ஜோதிடத்தில் 3 - 6 - 8 - 12 (ஒரு சிரப்பாய்வு) ஜோதிட வாழ்வியில் விஞ்ஞாம்

 3 - 6 - 8 - 12 ஏன் துர்ஸ்தானம்

                     ( ஒரு சிறப்பாய்வு)

 மூன்றாமிடத்தைக் கொண்டு  மனிதனின் மேலோங்கிய தைரியத்தைக் குறிப்பிடுகிறது . ஒரு மனிதன் முயற்சியினால் முற்போக்கு நிலை அடைய வேண்டுமென்றால் மூன்றாமிடம் சிறப்பாக இருக்க வேண்டும் . உழைத்துப் பொன் பொருள் சேர்க்கவும் . இந்த மூன்றாமிடம் வழி வகை செய்கிறது . ஒரு பணியில் ஒருவன் செலுத்தும் அத்தத் திறமைக்கும் , பணியாட்களைப் பெறுவதற்கும் , நிர்வாகத் திறமைக்கும் இடமளிக்கிறது . இந்த மூன்றாமிடம் சகோதர விருத்திக்கும் அவர்களிடம் நிலவுகின்ற உறவுத் தன்மைக்கும் காரணமாகிறது.தாய் -மகனுக்குள் ஏற்படும் உறவு அல்லது பிரிவுக்கும் , தாவினுடைய ஆரோக்கியம் சுக துக்கம் ஆகியவற்றிற்கும் தாய்வழிச் சொத்துக்களை அனுபவிக்கவும் . இந்த மூன்றாமிடம் எதுவாகிறது . இசைத் துறையில் சிறந்து விளங்கவும் , கணீர் கணீர் என்ற பேசவும் , வளமான குரல் தன்மையும் இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது தொழில் வகையில் ஒப்பந்தம் கட்டு ஆகியவத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களை இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு காண முடிகிறது . தேக பலத்திற்கும் , உடலில் மறைந்திருந்து தாக்கும் நோய்க் கூறுகளுக்கும் , போக சக்திக்கும் மூன்றாமிடம் வித்திடுகிறது வங்கியில் சேர்த்து வைக்கப்படும் ரகசியத் தளத்திற்கும் முன்றாமிடம் வாய்ப்பாகிறது . படையைத் திரட்டி ஒருவனா வீழ்த்தும் ஆற்றலுக்கும் இந்த பாவம் ஊக்க மளிக்கிறது . மூன்றாம் பாவம் இராணுவம், போலீஸ், ஊர்க்காவல், சேனாதிபதி, தூது செல்லும் உளவுத்துறை  ஈடுபடுத்தி சாதனை புரிய முக்கியத்துவமாகிறது.     மூன்றாவது வீடு அருகிலுள்ள உறவினர்கள், சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள் ,  தகவல் தொடர்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் , வாழும்  நகரம் அல்லது நாடுசிறந்தது அறியலாம் . தகவல் சேகரிப்பு மற்றும். ஒருவரின் அறிவு, குறுகிய பயணங்கள் மற்றும் உடனடி சூழல் ஆகியவை அடங்கும்.  பாரம்பரியமாக, இந்த வீடு வாழ்க்கையின் குறிக்கோள்களை நோக்கிய ஒருவரின் முயற்சிகளிலும் .


 6 ) ஆறாம் பாவச் சிறப்பு ஆறாமிடத்தைக் கொண்டு ருணம் ( கடன் ) , ரோகம் ( நோய் ) சத்ரு ( விரோதி ) , வியாஜ்ஜியம் ( வழக்கு ) , சிறை ( தண்டனை ) ஆகியவற்றை அறிய வேண்டும் என ஜோதிடம் கூறுகின்றது. ஆறாவது வீடு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது, ஆனால் முதல் வீடு போன்ற உடல் ஆரோக்கியத்துடன் அல்ல.  சுகாதாரம் மற்றும் உணவுடன் வலுவாக தொடர்புடையது, மற்றும் குடல்-அனைத்தும் ஒருவரின் உடல் இரணைப்புடன் உள்ளது. வியாபாரத்தில் அல்லது ஒரு குடும்பத்தை வளர்ப்பதில் ஒருவர் அன்றாட வேலைகளையும் வழக்கத்தையும் எவ்வாறு கையாளுகிறார் என்பதையும் குறிக்கிறது.  தினசரி வழக்கத்தை எதிர்கொள்ளும்போது ஒருவர் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது.   (மேற்கத்திய பாரம்பரியத்தின்படி) ஊழியர்கள் மீதான ஒருவரின் அணுகுமுறையையும், ஒருவரின் வாழ்க்கையை சுமுகமாக நடத்துவதற்கு உதவுபவர்களை எவ்வாறு நடத்துகிறர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நோய் உருவாகிறது .கடன் பிறக்கிறது . விரோதி பிறப்பெடுக்கிறார் . வாழ்வில் ஒன்றன் பின் ஒன்றாய் வம்பு தும்புகளில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் சம்பவங்கள் அறிய. முடியும். 

