ஜோதிட தொழில் ஆலோசனைகள் 3
ஜோதிடத்தை தொழிலை வெற்றிகரமா நடத்த பல அறிய ஆலோசனைகள் !!!
சோதிடம் பார்க்க வருபவர்களில் சிலர் ரொம்ப வும் கஷ்ட தசையில் உள்ளவர்களாயும் துயரத்தால் நொந்தவர்களாயும் இருப்பார்கள் . ரொம்பவும் அப்படிப்பட்டவர்களை தைர்யப் படுத்தி , உற்சாகமூட்டி மனநிலையைச் செம்மைப் படுத்தி அனுப்பவேண்டும் . சிலர் பேராசை நோக்கம் கொண்டும் தகாத நோக்கம் கொண்டுள்ளவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறித் திருத்தியனுப்ப வேண்டும்.
( 15 ) சோதிடர்கள் கெட்ட பலன்களைக் கூறும்போது , கெடுதல்களை மிகைப்படுத்தி , ஜாதகம் பார்க்க வருபவர்களை பீதியூட்டவோ , அச்சு மூட்டவோ கூடாது . கெட்ட பலன்களை ஓரளவு குறைத்துக் கூறி தைர்யமுட்டி அனுப்ப வேண்டும் .
ஒரு ஜாதகன் எப்போதுமே கெட்ட பவன்களை அனுபவித்துக் கொண்டிருக்க மாட்டான் . ஒரு புக்தி கெடுதல் பலன்களை அளிக்குமாயின் அடுத்த புத்தி நற்பலளை அளிக்கக் கூடும் . அதைக் கூறி அவனை உற்சாகப்படுத்த வேண்டும் . “ இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான் இந்த கஷ்டமெல்லாம் ... ஒரு ஆறு மாசம் போகட்டும் ... அடுத்து அருமையான புத்தி வருகிறது ... அப்போது எல்லாம் நல்ல படியா நடக்கும் ! " என்று கூறி உற்சாக மூட்டி அனுப்ப வேண்டும்
கெடுதல் பலன்கள் எந்த அளவுக்கு மிகைப்படுத்தக் கூடாதோ , அந்த அளவுக்கு யோக பலன்கள்யும் மிகைப் படுத்தக் கூடாது . ஜாதகனின் தன்மை , தராதரம் , சூழ்நிலை ஆகியவைகள் கவனிக்காமல் , அவனுக்குப் பல ராஜ யோகங்களைக் கூறி , அவனைப் பின்னால் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கக் கூடாது .
(16 ) சாந்தி பரிகாரம் என்பதைப் பற்றி சில கருத்துக்களை ஆராய்வோம் ஜோதிடர்கள் விதியைப் பூர்ணமாக நம்ப வேண்டும் . விதி என்ற வார்த்தையை எல்லோரும் சாதாரணமாக பயன் படுத்தினாலும் , ஆழமான அர்த்தத்தையுடையது . சாந்தி பரிகாரத்தால் ஒருவருடை சூழ்நிலையை மற்றமுடியாது. ஆத்ம திருப்திக்கு மட்டும்தான்
ஒரு காரியங்கள் வெற்றி பெரும் என்பன் அடிப்படையில் வசதியான அன்பர்களிடம் தட்சணை பெருவதும் ஏழ்மையில் உள்ளேர்களுக்கு உதவி செய்யும் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
மனிதனின் இயக்கம் விதியை வெல்லக்கூடும் சொல்லப்படும் மதியின் இயக்கம் மதி மனிதன் ஆகியவைகளைப் படைத்த இறைவனின் இயக்கம் ஆகிய அனைத்தும் விதிக்குட்பட்டதே!
மன மனசாட்சியற்ற அரசியல்வாதிகள் அதிகாரிகள் , பஞ்சமா பாதகங்களை கூசாது செய்யும் கொடிய முடையவர்கள் . தொழுதகையுள்ளும் கொலை வாளை மறைத் திருப்பவர்கள் , துறவி வேஷத்தில் கொலைஞர்கள் , காமுகர்கள் , கோவில் சொத்துக்களையே கொள்ளையடிக்கும் தர்மகர்த்தாக்கள் , கடவுளர் சிலைகளையே களவாடும் கயவர்கள் - அனைவரையும் பார்த்துக் கொண்டு ஏதும் செய்ய விரும்பாமல் , ரூப , அரூபங்களின் இயக்கங்களை அதனதன் இயல்புபடியே செயல்பட விட்டு விட்டு அவரவரின் கர்மவீனைக்கு ஏற்ப இயக்குவதோ இறைவனுக்கு விதிக்கப்பட்ட விதியாகும்
மாற்ற முடியாத விதிகளைக் கொண்டிருப்பதால்தான் , கணிதம் , பௌதிகம் , ரசாயனம் , உயிரியல் , உளவியல் முதாலனவைகள் அறிவியல்களாக ஒப்பப்பட்டிருக்கின்றன . சோதிடம் ஓர் உண்மையான கலை என்று நாம் ஏற்றுக் கொண்டு விட்ட பின்னர் , அதனால் கூறப்படும் பலன்கள் , சாந்தி பரிகாரங்களால் மாற்றப்படக் கூடும் என்பது . சோதிடக் கலையின் அடிப்படையையே தகர்க்கும் செயலாகும் . இதனால் தான் விஞ்ஞானம் ஜோதிட சாஸ்தித்தை ஏற்க மறுக்கிறது.
தசாபுக்திகளின்படி கெடுதல் பலன் நடக்கும் என்று இருக்குமாயின் . நடக்கவிருப்பதை ஜாதகன் அனுபவித்துத் தான் தீரவேண்டும் . ' ' உனக்கு செவ்வாய் புக்தி முடிய இன்னும் ஆறு மாதம் இருக்கிறது . அதில் உனக்கு பெண்ணால் அவமானம் ஏற்படும் , எதிரிகளால் தொல்லை ஏற்படும் , கொலை செய்யப்படுவாய் , அல்லது விஷத்தால் மரணம் ஏற்படும் , அல்லது பில்லி சூன்யத்தால் தொல்லை உண்டாகும் , இவையெல்லாம் முன் ஜென்ம வினகளால் ஏற்படக் கூடியவை . " என்று கூறி பயமுறுத்தி , பின்பு அவைகள் நடவாமல் தடுக்க பூஜை போடுகிறேன் , தகடு எழுதித் தருகிறேன் , தாயத்து ஜெபித்துத் தருகிறேன் என் றெல்லாம் கூறி பணம் பறித்தல் மோசடிச் செயல்களாகும் . பிரம்மன் எழுதிய எழுத்தை மாற்றி எழுத முடியாது .
தன்னால் தடுக்க இயலாத சூழலில் , தெய்வத்தின் துணையை நாடுவதை யாரும் தவறென்று கூறமாட் டார்கள் . பணம் பறிப்பதற்காகத் திட்டமிட்டு பயமுறுத்து வது தவறாகும் இறைவன் நாம்மையும் கவணித்துக் கொண்டிருக்கிறார் நினைவில் வையுங்கள்.
. சாந்தி பரிகாரங்களை துன்பம் வந்த காலத்தில் ஆறுதல் அளிக்கும் ஒரு நண்பனைப்போல் மட்டுமே கருத வேண்டும்
. எந்தெந்த தோஷங்களுக்கு எப்படி யெப்படி சாந்தி பரிகாரங்கள் செய்யவேண்டு மென்பதற்கும் , எந்தெந்த தசாபுக்திகளில் எப்படியெப்படி சாந்தி பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்பதற்கும் தனியாகவே நூல்கள் உள்ளன . அதைப் பார்த்து முறைப்படியும் சாந்திபரிகாரங்கள் செய்து கொள்ளலாம் .
ஆயினும் ஜாதக பலன்களை சாந்தி பரிகாரங்கள் மூலம் மாற்றிவிட முடியும் என்று நம்புவது சோதிடக் கலைக்கு பெருமை சேர்க்கக்கூடியதல்ல .ஒரு வக்கிலே தன் கட்சிக்காரர் தோற்பதற்கு வாதாடுவது போலாகும் .
