ஜோதிட தொழில் ஆலோசனைகள் 2
ஜோதிடத் தொழிலை வெற்றிகரமாக நடத்த பல அரிய ஆலோசனைகள் !!
( 11 ) ஒரு ஜாதகத்தில் நல்லதையோ கெட்டதையோ ஒன்றிரண்டு கோணத்தில் மட்டுமே ஆராய்ந்து அவசரப் பட்டு பலன்கள் சொல்லி விடுதல் கூடாது . பல கோணங்களிலும் ஆராய்ந்து பலன்களை சீர் தூக்கி சொல்லவேண்டும் . ஒரு வீட்டின் அதிபதி கெட்டிருக்கும் ; ஆனால் அவ்வீட்டில் நிற்கும் கிரகம் நற்பார்வை பெற்றிருக்கும் .
இப்படிப்பட்ட நிலைமையில் அவ்வீட்டின் அதிபதி கெட்டு விட்டதால்
அதன் தசாபுக்திகளில் கெட்ட பலன்களும் , அவ்வீட்டில் நின்ற கிரகம்
நல்ல முறையில் அமைந்திருப்பதால் அதன் தசா புக்திகளில் நற்பலன்களும் , அவ்வீடு குறிப்பன சம்பந்தமாக நடைபெறும் என்பதைத் தெளிவாக உணரவேண்டும் . இது அதிமுக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய விதியாகும் .
( 12 ) அடுத்து எதிர்காலப் பலன்களை எப்படிக் கூற வேண்டுமென்பதை இனி பார்ப்போம் .
ஜாதகம் பார்க்க வருபவர் என்னென்ன விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறாரோ , அவைகளைக் கேட்டு , அவைகள் குறிக்கும் கிரகங்கள் மற்றும் அவைகள் குறிக்கும் வீடுகளின் நிலைமைகள் முதலானவைகளை ஆராய்ந்து , ஜாதகர் விரும்பும் நிகழ்ச்சிகள் எப்போது நடக்கும் என்று கூறவேண்டும் . அதோடு பொதுவாக , அடுத்தடுத்த புக்திகளில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளை தொகுத்து . அவர் என்னென்ன செய்தால் நன்றாக லாபகரமாக இருக்கும் என்பதற்கும் ஆலோசனகள் கூறவேண்டும் . ஆலோசனைகளை உள்ளல் போடு ஆராய்ந்து கூறவேண்டும் .
இதற்கு சில உதாரணங்கள் பார்ப்போம்
( i ) பொதுவாக ஜாதகம் பார்த்துக்கொள்ள பவர்கள் பெரும்பாலும் தனயோக பாவங்கள் பற்றியே அதிகமாகக் கேட்பர்கள்.
தனயோகத்தை ஆராய முதலில் இரண்டாம் ஒரு ஜாதகத்தில் பாடல்களில் கூறப்படும் எத்தனை மேன்மையான யோகங்கள் காணப்பட்டால் கூட இரண் டாம் பாவகம் சிறப்பாக இருந்தாலன்றி ஒருவன் தன யோகத்தில் புரளமுடியாது .தன பாவகம் கெடின் தனம் வரும் ,வீணாக அழிந்து போய்விடும் - எவ்வளவு வந்தாலும் வீண் விரயமாகிவிடும் .
ஒரு உதாரணம் பார்ப்போம் . ஒருவர் கேது தசையில் கமிஷன் மண்டி வியாபாரம் செய்து வருவதாகக் கொள்வோம் . இன்னும் ஒரு வருடத்தில் கேது தசையும் முடிய இருக்கிறது . அடுத்து சுக்கிர தசை . அவர் ஜவுளிக் கடை வைக்கலாமா என்று ஆலோசனை கேட்க வருகிறார் . நீங்கள் ஆராய்கிறீர்கள் . சுக்கிரன் இரண்டாமதியுடன் நற் பார்வை கொண்டிருந்தாலோ அல்லது சுக்கிரன் இரண்டா மாதியின் சாரமேறியிருந்தாலோதான் , நீங்கள் அவரை ஜவுளிக்கடை
வைக்கும்படி சிபாரிசு செய்யலாம் . சுக்கிரனுக்கு இரண்டாமாதிக்கும்
கெட்ட பார்வை இருப்பின் , ஜவுளிக்கடை வைத்தால் , நஷ்டமடைவார் –
லாபம் வந்தாலும் வம்பு வழக்குகளால் விரயமாகும் . எனவே சுக்கிர தசையில் அவரை மனைவி அல்லது மகன் பெயரில் ஜவுளிக் கடை நடத்தச் சொல்லி ஆலோசனை கூறலாம் . இப்படி ஆராய்ந்து கூறுவதே விசேஷம் .
