Posts

Showing posts from November, 2024

மனமும் பஞ்சபூதங்களும்

Image
  மனமும் பஞ்சபூதங்களும் " காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்து பின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே " ( இ - ள் ) கரிய ஒளியானது அண்ட வடிவான பேருவகை மூடி உலகங்கள் எங்கும் மன் / நீர் / நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஒளிகளாக ஒருங்கே வளர்ந்து கிடந்து பின் ஒரேபேரொளியாக நிறைந்து பரந்து நின்று என்பததாமே ! மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதால் அண்டசராசரம் முழுவதும் மனமே நிறைந்துள்ளது . இயற்கையும் மனமும் ஒன்றுக்குள் ஒன்று பிரிக்க முடியாததாக விளங்குகிறது . இயற்கையானது பஞ்சபூதங்களால் ஆனது . பஞ்சபூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் ( வெற்றிடம் ) என பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் பிரிந்தும் , சேர்ந்தும் உள்ளன . மனதின் ஆசையில் உருவாகும் தொண்ணூற்றியொன்பது ( 99 ) குணங்களுக்கு ஏற்ப பஞ்சபூதங்கள் தொண்ணூற்றி யொன்பது தனித்தியங்கும் தனிமங்களாகவும் விளங்குகிறது . தனிமங்கள் ஒன்றுக்குள் ஒன்று மாறி மாறி இணைந்து பலவகையான அணுத்துகள்களையும் , தனிமம் போன்ற பொருட்களையும் உருவாக்குகிறது . எல்லா தனிமங்களிலும் , ஜீவன் ( பாரா ஹைட்ரஜன் ) உள்ள...

ஜோதிடத்தில் கேது

Image
  ஜோதிடத்தில் கேது ராகுவை விட கேது அதிக துன்பங்களை தருகிறது. குறிப்பாக எந்த ஒரு கிரகமும் கேதுவுடன் நெருக்கமாக இணைந்தால், ஜனனத்தை விட அதன் காரகம் நிச்சயம் பாதிக்கப்படும். கேது விமோசனத்திற்காக இருப்பதால், அதிக துன்பத்தை அளிக்கிறது, இந்த உலக வாழ்க்கை பற்றுதலை அடிப்படையாகக் கொண்டது என்பதால், ஒருவர் வலியை உயிரோட்டமாக உணருவார். ஆனால் கேது தான் இருக்கும் வீட்டையும், அவர் நெருக்கமாக இணைந்திருக்கும் கிரகத்தின் காரகத்துவத்தை விடுவிப்பதால், அடுத்த பிறவியில் அதே காரகத்தில் ஜாதகருக்கு துன்பம் இருக்காது. ராகுவைப் போலல்லாமல், அவருடைய பற்றுதலைப் பயன்படுத்துங்கள், மேலும் ஒவ்வொரு பிறப்பிலும் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்யும். கேதுவின் துன்பங்கள் எல்லாம் ஒரு முறை தான் ஆனால் ராகுவின் பற்று பல பிறவிகளை இழக்கும்.. ❗ சூரியஜெயவேல் 9600607603

நலம் தரும் நாடி ஜோதிடம்

Image
  நலம் தரும் நாடி ஜோதிடம் " ஜோதிடம் என்றால் " பழமையான இதிகாசங்கள் கடவுள் உலகையும் உயிர்களையும் படைத்தார் எனக் கூறுகின்றன வேதங்களும் இதனை விளக்குகின்றன. கடவுள் அழிவற்றவர் பலவடிவினர் அவருடைய தேஜஸ் ஒளியால் உலகில் எல்லாமே நடை பெறுகிறது.இது இயற்கையில் ஸ்துலமாக சூஷ்மமாக பொருள்களாக உயிர்களாக தோன்றுகின்றன. உலகில் எல்லாற்றிலும் கடவுள் இருக்கிறார். கடவுளின் ஒளியால் தான் பெற்ற ஒளிக்கேற்ப உயிர்கள் தனித்தன்மையுடன் செயல் படுகின்றன. இயற்கை முழுவதையும் பிரகிருதி (பெண்மை) மற்றும் புருஷ (ஆண்மை) தத்துவமாக இருமையுள் ஒருமை காண்கிறது. கோள்கள் உயிர்களை பாதிக்கிறது. நவக்கிரங்கள் பஞ்சபூத தத்துவக்கலப்பில் அமைந்தவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பதே பஞ்ச பூதகங்கள். ஆகாசம் காது ஒலி வாயு மூக்கு ஸ்பரிசம் (உணர்வு) அக்கினி கண் ஒளி தண்ணீர் நாக்கு சுவை பூமி உடல் (தோல்) மணம் ஒருவர் பிறக்கும் போது இந்தக் கோள்களெல்லாம் பலராசிகளில் பலதிசைகளில் ஒளிக் கதிராக உள்ளன அந்த ஒளியின் விளைவு பல் வேறு ஜாதகர்ளின் தன் மையையும் எதிர் காலத்தையும் வகுத்து நிச்சயிக்கின்றன. கோள்களின் ஆதிக்க நிருபனம் ஆவணி, புரட்டாசி மாதங்...