 ஒட்டு  மொத்தத்தில் அகௌரவப்படுத்துவதும் தன்னிலை தாழச் செய்வதும் சில நேரங்களில் சிறைக் கம்பிகளுக்குள் வாழ்ந்து விட்டு வெளியே வருவதற்கும் இந்த ஆறாம் பாவம்தான் காரணம் என்று சொல்லாலம், சர்வசாதராணமாய் இப்பொழுது ஏற்படும் விபத்துக்களுக்குக் காரணமாகிறது . வாகன வகையான வியாதிகள் , வன்முறைச் சம்பவங்களினால் ஏற்படும் விபத்துக்கள். இயற்கையின் காரணமாய் ஏற்படும் விபத்துக்கள் இவற்றிற் கெல்லாம் இந்த ஆறாம் பாவமே காரணமாகிறது . அத்துடன் அறுவைச் சிகிச்சைகள் , உடல் பலஹீனம் , ஆண்மைக் குறைவு , தீராத வியாதி , தீராத கடன் , தொடர் வழக்கு , நீடித்த பகை இவற்றிற்கெல்லாம் இந்த ஆறாமிடம் காரணமாகிறது . இத்துடன் ஆறாம் பாவத்தின்  பிறரிடம் ஏமாறுவதற்கும் , பிறரை ஏமாற்றிப் பின் தண்டனை அடைவதற்கும் இப்பாவம் தூண்டுதலாகிறது . உற்சாகத்தைக் குறைத்து மனிதனின் துரிதச் செயலைத் தாமதப் படுத்தும் கிரகம் ஆறாம் வீட்டுக் கிரகம்தான் . வருகின்ற பணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமா ? உடன் பிறந்தவர்களுக்குள் பகைமை ஏற்பட வேண்டுமா ? ஜாமீன் மற்றும் ஒப்பந்தங்களின் மூலம் நீதி மன்றம் போக வேண்டுமா ? வீடு - மனை - நில புலன்கள் , கால்நடை - வாகனம் இவற்றின் மூலம் கடன்பட வேண்டுமா ? பிள்ளைகள் எதிர்த்து நின்று சமர் புரிய வேண்டுமா ? கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடும் பிரிவினையும் வேண்டுமா ? நண்பனிடத்தில் பகை வேண்டுமா ? நீண்ட நாள் மருத்துவ மனையில் படுத்திருக்க வேண்டுமா ? தந்தை - மகனுக்குள் கருத்து வேறுபாடும் - பிரிவும் வேண்டுமா ? உத்தியோகம் , செய்தொழில் இவற்றில் போராட்டத்தைச் சந்தித்து காலம் முழுவதும் எதிர் நீச்சலே போட வேண்டுமா ? ஆறுக்குடைய கிரகம் இயங்கினால் போதும் , அனைத்தையும் முடித்துக் கொடுத்து விடுவார் . அவ்வளவு சமர்த்துப் பிள்ளை இந்த ஆறாம் வீட்டுக் கிரகம் .


 8 ) எட்டாம் பாவச் சிறப்பு எட்டாம் பாவத்தை விதி பாவமென்றும் நிதி பாவம் என்றும் கூறலாம் . எப்படி ? விதியையும் நிதியையும் அளவீடு செய்யும் பாவம் எட்டாம் பாவம் என்பதால் எட்டாம் பாவத்தை ஆயுள் ஸ்தானமென்றும் , பணபர ஸ்தானமென்றும் ஜோதிடம் கூறுவதால் இவை புலனாகிறது .  ஆரோக்கியத்துடன் தொடர்புடையது-அனைத்தும் ஒருவரின் உடல் இயக்க நிலை,  வியாபாரத்தில் அல்லது  வேலைகளையும்  இந்த வீடு குறிக்கிறது.  தினசரி வழக்கத்தை எதிர்கொள்ளும்போது ஒருவர் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறார் என்பதை குறிக்கிறது. ஊழியர்கள் மீதான ஒருவரின் அணுகுமுறையையும், ஒருவரின் வாழ்க்கையை சுமுகமாக நடத்துவதற்கு உதவுபவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