இதைப் போலவே 2 , 10 - ஆம் வீடுகள் நல்ல முறையில் பட்டிருந்தாலே தொழில் , வியாபாரம் , அல்லது உத்யோகம் நல்ல வருவாயோடு இருக்கும் , 2 – 4 ஆம் வீடுகள் நன்றாக அமைந்திருந்தால் விவசாயம் , கறவை மாடுகள் , வாகனங்கள் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும் . இரண்டும் ஏழும் நல்லுறவு கொண் டிருப்பின் திருமணத்தால் நிறைய சொத்து அல்லது சீர் வரிசை கிடைக்கும் . தனயோக பாவங்களை இப்படியாக ஆராய்ந்து கூறவேண்டும் .
( ii ) அடுத்து தொழில் , உத்யோகம் பற்றி முக்கிய மாகக் கேட்பர் . தொழில் உத்யோகம் பற்றி சிறப்பாகப் பத்தாமிடம் கொண்டு கூறவேண்டும் . ஆனால் , இப்பத்தா மிடத்திற்கு இரண்டாம் வீட்டின் நல்லுறவு கிடைத்தாலே சிறப்புண்டு ; இரண்டாமாதி பத்தில் அல்ல பத்தாமாதி சாரத்திய் நிற்பதோ- அல்லது பத்தாமாதி இரண்டில் அல்லது இரண்டாமாதி சாரத்தில் நிற்பதோ தொழில் , வியாபார உத்யோகங்களுக்கு சிறப்பானதாகும் . இரண்டு , பத்தாம் வீடுகள் நல்ல முறையில் பிணைக்கப்படுமாயின் உத்யோக உயர்வு , சம்பள உயர்வு , வியாபாரச் செழிப்பு முதலானவைகள் பிரமாதமாக இருக்கும் .
அவைகள் கெட்ட முறையில் பிணைக்கப் பட்டிருக்குமாயின் கடினமாக உழைக்கவேண்டியிருத்தல் , மேலதிகாரிகளின் தொல்லைகள் ,
வியாபாரமாயின் நஷ்டம் , வம்பு , வழக்குகள் , தொல்லை முதலான ஏற்படல் ஆகியன காட்டும்
2 , 10 - ஆம் வீடுகள் புதனால் இணைக்கப்படின் ஜோதிடத் தொழில் , ஆசிரியர் தொழில் , எழுத்தர் , தட்டெழுத்தர் . ஸ்டெனோ , அக்கவுன்டன்ட் , வியாபாரம் , கமிஷன் ஏஜென்சி போன்றவைகள் பலன் கொடுக்கும் . இப்புதனை யுரேனஸ் நற்பார்வை பார்ப்பின் ஹிப்னாடிசம் , மெஸ்மெரிசம் , வாட்டர் டிவைனர் போன்ற தொழில்களால் பணம் சம்பாத்தியம் ஏற்படுத்தும்.
இதேபோல் இரண்டு பத்தாம் வீடுகள் சுக்கிரனால் தொடர்பு பொற்றிருந்தால் சினிமாத்துறை ஜவுளிக்கடை, சோப்பு கடை, பேருந்து வாகனம் , கலைஞர்கள் , வர்ணம் தீட்டுபவர் , தையல்காரர்கள், வெள்ளி அழகு சதன பொட்கள் தொடர்பன தொழில் அமையும்.
