மனித வாழ்வில் கிரகங்களின் பங்கு சூரியஜெயவேல் ( ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம்)
உயிரும் உணர்வுள்ள அனைத்து இனங்களும் வளர்ச்சி அடைவது போல் மனித இனமும் வளர்ச்சி அடைகிறது. மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை அவர்களின் வாழ்வில் பல மாற்றங்கள் தோன்றுகின்றன இத்தகைய மாற்றங்களை சில குறிப்பிட்ட நிலைகள் அறிஞர்கள் பிரித்தரிகின்றனர்.
மனித வளர்ச்சி ஏழு பருவங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.அவை முறையே
1) குழவிப் பருவம் (Infancy) பிறப்பு முதல் ஐந்தாண்டு வரை.
2) பிள்ளைப் பருவம் (Child Hood) ஆறாண்டு முதல் பன்னிரெண்டில் வரை
3) குமரப் பருவம் (Adolescence) பன்னிரெண்டு முதல் இருபதாண்டு வரை
4) முதிர்ப் பருவம் (Maturity) இருபதாண்டு முதல் முப்பத்தைந்து ஆண்டு வரை
5) நடுநிலைப் பருவம் (Middle Age) முப்பத்தைந்தாண்டு முதல் ஐம்பத்தைந்தாண்டு வரை
6) தளர்வுறும் பருவம் (Senescence) ஐம்பத்தைந்தாண்டு முதல் எழுபதாண்டு வரை
7) கிழப் பருவம் (Oldage) எழுபதாண்டு முதல் மரணம் வரை
இந்த வளர்ச்சி நிலைகளுக்கும் கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உடலின் வளர்சிக்கும்.மனதின் வளர்ச்சிக்கும் கிரகங்களின் பங்கு உள்ளது.
ஒரு குழந்தை தாயின் கருவறையிலிருந்து வெளி வந்த மறு நிமிடமே இந்த உலகில் அது பெறுவது, கிரங்களின் ஒளிக் கதிர்களையும், பூமியின் தட்பவெப்ப நிலையையும் தான். கிரகங்களிலும் நட்சத்ரங்களிலும் இரசாயன மாற்றங்கள் நிகழ்து கொண்டேயிருக்கின்றன.இந்த இரசாயன மாற்றங்கள் பூமிக்கு வந்து கொண்டே இருக்கிறது.வான மண்டலத்தில் கிரகங்களால் ஏற்படும் இரசாயன மாற்றத்திற்கும்,பூமியில் புல் பூண்டு முதல் மனிதன் வரை அனைத்திற்கும் ஏற்படும். நிகழ்வுகளுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
ஒரு குழந்தை பூமியில் பிறக்கின்ற பொழுது கிரகங்களால் ஏற்படும் இரசாயனமாற்றங்கள் அதன் மூளைப் பகுதியைச் சென்றடைகின்றன. மூளைப் பகுதி அதை சேகரித்து தன் வயப்படுத்தி தன் வாழ்நாளில் அதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கலவையாகச் சென்றடையும் கிரகங்களின் இசாயன மாற்றத்தில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதோ அத்தன்மையை நிறைந்ததாக அந்தக் குழந்தை எதிர்காலத்தில் தன்னை தோற்த்தாலும் மனதிறமையாலும் வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்படுத்தும் தன்மை,மனித வளர்ச்சிக்குரிய ஏழு பருவங்களிலும் வெளிப்படுகின்றன. இத்தன்மை வெளிப்படுவது சிலபொழுது ஆச்சரியப்படுத்தும்படி சிலரிடையே காணப்படும். அதற்குச் சான்றுகள் பல துறைகளிலும் தன் பருவத்தை மீறிய வகையில் சாதனை புரிந்தவர்களையும் புரிந்து வருபவர்களையும், இனி புரியப் போகிறவர்களையும் இந்த உலகம் அறிந்து வைத்திருக்கிறது.
