நலம் தரும் நாடி ஜோதிடம்

 நலம் தரும் நாடி ஜோதிடம்


" ஜோதிடம் என்றால் " பழமையான இதிகாசங்கள்

கடவுள் உலகையும் உயிர்களையும் படைத்தார் எனக் கூறுகின்றன வேதங்களும் இதனை விளக்குகின்றன.

கடவுள் அழிவற்றவர் பலவடிவினர் அவருடைய தேஜஸ் ஒளியால் உலகில் எல்லாமே நடை பெறுகிறது.இது இயற்கையில் ஸ்துலமாக சூஷ்மமாக பொருள்களாக உயிர்களாக தோன்றுகின்றன.

உலகில் எல்லாற்றிலும் கடவுள் இருக்கிறார். கடவுளின் ஒளியால் தான் பெற்ற ஒளிக்கேற்ப உயிர்கள் தனித்தன்மையுடன் செயல் படுகின்றன.

இயற்கை முழுவதையும் பிரகிருதி (பெண்மை) மற்றும் புருஷ (ஆண்மை) தத்துவமாக இருமையுள் ஒருமை காண்கிறது.

கோள்கள் உயிர்களை பாதிக்கிறது.

நவக்கிரங்கள் பஞ்சபூத தத்துவக்கலப்பில் அமைந்தவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பதே பஞ்ச பூதகங்கள்.

ஆகாசம் காது ஒலி

வாயு மூக்கு ஸ்பரிசம் (உணர்வு)

அக்கினி கண் ஒளி

தண்ணீர் நாக்கு சுவை

பூமி உடல் (தோல்) மணம்

ஒருவர் பிறக்கும் போது இந்தக் கோள்களெல்லாம் பலராசிகளில் பலதிசைகளில் ஒளிக் கதிராக உள்ளன அந்த ஒளியின் விளைவு பல் வேறு ஜாதகர்ளின் தன் மையையும் எதிர் காலத்தையும் வகுத்து நிச்சயிக்கின்றன.

கோள்களின் ஆதிக்க நிருபனம்

ஆவணி, புரட்டாசி மாதங்களில் கார்காலத்தில் மேகக்கூட்டங்கள் பூமியின் எல்லாப்பகுதிகளில் ஒரே சீராக ஒளி விழாமல் இருக்கும் அக்காலங்களில் உயிரினங்ளும் சுறுசுறுப்பாக இருப்பதில்லை மேக மூட்டத்தில் சுற்றுபுறத்திலும் உயிர்ளின் மனதிலும் ஒரு சோம்பல் தன்மை ஏற்படுகிறது எல்லா உயிர்களும் மனம், புத்தி, அங்காரம் உள்ளவை கோள்கள் சூரியஒளியை பிரதிபலிகக்கின்றன ஜெனன ஜாதக கிரக ஆதாரத்தில் கோச்சார சஞ்சார கிரகங்களின் ஒளி பிராதிபலிப்பு ஜாதகரின் மனம், புத்தி, அகங்காரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக சூரிய ஒளி செவ்வாயின் மேல் விழுகிறபோது ஒரு குழந்தை பிறந்தால் கர்வம் அகந்தை உள்ளவனாக ஆக்குகிறது. செவ்வாயின் ஒளி குருவின் மேல் விழ உணர்ச்சி வசப்டுதல், அதீதத் தன்னம்பிக்கை பிடிவாதம் உருவாகிறது.ஜாதகத்தில் குரு புதனைப்பார்த்தால் கற்றவராக, பேச்சாற்றலைத் தருகிறது. இப்படி கோச்சார கிரக நிலைகள் ஜாதகரைப் பாதிக்கிறது.

செவ்வாய்-ராகு.செவ்வாய்-குரு.செவ்வாய்- சூரியன் குழந்தைகளின் பிடிவாதம்,ஆணவம், என்று பிரதிபலிக்கிறது.இவர்கள் இளமையிலே திருத்தப்படவேண்டும்.

சனி -ராகு, இணைவு பிறரைச் சார்ந்து வாழும் இயல்பு சோம்பல், சுறுசுறுப்பின்மை தருகிறது.

குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் -சூரியன் இணைவு அல்லது குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் இணைவு குறும்புத்தனமாகிறது.இதற்குக் காரகர் செவ்வாய். சிறப்பான புத்தி சாலித்தனம் இவர்களை சரியாக வழி நடத்தப்பட வேண்டும். அதிக சக்தியும் புத்தி சாலித்தனமும் உள்ள குறும்புக் காரக் குழந்தைகள் கட்டுப்பாடு மற்றும் வழி காட்டுதல் மூலம் வழி நடத்தப்படுதல் வேண்டும்.

ஜாதகத்தின் மூலமாக இவற்றை அறிந்த ஜோதிடவித்தகர் இவற்றை சுட்டிக்காட்ட வேண்டும்.இதன் மூலம் தம் குழந்தைகளின் குறும்புத் தனத்துக்கான காரணங்களை அறிந்த பெற்றோர் அவர்களை வழி நடத்தலாம்.

ஜோதிட(பராசரர்) பாரம்பரிய ஜோதிடமுறையில் முறையானது பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசா புத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது.

