போதுமாட சாமி 2

 2. போதுமாட சாமி   ஜாதக ஆய்வு   


இவருடைய ஜாதகத்தில் எட்டில் சூரியன் இருக்கும் பலன் கதிரவனெட்டில் கலந்துமே விருந்தால் கன்னுக்கு வருத்தமே காணும்

மதியிலா மூடன் அற்பமாம் புத்தி அவனுக்கு வயது மட்டாகும்

அதிகமாம் பாவர்கூடிலோ அனர்த்தம் அவனது தந்தைக்கு அரிடம்

கெதியிதுமிதுவே கெலிப்பதுமில்லை கிலோமே கெடுதலையாகும் 

  (இ-ள்)  சூரியன் எட்டில் இருந்தால் கண்ணுக்கு பாதிபு ஏற்படுத்தும். யோசித்து திட்டமிட்டு செயல் படுத்தும் அறிவு குறைவு, ஆயுள் குறையும். அதீத காம உணர்ச்சி உள்ளவர்கள். பாவிகள் இணைந்தால்

 தந்தைக்கு ஆயுள் குறையும். விதி இதுதான் துண்பங்களை ஏற்படும் 



 வேறு மன்னனே எட்டதிலே ரவியிருக்க 

       வளர் பாலன் இவனுக்கு நாலு கெண்டம்

நன்னயமாய் வைசூரி ஜலம் ரோகம் நாற்கால் 

        நலமாக இவைகளினால் விபத்து வாய்த்துப்

புண்ணியற்கு அது நிவர்த்தி ஆகுமென்றேன்

        புண்ணியமுள்ள வாக்குமிக பவிதயாகும்

கண்ணியமாய் வாக்குறைப்பான் சோதிடங்கள்

      சித்தியே கற்றுறைப்பான் உலகில் மைந்தா


மைந்தனே பிதுர் சொத்து உடையோனாகும்

      மகப்பெருக்கு விசேஷயிலான் கபடுமுள்ளான்

அந்த மனைவியின் மேல் கூடிண வெறுப்பன்

       ஆளடிமைப் பணி தியுள்ளான் வெளியார்க்கண்யன் 

எந்தையே பலவிதளம் வித்தை கற்பான்

         எக்காலும் போகமுள்ளான் என உரைப்பார்

சுந்தரனும் தலையெடுத்து வேணசொத்து

      இகமாகத் தேடிடுவான் ரோகம் கொஞ்சம் ,    (சுகர்நாடி)


சூரியன் எட்டில் இருந்த பலன்கள் ஜாதகர் பலகாலம் வெளியூர்களில் வசித்தார்..எதிர் கால திட்டமில்லாமல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டார். . லட்சியம் அடிக்கடி மாற்றம் செய்வர். காரியங்களை முடிக்காமல் பாதியில் விட்டுவிடுவார். அவ நம்பிக்கையும் தாழ்வு மனப்பான்மையும் , எதிலும் குற்றம் கண்டு பிடித்து தம் வாழ்க்கையையும் பிறர் வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொள்டார். இவரது சிந்தனை ஓட்டமும் பல தடைகள் ஏற்பட்டது .பணத்தின் மீது அதிகமான ஆசை கொண்டவர்.கடைசி காலத்தில்  தனிமைச் சூழலில் வாடுகின்ற நிலையை ஏற்படுத்தியது. பறவைகள் , விலங்குகள் போன்ற உயிரினங்கள் கூடி வாழும் இயல்பு உடையவை . மனிதனும் கூடி வாழும் இயல்பைப் பெற்றவனே . ஜாதகரோ மகளோடு கூடி வாழ்ம் பாக்கியத்தை இழந்தார். நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்பட்டு ( மனைவியை வேறு ஒருவர் அட்கொண்டதனால்  வீட்டை விட்டு வெளியே லந்துவிட்டார் .)