இப்படி உலகத்திற்கு தெரிந்த,நமக்கு புரியாமல் இருக்கின்ற ஒன்றைத்தான் `கர்மா' என்று கூறினர்கள்.புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று அது எந்த வயதில்? எந்த வகையில் என்பதை இன்னும் தெளிவாக துல்லியமாக அறிந்து கொள்வதர்க்கு ஜோதிட சாஸ்திரம் துணைபுரிகின்றது.
நாம் வாழுகின்ற உலகத்துடன் நெருங்கிய தொடர்பு பெற்றிருக்கும் கோன் சூரியனாகும்.சூரியன் மற்ற நட்சத்திரங்களுக்கும், கோள்களுக்கும் முதன்மையாக அமைந்துள்ளது.சூரியனை ஆதாரமாக வைத்துத்தான் மற்ற நட்சத்திரங்கள் இயங்கி வருகின்றன. வான மண்டலத்தில் இந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டேயிருப்பதை அறிவியலார் தோன்றி அறிவதற்கு முன்னதாகவே மகரிஷிகள் தோன்றி நட்சத்திரங்களின் ஓட்டத்தை அறிந்து விட்டார்கள். மகரிஷிகள் தோன்றி வானமண்டலத்தையும் பூமண்டலத்தையும் 'தொகுத்துணர்ந்து' ஜோதிடம் ஆக்கினார்கள்.
மகரிஷிகளின் இந்த தொகுப்புணர்வு விளக்கம் தான் ஜோதிடம் என்கிற விஞ்ஞானமாகும். இந்த தொகுப்புணர்வு விளக்கம் அனைத்து ஜுவராசிகளுக்கும் பொருந்துவதேயாயினும் மனிதன் நாகரீகப் பண்புகளுடனும் கலாச்சாரத்துடனும் நாளுக்கு நாள் புதிய சமூகத்தை உருவாக்கக் கூடியவனாகவும்.இருக்க இந்த பிரபஞ்ச சக்தி அவனைப் படைத்துள்ளதால் "ஜோதிட சாஸ்திரம்" மனிதனின் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக அவனைச் சார்ந்துள்ளது. எனவேதான் 'ஜோதிடம் மனிதனுக்கு ஒரு பாதையாயிற்று! பயணத்தின் வெற்றியோ தோல்வியோ முற்றிலும் அவனைச் சார்ந்ததாயிற்று. ஊழ்,கர்மா,வினை இதன் அடிப்படையில் தான் அனைத்தும் நிகழ்கிறது. கிரகங்கள் கூட அத்தன்மையில் தான் செயல்படுகிறது.
நதியின் பிழையன்று நறும்புனலின்மை ; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று ; விதியின் பிழை
இதற்கு என்னை நீ வெகுண்ட தென்றான்
கம்பர் எந்த இடத்தில் விதியை முன்னிருத்துகிறார் என்தையும், தவறு எது என்றறியாத இராமனின் வாழ்கையில் விதி விளையாடுகிறது. நதியில் நறும்புனல் இன்மையாவதற்கு நதியின் குற்றமல்ல. ஸ்ரீஇராமன் கானகம் செல்வதற்கும், பட்டாபிஷேகம் தடைபட்டதற்கும் இப்பிறவி இராமனின் குற்றமல்ல என்று மட்டும் கம்பர் கூறவில்லை. "மதியின் பிழையன்று" என்று கூறுகின்ற இடத்தில், மதி பிழை செய்யாத கர்மா என்று கூறுகின்றார்கள்.
வள்ளுவர் இதையே"ஊழிற் பெருவலி யாவுள" என்கிறார். கலியுகத்தில் மதியின் பிழையே ஊழாக மாற வாய்புண்டு.
