ஸ்திரம் ராசியில் குரு
இன்று ஒரு ஜோதிடத்தகவல்
ஸ்திரம் ராசியில் குரு
சிறந்த திரத்தில் குருவிருக்குச்
செனித்த பாலன் திறம் கேளும்
பிறந்த நிலைமை விட்டு ஏகும்
பெரியோர் கூட்டம் உண்டாகும்
சிறந்த அன்னை வழி துக்கம்
செல்வம் உண்டாம் பாதினாறில்
அறமும் தெய்வப்பக்தி உளான்
அரசர் மகிழ்ச்சி உடையவனே
(இ-ள்) குரு ஸ்திர ராசியில் இருந்தால் பிறந்த ஜாதகர்கள் பிறத ஊரைவிட்டுவிட்டு வெளியூரில் வாழ்வர்கள். பெரியார்கள் தொடர்பு கிட்டும். அன்னை வழியில் நன்மையில்லை. 16-வயதில் செல்வம் கிடைக்கும்.தெய்வ பக்திமான், தர்மசீலன். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
ஸ்திர ராசிஎதிலும் உறுதியாகவும், எடுத்த முடிவில் நிலையான எண்ணத்தைக் கொண்டவர்கள் ஸ்திர ராசியினர். ஸ்திரம் என்றால் உறுதி. ♉ரிஷபம், ♌சிம்மம், ♏விருச்சிகம், ♒கும்பம் ஆகிய ராசியினர் ஸ்திர ராசியில் அடக்கம்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment