சுக - யோக - வாழ்வு

சுக - யோக - வாழ்வு ஒல்வது அறிவது அறிந்து அதன் கண்தங்கி செல்வாா்க்குச் செல்லாதது இல் எந்த ஒரு செயலில் இறங்கினாலும் முதலில் தன்னால் அதிகபட்சம் எவ்வளவு சாதிக்கமுடியும்.என்ற அளவைத் தொிந்து கொள்ள வேண்டும். இலக்கை நிா்ணயம் செய்து சாதனை செய்தால் சுக போக வாழ்வு அமையும் . மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சுக வாழ்வு,வசதிவாய்புகள் வசிக்கும் வீடு,பூமி லாபம்,வாகனம், கல்வி,தொழில் இவைகள் நாமது திறமை தகுதிக்கு ஏற்ப அமையும் . அதை அறிவது எப்படி என்பதை ஆராய்வோம் . சுகம் தரும் பாவம் நான்காம் பாவமகும் ஒருவருடைய வாழ்வில் பெறும் சுகம் அனைத்தையும் குறிக்கும். தாயினால் பெறும் சுகம் , ஆடையால் பெறும் சுகம் , கல்வியால் பெறும் சுகம், வீடு,பூமியால் பெறும் சுகம, கால் நடைகலால் பெறும் சுகம், விவசாயத்தால பெறும் சுகம், வாகனத்தால் பெறும் சுகம், உறவால் பெறும் சுகம், உதவியாளா்களால் பெறும் சுகம், வசதி வாய்ப்புகளால் பெறும் சுகங்களை அறியலாம். ஒருவரது ஜாதகத்தில் ...