( 17 ) சோதிடத் தொழிலுக்கு முற்றிலும் புதியவர்கள் என்றால் நிறைய நூல்களைப் படித்து , அடிப்படை விஷயங்களை நன்கு மனப்பாடம் செய்யவேண்டும் , பின்பு தமக்கு தெரிந்தவர்களின் ஜாதகங்களை எல்லாம் சேகரிக்கவேண்டும் அந்த ஜாதகங்கள் , அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகெளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . நூல்களில் படித்தவைகளுக்கும் , நடைமுறைக்கும் வேறுபாடு கண்டால் , காரணம் என்ன வென்று ஆராயவேண்டும் .
உங்கள் நண்பர்கள் - தான் பரிட்சை எழுதியிருக்கிறேன் , தேர்ச்சி அடைவேனா என்று கேட்கலாம்- எனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று கேட்கலாம் . இப்படி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு . அவர்கள் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகள் எப்போது நடக்கும் என்பதை , எழுத்து மூலமாக எழுதித் தரவேண்டும் . சில காலம் கழித்து நீங்கள் எழுதித் தந்தபடி நடந்திருக்கிறதா என்று சோதனை செய்யவேண்டும் . சொன்னபடி நடக்கவில்லையாயின் காரணங்களைக் கண்டறிந்து திருத்திக் கொள்ளவேண்டும் . இப்படி நிறைய விஷயங்கள் பற்றி நிறைய புள்ளி விவரங்கள் சேகரிக்க வேண்டும் . இதைத் தொடர்ந்து செய்துவர எண்ணற்ற ஜாதகங்கள் ஆராய , ஆராய , ஒரு தெளிவும் தேர்ச்சியும் பிறக்கும் .
அதோடு நிறைய சோதிடர்களிடம் சென்று அவர்கள் சோதிடம் சொல்லும் முறைகளைக் கூர்மையாகக் கண்டறிய வேண்டும் . இவ்வளவும் செய்து முடித்துவிட்டர்களானால் ஜாதா விஷயங்களில் நீங்கள் முழுத் தேர்ச்சி பெற்றவர்கனாகிவிடுவீர்கள் . இனி நீங்கள் தைரியமாய் சோதிடத் தொழில் இறங்கலாம் . வெற்றித் திருமகளின் கடைக்கண் பார்வை உங்கள் பக்கமோ !
( 18 ) கடைசியாக முக்கியமாக ஒன்று
சோதிடத் தொழிலுக்கு கற்பனைவளம் , மதி நுட்டம் , பயற்சித்திறன் ஆகியவற்றோடு தூய்மையான எண்ணம் , தூமையான நோக்கம் , தூய்மையான செயல் ஆகியவை - தேவை . தூய்மையான செயல்களில் இருந்தால் கண்களில், வார்த்தைகளில் ஒளியுண்டாகும்
ஜோதிடன் என்பவன் இருட்டில் தடுமாறுபவனுக்கு வழிகாட்டியைப் போன்றவன் ! குழம்பிய மனங்களையும் , வளைந்த மனங்களையும் நேராக்குபவன் ! துன்பத்தையும் , துயரத்தையும் நீக்கி , உற்சாகத்தையும் , மகிழ்ச்சியையும் அளிப்பவன்
எனவே ஜோதிடன் என்பவன் திறமையோடு , நேர்மையையும் , பெற்றிருப்பானாயின் , பொன்னையும் , பொருளையும் , புகழையும் சம்பாதிப்பதோடு , சமுதாயத்தில் சாந்தியையும் , சந்தோஷத்தையும் தரும் நற்குணவனாகவும் விளங்கிட முடியும் . இதனால் ஜோதிடனுக்கு மட்டுமன்றி , ஜோதிடக் கலைக்கும் பெருமை சேர்க்கும்.
கிரகங்கள் கிர + அங்கம்
PLANET - PLAN + NET. =
திட்டமிட்ட வலை மாற்ற முடியுமா?
. முற்றும்
குருநாதர் அளித்த விளகங்களை உங்கள் முன் வைத்துள்ளோன். அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துகள்
தொகுப்பு சூரியஜெயவேல்
Comments
Post a Comment