பாரம்பரிய முறையில் லக்கினம் ஜாதகரைக் குறிப்பிடுகிறது.

நாடி முறையில் ஜாதகர் ஆண் என்றால் குருவும், பெண் என்றால் சுகிரனும் ஜாதகரின் நிலைகளை கூறிக்கும்.

ஆனால் பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து முற்றிலும் கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. குறிப்பாக, ராசிக் கட்டத்தில் தனித்து எந்த வீட்டில் இருந்தாலும், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. அதற்கு மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும். இது நாடி விதி.

நாடிமுறை ஜோதிடத்தில் 23 விதிகள் உள்ளன. இவற்றைத் அறிந்து கொண்டால் நாடி ஜோதிட முறையில் பலன் கூறுவது சுலபம்.

ஜோதிட(பராசரர்) முறையானது பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசா புத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது. ஆனால் பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து முற்றிலும் கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. குறிப்பாக, ராசிக் கட்டத்தில் ஒரு கிரகமாகப்பட்டது, தனித்து எந்த வீட்டில் இருந்தாலும், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. அதற்கு மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும். இது நாடி விதி. எடுத்துக் கொள்ளப் படுகிறது.

பிருகு நந்தி நாடி சப்தரிஷி நாடி இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம். பிருகு நந்தி நடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்க கொள்ளப் படுவதில்லை. சப்த ரிஷி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

நாடி ஆகிய ஜோடதி முறைகளைப் பற்றி ஆராய்வோம்.

கோள்களின் காரகங்கள், குணங்கள்.

கோள்கள் இருக்கும் ராசி,திசை அமைவுகள்.

கோள்களின் நட்பு,பகை,உறவுகள்.

கோள்களிருக்கும் இடத்திலிருந்து 1-2-5-7-9-11-ஆம் இடங்களின் நிலைகள்.

ஜாதகர் பிறந்த நேரத்திற்குரிய துல்லியமான கிரக கணிதாம் பாகை கலை விகலை அளவில் கோள்களின் கோள்களின் கணிதம் முக்கியமானது.

கோள்களின் கோட்சார நகர்வும் மற்றும் காரகத்துவங்கள் முக்கியம்.

ஆய்வில்

ஒரே திசையை குறிக்கும் ராசிகள் :

மேஷம், சிம்மம், தனுசு மூன்று ராசிகளும் கிழக்கு திசையை குறிக்கும்

ரிஷபம், கண்ணி, மகரம் மூன்றும் ராசிகளும் தெற்கு திசையை குறிக்கும்

மிதுனம், துலாம், கும்பம் மூன்றும் ராசிகளும் மேற்கு திசையை குறிக்கும்

கடகம், விருச்சிகம், மீனம் மூன்றும் ராசிகளும் வடக்கு திசையை குறிக்கும்

ஒரே திசையில் உள்ள கிரகங்கள் இணைகின்றது.

எதிர் திசையில் உள்ள கிரகங்கள் பார்க்கிறது.

ஒரே திசையின் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைந்து பெற்று செயல்படும்.

இணைகிற,பார்க்கிர கிரகங்கள் தங்களுக்குள் நட்பானால் நன்மையும், பகையானால் பாதிப்பும் ஏற்படும்.

ஒரே திசையில் இருக்கும் கிரகங்கள் இணைந்து செயலாற்றும் என்பதின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், திரிகோண அமைவகும்.

இப்படி ஒன்றுக்கொன்று திரிகோணமாக (1,5,9 ஆக) அமைகிறது

இதுபோலவே மற்ற திசைகளுக்கு உரிய ராசிகளும் அமையும்.

மேலும் ஒரே திசையில் உள்ள நட்சத்திர அதிபதிகள் ஒன்றாகவே அமைவார்கள்.

பூண்ட தானத்துக் காரகன் தானே

பொருந்தியே இருந்த தானத்தும்

வேண்டிட முன்னும் பின்னு மல்லாது

மிகு திரி கோணத்து மேதான்

காண்ட அவ்விடமே பாபிகள் இருக்க

கடுங் கோட்கள் நோக்கிடு மாயில்

துண்டிய பலன்கள் மாண்டிடும் என்றே

சொல்லுதல் கணித நூல்தனிலே

(இ-ள்) பலன் அறிய வேண்டிய இடத்தின் காரகன் இருக்கின்ற இடத்திற்க்கு 2-12-ல் அல்லது 1-5-9-ல் பாபக் கோள்கள் இருக்க அல்லது அந்த வீடுகளை பாவக் கோள்கள் பார்க்க கிரகம் தரும் சுப பலன்களை தடுத்து. தீய பலன்களை தரும்.என்று

சோதிட நூல் வல்லுந‌ர்கள் கூறியுள்ளர்கள்.

நாடி ஜோதிடத்தின்படி பொதுவாக, ஒருவருடைய பிறந்த ஜாதகமானது, அவர் எந்த மாதிரிப் பல பலன்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டுகிறது. அந்தப் பலன்களை எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்பதை, நாடி ஜோதிடத்தில் அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகத்தை கோச்சார கிரகம் எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை சேய்கிறதோ, அப்பொழுது தான் அனுபவிப்பார் என்று கூறுகிறது.

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்