ஜோதிடத்தில் சூரியன் - சனி (சேர்க்கை)

ஜோதிடத்தில் சூரியன் - சனி (சேர்க்கை) கிரகங்களின் முதலாமவன். உன்னத தலைவன். அவன் மட்டுமே நிலையானவன். பேரொளியை அண்டத்தில் வீசுபவன். உலகிற்கு ஜீவ ஒளியை த் தருபவன்.எல்லாக் கோள்களும் மலட்டுக்கிரகங்களாய் இருக்கும்போது, நாம் வாழும் பூமியை மட்டும் பூத்துக்குலுங்க வைத்தவன் எல்லாக்கிரகங்களையும் தன்னையே சுற்றிவரச்செய்து, கிரகப் பரிபாலனம் செய்பவன். நாம் வாழும் உலகின் உயிர்கள் வாழ்வதற்கான உகந்த வெப்பத்தைத் தருபவன். ஒரே உயிரிலிருந்து, பல்லுயிரிவரைக்கும், பல்கிப் பெருகக் காரணமானவன். உலகைக் காப்பதால், இவனே தகப்பன். இவனே ஜீவராசிகளின் ஆத்மா. இவனே முழுமுதலானவன். தன்னையே சுற்றி வரும் கோள்களை வழிநடத்திச் செல்லும், மாபெரும் தலைவன் தான் சூரியன். சூரியனின் மேற்புற வெப்பநிலை 10,000 டிகிரி பாரன்ஹீட். மைய வெப்பநிலை சுமார், இரண்டு கோடியே ஐந்து இலட்சம் பாரன்ஹீட் ஆகும். சூரியனின் குறுக்களவு பதின்மூன்று இலட்சத்து எண்பத்தி இரண்டாயிரத்து நானூறு கிலோமீட்டராகும். சூரியனின் மொத்தப்பரப்பளவை விரித்து வைத்து, அதில் பதிமூன்று இலட்சம் பூமிகளைப் புதைத்து வைத்து விடலாம். அப்படியென்றால்...