குருவால் தொடர்பு பொற்றிருந்தால் வங்கியில் உத்யோகம், வட்டிக்கடை, கம்பெனி பாங்குதர்கள், பல தொழில்கள் நடத்துதல் போன்றவைகளில் ஈடுபடலாம்.
இப்படி கிரகங்களின் காரகத்துவம் அடிப்படையில் ஆராய்ந்து கூறலாம்
அடுத்து ஜாதகம் பார்க்க வருபவர்கள் திரு மணம் பற்றி அதிகமாகக் கேட்பர் .
2 , 7 ஆம் வீடுகள் கொண்டே திருமணம் பற்றி பேச வேண்டும் .
இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போப் : கன்னி லக்னத் திற்கு இரண்டாமாதியான சுக்கிரன் , பதினொன்றில் ஏழாமாதியான குருவின் சாரமேறி நிற்க , ஏழில் நின்ற செவ்வாய் சுக்கிரனை 120 டிகிரி நற்பார்வை பார்ப் பதாகக் கொள்வோம் . அவனுக்கு சுக்கிரதசை செவ்வாய் புக்தி அல்லது குரு புக்தியில் அல்லது செவ்வாய் தசை குரு புக்தி அல்லது சுக்கிர புக்தியில் அல்லது குருதசை சுக்கிர புக்தி அல்லது செவ்வாய் புக்தியில் திருமணம் நடக்கும் .
ஒருவருடைய திருமண பருவ வயதுக்கேற்ற காலத்தில் மேற் குறிப்பிட்ட தசாபுக்திகளில் எது பொருத்தமாக நேரிடு கிறதோ அப்போது நடக்கும் .
சுக்கிர தசை செவ்வாய் புக்தியாயின் , சுக்கிரன் அல்லது செவ்வாய் குறிக்கும் ரூபம் , நிறம் , குணம் , மற்றும் திசையில் பெண் அமையும் .
ஏழில் அல்லது இரண்டில் எந்த பாவ கிரகமிருந்தாலும் , மற்ற கிரகங்களினின்று நற்பார்வை பெற்றால் மண வாழ்க்கை சந்தோஷமாகவே அமையும் .
செவ்வாய் தோஷத்தை நம்புபவர்கள் , தோஷமுள்ள ஜாதகத்திற்கு தோஷமுள்ள ஜாதகத்தையே ஜோடி சேர்ப்பது நல்லது.
. ஏழாமாதி கெட்டபார்வை பெறின் மணவாழ்க்கையில் சண்டை சச்சரவு , பிரிந்து வாழ்தல் , விவாகரத்து முதலான நடக்கும் .
யுரேனஸ் அல்லது நெப்டியூன் ஏழாமாதியை கெட்ட பார்வை பார்ப்பின் விவகாரத்து நடக்கும் . செவ்வாய் கெட்ட பார்வை பார்ப்பின் தினம் வீட்டிற்குள் அடிதடிரகளை நடக்கும் . சனி கெட்ட பார்வை பார்ப்பின் சந்தேகத்தால் வாழ்க்கை பாழாகும் .
இரண்டு , ஏழாம் வீடுகள் , சுக்கிரன் மூன்றும் பாதிக்கப்பட்டால் ஜாதகனுக்குத் திருமணமே நடக்காது ; நடந்தாலும் கூடி வாழும் யோகம் அமையாது .
ஏழாம் வீடு கெட்டு , இரண்டாம் வீடு கெடாமல் இருந்தால் மறு விவாகம் சுலபமாய் நடக்கும் . திருமணம் பற்றி இதுபோல ஆராய்ந்து கூறவேண்டும்
( iv ) அடுத்து ஒருவர் கடன் புரட்ட முயற்சி செய்து கொண்டிருச்கிறேன் ; கிடைக்குமா கிடைக்காதா ? ' ' என்று கேட்கிறார் . என்ன பதில் சொல்வது ? கடன் வாங்குவது ஆறாமிடம் சம்பந்தமானது . எனவே ஆறாமிடமும் , ஆறாம் அதிபதியும் கெடாமலிருப்பின் சுலபமாய் கடன் கிடைக்கும் என்று கூறலாம் .
