Posts

Showing posts from March, 2025

இந்திய ஜோதிடம்

Image
  இந்திய ஜோதிடம் ( அடிப்படை ஜோதிடம் ) ஜோதிடத்தை வழிகாட்டும் ஒளியாக மக்கள் நம்பியுள்ளனர், மேலும் இந்திய ஜோதிடம் துல்லியமான கணிப்புகளை வழங்கும் பழமையான கணித முறைகளில் ஒன்றாகும். மேற்கத்திய வெப்பமண்டல ராசியைப் போலல்லாமல், நட்சத்திர இயக்கத்தைக் கண்காணிக்கும் நட்சத்திர ராசியுடன் இந்திய ஜோதிட இணைந்து செயல்படுகிறது. பிறந்த ஜாதக அடிப்படையிலான கிரக கணக்கீடுகள் மூலம் காதல் மற்றும் தொழில் லட்சியங்கள் மற்றும் உடல்நலம் மற்றும் நிதி (செல்வவளம்) சூழ்நிலைகள் பற்றிய முழுமையான விழிப்புணர்வை அனைவரும் பெறலாம். இந்திய ஜோதிடத்தைப் புரிந்துகொள்வது, அவர்களின் கர்ம வினை மற்றும் எதிர்கால நிகழ்வுகளுடன் சேர்ந்து ஒருவரின் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும். இந்திய ஜோதிட அடிப்படைகள்❗ இந்திய ஜோதிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது மற்றும் கிரகங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கின்றன என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் முக்கிய கூறுகளின் விளக்கங்களை ஆராய்வோம். 12 ராசிகள் ❗ இந்திய ஜோதிடம் மேற்கத்திய ஜோதிடத்தைப் போலவே வானத்தை 12 ராசிகளாகப் பிரிக்கிறது. இருப்பினும், நட்சத்திர அமைப்பு...

அமாவாசை யோகம்

Image
  அமாவாசை யோகம் அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன், சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது. ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல் இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல் இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல் இருந்தால் யோகம் ஏற்படும். சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம். வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும். பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு பகலவனும் கலை மதியும் கோணமேற சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும் செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு ஆறப்பா அமடு பயமில்லை யில்லை அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன் கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில் கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு, பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும். இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர். மற்றொரு பாடலில் சூர...

சகட யோகம்

Image
  சகட யோகம் சகடை யோகம் என்றால் அனைவரும் சகடையா? வண்டிச் சக்கரம் போல் வாழ்கை அமைந்து விடும். என்பர்கள். குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும்.சகட யோகம் என்றால் வண்டிச்சக்கரம். சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும். யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும் குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துண்பங்கள் ஏற்படும். ………பொன்னுமம் புலிக்காறெட்டாகில் எந்த நாளாகி லுந்தானிவனுக்கே யோக மில்லை அகடி மன்னனுக் காறெட்டொடு விதிகடிலாமதி எய்தியிருந்திடின் சகடயோகமிதிற் தார்க்கெலாம் விகட துன்பம் விறையு மரிட்டமே ! சீரே நீ குருவுக்கு வியமாரெட்டில் செழு மதியுமதிலிருக்க சகட யோகம் ஆரே நீ அமடு பயம் பொருளும் நஷ்டம் குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும். யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில் பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம் கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார் பெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ் நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய்...