3 - 6 - 8 - 12 ஏன் துர்ஸ்தானம் ( ஒரு சிறப்பாய்வு)
3 - 6 - 8 - 12 ஏன் துர்ஸ்தானம் ( ஒரு சிறப்பாய்வு) மூன்றாமிடத்தைக் கொண்டு மனிதனின் மேலோங்கிய தைரியத்தைக் குறிப்பிடுகிறது . ஒரு மனிதன் முயற்சியினால் முற்போக்கு நிலை அடைய வேண்டுமென்றால் மூன்றாமிடம் சிறப்பாக இருக்க வேண்டும் . உழைத்துப் பொன் பொருள் சேர்க்கவும் . இந்த மூன்றாமிடம் வழி வகை செய்கிறது . ஒரு பணியில் ஒருவன் செலுத்தும் அத்தத் திறமைக்கும் , பணியாட்களைப் பெறுவதற்கும் , நிர்வாகத் திறமைக்கும் இடமளிக்கிறது . இந்த மூன்றாமிடம் சகோதர விருத்திக்கும் அவர்களிடம் நிலவுகின்ற உறவுத் தன்மைக்கும் காரணமாகிறது.தாய் -மகனுக்குள் ஏற்படும் உறவு அல்லது பிரிவுக்கும் , தாவினுடைய ஆரோக்கியம் சுக துக்கம் ஆகியவற்றிற்கும் தாய்வழிச் சொத்துக்களை அனுபவிக்கவும் . இந்த மூன்றாமிடம் எதுவாகிறது . இசைத் துறையில் சிறந்து விளங்கவும் , கணீர் கணீர் என்ற பேசவும் , வளமான குரல் தன்மையும் இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது தொழில் வகையில் ஒப்பந்தம் கட்டு ஆகியவத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களை இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு காண முடிகிறது . தேக பலத்திற்கும் , உடலில் மறைந்திருந்து தாக்கும் நோய்க் கூறுகளுக்கும் , போக ச...