காரணமொன்றில்லாமல் காரியமானது நிகழ்வதில்லை என்பதையோ எவரும் ஒப்பியே தீரவேண்டும். அனுபவத்துக்கு காரணம் எதுஎன ஆலோசிக்கும்போது முந்திய ஜென்மத்தில் செய்த புண்ணிய பாப கர்மங்களையே அதன் காரணமாகச் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
ஜோதிடத்தில் ஒரே விஷயத்தை ஒருவர் சொல்வதற்கும், மற்றவர் சொல்வதற்கும் சிற்சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்தநிலை ஜோதிடர்களின் மத்தியில் மட்டுமல்ல ஜோதிடத்தை உருவாக்கிய பதினெட்டு மகரிஷிகளின் கருத்திலும் காணப்படுகிறது. ஜோதிடம் அனுபவ சாஸ்திரமாகையால் அவரவர் அனுபவத்தில் பெரும்பாலும் ஒத்து வருவதையே அவரவர்கள் தங்களின் கருத்தாக (பலன் கூறுவதில்) தொகுத்துள்ளனர்.
ஒவ்வொரு கிரகத்திலிருந்து ஒவ்வொரு வகையான உணர்வு அலைகளை தோற்றுவிக்கும் கந்த சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
மனித மூளை கிரகம் குரு, மூளையின் செயலும் செயல் இரத்த அனுக்கள் கிரகம் செவ்வாய், செயலுக்கான மனம் கிரகம் சந்திரன், மனத்திற்கான அறிவு சக்தி கிரகம் குரு, அறிவுக்கான புத்தியை வழங்கும் கிரகம் புதன், புத்திக்கான பலத்தை ஏற்படுத்துவதும் கிரகம் செவ்வாய்,பலத்திற்கான நரம்புகளின் இயக்கத்தைத் தருவது சனி .இந்த இயக்கத்திற்கான உணர்வுகளைத் தருவது சுக்கிரன், இந்த உணர்வுகள் சரியா? தவறா? வீலகி நின்று ஆய்வு செய்வது சூரியயைன்.இந்த அளவில் சப்த கிரகங்களின் இயக்கங்கள் உள்ளது.
சூரியனிடமிருந்து ஆத்ம பலத்திற்கு தேவையான ஊட்டச்சத்தும், தலைமைச் சிந்தனையும், தன்னம்பிக்கையும், ஒரு குந்தைக்கு கிடைக்கிறது.
சந்திரனிடமிருந்து கற்பனை வளம்,மனோதிடம், எண்ணங்கள், நுட்பமான தன்மை உணர்வு போன்றவை வெளிப்படுத்துகின்றது.
செவ்வாயிடமிருந்து தைரியச் சிந்தனை,இரத்த அணுக்களை இயக்கும் ஆற்றல், வாழ்க்கைச் சிந்தனை வேகத்தின் உந்துதல், போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.
புதனிடமிருந்து நுண்ணறிவு,பகுத்துப் பார்த்தால், கல்விச் சிந்தனை, சமாதானம், தந்திரபுத்தி, நிலையற்ற மனப் போக்கு வெளிப்படுத்துகின்றது.
குருவிடமிருந்து ஆன்மீகச் சிந்தனை, பொருளாதார நாட்டம், பேச்சாற்றல், மூலைபலம்,சமாதானம், சோம்பல் போன்ற உணர்வுகளை உண்டாக்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
சுக்கிரனிடமிருந்து பாலியல் உணர்வு, மயக்கச் சிந்தனை, மகிழ்ச்சியான உணர்வுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
சனியிடமிருந்து உழைப்பாற்றல், நிதான போக்கு,கடினச் சிந்தனை, பற்று - வெறுப்பு - பணிவு - ஆசை-துறவு போன்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது
ராகுவிடமிருந்து பேராற்றல், சாதுரியம், பெருமை, உட்கவர்தல், போராசை, செயல்திறன் போன்ற ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
கேதுவிடமிருந்து பற்றற்றநிலை, துறவு, பயம்,ஞானம், போன்ற உணர்வு அலைகளை வெளிப்படுத்துகின்றது
மனிதர்களுக்கு ஏழு பருவங்கள் உள்ளது என உளவியல் கூறுகின்து.இந்த ஏழு பருவ காலங்களில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் அளவீடு முறையில் அதிக காணப்படுகிறதோ அந்த காலகட்டத்தில் அவ்வகையான குணக் கூறுகளால் இந்த உலகத்தில் காரியமாற்றுவார்கள்.இற்றைத்தான் அடிப்படை ஜாதகத்தை இயக்கும் "தெசைகள்" என்று ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிட சாஸ்திரம் முழுக்க முழுக்க அறிவியலைச் சார்ந்த பேருண்மை என்பதை இதன் மூலம் அறிவதை உணரலாம்.
