சனி சந்திரயோகம்

 
சனி சந்திரயோகம்

' வாரே நீயின்னமொன்று வாழ்த்தக்கேளு

    வளர்மதியும் நல்லவனாயமர்ந்திட்டாலும் 

சீரே நீ சனியவனைப் பார்த்திட்டாலும் 

    கெழுமையுள்ள சந்திரனார் திசையைக்கேளு 

கூறே நீ குமரனுக்கு பசும்பொன் கிட்டும் 

  குவலயத்தில் கடன் கொடுப்பேன் வேந்தனுக்கு 

பாரே நீயாய் மதியும் பூசம் மூணில்   

    பகருவாய் புலிப்பாணி குறித்திட்டேனே '    

    (இ-ள்) வளர்பிறைச்சந்திரன் தனது நட்பு/ஆட்சி/உச்ச வீடுகளில் ஏதாவது ஒன்றில் நிற்க இவரை துன்பம் தருகின்ற சனிபகவான் பார்த்தாலும் சந்திரளின் தசையில் ஜாதகனுக்கு சிறப்பு மிக்க பாம்பொன்கிட்டும் . 

  சந்திரன் சனியின் நட்சத்திரமான பூசம் 3 ம் நின்றால் இப்புவியில் அரசனுக்கு கடன் கொடுத்து  உதவி செய்யும் அளவுக்கு முன்னேறுவான் என எனது குருவான போக முனிவரின் அருளால் புலிப்பாணி கூறுகின்றேன் .


பாப்பா மகரமுதல் நண்டுக்குள்ளே

     பகருகின்ற பானு மைந்தன் அதிலேதோன்ற

சீரப்பா செழுமதியும் கேந்திரபேற 

   சிவசிவ யென்ன சொல்வேன் அரசன் சென்மம் 

ஆரப்பா அகிலங்களெல்லா மாறாம்

  அப்பனே அரசனுகள் கொடியைப் பார்த்து 

நாரப்பா நகைக்குதடாசீமான் சேலை

   நன்றாக புலிப்பாணி நவின்றிட்டேனே 

    (இ-ள்)  மகரம் / கும்பம் / மீனம் / மேஷம் / ரிஷபம் / மிதுனம் / கடகம் வரையும் எதாவதொன்றில் சனி இருக்க இவருக்கு கேந்திரத்தில் வளர் சந்திரன் இருக்க ஜென்ம லக்கினத்தில் குரு இருந்தால் ஜாதகர் இந்த உலகை ஆளும் சக்தி படைத்த அரசராக இருப்பார்கள். அரசனின் கொடியைப்பார்த்து (பூகழை) பூமர்ச் சோலைகள் யாவும் புன்னகையுடன் செழுமையாக காணப்படும்.


    வளர்பிறை சந்திரனாகவும் சுபர்களுடன் இணைந்திருக்க வேண்டும். லக்கினத்திற்கு யோக கிரகங்கள் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

    சனி லக்கினத்திற்கு யோகம் பெற்று இருக்க வேண்டும் கபஸ்தானத்தில் இருக்க வேண்டும் சுபகிரகங்களின் தொடர்பு பெற்றிருக்க வேண்டும் . சனியும் , சந்திரன் இணைந்து 4,5,7,9,10 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தாலும் / மேஷம் , சிம்மம் , விருச்சிகம் , மகரம் , கும்பம் ஆகிய பாபக்கிரக ராசிகள் கேந்திரமாகி இருந்தாலும் சனி சந்திர யோகமாகும் . 


" வெள்ளிவீட்டில் சனி சந்திரன் மேவி இருக்க 

உச்சனுமாய் துள்ளும் குதிரை மதயானை குழ்ந்த சிவிகை 

தண்டிகையாம் வின்னாளும் பூமிசொர்ணங்கள் 

வெகுவிதவித்தை கற்றுணர்வான் வள்ளலாய வேதமுனி வருத்த பலன்கள் இவையாமே "     

   (இ-ள்)  சுக்கிரனின் வீட்டில் ரிஷபம் / துலாம் ராசிகள் ரிஷபத்தில்  சனி சந்திரன் சேர்ந்து உச்சம் பெற்றிருக்க ஜாதகருக்கு 

யானை / குதிரை / சிறப்பான வாகனங்கள் , செல்வமும் சகல கலைகளில் நிபுணனாகவும் புகழ் பெற்று வாழ்வார்கள்.