எட்டாவது வீடு ஒருவரின் பகிரப்பட்ட வளங்களுடன் தொடர்புடையது, அதில் வரி, காப்பீடு மற்றும் வணிக இணைப்புகள் முதல் பரம்பரை மற்றும் பணத்திற்காக திருமணம் செய்தல் ஆகியவை அடங்கும். உடல் இறப்புடன் தொடர்புடையது மற்றும் உடல் விஷயங்களை ஆற்றலாக மாற்றுவதைக் குறிக்கிறது. மரணத்தை விடவும் அதிகம்.  இது உணர்ச்சி, உடல், மன, அல்லது ஆன்மீக ரீதியான தனிப்பட்ட மாற்றத்தைப் பற்றியது.  இதன் காரணமாகவே இந்த வீட்டில் பாலியல், பிறப்பு, மற்றும் வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கை சக்திகளும் அடங்கும். மனநல சக்திகள், அமானுஷ்ய மர்மங்கள் மற்றும் அமானுஷ்ய அறிவையும் கையாள்கிறது. ஆஸ்தி மற்றும் பெரிய லாட்டரி வெற்றிகளுடன் வலுவாக தொடர்புடையது.  குற்ற ஆராய்ச்சி மற்றும் விசாரணைகளும் இதனுடன் சிறப்பிக்கப்படுகின்றன.  பாரம்பரியமாக, இந்த வீடு முதன்மையான 'உயிர் சக்தியுடன்' தொடர்புடையது, மேலும் இது தவிர்க்க முடியாமல் பாலினத்தோடு தொடர்புடையது, மேலும் எளிய காதல் தயாரிப்பைக் காட்டிலும் தனிநபரின் ஆழ்ந்த மற்றும் மிக அடிப்படையான பாலியல் தூண்டுதல்களுடன் தொடர்புடையது. இந்த வீடு முதன்மையாக தனிநபரின் மரணம் மற்றும் சில சமயங்களில் லாட்டரி அல்லது பரம்பரை மூலம் திடீர் ஆதாயங்களைப் பற்றிக் குறிக்கிறது.

எட்டாம் பாவத்தினால் என்னென்ன அறியலாம் ? பழமை மிக்க தமிழ் ஜோதிட நூல் சாதக சிந்தாமணி கூறு வதைக் கவனிப்போம் ,

 " அட்டமம் இகண்டம் ஆயுள் என்று அறையும் 

         மரணதத் துப்பயம் இலிங்கம் நட்டமாய் விழுதல் பறிகொடுத் திடுதல் 

        நவிலந்த நாஞ்சித்திரத்தோடு ஒட்டிய சோரம் பலாயநம் வஞ்சம்   

       உக்கிரம் அவன் சிறைப்படுதல் இட்டமாம் நேதர ரோகம் நீர் ஏற்றம்      

      இலகுநாற் காலதால் பயமே ' 

(இ-ள்)   அஷ்டம ஸ்தானத்திற்கு ஆயுள் ஸதானமென்று பெயர் . ஆயுள் என்பதற்கு உடம்போடு உயிர்கூடி வாழ்நாள் என்றும் , மரணம் என்பதற்கு உடம்பை விட்டு உயிர் நீங்கும் நாள் என்றும் பெயர் . லக்ன பாவத்தினால் இந்த வாழ் நாளின் எல்லையை அறிதல் வேண்டுமென்றும் மரண பரியந்த நிகழ்ச்சியை எட்டாமிடத்தின் வாயிலாக அறிய வேண்டும். அத்துடன் , உலோகக் கருவிகளால் உடலில் ஏற்படும் காயம் , யுத்தம் , மலைமீதிருந்து விழ்தல் , மீளா வியாதி , காரியத் தடைகள் , நீங்காப் பெரும் கவலை , எதிர்பாராத பல துன்பம் , மானக் குறைவு ( அகௌரவம் ) செலவினால் நஷ்டம் , நீங்காத பகை , விண் அலைச்சல் , பாவச் செயல் , அஞ்ஞானம் , களத்திர விரோதம் , பயம் ஆகியவற்றிற்கும் எட்டாம் பாவம் காரணமாகிறது