ஆத்மகாரகன் சூரியன் / மனோகாரகன் சந்திரன் ஆகிய இருவரும் சரம் / உபயம் ராசிகளில் இருக்கும் போது பிறந்தவர்கள் அவர்களின் மனோதிடம் / ஆத்ம பலமும் குறைந்து காணப்படும்.சுயமாக செயல்படமுடியாத நிலை ஏற்படும்.
அப்படிப்பட்ட ஜாதகரின் லக்கினாதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் மனப்பயிற்சியினாலும், ஆத்ம பயிற்ச்சியினாலும், மனோதிடத்தையும், ஆத்ம பலத்தையும் அடையமுடியும்.
இந்த அடிப்படைத் தத்துவத்தைதான் ஆத்ம காரகன் சூரியனுக்கு ஸ்திர ராசியன சிம்மத்தை மூலத் திரிகோண ராசியாகவும். மனோகாரகன் சந்திரனுக்கும் ஸ்திர ராசியாகிய ரிஷபத்தை மூத்திரிகோணமாக சிறப்பித்துள்ளார்கள்.
செவ்வாய் எப்போதும் அசைவு இருந்துகொண்டேயிருக்கும் ராசியிலும் இதோ நிலையை அடைய வேண்டும். அப்பொழுதுதான் வீரத்துடனும்/விவேகத்துடனும் செயலாற்றல் வெளிப்படுத்தும் என்பதற்காக சர ராசியாகிய மேஷத்தை
மூலத்திரிகோணமாக வைத்துள்ளர்கள்
புதன் அறிவுக்கு வித்திடும் கிரகமாகவிளங்குவதால் / வித்தை / கல்வியறிவு / ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு செல்வது பிறகு அதே இடத்திற்கு வருவதும்,நிகழ்வுகலை பலவற்றைச் சேகரித்து வரும் ஆற்றலைப் பெற்று சிறப்படையும் என்பதால் உபய ராசியான கன்னியை மூலத்திரிகோணமாக ஆக்கினார்கள்.
குரு பொருளாதாரச் சிந்தனைக்கும், அறிவுக்கும் வித்திடும் கிரகமாக விளங்குவதால் புதனுடைய தன்மையைப் பொற்றதாக குருவும் விளங்க வேண்டும் என்றநோக்கில் உபய ராசியாகிய தனுசு ராசியை மூலத் திரிகோண ராசியாகக் வைத்துள்ளர்கள்.
சுக்கிரன் சிற்றின்ப சுகம், கேளிக்கை,ஆடம்பரம், சுகானுபாவம் போன்ற தன்மையை ஒருவருக்கு அளிக்கும் கிரகமாக இருப்பதால் இவர் செவ்வாயின் சஞ்சாரத் தன்மையைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சரராசியாகிய துலா ராசியை மூலத் திரிகோணமாக வைத்துள்ளார்கள்.
சனி ஆயுன் பலத்திற்கு வித்திடும் கிரகமாக விளங்குவதால் ஸ்திரமான தன்மையைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் ஸ்திர ராசியாகிய கும்ப ராசியை மூலத்திரிகோணமாக வைத்துள்ளர்கள்.