லக்கினாதிபன்ஈ ராறில் எட்டில் ஆறி லாதல் 

துக்காமாம் பாவர் கூட தோன்றிட நோக்க ஒரை 

தாக்கதாய்ப் பிறந்த பிள்ளை தரணியில் இருக்கு மட்டும்

மிக்கதாய் கீர்த்தி யாக லிளங்கிடான் லிகிர்தி வாக்கான் 

(இ-ள்) லக்கினாதிபதி 6 – 8 – 12 -ஆம் வீடுகளில் ஒன்றில் பாலிகளுடன் இருந்தாலும் அல்லது பாவிகள் பார்த்தாலும் ஜாதகர் இந்த உலகில் வாழும் வரை எந்தவித புகழுரை இல்லாமலும் / பயத்துடன்  வாழ்வர்கள். ஜாதக பாரிஜாதம்

பசியலக் கினத்து நாதன் பன்னிரண் டாறில் எட்டில்

வசிகர முடனே ஏக வயங்கியே பாவர் பார்க்க 

சசியுடன் மறைந்தி ருந்தால் சக்திதான் உடலில் ஏது?

திசைதொறும் சிந்தை செல்லும்  தீயவி யாதி தோன்றும் ! 

  (இ-ள்)  லக்கினாதிபதி 6 – 8 – 12 – ஆம் ஏதாவது ஒன்றில் இருக்க பாவ கிரகங்கள் பார்க்க,  சந்திரனும் 6 – 8 – 12 -ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் ஜாதகர் உடல் பலவீனமாக இருக்கும் நோய்வாய்ப்படுவர்கள். சிந்தனையும் செல்லும் தீயதாய் முடியும்.

     ஜாதகரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியன் எட்டில் சனியுடன்,  சந்திரனும் ஆறில் இருக்கின்றனர் குரு இவர்களை பார்பதால் நோய் நெடி ஏற்படவில்லை இவரின் சிந்தனை & ஆசை & பேச்சு & மரியாதையை பங்கம் ஏற்பட்டது. 

ஜாதகரின் ஜாதகத்தில்  ஆறில் சந்திரன் இருக்கும் பலன்

நேயனாம் ஆறதிலே மதியிருக்க

      நேர்த்தியுடன் இன்னவர்க்கு ரோகம் கொஞ்சம்

 காயமில்லை உடன் நிவர்த்தி ஆகுமென்றேன்

       மனைவிக்கும் க்ஷணம் சிலுகாம் குறைகளுண்டு

 ஆளடிமைப் பணிதியது விசேஷ முண்டு 

         உருக்கமுடன் பலபேரைக் காக்கும் நேயன்  (சுகர்நாடி)

.   

சதிருடன் ஆறில் மதியமே இருக்கில் சலபயம் காரியம் தாழ்ச்சி 

முதிர்சய ரோகி உத்தியோ கத்தன் முதற்கடன் கொடுக்கின்மீ ளாது 

கதியொடு போக்கு வரத்துறும் வாழ்வு கலைநிறை மதியெனில் செல்வம்  

அதிகதீர்க் காயுள் தேய்மதி யாகில் அற்பாயுள் உதரநோ யுளனே 


   (இ-ள்)   ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் தண்ணீரில் ஆபது ஏற்படும்.  காரியங்கள் தாமதப்படும்.காச நோய் ஏற்படும். உயர்பதவிகள் அடைவர்கள். பிறருக்கு கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்காது. அலைந்து திரிகின்ற தொழில் அமையும்.  வளர்பிறை சந்திரனாக இருந்தால் ஆயுள் அதிகம். தேய்பிறை சந்திரனாக இருந்தால் ஆயுள் குறையும். வயிறு தொடர்பன நோய் ஏற்படுத்தும். (சாதக சிந்தாமணி)

  சந்திரன் ஆறில் இருப்பதன் பலன்கள் : எதிரிகளுக்கு அடிமைப்படும் அவலநிலை இவரிடம் கிடையாது  கீழ்ப்படியாமை இவரிடம் மேலோங்கி நிற்கும் . தன் கண் அசைவிலேயே முரட்டுத்தனமுள்ள மனிதரையும் அடக்கிவிடுவார் . செலவுகள் அதிகம் செய்வர்கள்   .

