Posts

Showing posts from July, 2019

செவ்வாய் தோஷம் (ஒர் ஆய்வு)

Image
செவ்வாய் தோஷம்  (ஆய்வு) சூரியன் சோமன் செவ்வாய் சொற்புதன் வியாழன் வெள்ளி காரியும் ராகு கேது கடவுளர் ஒன்பானிவர் நாரியல் காக்க ஆவதுத் தரித்தின் பூசித்தாலும் பாரினில் புத்திரர் உண்டாம் பாக்கியம் நல்கும் தானே  !  செவ்வாய் ஆங்கிலத்தில் மார்ஸ் என்றும் தமிழில் அங்காரகன் என்று பெயர். சூரியனிடமிருந்து 4- வது கோளாகும். இரண்டாவது சிறிய கோள்.ரோமானிய போர்க்கடவுளின் பெயாரல் அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிவப்புக்கோள் என்கின்றனார்   மணவாழ்க்கையில் முக்கியத்துவம் பெறும் பாவங்கள் லக்கினம்,இரண்டாம் வீடு, நான்கம் வீடு,ஏழாம் வீடு,எட்டாம் வீடு, பன்னிரண்டாம் வீடு ஆகிய வீடுகளில் ஒன்றில் இயற்கை பாவக்கிரகங்கள் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது இருந்தால் தோஷங்களைத் தருவாரகள் ஆண்/பெண் ஆகிய இருவரின் ஜாதகத்தில் பன்னிரு பாவங்களையும் ஒன்று படுத்தி ஆராய்ச்சி செய வேண்டும் அல்லது இல்வாழ்க்கை பாவங்களகிய  1-2-4-7-8-12 ஆம் பாவங்களை இணத்து பார்க்க வேண்டும். இருவரின் இல்லற பாவ ஒற்றுமையைக் கவனிக்க வேண்டும்.    நவக்கிரகங்களில் அங்ககாரகன் எனும் செவ்வாய் இர...

திருமணமும் நடக்கும் திசை

Image
திருமணமும் நடக்கும் திசை                 ஒருவருடைய பூர்வ புண்ணிய கர்ம வினைகளுக்கு எற்றவாறே அவர்களின் வாழ்வில் நன்மையும் / தீயவையும்  அமையும். ஏழாமிடத்து அதிபன் சுபருடைய சேர்க்கை,பார்வையும் பெற்றிருந்தால் நல்ல குணமுடைய துணை அமையும்,           ஒரு ஜாதகருக்கு திருமணம் என்றால் ஏழாம் அதிபதி அவர் நின்ற வீட்டதிபதி, ஏழில் நின்றவர், ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள், நவாம்சத்தில் ஏழாம் அதிபதியின் நிலைகளையும்,இவற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்கிறோம்.     லக்கினத்திற்கு ஏழுக்குடைவர் எந்த திசைக்குரியவரோ அந்த திசையில் மனைவி / கணவனின் இருப்பிடம் இருக்கும். லக்கினம் / சந்திரன் / சுக்கிரன் பெண்களுக்கு செவ்வாய் இவர்களின் யார் பலம் பெற்றுள்ளதோ அவர்களுக்கு ஏழாம் வீட்டை ஆராய்ந்து பார்க்கவும். கிரகங்களின் திசை சூரியன்   - கிழக்கு திசையின் அதிபதி இந்திரன் சந்திரன் – வடமேற்கு திசையின் அதிபதி வாயு , செவ்வாய் - தெற்கு திசையின் அதிபதி யமன்  புதன்  - வடக்கு திசையின் அதிபதி குபேரன்  குரு -.வடகிழக...