கிரகங்கள் இந்த வகையில் சஞ்சரிக்க. வேண்டும் என்பது ஜோதிட மகஷிகளின் அறிவியில் ஞானம்.
செவ்வாய் >>> பூமி >>> சகோதரர் >>> மண்ணாசை
புதன் >>> வித்தை >>> மாமன் >>> பொருளாசை
குரு >>> தனம் >>> புத்திரர் >>> பொருளாசை
சுக்கிரன் >>> சுகம் >>> மனைவி >>> பெண்ணசை
ஒருருடைய. ஜாதகத்தில் பிறக்கும் போது வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் கிரங்களின் தனித்தனி குணங்களில் ஏற்படும், பொதுதுக் குணம் எவ்வாறு அமைகின்றதோ அதற்கேற்ற தன்மையில்தான் மனிதனின் மன நிலையில் மாற்றங்கள் நிகழ்கின்றது.
ஒரு கிரகம் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது ஏற்படும் இரசாயன மாற்ற விளைவுகளே மனிதனின் மன நிலையில் மாறுபாடுகளை ஏற்ப்படுத்துகின்றன என அறிவியல் பூர்வமாக அறியமுடியும்.
சூரியன் சந்திரனுடைய நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் வெப்பம் குறைவாக காணப்படும்.இந்த காலங்களில் ஆத்ம பலம் குறைந்து காணப்படும்.ரோகிணி /அஸ்தம்/திருவோணம்.
சந்திரன் புதன் / சனி / ராகு / கேது ஆகிய நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் யாரிடமும் நிலையான மனப்போக்கு இருக்காது.இந்த நாட்களில் மனபூர்வமான முடிவுகளைத் தவிர்ப்பது நலம் தரும்.
செவ்வாய் பூசம்/அனுசம்/உத்திரட்டாதி/அஸ்வினி/மகம்/மூலம்/ திருவாதிரை/சுவாதி/சதையம் இந்த நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது ஒருவரின் உடலில் ரத்த அனுக்களில் மறைந்திருக்கும் நோய்க் கூறுகள் வெளிப்பாடும்..
ரோகிணி / அஸ்தம் / திருவோணம் / பரணி / பூரம் / பூராடம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது ஒருவரின் பருவ வயதிற்கு ஏற்ப காம உணர்ச்சியும்/மயக்கமும் ஏற்படும்.
புனர்பூசம் / விசாகம் / பூரட்டாதி / இந்த நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது அறிவின் பலமும் / பொருளாதாரச் சிந்தனையும் ஏற்படுத்தும்.
பூசம் / அனுசம் / உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது விபத்துக்கள் / காயங்கள் ஏற்படுத்தும்.
புதன் ஆயில்யம் / கேட்டை / ரேவதி நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது புத்தியில் ஆற்றல் சிறந்து விளங்கும்.புதிய கண்டுபிடிப்பும் / உலகிற்கு தோவையனாதக இருக்ம்.
மிருகசீரிஷம் / சித்திரை / அவிட்டம் / ரோகிணி / அஷ்தமே / திருவோணம் ஆகிய நடேசத்திரங்களில் புதன் சஞ்சரிக்கும் போது உறுதியற்றற நிலையையும் எதையும் ஒத்திப்போடும் தன்மையும் / பிறரின் ஆலோசனைகளை கேக்கும் நிலையையும் தரும்.
குரு புனர்பூசம் / விசாகம் / பூரட்டாதி நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது தன்னைப் பற்றிய சிந்தனை / அறிவாற்றலில் தன்னை உயர்த்திக் காட்டும்.இதன் விளைவு ஜாதகத்தைப் பொறுத்து நன்மையாகவோ/தீமையாகவோ அமையும்.
திருவாதிரை / சுவாதி / சதாயம் / இந்த நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது அதீதமான ஆற்றலையும் / உயர்ந்த சிந்தனைகளையும் ஏற்படுத்தும்.