  வைத்தியச் செலவுகள்  மனைவிக்கு அதிகம். ஞானத்திலும் வயதிலும் வளரவளர சமூக உறவில் இவர் பெரிதும் அனுபவம் பெறுவார்  

ஜாதகரின் ஜாதகத்தில் மூன்றாமிடத்தில் செவ்வாய் பலன்

மங்கலன் மூன்றாமிடத்திலேயிருந்தால் மாதாவுக்கானியே வருமாம்

பங்கமாம் ராகு கூடியே யதிலே விருந்தால் பரஸ்த்ரீ மீதினில் பார்வை

தங்களில் பிறந்த சதோதர தோஷம் சாருமாமே .(சுகர்நாடி)

  லக்கினத்திற்கு மூன்றில் செவ்வாய் இரூந்தால் தாயருக்கு துன்பங்கள் தரும். ராகு சேர்ந்திருந்தால்  அன்னிய பெண்களின் தொடர்புகள் ஏற்படும். சகோதர்களுக்கு துபன்பங்கள் தரும். 

   ஜாதகரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்துள்ளார். செவ்வாய் நின்ற வீட்டோன் சுக்கிரன் ராகு சேர்ந்துள்ளார் இவரின் தாயரின் இல்வாழ்க்கை பாதிக்க பட்டு தனியாக வாழ்தர். இவருக்கு இளைய சகோதரியின் திருமண வாழ்கையும் பாதிப்பை ஏற்படுதியாது..

அரசெனும் மூன்றில் வக்கிரன் நிற்கில் அருள்பிதுர்  பிராதுரு தோடம்

பரவுஞா தியர்தம் கலகமே உண்டாகும் பண்புறு குணப்பிர சித்தன்

விரவுதுர் புத்தி தைரியம் பாவர் விரும்பும்ஆ சாரன் என் றுரைப்பார் 

    (இ-ள்)   மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தந்தைக்கும் / இளைய சகோதரனுக்கும் பாதிப்பை தரும். பங்காளிகள் வகையில் வழக்குகள் வரும்.தனது நற்ச் செயலால் அனைவராலும் அறியப்படுவர். தைரியசாலி  துஷ்டர்களுடன் சேர்க்கை / தீய்  பழக்கம் உள்ளவர்கள். 

     ஜாதகரின் தாய்க்கும் தந்தைக்கு சச்சரவு கடைசிவரைக்கும் இருவரும் சேர்ந்து வாழவில்லை ஜாதகர் / சகோதரியும்  வளர்த்தது தாய்மாமன் வீட்டில் . சகோதரிக்கு திருமணம் நடந்து ஆறு ஆண்டுகள் அனபின்பு கணவரும் இறந்துவிட்டார். ஜாதகர் தீய பெண்களின் சேர்க்கையால் அதிக துண்பத்திற்கு ஆட்பட்டார்.


ஏழிலே புதன் இருக்கும் பலன் 


தீர்க்கமாய் கணக்கன் ஏழனிலிருந்தால்

   சீதகன் வித்தகன் ( ஞானி ) கியானி 

மன்னனே ஏழதிலே புதனிருக.    

    நன்னயமாய்ப் பலமங்கை வலியச்சேர்வான்

நாதாந்த சங்கீதக் கேள்வி மெத்த

     புண்ணியங்கள் வேணதாய்ச் செய்யவல்லான்

பூவையர்கள் ரோகமது மத்தியமுள்ளான்

      வீம்புடனே பேசுகின்ற குணத்தானாமே .


 ஆமேதான் மங்கைதனைச் சும்பனங்கள்

     அவளைச் செய்யச் சொல்லியுமே ஆசைதீர்வான்

 பூமியது இல்லமது கட்டி வாழ்வான் 

      பொருளுள்ளான் கெம்பிரன் உதார வாக்கோன்

தீமைகளைச் செய்திடான் புராணக்கேள்வி 


     செல்வனிவன் கேட்டுமே அறியும்புத்தி

 நாமகளின் செயலுள்ளான் சங்கீதங்கள் 

         நலமாக அறிகின்ற புத்தியுண்டே        (சுகர்நாடி)

.

பன்னிரண்டில்  குரு இருக்கும் பலன் .

