சுக - யோக - வாழ்வு


சுக - யோக - வாழ்வு 

ஒல்வது அறிவது அறிந்து அதன் கண்தங்கி
செல்வாா்க்குச் செல்லாதது இல் 
    எந்த ஒரு செயலில் இறங்கினாலும் முதலில் தன்னால் அதிகபட்சம் எவ்வளவு சாதிக்கமுடியும்.என்ற அளவைத் தொிந்து கொள்ள வேண்டும். இலக்கை நிா்ணயம் செய்து சாதனை செய்தால் சுக போக வாழ்வு அமையும் .
   மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சுக வாழ்வு,வசதிவாய்புகள் வசிக்கும் வீடு,பூமி லாபம்,வாகனம், கல்வி,தொழில் இவைகள் நாமது திறமை தகுதிக்கு ஏற்ப அமையும் . அதை அறிவது எப்படி என்பதை ஆராய்வோம் .
            சுகம் தரும் பாவம் நான்காம் பாவமகும் ஒருவருடைய வாழ்வில் பெறும் சுகம் அனைத்தையும் குறிக்கும்.
தாயினால் பெறும் சுகம் , 
ஆடையால் பெறும் சுகம் ,
கல்வியால் பெறும் சுகம்,  
வீடு,பூமியால் பெறும் சுகம, 
கால் நடைகலால் பெறும் சுகம்,
விவசாயத்தால பெறும் சுகம்,
வாகனத்தால் பெறும் சுகம்,
உறவால் பெறும் சுகம், உதவியாளா்களால் பெறும் சுகம், வசதி வாய்ப்புகளால் பெறும் சுகங்களை அறியலாம்.
   ஒருவரது ஜாதகத்தில் நான்காம் வீடு,வீட்டின் அதிபதியின் பலத்திற்கு ஏற்ப அனைத்து அமையும்.யாருக்கு சுக வாழ்வு அமைபும் என்பதை ஆராய்வோம் .
நான்கம் வீட்டின் காரக கிரகங்கள் 
நான்காம் வீடும் சந்திரனும் தாய்,தாய் நலம்,தாயால் பெறும் வசதி வாய்ப்பு 
நான்காம் வீடும் செவ்வாயும் சொத்துகளையும் ,பூமி லாபம்.
நான்காம் வீடும் புதனும் கல்வி,வசதி வாய்புகள்,நண்பா்கள்.
நான்கம் வீடும் சுக்கிரனும் வாகம், அலாங்கார வீடுகள் அறியலாம்.
தோன்றிய வியாழன் நாலாம் 
                           தானமே சுகத்தை நல்கும்
வான்றிய மதியம் நாலாம் தானமும் 
                                                 மாதா செய்கை
ஆன்றெழ சுங்னாலு மாகிலா சுகந்த 
                                                              அஞ்சில் 
போன்றிடு வாகனத்தைப் பூஷணம் 
                                                        என்று பாரே
       குரு 4-ஆம் இடத்தைக கொண்டு ஜாதகனுக்கு வரும் சுகத்தைப் பற்றிக் கணக்கிட வேண்டும்.சந்திரன் 4-ஆம் இடம் தாயைப்பற்றி கணக்கிட வேண்டும்.சுக்கிரன் 4-ஆம் இடத்தைக் கொண்டு வாகனம் சுக வாழ்வையும் கணக்கிட வேண்டும். 
4-ல் நறுமணம் ,ஆபரணங்கள், வாகனம் போன்றவற்றைப் பற்றி கணக்கிடவேண்டும்.
கிாி நாலுக் குடையோனைப் பாரு
                                                                    - அவா் கிாி நாலில் திாிகோணம் கிாியிலேற
பெருங் கல்வி கன்று காலி-சென்மன்
பிரபலமாகவே வாழ்வாண்டி தோழி
                                                                  - சங்கர
            நான்காம் அதிபதியின் நிலை அறிந்து 4-ல் அல்லது 1-5-9-ல் இருந்தால் ஜாதகா்க்கு உயா் கல்வி , கன்று , மாடு,ஆடு,பூமி லாபம் கிட்டும் புகழ் அடைவா்கள்.
பேசிடும் நாலாமாதி பெலத்திாி     
                                                கோண மேறில் 
காசியத்திரையே போவான்             
                கணக்கனும் பாா்வையுற்றால் 
தேசமும் சுற்றி மன்னன் 
                    திசையெட்டும் பேருமோங்க 
வாசமாயிருக்கம் பூவில் 