மேல் அமைப்பு பிறந்த ஜாதகத்தில் இருந்தாலும் /கோச்சார காலங்களில் இருந்தாலும் பலத்திற்கு ஏற்ப நன்மையும் / தீமையும் நிரந்தரமாகவு அல்லது தற்கலிகமாகவோ ஏற்படும்.
சுக்கிரன் மிருகசீரிஷம்/சித்திரை/அவிட்டம்/திருவாதிரை/சுவாதி
நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது பருவ நிலைக்கு ஏற்ப சிற்றின்ப உணர்ச்சி மேலோங்கும்.தடுமாற்றம் ஏற்படும்.
அசுவினி / மகம் / மூலம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது சண்டை / சச்சரவு / பிரிவினையைத் தரும்.
சனி திருவாதிரை / சுவாதி / சதயம் / நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது புரட்சிகரமான சிந்தனையையும் / ஆடம்பரம் / பணம் சம்பாத்திய நோக்கமும், அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, அதிகார உணர்வுகளை பெறும் ஆற்றலும் ஏற்படுத்தும்.
அசுவினி / மகம் / மூலம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு ஒருவித பய உணர்வும் / பற்றற்ற நிலையும் சிறு பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் தற்கொலை முயற்சி அல்லலது மரண பயத்தையும் ஏற்படுத்தும்.
பன்னிரண்டு ராசிகளையும் கால புருஷனாக உறுவக்கியுள்ளர்கள். பல்வேறு தத்துவங்களையும் உள்ளடக்கியும். பஞ்சபூத தத்துவங்களையும் பன்னிரண்டு ராசிக்கு ள் புகுத்தியுள்ளார்கள். நிலம் / நீர் / காற்று / நெருப்பு / ஆகாயம் என வகைப்படுத்தி உள்ளார்கள்.
வான மண்டல ராசிகளில் அடங்கிய கோடிக் கணக்கான நட்சதிரங்களின் இயக்கத்தைப் பொறுத்து சரம் (அசைவும் - சூழற்சியும்) , ஸ்திரம் (சூழற்சி) ,உபயம் (சூழற்ச்சியும் / அசைவும் / பின்னடைதலும்) என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
அந்தந்த ராசியில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப உச்சம் / ஆட்சி / நீச்சம் / நட்பு பொறுகின்ற கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் குண இயல்புகலைக் கூறியுள்ளார்கள்.
ராசிச் சக்கரத்தில் பன்னிரண்டு பாவங்களையும் லக்கினம் முதல் வீரயம் வரை உறவுகளையும் / வாழ்க்கை முறைகளையும் இணைத்துள்ளனர்.கேந்திரம் / திரிகோணம் / தனம் / துர்ஸ்தானங்கள் என்று பிரித்துள்ளார்கள்.
கேந்திரம் -- 1 -- 4 -- 7 -- 10
திரிகோணம் -- 1 -- 5 -- 9
தனம் -- 2 -- 11
துர்ஸ்தானம் -- 3 -- 6 -- 8 -- 12 இவற்றை உறுதி செய்வது அந்த ராசிகளின் அதிபதிகள்.கால புருஷனின் தத்துவத் தோற்றத்தை ஆராந்து பலனை கூற முற்ப்பட வேண்டும்.
பலன்களை நிர்ணயம் செய்வதர்க்கு ராசிகளின் தோற்றங்களின் பங்கு மிக முக்கியம
ஒரு மனிதன் தன்னைப் பற்றிய பேரின்பத்தில் மகிழ்தல் / தன் பிறவிப் பயனைப் பற்றி பிறர் புகழுரை செய்வது மகிழ்ச்சி அடைவது.
கால புருஷனின் சிரம் அல்லது கால புருஷனின் முழு பலம் மேஷமாக (ஆடு) அமைகிறது.வயது / தோற்றம் / கௌரவம் / சுபாவம்.