ஈராறில் குருவும் இன்பமா யிருந்தால்

    இப்பத்தி நிலையுமே இருப்பான் 

ஆனியு மெனையாய்க் கொண்டிடுநல்ல 

       அவர்கட்கு விர்த்தியு மாவன்


 தேறுவான் எங்கும் தோசாந்தர சௌக்கியன்

      திரேகமேது வடிடாது இருப்பன்

மூறுவான் பெரியோ ரவர்களால்

      மேன்மை யெதுவென வாழுவ னவனே

     

சூட்டினேன் பன்னிரண்டில் குருவிருக்க 

    துணைவ ரச்சங் கைக்குற்ற முடையோனாகும்

நாட்டினிலே யாவர்க்கும் நல்லோனாகும்

     நாதாந்த சங்கீதக் கேள்வியுள்ளான்

 பூட்டகத்தை விட்டுமே ஆவிசெல்லும்

     புகலுமந்தக் காலையிலே பிணிகள் காணேன்

தாட்டீகப் பிரம்மலோகம் அடைந்து ஜன்மம் 

       தரணிமிசை மறுஜனனம் உண்டுசெப்பே


        சிம்ம லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் ( கடகத்தில் ) குரு இருப்பதன் பலன்கள் : வாழ்க்கை ஒரு போராட்டக் களமாகவே இருக்கும் . வருமானத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகம் இருக்கும் . அரும்பாடுபட்டு சம்பாதிக்கின்ற பணம் நொடிப் பொழுதினில் செலவாகிவிடும் . குடும்பத்தில் இவருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்  இவரைத் தூற்றும் முயற்சியிலேயே

 எப்பொழுதும் ஈடுபடுவர்கள்.குழந்தைகளால் நன்மையில்லை


சுக்கிரன் ஒன்பதில் நிற்கும் பலன்

பிருகு ஒன்பதிலிருந்திடத் தெய்வ

      பிராமணன் போஷகன் பின்னும்

தருக்குவான் தர்மன் தபசியுமெனலாம்

       உள்ளானாம் சுங்கனவன் நவமும் நிற்க

உற்றதொரு மனைவிசொல் தள்ளாப்பிள்ளை

        கள்ளமது அற்பமுண்டு


: சனி எட்டில் நிற்கும் பலன்

 எட்டிலே சனியு மிருந்திடில் 

    எழுபத்தைஞ்சுதான் வயதுமே யென்பார்

மட்டில்லா தரித்திரன் மங்கையால் கலகம்

      வாழ்வதே சேவகா விருத்தி

தட்டிடும் சரீரம் கஷ்டமே கொடுக்கும்

     தவிப்புமே சலிப்புமே தோன்றும்

 புஷ்டியுமில்லை பொருள் வரத்தில்லை

       புண்ணிய வானென லாமே 

  சனி எட்டில் இருந்தால் .இவரது செயல்கள் பெரும்பாலும்  அவசரம் தான்  அதனால் தான் இவர் எளிதாக எந்தக் காரியத்திலும் தோற்று விடுவார் . இவரது செயல்களெல்லாம் வீண் செயல்களாகி விடும் . விளைந்த வயலில் வெட்டுக்கிளி போல இவரது பயன்களை அனுபவிக்க வேறொருவர் வந்து விடுவார் .மேல் அதிகாரிகள் இவரை குறைத்தே மதிப்பிடும் . உச்சி வெயிலில் உழைக்கும் இவர் எச்சில் இலை போல் எறியப்படுவார் . சமூகம் கூட இவரை இனிதே நடத்தாது . இதனால் திசையறியா கப்பல் போல் திக்கற்று நிற்பார் . வெளி நாட்டு மண்ணில் உழைப்பவர்கள் மகிழ்வுடன் இவருக்கு உதவிகள் தந்து பக்கத்தில் நிற்பர் . மனைவி ( கணவன் ) மக்களால் நச்சு தான் ! கன்னக்குழியில் கண்ணீர் முத்துகள் நின்று நிலைக்க முழு நீள சோக நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும்  வாழ்நாள்  குறைவு தான் ! 

ஒன்பதில் ராகு இருக்குற பலன்


ராகு  ஒன்பதில் நிற்கும் பலன்

அரவ மொன்பதி லணுகியே யிருந்தால்

     அவன் பிதா தனக்குமே யரிஷ்டம் 

பெருக்குபின் திருவங்கிசம் தனக்கும்

     பெலமிலா பாக்கியம் போகும்

 குருகுல வஞ்சன் குலத்துரோகி லுத்தன்

      குடும்பத்தைக் கலைத்திடும் குரூபி

 வறுமையு முள்ளோன் வாழ்வது கொஞ்சம்

      வையக மெச்சிட வாழ்வான் 



கோதையின் மேல் கூவணம்சிலகு உடையோனாகும் 

அண்டின் பேர் தளைக்காக்கும் குணமும் உள்ளான் 

     அன்புள்ள புத்திரரும் சிலது இடம்

இவரது வாழ்க்கை சோகமுடையது .