( v ) அடுத்து புத்திர பாக்கியம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்போம்.
ஒரு ஜாதகருக்கு எப்போது குழந்தை உண்டாகும் ?
இரண்டு , ஐந்தாமாதிகள் , மற்றும் இவர்களின் சாரத்தில் நின்ற கிரகங்கள் , ஆகியவைகளின் கலப்பான தசாபுக்தி அந்தரங்களில் ஜாதகருக்குக் குழந்தை ஏற்படும்
இரண்டு , ஐந்தாமாதிகள் கெடாமலிருப்பின் நாக தோஷம் இருப்பினும் குழந்தைகள் இருக்கும் - குழந்தைகள் நன்றாகவும் இருக்கும் .
ஐந்தில் நிற்கும் ராகு சுபரின் பார்வை பெறாவிட்டால் இரண்டாமாதியின் சாரத்தில் நிற்குமாயின் , ராகு தசையில் இரண்டாமாதியின் புக்தியிலோ அல்லது இரண்டாமாதி தசையில் ராகு புக்தியிலோ புத்திரம் ஏற்படும் .
ஜாதகத்தில் புத்திர மின்மைக்கான அமைப்புகள் என்னென்ன ?
ஐந்தாம் பாவகம் மலட்டு ராசிகளான மேஷம் , மிதுனம் , சிம்மம் , அல்லது கன்னியில் அமைதல் ஐந்தாமாதியும் , ஐந்தில் நின்றவர்களும் கெட்டுப் போயி ருத்தல் - இரண்டு , ஐந்து இரு பாவகங்களும் கெடுதல் இரண்டு , ஐந்தாம் பாவகங்கள் எவ்விதத்திலும் பிணைக்கப் படாமலிருத்தல் முதலான அமைப்புகள் புத்திரமின்மையைக் காட்டும் .
புத்திரகாரகனான சனியால் கெட்ட பார்வை குரு . பார்க்கப்படின் குழந்தை பாக்கியம் சிறப்பாயிராது .
1 , 5 - ஆம் அதிபதிகளுக்கிடையே நல்லுறவு இருப்பின் , புத்திரனால் பிற்காலத்தில் நன்மையடைவான்
. ( vi ) தொழிலில் கூட்டு சேரலாமா கூடாதா என்று சிலர் கேட்பர் . ஏழாமாதி , ஏழாமிடம் கெடாமலிருந்தால் கூட்டு வியாபாரம் செய்யலாம் என்று சிபாரிசு செய்யலாம் .
வியாதி பற்றி சிலர் கேட்பர் ஆறாமிடத்தை கொண்டு சாதாரண வியாதிகளைக் கூற வேண்டும் . எட்டாமிடத்தைக் கொண்டு தீராத வியாதிகளைக் கூறவேண்டும் .
லக்கினாதிபதியும் ஆறாம் அதிபதியும் கெட்ட சம்பந்தம் பொற்றிருந்தால் ஜாதகர் / ஜாதகியர் அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
ஆறாம் அதிபதியும் , இரண்டாம் அதிபதியும் கெட்ட முறையில் தொடர்பு பொற்றிருந்தால் , கண்நோய் , கபசுரம் , கிட்டப் பார்வை , தூரப்பார்வை , முகரோகம் , சொத்தைப் பற்கள் , திக்குவாய் முதலான ஏற்படுத்தும்.
எட்டாம் அதிபதியால் லக்னாதிபதி பாதிக்கப் பட்டால் கிரகத்தின் தன்மைக் சேற்ப டி.பி. கான்சர் , குஷ்டம் , காக்கை வலிப்பு , தீராத மனக்கோளாறு முதலான தோன்றும் . இவை அந்தந்த கிரகங்களின் தசாபுத்திகளில் தோன்றும் . கூடவே லக்னாதிபதி சுபகளின் பார்வையும் பொற்றிருந்தால் நோய்கள் குணமாகும் .