ஆட்டின் குணம்,சுறுசுறுப்பு, பிறருக்கு தீங்கு விளைக்விக்காத தன்மை,சைவ உணவு உண்ணுதல் (ஆனால் மனிதன் ஆட்டையே உண்ணுகிறன்),இப்படித்தான் ஒருவன் வாழ வேண்டுமென்ற தத்துவமாக அமைந்துள்ளாது.
கால புருஷனின் இரண்டாம் வீடு ரிஷபம் (எருது) ஆகிறது.பேச்சு / சுவை / குடும்பம் / பொருளாதாரம் / வாழும் ஆற்றால் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
பேச்சு :- அசைபோட்டுப் பேசுவது (பரிசீலனை செய்து பேசுதல்)
சுவை :-இயற்கை தாவரங்கள்.
குடும்பம் :- எருதைப் போல் தன்னலங்கருதாமல் குடும்பத்திற்கு உழைக்கும் குடும்பத் தலைவனாக இருத்தல், தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்டால் எருதின் சீற்றம் கொண்டு அச்சுருத்தி அகற்றுதல் செல்வத்தை எருதின் மீது சுமத்தப்பட்ட பொதி போல் சிந்தாமல் சிதறாமல் கொண்டு போய் சேர்த்தல். அந்த செல்வத்தைச் சேர்ப்பதில் அசைபோடுதல். எருதின் உழைப்பின் குணம் கருதி தன்னலமற்று செலவிடுதல் போன்ற அடிப்படைத் தத்துவம் எருதின் தோற்றத்தை உறுதி செய்கிறது.
கால புருஷனின் மூன்றாம் வீடு மிதுனம் இந்த பாவத்தின் மூலம் அறிவது ஒருவரின் முயற்சியாகும் .
மிதுன ராசியின் தோற்றம் ஒரு ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்வது போன்ற தோற்றமாகும்.
ஒருவனும் ஒருத்தியும் ஊடலிலும் / கூடலிலும் உலகை மறந்து ஈடுபட்டு இன்பம் பேறுவது போல் ஒரு காரியத்திற்கு ஈடுபடும் முயற்சியிலும் மன உறுதியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையாகும்.
கால புருஷனின் நான்காம் வீடு கடகம் (நண்டு) சுக அனுபவம் / தாய் சுகம் / வீடு சுகம் / சொத்து சுகம் / வகான சுகம் அமைகிறது.
மழைக் காலத்திலும் / மழை நின்று பூமிவற்றிவிடும் என்ற நோக்கத்தில் தனைக்கென்று ஒரு வலை தோண்டி நீரையும் / உணவையும் பாதுகாத்துக் கொள்வதைப் போல் உனது செல்வத்தையும் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய், அதற்குள் வலிய பிறர் குறுக்கிடும் போழுது நண்டின் பலம் கொடுக்கில் இருப்பது போல் உன் வீரத்தால் காப்பாற்றிக் கொள் என்ற தத்துவத்தின் அடிப்படையாகும்.
கால புருஷனின் ஐந்தாம் வீடு சிம்மம் (சிங்கம்) அறிவாற்றல் / எண்ணத் தெளிவு / பிள்ளைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
உங்களின் அறிவும் / எண்ணங்களும் / சந்ததிகளையும் பிறர் கண்டு ச்சரியமும் / அச்சமுறும் வகையில் ராஜ நடை போடுகின்ற வகையிலும் / பிறர் நிகராகாத வகையில் சூரியனைப் போல் பிரகாசமாக அனைவரும் வணங்கத் தக்கதாக உருவக்க வேண்டும்.
கால புருஷனின் ஆறாம் வீடு கன்னி (பெண்) நோய் / பகைவர் / கடன் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது.
ஒரு மனிதனின் நோய்க்கும் / பகைக்கும் / கடனுக்கும் ஒரு பெண்மணி மூலகாரணமானால் அவனின் அழிவு உறுதி செய்யப் பட்ட ஒன்றாகும் என்பதை உணர்த்துகிறது.
