ஜோதிடத்தில் உறவுகள்

 ஜோதிடத்தில் உறவுகள்

மனிந வாழ்வில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்பை இணைப்பை உறவு எனலாம். பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு, குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. கணவன்- மனைவி அல்லது சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு மிருகங்களுக்கிடையேயும் உண்டு. சிலர் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் இயற்கைக்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒப்பு நோக்குவதுமுண்டு.

தனிநபர்களுடன் ஒருவருடைய தனிப்பட்ட உறவு. சில நபர்களுடன் உங்கள் தனிப்பட்ட உறவைப் பற்றிய அறிவதற்கு பிறந்த ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அடிப்படையில் சில ராசிகளில் கிரகங்களை இருந்தால் என்ன விளைவுகள் தரும் என்பதை ஆராய்வேம்.

மேஷம்/விருச்சிகத்தில் செவ்வாயின் ராசிகளில் சனி , ராகு & கேது இருந்தால் (செவ்வாய், காவலார், ரவுடி, இராணுவ வீரர் மாற்றும் சகோதரர்) ( பெண்களுக்கு கணவன்) இளைய சகோதரர்களின் அதிருப்தி அல்லது செவ்வாயின் காரகத்துவ உறவுகளால் ஒத்துழையாமைக்கு வழிவகுக்கலாம்.

ரிஷபம்/துலாம் சுக்கிரனின் ராசிகளில் சூரியன் ,சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய் இருந்தால் (சுக்கிரனின் இளம் வயது பெண்கள் மற்றும் மனைவிக்கு காரகன்) மனைவியிடமிருந்து அதிருப்தி அல்லது மனைவியின் ஒத்துழையாமைக்கு வழிவகுக்கும்.

மிதுனம் /கன்னியில் புதனின் ராசிகளில் தாய்வழி உறவுகளுக்கான காரகம்) சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய்) நண்பர்கள் மற்றும் தாய்வழி உறவுகளில் அதிருப்தி அல்லது தாய்வழி உறவுகளின் ஒத்துழையாமைக்கு வழிவகுக்கும்.

கடகத்தில் சந்திரனின் ராசியில் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய் இருந்தால் , தாய்க்கான காரகம் தாயின் அதிருப்தி அல்லது வயது முதிர்ந்த பெண்களின் ஒத்துழையாமைக்கு வழிவகுக்கும்.

சிம்மத்தில் சூரியனின் ராசியில் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய் இருந்தால் (சூரியனின் மூத்த மகன், அரசு அதிகாரிகள் , தந்தையின் காரகன்) தந்தையிடமிருந்து அதிருப்தி அல்லது தந்தை மற்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழையாமைக்கு வழிவகுக்கும்.

தனுசு/மீனம் வியாழனின் ராசிகளில் (மூத்த சகோதரர்/ குழந்தைகள், மதகுரு மற்றும் ஆசிரியர்கள் )சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரர்/ குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாத அதிருப்திக்கு வழிவகுக்கலாம்.

மகரம்/கும்பத்தில் சனியின் ராசிகளில் சூரியன் ,சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய் ( பழைய உறவுகள் மற்றும் வேலைக்காரர்களுக்கான காரகம்) ஊழியர்களிடமிருந்து அதிருப்தி அல்லது வேலைக்காரர்களின் ஒத்துழையாமைக்கு வழிவகுக்கும்.

மேற்கூறிய விளக்கம் ராசிகள் மற்றும் நேரடி கரகங்களின் கிரக கொள்கையின் அடிப்படையாகக் கொண்டது. உறவை பாதிக்கும் கிரகங்களின் ஆதிக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது

கரக கிரகத்தின் வலிமை எந்தப் பலன்கள் மறுபாடும் ஒரு காரக கிரகத்தின் வலிமை ஒரு நிகழ்வு அல்லது இறுதி முடிவை தீர்மானிப்பதால் பெரும் பயனை தறுகிறது. பிறப்பு ஜாதகல் பலம் பெற்ற கிரகங்கள் ஆனால் கேச்சாரத்தில் பலவீனமடைவது கிரகத்தின் நேர்மறையான முடிவுகளை குறைக்கலாம். உதாரணமாக, ஜாதகத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் பலவீனமான சுக்கிரன் இடமாற்றத்தில் சுக்கிரனின் முடிவுகளை பாதிக்கும் மற்றும் அதன் முக்கியத்துவம் குறையும். பிறப்பு ஜாதகத்தில் வலுவிழந்த மற்றும் கேச்சாத்தில் உயர்ந்த நிலையில் வேறு வழியில் நடக்கலாம். விம்ஷோத்ரி தசாவின் காலங்களில் நடக்கும்.

பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள.!

விளக்கம் :- ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய காலத்து உறவைப் பாராட்டிப் பேசுகின்ற பண்புகள் என்பது சுற்றத்தார்கள் / நெருங்கிய உறவினர்கள் இவர்களிடத்தே உண்டு

ஆனால் இன்றைய சூழ்நிலை இப்படியில்லை .

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்