வியாதிகள் பற்றி இப்படி ஆராய்ந்து கூறவேண்டும் .
வீடு கட்ட முடியுமா என்கிறார் ஒருவர் . நான்பாமாதி கெட்ட பார்வை பொமலிருப்பின் , கூடவே அதிர்ஷ்டம் வெற்றிகள் அளிக்கக்கூடிய பதினோராமாதியின் சர்பந்தமடையின் , ஜாதகர் பத்து மாடிக் கட்டிடங்களை கட கட்டி முடிப்பார் .
சகோதரர்களுக்குள் எப்போது ? முன்குமார் கெட்ட பார்வை பெறின் , அக்கிரகங்களின் தசாபுத்திகளில் பிரிவின் ஏற்படும் .
வழக்கு வியாஜ்ஜியங்கள் கேட்கிறர் என்றால் ஏழாமிடம் பாதிப்படைந்திருதால் வழக்கு தோன்றும் .4 – 7 – ஆம் வீடுகள் பாதிப்படைந்திருந்தால் நிலம் , பூமி , வீடு . தோட்டம் தொடர்பான வழக்குகள் ஏற்படுத்தும்..கூடவே ஏழாவம் சுபர்களின் பார்வை பொற்றிருந்தாலோ அல்லது அதிர்ஷ்டம் வெற்றி தரும். பதினொராமாதிபதியின் சுபர்களின் தொடர்புகள் பொற்றிருந்தால் வழக்கில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படுத்தும்.
சிலர் போட்டி பந்தயம் ,பேட்டி , நேர்முகத்தேர்வு . கோர்ட் விவகாரம் , பெண் பார்க்கச் செல்லுதல் . மாடு வாங்கச் செல்லுதல் , கடன் வாங்கச் செல்லுதல் , முதலான சில காரியங்களை மனதில் கொண்டு , வெற்றியா , தோல்வியா என்று கேட்பர் . இதற்கு பிரச்ன ஆருடம் மூலம் பதிலளிக்க வேண்டும் . ஒரு மாதத்தின் பெயரை சொல்லச் சொல்லி , அதை லக்னமாகக் கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கேற்ப ஆராய்ந்து பதில் கூற வேண்டும்
சூரியன் , பத்தாம் அதிபதி , பத்தாமிடம் ஆகிய மூன்றும் பாதிப்பில்லாமமால் சுபபார்வை பொற்றிருந்தால் ஜாதகர் அரசியல்வாதியாகலாம் .அரசியலில் செவ்வாக்கு பெறலாம் வட்டம் , மாவட்டம் ஆகலாம் ; மந்திரியாகலாம் .
இரண்டில் சுபர் நிற்க அல்லது இரண்டாம் அதிபதி சுபர்களால் நற்பார்வை பார்க்கப்படால், கடன் கொடுத்தால் சுலபமாய் திரும்ப கிடைக்கும் .அரசாங்கம் எந்த சட்டம் போட்டானும் கடன் வாங்கியவன் நாணயமாய் தானாகத் திரும்பக் கொடுப்பான்
ஒருவருக்கு இரண்டாம் அதிபதி பத்தில் இருக்க சிறப்பாக சம்பாதிக்கும் யோகம் இருப்பதாகக் கொள்வோம் . இந்த இரண்டாமாதியை குரியன் நற்பார்வை பார்க்க , அரசாங்க அதிகாரிகளின் தொந்திரவுகள் எதுவும் ஏற்படாது . சூரியன் கெட்டபார்வை பார்த்தால் அரசாங்க அதிகாரிகளின் தொல்லைகள் பல விதத்திலும் ஏற்படும் .