கால புருஷனின் ஏழாம் வீடு துலாம் (தராசு) சிற்றின்ப சுகம் / நண்பர்கள்.
ஒரு மனிதன் போகத்தையும் / நண்பரையும் அளவறிந்து தேர்ந்தெடு என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
கால புருஷனின் எட்டாம் வீடு விருச்சிகம் (தேள் - விஷம்) பயம் மரணம் / தீய செயல்கள் .
ஒருவரது தீய செயல்கள் விஷத்திற்கு நிகராது.குற்றங்கள் பிறர் கண்ணில் பட்டால் தேளை தயவு தாட்சண்யம் இன்றி அடித்துச் சாகடிதப்பதைப் போல் தண்டனை உண்டு என்பதை உணர்த்துகிறது.
கால புருஷனின் ஒன்பதாம் வீடு தனுசு (வில் - அம்பு) தவம் / தர்மம்
ஒரு வீரனின் வில்லிலிருந்து அம்பு குறிப்பிட்ட இடத்தை தவறாமல் போய்ச் சேர்வதைப் போல், தர்மமும் செய்ய நினைக்கும் பொழுதே உரியவரிடம் பிசகாமல் போய்ச் சேரட்டும்.என்ற தத்துவத்தில் உணர்த்தியுள்ளர்கள். தவமும் அவ்வாறே நெறி பிசகாமல் செல்லட்டும்.
கால புருஷனின் பத்தாம் வீடு மகரம் (முதலை) செய்தொழில் / ஜீவன. வகை ஆகிய வற்றைக் குறிக்கிது.
முதலையின் குணம் நீருக்குள் யானையையும் இழுத்துக் கொள்ளும்.எப்பொழுதும் விழிப்புடனிருக்கும்.தந்திரகுணம் வாய்ந்தது. பராக்கிரமம் நிறைதது.
ஈடுபடும் தொழிலில் நிலைத்திருந்தால் வெற்றி கிட்டும். திறமையும் / விழிப்புணர்வும் இருந்தால் உயர்வு கிடைக்கும்.
கால புருஷனின் பதினென்றாம் வீடு கும்பம் (கலசம்/ லாப ஸ்தானம் அல்லது சேமிப்பு ஸ்தானமகும்.
சேமிப்புத்தனம் வணங்கத்தக்கதாக இறைவனின் திருக்கோயிலில் பூஜிக்கத்தக்க பொற் கலசத்திற்கு நிகராக இருக்க வேண்டும். சத்காரியங்கள் நடைபெறும் இடங்களிலெல்லாம் 'கும்பம்' இடம் பெறுவது போல் சேமிப்புத்தனம் அவ்விடங்களிலெல்லாம் சென்று பயன் அடையட்டும். புண்ணிய நதியைத் தன்னகத்தே கும்பம் பெற்றிருப்பது போல் புண்ணிய வகையில் செல்வம் நிரம்பட்டும் என்ற தத்துவத்தில் பதினோராமிடம் அமைந்திருக்கிறது
கால புருஷனின் பன்னிரண்டாம் வீடு மீனம் இரண்டு மீன்கள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்து விளையாடும் காட்சியாகும் உறக்கம் / சயன சுகம் / விரயம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
உறக்கம் மீனின் உறக்கத்தைப் போன்றதாக இருக்கட்டும்.உறக்கத்தின் சிந்தனை ,கனவு ,கற்பனை மீன் வாழும் நீரைப் போல் எப்போழுதும் குளிர்ச்சியாக இருக்கட்டும். சயன இன்பம் மீனின் ஊடலைப் போன்றிருக்கட்டும். காலை எழுந்தவுடன் வெப்பபத்துடன் எழாதே குளிர்ந்த நினைவுடன் எழுங்கள்! என்ற தத்துவத்தை போதிக்கின்றது.
சூரியஜெயவேல்
9600607603
Comments
Post a Comment