லக்கினத்தில் சூரியன்

லக்கினத்தில் சூரியன் நாம் இந்த பூமியில் வாழ்வதற்கேற்ற பிரதான காரணமாக விளங்கும் சூரியன் லட்சக்ணக்கான வின் மீன்களில் ஒன்றாகும். சூரியன் இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை . சூரியனே ஆத்ம காரகராவார், ஜுவனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் கிரகமாவார். உடல் உறுப்புக்கும் கருவுற்ற தாய்க்கு மகப்பேற்றின் போது உநவும் கிரகமாக உள்ளர். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை நைசர்கீய பாவி அல்லது அசுபன் என்றே வரையத்துள்ளனர், பெதுவாக.வே பாவியெனக் கருதப்படும் சூரியன் எல்லா லக்கினங்களுக்குமே தீய பலன்களை தருவதில்லை. நவகிரகங்களில் முதன்மையானவர். அனைவருக்கும் ஒளியை அளிக்கக்கூடியவர். சூரியனை மையமாக கொண்டே அனைத்து நவகிரகங்களும் இயங்குகின்றன. சூரியன் பற்றிய பல தகவல்களையும் நவகிரகம் என்னும் தொடர் மூலம் நாம் அறிந்தோம். இனி சூரியன் ஒவ்வொரு ராசிகளில் செயல் படுத்தும் செயல்கள் மற்றும் அவரால் ஏற்படும் பலன் பற்றி நாம் காண்போம். லக்கினத்தில் சூரியன் இருந்தால் ; தன் பங்கு தாவென்று சபையேறும் தம்பியோ சார்ந்த சன்மச்சூரியன் லக்கினத்தில் சூரியன் இருந்தால் பங்காளிச் சண்டை ஏற்பட்டும் பாகப்பிரிவினை ...