9 - ஆமிடம் நீர் ராசியாயிருக்க அல்லது – 9 அதிபதி நீர் ராசியில் நிற்க அல்லது சந்திரன் அல்லது நெப்டியூன் .9 – ஆம் இடத்தில் நிற்க , கடல் மார்க்கப் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு . 9 , 10 - ஆம் வீடுகள் எவ்விதத் திலேனும் நீர் ராசியால் இணைக்கப்பட்டால் மலேஷியா , சிங்கப்பூர் , குவெய்த் , துபாய் போன்ற வெளிநாடுகள் சென்று சம்பாதிக்கலாம் (உதாரணம் : துலா லக்னக்காரருக்கு ஒன்பதாமாதி யான புதன் , 10 - ல் , நீர் ராசியான கடகத்தில் நிற்க , இப்புதனை சுபர்கள் நற்பார்வை பார்க்க , இச்சாதகன் வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசைப்பட்டால் நடக்கும் )
2 , 5 - ஆம் பாவகங்கள் , சுக்கிரன் இம்மூன்றும் கெடாமலிருக்க , ஒருவர் சினிமா , நாடகம் கவிதைகள் கதைகள் சங்கீதம் போன்ற துறைகளில் பெரும் புகழடையலாம் .
இப்படி ஜாதகனின் நோக்கங்களுக்கேற்ப பல விஷயங்களையும் ஆராய்ந்து கூறவேண்டும் .
ஒருவனுடைய ஆயுள் பாகம் எவ்வளவு , அவன் எப்போது இறப்பான் என்றெல்லாம் சோதிடன் கணித்துக் கூறக் கூடாது .
தொண்ணூறு வயதுக் கிழவனிடம் அடுத்த மாதம் வரை தான் உனக்கு ஆயுள் என்றோ அல்லது அடுத்த வருடம் வரைதான் உனக்கு ஆயுள் என்றோ அவர் ஜாதகத்தில் அப்படி இருந்தால் கூடக் கூறக் கூடாது . இப்படிக் கூறுவது நாகரீகமல்ல .
முக்காலும் , வழக்கத்தில் , எந்த சோதிடரும் இவ்வாறு ஆயுள் நிர்ணயம் செய்து கூறுவதில்லை என்றலும் ஆயுள் பாக நிர்ணயம் பற்றிய விதிகளைக் குழப்பம் இல்லாமல் சுருக்கமாக பார்ப்போம்.
ஆயுள் ஸ்தானங்கள் எட்டாமிடமும் , எட்டுக்கு எட்டாமிடமான மூன்றாம் இடமாகும்.லக்கின பாவகத்தையும் சனியின் பலத்தையும் ஆராய வேண்டும்.
லக்னாதிபதி சுபருடன் சேர்க்கை, லக்னத்தைச் லக்னாதிபதி சுபர்பார்வை பெறல்- லக்னத்தில் சுபர் நிற்றல் சுபர் பார்த்தல் - லக்னத்திற்கிருபுறமும் பாவர்கள் நிற்காதிருத்தல் - லக்ன கேந்திரங்களில் பாவர்கள் நிற்காதிருத்தல் முதலான அம்சங்கள் தீர்க்காயுளுக்கு வழி வகுக்கும் . இதில் ஒவ்வொரு அம்சமும் குறையக் குறைய ஆயுள் பாகமும் குறையும் . இதுபோலவே 3 , 8 - ஆம் பாவகங்களையும் ஆராய்ந்தறிய வேண்டும் . பின்பே ஒருவர் தீர்க்காயுள் உள்ளவரா மத்திமாயுள் உள்ளவரா அல்லது அற்பாயுள் உள்ளவரா என்பதை முடிவு செய்ய வேண்டும் .
மாரகஸ்தானங்களான 2 , 7 - ஆம் வீடுகளின் அதிபர்கள் அல்லது 2 -7 – ஆம் வீடுகளில் இருப்பவர்கள் அல்லது 2 – 7 – ஆம் அதிபதிகளுடன் கூடியவர்கள் ஆகியவர்களே தங்கள் தசாபுக்திகளில் மாரகத்தைக் தருவார்கள். அல்லது அதற்கு இணையான கண்த்தை தருவார்கள்.
தொடரும் ------------
தொகுப்பு சூரியஜெயவேல்
Comments
Post a Comment