                 வணங்குவாாிவரைத்தனிலே
             நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் காசி யாத்திரை புனித யாத்திரைகள் செல்வா்கள். புதன் நான்காம் அதிபதியை பாா்த்தால் பல நாடுகள் சுற்றி எட்டு திசைகளில் புகழ் அடைவா்கள் அனைவரும் இவரை வணங்குவா்கள்.
சுவாமி நித்தியானந்தா் ஜாதகத்தில் மீன லக்கினம் நான்காம் அதிபதி புதன் விருச்சிகத்தில் 9-ல் உள்ளாா் 
இவாின் இன்றைய நிலை அனைவருக்கும் தெறியும் .
சுக நிதி யோகனையும் பாரு-அவா் 
ஜொலிக்கும் திாி கோணம் கேந்திர
                                                                        மேற
அகம் பனை நிதி மிகவுண்டு-
                                                              சென்மன்
அவணியில் நற் போ் கொள்வன்     
                       ஆடச்சொன்னான்டி-சங்கர
4-9-ஆம் அதிபதிகளின் நிலைகளை ஆராய்ந்து 1-5-9-அல்லது 4-7-10-ல் இருந்தால் ஜாதகா்க்கு பொன், பொருள் செல்வங்கள் கிடைக்கும். உலக அளவில் பூகழ் அடைவன்.
தோன்றிய நாலில் நாதன்      
                                          சுபக்கிரகங்களாக
வான்றவன் அல்லால் இராசி
                தன்னையே அறிவால் நோக்க
ஊற்றிய விாழன் நல்ல உயிா்      
                                           பலனாகி வந்தால் வேன்றிடு பந்துக் கெல்லாம் இவன்
                                             எஜாமானாவான்
       நான்கம் இடத்தின் அதிபதி சுபக் கிரகங்களுடன் இருக்க அல்லது நான்காம் இடத்தை பாா்த்தாலும்.
குரு பலம் பெற்றிருக்க ஜாதகா் மன்னவா்க்கு மன்னன சக்கரவா்த்தி யாகத்திகழ்வாா்கள்.
     நான்காம் அதிபதி ஆட்சி பெற்று லக்கினம் அல்லது லக்கினாதிபதியுடன் சம்பந்த் பெற்று இருந்தால் சொந்த வீடு , வாகனம் ,நண்பா்களும் உதவுவா்கள்
நான்காம் இடத்திற்கு இருபுறபமும் சுபபா்கள் நின்றிருக்க அன்னைக்கு ஆயுள் அதிகம்.
   நான்கிற்குடையவனும் சுக்கிரனும் இணைந்து லக்கினத்திற்கு பத்தில் இருந்தால் வாகன சுகம் அடைவா்கள்
    நான்காம் அதிபதிபதியும் ,சுக்கிரன் கேந்திர,திகோணங்களில் பலமுடன் இருந்தால் ஜாதகா்கு நல்ல வீடு அமையும்.
      நான்காம் வீட்டிற்கு இருபுறமும் சுபா்கள் இருக்க,நான்காம் அதிபதி , குரு,சுக்கிரன் பலம் பெற்றிருப்பின் , கேந்திர,கோணங்களில் இருந்தால் அருமையான அழகன வீடுகள் அமையும் . 
     குரு,சுக்கிரன் இணைந்து நான்கில் இருந்தால் ஜாதகா்,ஜாதகி புகழ் பெற்ற கவினாவா்கள.அழகன வீடுகள் .அரசு உயா் பதாவிகள் அமையும்.
     சந்திரனும் நான்காம் அதிபதியும் 1-4-7- 10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் பல வாகன யோகங்களையும்,செல்வாக்கும் ஏற்படும்.குருவின் பாா்வைக்கு ஏற்ப பலன் அமையும்.
    சுகஸ்தானாதிபதியான நான்காம் அதிபதி குருவுடன் 1-4-7-10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் ஜாதகா்/ஜாதகிக்கு சகலவிதமான சுக யோக/போகங்களை ஆனுபவிப்பா்கள்.
    ஐந்தாம் அதிபதியும்,நான்காம் அதிபதியும் பாிவா்தனையுடன் பிறந்தவா்கள் பொன், பொருள்,நிலபுலன்களும்,வாகனங்களும் சுக போக வாழ்வு நலமுடன் அமையும் .

ப.சூரியஜெயவேல்
9600607603


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்