அறுபது ஆண்டுகளுக்குரிய. தெய்வங்கள்
அறுபது ஆண்டுகளுக்குரிய தெய்வங்களின் வடிவங்கள் அறுபதாண்டுகளின் வடமொழிப் பெயர்களே .வழக்கத்தில் உள்ளது பண்டைய வேதா காலக்கணிப்பு முறையில் ' விஜய ' ஆண்டு தொடங்கி ' நந்தன ' ஆண்டு வரையிலான அறுபதாண்டு சுழற்சி முறையே பயன்படுத்தப்பட்டு வந்ததுள்ளர்கள் . பின்னர் கி . பி . ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிகிரரின் பிருஹத்சம்ஹிதை எனும் நூலில் இந்த வரிசை மாற்றப்பட்டு ' பிரபவ ' முதல் ' அட்சய ' முடிய கூடிய அறுபது ஆண்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளது . வானவெளியை மேழம் ( மேஷம் ) முதலான பண்ணிரண்டு ராசி மண்டலங்களாகப் பிரித்து அவற்றினூடே சூரியன் வலம் வருவதை வைத்து பண்ணிரண்டு மாதச் சுழற்சியை ஒரு ஆண்டாகக் கணக்கிடப்படும் முறை தமிழ் சங்க இலக்கியங்களிலேயே காணப்பபட்டாலும் ( நெடுநெல்வாடை160 - 161 ) 11 இந்த அறுபதாண்டு சுழற்சி எப்போதிலிருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது பற்றி தெரியவில்லை . கி . பி . 14 - 15 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் 15ஆம் நூற்றாண்டில் இடைக்காட்டுச் சித்தர் இயற்றிய அறுபது வருட வெண்பா எனும் தமிழ் நூலிலும் தான் இந்த அறுபதாண்டு பட்டியல் க...