 12 - ம் பாவத்தை விரய பாவமென்றும் விரய ஸ்தானமென்றும் ஜோதிடம் கூறுகிறது ஒரு சாரார் இது சுபவிரய ஸ்தானமென்றும் , மற்றொரு சாரார் இல்லை இல்லை ,  விரயஸ்தானம்தான் என்றும் அவரவர் அனுபவத்திற்கேற்றபடி கூறுகின்றனார்.தப்பிக்கும் தன்மை மற்றும் தனிமை ஆகியவற்றைக் குறிக்கிறது  மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் மனநல நிறுவனங்கள் மற்றும் தனிமையும் தனிமையும் அனுபவிக்கக்கூடிய எல்லா இடங்களுடனும் தொடர்புடையது.  மர்மத்தின் வீடு மற்றும் பூர்வீக மக்களின் பெரும்பாலான உளவியல் சிக்கல்களுடன் தொடர்புடையது.  சில நேரங்களில் இந்த வீடு துக்கங்கள், இரகசியங்கள் மற்றும் சுய-செயல்தவிர்க்கும் வீடு என்றும் அழைக்கப்படுகிறது, நிச்சயமாக மிகவும் விசித்திரமான வீடு.  ஒருவரின் ஆழ் மனநிலையையும், அறியப்படாத அனைத்தையும் கண்டுபிடிக்கும் வீடு .  சில மேற்கத்திய ஜோதிடர்கள் இந்த வீட்டை தொல்லைகளின் வீடு என்று கருதுகின்றனர்,  ஒருவரின் நனவு அங்கே வாழ்கிறது என்பதையும் அறிய முடியும. சுய மீறலுக்கு வழிவகுக்கும், ஈகோவைத் தாண்டி ஒன்றை நகர்த்தி, சுயத்திற்கு அப்பாற்பட்டது.கழிவு, செலவுகள், இழப்புகள், நீண்ட  பயணங்கள் மற்றும் மோக்ஷத்தையும் குறிக்கிறது என்று இந்திய பாரம்பரியம் கருதுகிறது.  உண்மையில், இந்த வீட்டின் அதிபதி நன்மை பயக்கும் கிரகத்துடன் இணைந்திருந்தால், அது நிச்சயமாக அந்த வீட்டின் நல்ல விளைவுகளைத் தரும் .  அந்த இயற்கையின் உதாரணங்களை நாம் வழங்கும்போது அதைப் பற்றிய கூடுதல் விஷயங்கள் விவாதிக்கப்படும்.  கலந்துரையாடல்கள்


 நமது சிந்தனை ஒரு ஜாதகம் யோக ஜாதகமாயின் அந்த ஜாதகத்தில் 12 - ம் பாலம் சுப விரய விசேஷத்தைப் பெற்றுள்ளது . அவயோக ஜாதக மாயின் அசுபவிரயம் அல்லது மீட்கப்படாத விரயம் ஆகிய வற்றை 12 - ம் பாவம் பெற்றுள்ளது . இந்த 12 - ம் பாவத்தை மட்டும் ஏனைய பதினோரு பாவ அடிப்படையின் கீழ் ஆய்வுக்குக் கொண்டு வருவது ஜோதிட அறிஞர்களின் கடமையாகும்.

  12 - ம் பாவத்தின் சிறப்பினைத் தெரிந்து கொள்ளுங்கள் பாபச் செலவு + பணச் செலவால் பெறும் சுகம் பரதேசத் தொழில் சுயதொழில் சயன சுகம் மறுமைப் பேறு தனம் புண்ணியம் - தியாகம் - யாகம் - பிதிர் விசனம் - குலம் - போகம் பந்தனம் - மோக்ஷம் என்பவையாகும் .

  மேற்கண்ட பலன்களைக் கூர்ந்து கவனிக்கும் போது அனைத்து பால பலன்களின் தன்மைகளும் அள்ளித் தெளித்தாற்போல் காணப்படும் . உண்மைதான் . பன்னிரண்டாம் பாவம் மற்றவை பலன்களை அளவீடு செய்யும் , அல்லது அளவீடு செய்து மதிப் பிடும் ஒரு முக்கிய பாவமாகும்


நான்காம் பாவத்தின் தன்மைகளை விரயமாக்கும் சக்தி மூன்றாம் பாவத்திடம் 

ஏழாம் பாவத்தின் தன்மைகளை விரயமாக்கும் சக்தி ஆறாம் பாவத்திடம் 

ஒன்பதாம் பாவத்தின் தன்மைகளை விரயமாக்கும் சக்தி எட்டாம் பாவத்திடம் 

லக்கின பாவத்தின் உயர்வுகளை விரயமாக்கும் சக்தி பன்னிரண்டாம் பாவத்திடம் //

இந்த அடிப்படையில் துர்ஸ்தானபாவங்களாக 3/6/ 8/12 என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட பலன்களைக் கூர்ந்து கவனிக்கும் போது அனைத்து பால பலன்களின் தன்மைகளும் அள்ளித் தெளித்தாற்போல் காணப்படும் . உண்மைதான் . பலன்களை அளவீடு செய்யும் , அல்லது அளவீடு செய்து மதிப் பிடும் ஒரு முக்கிய பாவங்களாகும்


எனது சிந்தனைக்கு வித்திட்ட குருநாதர்கள்  

திரு. சிவா.மேகநாதன்  & 

 திரு. சின்னாளபட்டி  தங்கவேல்  அவர்களின் ஆசியுடன் 


சூரியஜெயவேல்  

9600607603



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்