     துரதிர்ஷ்டம் ஓயாமல் வந்து கொண்டிருக்கும்

        இவர் சலிப்பில்லாமல் உழைப்பார் 

. ராகு ஒன்பதில் இருந்தால்  எதுவும் கை கூடி வராது . மகாலெட்சுமியின் துணை இவருக்கு இல்லாத காரணத்தால் இருள் சூழும் , ஆந்தைகள் மகிழும் , தனியே கலங்கிப் புலம்புகின்ற நிலை ஏற்படும் . பொருந்தாத செயல்கள் செய்து அதன்மூலம் ஓரளவே பணம் சம்பாதிப்பார் . பொய்க் கதைகளை மூடரிடங்காட்டி தன்னை உயர்த்திக் கொள்வார் . கடவுளிடத்தே இவருக்கு நம்பிக்கை இருக்காது . உண்மையான சாஸ்திரங்கள் மறந்து காரியங்கள் செய்வார் . எல்லா விதிகளும் அவனால் அமைவன . எல்லா விதிகளும் அவனால் அழிவன , மாறுவனவற்றை மாற்றுவிப்பது அந்த இறைவனின் தொழில் , அவனைச் சரணடைவது நன்று .


ஆமேதான் மூன்றதிலே கேது நிற்க 

     அன்புள்ள தைரியன் பிடிவாதத்தான்

 சேமமுள்ள உடன்பிறவி இல்லனாகும்

     தேவிசுகம் அற்பனாகும் வெளியார்க் கன்பன்

 தாமதங்க ளுடையவனாம் புத்திரநேயன்

      சதிராக முதல் ஒல்லி பின்பருப்பான்

காமமுள்ளான் பகல்போகி ஸ்த்ரீகளுள்ளான் 

     கண்டுகொள் இது உண்மை கருணையாக.      


தெள்ளிய மூன்றில் கேதுவே இருக்கில் செய்திடும் காரியம் தாழ்ச்சி 

தள்ளுறா வீர பாராக்ரம சாலி தலையிலான் சாத்திரம் கேள்வி 

விள்ளுறு கபால ரோகமே உடையன் வீறிய பிராதுரு தோடம் 


கள்ளவிழ் கமலப் பொகுட்டில்வீற் றிருக்கும் கமலைக்கும் இனியபொற் பனமே!

   (இ-ள்)  லக்கினத்திற்கு மூன்றில் கேது இருந்தால் காரியங்களை உடனுக்குடன் செய்யும் பழக்கம் இருக்காது. வீரபாராக்கிரம் உடையவர்கள். தலையில் நோய் உள்ளவர்கள். சகோதரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

தீர்ர்க்கலக்கினத்தோனாறெட் டீராற்சேரல்லா 

லார்க்குமட்டத்தோனேனு மாறெட்டுபனிரண்டாகப் 

பார்க்குங்கோள்பாபராப் பபாபர்கள்கூடவல்லாற.

கூ.க்கத்தமனநீசங்கள் கொடியவீடற்பவாயுள்

(இ-ள்)  லாக்கினாதிபதி ஆறு / எட்டு /பன்னிரண்டில்  ஒன்றில் இருக்க அல்லது எட்டாம் அதிபதி ஆறு / எட்டு / பன்னிரண்டில் இருக்க இவர்களுடன் பாவிகள் சேர்க்கை / பார்க்க , நீச்சம் அஸ்தமனம் அடைந்திருந்தால் அற்பாயுள்.


இவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியன் எட்டில்  பாவகிரகம் சனியுடன் உள்ளர். எட்டாம் அதிபதி குரு பன்னிரண்டில் உச்சத்தில் உள்ளர்   52 – 5 வயதில் இயர்கை மரணம் அடைந்தார்.

 சனியின் திசையில் ஜாதகர் சம்பாத்தியம் அனைத்தையும் இழந்து விட்டார் சனி திசை சுக்கிர புத்தி இறைவன் இவரை ஆட்கொண்டான்.

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்