பிள்ளைகளின் ஜாதகம்
blogspot.com JODHIDAINBAM ஜோதிட இன்பம் Surya jeyavel Monday, 10 August 2015 பிள்ளைகளின் ஜாதக அமைப்பு ? பிள்ளைகளின் ஜாதக அமைப்பு ? பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்று தவமாய் தவமிருந்து, பெற்று சீராட்டி வளர்த்த பிள்ளைகளால் பெருமையும், பயனும் பெறும் சிறப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. தாய் தந்தைக்கு கட்டுப்பட்டு, பிறந்த குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பிள்ளைகளும் இருக்கின்றனர்.என்றாலும், எதற்கும் கட்டுப்படாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலமென மனம் போன போக்கில் போய் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிவிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பல அவலநிலைகலையும் பார்க்க முடிகிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தின் வயிலாக அறிய முடியும். ஒரு குழந்தை ஜெனானனமாகும் போது உள்ள கோச்சாரக் கிரகங்களின் நிலைகளே ஜெனன ஜாதகமகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியன் செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் கர்வம், அகந்தை, பிடிவாதம். செவ்வாய் குரு தொடர்பு இருந்தால் உணர்ச்சி வசப்படுத...