" மதிக்கே போலு தையத்திற்குஞ் சனிக்குமே யாய்ந்து பார்க்க இதற்கு மிவ்வண்ண மாய்ந்தா லேறியவிதியுந்தீது 

விதிக்குறி தப்பாதாகு மேதினி தனிலுற்றோர்க்குப் பதிக்குறிமாதே கேளாய் பாரினிற்றுப்பாவாறே " 

    (இ-ள்) சந்திரன் இருக்கும் ராசி / ஜெனன லக்கினத்திற்கும் / சனி நின்ற ராசிக்கும் , ஆராய்ந்து பார்த்து உலக மக்களுக்கு பலன் கூறு வேண்டும் . 

   சனி , சந்திரன் இணைந்தால் புனர்பூ யோகமாகும் . திருமண தாமதம் ஏற்படும் .

 ரிஷப லக்கினத்திற்கு 3 ம் அதிபதி சந்திரன் , 9,10 ம் அதிபதி சனி இணைந்து லக்கினம் , 6 ல் இருப்பது சிறப்பான யோகத்தை தரும் .

மிதுன லக்கினத்திற்கு 2 ம் அதிபதி சந்திரன் 8,9 ம் அதிபதி சனி இணைந்து 5,12 ல் இருந்தால் சிறப்பான யோகம் தரும் . 

  கன்னி லக்கினத்திற்கு 5,6 ம் அதிபதி சனி , 11 ம் - அதிபதியும் இணைந்து 2,9 ல் இருந்தால்  சிறப்பான யோகம் தரும் .

  துலா லக்கினத்திற்கு 4.5 ம் அதிபதி சனி , 10 ம் அதிபதி சந்திரன் இணைந்து லக்கினத்தில் இருப்பது சிறப்பான யோகம்  தரும் . 

 மகல லக்கினத்திற்கு  லக்கினம் / 2 ஆம் அதிபதி சனி . 7 - ஆம் அதிபதி சந்திரன் 5 , 10 ல் இருப்பின் சிறப்பான யோகம் தரும் . 

   கும்ப லக்கினத்திற்கு 4 ல் இருந்தால் சிறப்பான யோகம் .


Astrology is a science of tendencies and predictions do not implyfatalism or absolute Pre determination. B.V.Rnman

டாக்டர் பி.வி.ராமன் இந்திய நாட்டின் தலைசிறந்த ஜோதிடர் சனி லக்கினாதிபதி 4 ல் உள்ளார் . உச்சம் பெற்ற சந்திரனுடன் இவர்களை குரு பார்வையிடுகிறார் . சனி சந்திர யோகம் அமைந்து உலகளாவில்  ஜோதிடத்துறையில் புகழ்பெற்றார் . 

    Dr.BV Raman good famous astrologer ! 1. Vaakku Isthanathipathi Guru Dasama Kendra petru Vaakku isthanatthai Aintham Parvai. 2..Soorya and Chandra both get aspect of Guru.3. Moon Jupiter Kendra. 4.Conjunction of 9th and 5th lord with 11th lord in 7th kendra. Popular astrologer after Marriage !..Thanks


 ஜேம்ஸ் ஏர்ல் "ஜிம்மி" கார்டர் அமெரிக்காவின் 39ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 1977 முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இவர் 2002ல் நோபல் அமைதி பரிசு வெற்றிபெற்றார்

  இவரின் ஜாதகத்தில் துலா லக்கினம்  4,5 ம் அதிபதி சனியும் 10 ம் அதிபதி சந்திரனும் இணைந்து லக்கினத்தில் அமைந்துள்ளது . சனி உச்சம்  பெற்று உள்ளார் . இதனால் அரசாளும் யோகத்தை அடைந்தார்.

சூரியஜெயவேல் 9600607603


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்