வாழ்வில் சூரியனின் பங்கு

Image
  வாழ்வில் சூரியனின் பங்கு வலுவான சூரியன் உள்ளவர்கள் வலுவான ஆளுமை மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் சுய மரியாதையையும் பெருமையையும் பேணுகிறார்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் கூட மற்றவர்களின் உதவியைக் கேட்பதைத் தவிர்ப்பார்கள். பலவீனமான சூரியன் உள்ளவர்கள் சில நேரங்களில் சமூகத்தில் ஜாதகர் / ஜாதகியரை புறக்கணிப்பதாக உணரலாம், இவர்கள் ஓரளவு பலவீனமான ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன் இல்லாதவர்கள். நீங்கள் சூரியனின் குணங்களை கற்பனை செய்ய விரும்பினால், ராஜா மற்றும் சிங்கத்தை கற்பனை செய்து பாருங்கள். அவை சூரியனை நன்றாக பிரதிபலிக்கின்றன. சூரியன் அரசு, தந்தை மற்றும் அதிகாரப் பதவியில் உள்ள மக்களைக் குறிக்கிறது. வலுவான சூரியன் - மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் எளிதாக அரசாங்க ஆதரவு கிடைக்கும். இவர்கள் தனியார் துறையிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள், அவ்வப்போது பதவி உயர்வுகளைப் பெறுகிறார்கள், மூத்தவர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுகிறார்கள். பலவீனமான சூரியன் - பணியிடத்தில் அங்கீகாரத்திற்காக அடிக்கடி போராடுவார்கள். வலுவான சூரியன் - நல்ல சுய மரியாதை, எதையும் யாரிடமும் கேட்க வேண்டாம், தங...

பரிவர்த்தனை யோகம்

Image
  பரிவர்த்தனை யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு பவத்தின் அதிபதி மற்றொரு பாருவத்திலும், மற்றொரு பாவத்தின் அதிபதி இந்த பாவத்திலும் மாறி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படும். உதாரணமாக லக்னாதிபதி ஒன்பதில் அமர்ந்திருக்க ஒன்பதாம் அதிபதி லக்னத்தி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை யோகம் ஏற்படுகின்றது. இது போலவே மற்றவற்றிற்கும் பார்க்க வேண்டும். "கூசாது கோணாதி கேந்திராதி குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க தேசாதிபத்தியமும் வருவதோடு திரளான தானியங்கள் கூடும் பாரு " 1-5-9-ஆம் அதிபதிகளும் 4-7-10-ஆம் அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் உலகை ஆள்வார்கள். அதிகம் செல்வம் பெறுவார்கள். "உள்ளசன் மாதிலாபத்திலுற வேயந்லாபாதி தள்ளுஞ்சன்மந்தனிலிருக்கத் தனத்தானதான் பத்திலுறக் கொள்ளும்பத் தோனிரண்டுறவே கொண்டு சென்மந்திரமாக வள்ந்திரயோகமென வழுத்தும் பலன்களினி துரைப்பாம்" லக்கினாதிபதி 11-ல், 11 ஆம் அதிபதி லக்கினத்தில், 2-ஆம் அதிபதி 10-ல், 10-ஆம் அதிபதி 2-ல் இருக்க லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால் ஜாதகர் இந்திரயோகத்தை அனுபவிப்பார்கள்.சுகபோக வாழ்வு அமையும்...