ஜோதிடத்தில் சூரியன் சனி (சேர்க்கை)
ஜோதிடத்தில் சூரியன் சனி (சேர்க்கை) சூரியனும், சனியும் கூடி, ஆட்சி, உச்சத்தில் இருந்தாலும், தங்களது நவாமசத்தில் இருந்தாலும், கேந்திர, திரிகோண அதிபர்களாக இருந்தாலும், ஜாதகர்க்கு சனிதசா சூரிய புக்தியில், அரச வழி அனுகூலமும், செல்வம், மகிழ்ச்சி, முதலிய பலன்கள் நடக்கும். மேலும், சூரியன் திசா சனிபுக்தியில், ஜாதகர்க்கு மகிழ்ச்சி,செல்வம், வெற்றி ஆகியவை நடக்கும். இவ்விரண்டு கிரகங்களும் பாவிகளாய் இருந்தால், ஜாதகர்க்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும். கர்க மகரிஷி தம் கர்கஹோரை எனும் ஜோதிடக்கிரந்தத்தில் பின் வருமாறு கூறுகிறார். 1 ம் பாவம்; இதில் சூரியன், சனி கூட, முட்டாள், வியாதி உள்ளவன், தன்னைச் சேர்ந்தவர்களால் கைவிடப்பட்டவன். நல்ல குணமில்லாதவன். 2 ம் பாவம்; அதிக ரோகம் உள்ளவர். தயை தாட்சண்யமில்லாதவர். முறையாற்ற பேச்சு,. கோபத்தை விட்டவர். சாதுக்களின் சேர்க்கை இல்லாதவர். 3 ம் பாவம்; ஸ்திரமான தீய எண்ணம் உடையவர். சூரர். எதிரிகளை கொல்பவர். பிரியமாய் பேசுவதில் வல்லவர். அரசர்க்கு அனுகூலமானவர். 4 ம் பாவம்; தேவதைகளால் பீடையுடையவர். அதிக...