ரத்தத்தில் உள்ள HO கிருமிகள் மனைவியின் உடலில் சென்று விடும் அக் கிருமிகளை எதிர்க்கும் சக்தி மனைவியின் உடலில் இல்லாததால் அவளது உடல் பாதிக்கப்படும அதனால் அவள் நிரந்தர நோயாளி ஆகி விடுவாள் உயிருக்கு கேடு ஏற்படக்கூடும் என மருத்துவ விஞ்ஞானம் இந்த ஜோதிட உண்மையை நிரூபித்து உள்ளது எனவே செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரை மணம் முடிக்க வேண்டும் ஏனென்றால்
இருவருக்கும் எதிர்ப்பு சக்தி இருப்பதால் இருவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.
செவ்வாய் தோஷத்தில் பலவிதமான கருத்துக்கள் இருப்பதால் நன்கு ஆய்வு செய்து அவரவர்களுடைய அனுபவ அனுபவத்திற் கேற்ப சாதகத்தை இணைத்து கொள்ளவும்.
செவ்வாய் தோஷங்களைப்பற்றி ஜாதக சந்திரிகை / தேவ கோரளம் / ஜாதகசாரம் / பலித மார்த்தாண்டம் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ள விதி விலக்குகளை இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தால் மட்டுமே பாதிப்பை தருவதில்லை. பாதிக்கப்படும் காரகத்துவத்திற்கு ஏற்ப்ப கிரகங்கள் பங்கொள்கின்றனார்.
எனது அனுபவத்தில் ஒரு ஆணுக்கு செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் அவர் பெண்களின் குண இயல்பினைப் பெற்றிருப்பார்கள்.(அம்மாவின் சாயல்)
பெண்களின் ஜாதகத்தில் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் ஆண்களின் குண இயல்பினைப் பெற்றிருப்பார்கள். (அப்பாவின் சாயல்)
செவ்வாய் தோஷம் என்ற சம்பிரதாயத்தால் பல பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வாழ்வு பாதிப்புக்குள்ளகின்றது.
செவ்வாயின் வரலாறு
செவ்வாய் அங்காரகன் என்றால் நெருப்பு இவருக்கு குஜன் என்றும் மங்களன் என்றும் அழைப்பார்கள்.
சித்தாந்தங்கள் செவ்வாய்கு ஐந்து முகங்கள் உண்டு என்று கூறுகின்றது அவைகள் அச்ருமுகம் வியால முகம், ருதிரான்ன முகம், நிஸ்தரிச முகம் என்பர்கள்.
சிவபெருமான் பார்வதி தேவியாகிய உமையை பிரிந்து இருந்தார்.அப்போது உமையின் நெற்றியிலிருந்து வந்த வியர்வை துளியானது பூமியில் விழுந்தாது. அதிலிருந்து தோன்றியலர் அங்காரகர்.
அங்கரகர் பரத்வாஜ் முனிவரின் மகனாக பிறந்தார்.அவரை பூம தேவி வளர்த்தார். எனவே மங்களன் எனவும் அங்காரகன் என்று பெயர் பெற்றார்.
மச்சபுராணம் அங்காரகன் வரலாற்றை வேறு விதமாக கூறுகிறது.சிவபெருமான் சினம் கொண்ட போது அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரர் தோன்றினார்.
சிவபெருமானை மரியாதை செய்யாமல் யாகம் நடத்திய தட்சனின் யாகத்தை அழித்து பராக்கிரமத்தை பார்த்தத தேவர்கள் நடுநடுங்கினர் எனவே அவர்களுக்கு இறங்கிய வீரபத்திரர் தம் உருவத்தை மாற்றி அங்காரகன் ஆனார் என கூறுகிறது.
செவ்வாய்க்கிழமை விரதம்
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்கள வார விரதம் என்று கூறுவர்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும்,முருகனின் அருளும் கிடைக்கும். செவ்வாய் தோஷமும் நீங்கும்.ரத்த தொடர்பன நோய்கள் நீங்கி மனதில் தைரியமும்,வீரமும் உறுவாகும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்தபின்துவரை தானம் வழங்க வேண்டும்.அதன் பிறகு சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் தாம்பூலம் செவ்வாடை
தனமாக தர வேண்டும்.
செவ்வாய் திசை /செவ்வாய் நீச்சம்/ செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மையைத் தரும்.
செம்பவளத்தை கழுத்துச் சங்கிலியிலோ அல்லது மோதிரத்திலோ அணிய வேண்டும். செவ்வாய்க்கு செவ்வரளி மலர் சூட்டி வழிபாடு செய்தால் பிரிந்த சகோதரி /சகோதரர் ஒன்று சேர்வர்கள்
செவ்வாய் தோஷம் உண்டு அல்லது இல்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது. பரிகாரம் அல்லது நிவர்த்தி ஆகிவிட்டாது என்று கூறவில்லை இதை அவசியம் கவனிக்க வேண்டும். .
எனது அனுபவத்தில் நடுவில் தோன்றிய கேரள நூல்களில் தான் செவ்வாய் தோஷம் கூறப்பட்டுள்ளது. அதிக நூல்களில் தோஷ நிவர்த்தி பல விதி விலக்குகளும் கூறப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள பல ஜோதிடர்கள் இந்த விதி விலக்குகளை கவனிப்பதில்லை
செவ்வாய் தோஷத்திற்கு, தென் இந்திய மக்கள்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். வட இந்தியாவில் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியதுவம் தருவதில்லை.
தோஷத்தை ஜோதிடரும்&மக்களும் பெரிதுபடுத்தி பல திருமணங்கள் நடக்க தகுதி இருந்தும் தகுதி இல்லை என்று கூறி நடக்காமல் தடுக்க காரணமாணகி விடுகிறோம்.என்கிறார் திரு பி வி ராமன்
பெண்கள் ஜாதகத்தில் ஏழாம் வீடு பாதிக்கப்பட்டால் கணவனின் உடல் நலம் சந்தோஷம் முன்னேற்றம் பாதிக்கப்படும், & எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் மாங்கல்ய பலம் பதிக்கப்படும். எட்டாம் வீட்டில் இயற்கை பாவிகள் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும்.
மற்றைய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனி/சூரியன்/ராகு /கேது போன்ற கிரகங்கள் இதர பாவிகள் தரும் தோஷத்தை தருவர்.என்கின்றார் திரு எச் ஆர் சேஷாத்திரி அவர்கள்
பல நுற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆராய்ந்து அனுபவம் மிக்க ஜோதிடர் ஸ்ரீமான் ஓ.பி. லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தபோதினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ஜோதிஷ பாவத்திரைய நிர்ணயம் என்ற நூலில் செவ்வாய் தோஷம் என்று ஒரு தோஷமே இல்லை என்று குறிப்பிடுகிறார்.
எனவே ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர்களும் அனுபவத்தில் முதிந்தவர்களும் ஜாதகத்தை பாத்தவுடன் செவ்வாய் தோஷம் உண்டு என்று அள்ளி வீசிக் கொண்டு வருபவர்களானால் மணமக்களின் திருமண தாமதத்திற்குக் ககாரணகர்த்தாவாகி விடுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்கிறார் திரு நக்கீரர் எஸ் நடராஜன். அவர்கள்
மேல் கண்ட ஆய்வின் மூலமாக செவ்வாய் தோஷங்கள் தனிபட்ட வகையில் பதிப்பில்லை.!!

சூரியஜெயவேல் 9600607603
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment