உங்களின் கோபம் - சூரியஜெயவேல்

 

உங்களின்  கோபம்

 உங்களுக்குக் கோபம் எப்போது வருகிறது ? நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் அல்லது மற்றவர்கள் நீங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் தான் கோபம் வருகிறது .

" கோபத்தோடு நஷ்டத்தோடு உட்காருவான் . "

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்

ஏமம் புணையைச்சடும் .

  வேண்டியோர் , வேண்டாதோர் என்ற வேற்றுமை இன்றிச் சடும் கோபத்தீ நமக்குத் துணையாய் விளங்கும் சுற்றத்தையும் , நட்பையும் அழித்து விடும் .

 லக்னத்தில் பாவிகள் இருப்பின்  கோபம் வரும் , சுபர் பார்த்தால் கோபம் உடன் சரியாகி விடும் , பன்னிரண்டு ராசிக்கு கோபம் - எப்படி ? என்பதை ஆராய்வேம்


மேவுடராசிக்காரர்கள் : 

மேஷ ராசிக்காரர்கள் நெருப்பின் அம்சத்தைக் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வேலையை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிக அழுத்தம் ஏற்படும் . அதே அழுத்தத்தோடு தான் தங்களுக் கொடுக்கப்படும் இலக்குகளை அடைய போராடுவார்கள் . தனக்கென ஒரு இலக்கு நிர்ணயித்துக் கொண்டு செயல்படுவார்ள் . - அந்த இலக்கை அடைய முடியா விட்டால் , மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக ஏற்படும் . சிலநேரங்களில் இவர்களுக்கு உள்ள அகங்கார குணமும் , இவரின் சுயநலம் சுபாவமும் இவரை நேசிப்பவரைக் கூட வெறுக்கும்படி செய்து விடும் . திடீரென்று மன அமைதியை இழந்து விடும் . கோபம் சில வினாடி நேரம் தான் பிறகு பழைய நிலையை அடைந்து விடுவார்கள் . இவர்களின் கோபத்தால் மற்றவர்களுக்குப் பாதிப்பு கிடையாது . ஆனால் இவர்களின் உடலும், உள்ளமும் பாதிப்படையும்.

ரிஷபராசிக்காரர்கள் :  நிலத்தின் கொண்டவர்கள் பொறுமைசாலிகள் . தாம் செய்யும் விஷயம் எங்கு வீணாகி விடுமோ?  என்ற ஒருவித சந்தேக உணர்வுடனேயே இருப்பர் . இந்த உணர்வே பெரும்பாலும் இவர்கள் மனதை அதிகமாக கஷ்டப்படுத்தும் . ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்கள் . எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள் . இவர்களுடன் வாக்குவாதம்  செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது . இந்த  ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும் போது , மற்றவர்களது கருத்துக்களை தவிர்த்து , தங்களது கருத்துக்களைத்தான் திணிக்க என் நினைப்பார்கள் . இவர்கள் உன் கோபத்தைக் குறைக்க நேரம் எடுத்துக் கொண்டால் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் . இவர்களிடம் அன்பாக பேசி காரியம் சாதிக்கலாம் . சீக்கிரத்தில் கோபம் வராது . வந்து விட்டால் படு வேகமாக இருக்கும் பாதிப்பிருக்காது . கோபம் கொண்ட  நபர்களுக்கு மகிழ்ச்சி அடையும்படி பல நல்ல காரியங்களை செய்து விடுவார்கள் , 

மிதுன ராசிக்காரர்கள் : மிதுன ராசிக்காரர்கள் காற்றின்  அம்சத்தில் பிறந்தவர்கள் . சின்ன சின்ன  விஷயங்களுக்கு எல்லாம் எளிதில் மனம் உடைந்து  விடுவார்கள் . எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் செயல்களில்  ஈடுபடுவதன் மூலம் , மன வலிமை அதிகரிக்கும்  இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள்  புரியும், மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம்  எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ள  முடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை துண்டிக்கவும் தயங்க மாட்டார்கள் . இவர்களிடம் அளவாக பேச வேண்டும். 25 % சதவீதம் தான் கோபம் வரும் அப்படி அளவுக்கு மீறி வந்தால் வருடத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாளாகத்தான் இருக்கும் . இதனால் யாரும் பாதிப்படைய மாட்டார்கள் .

 கடக ராசிக்காரர்கள் : கடக ராசிக்காரர்கள் நீரின் அம்சத்தில் பிறந்தவர்கள் என்பதால் கற்பனைத் திறன் அதிகமிருக்கம் . நல்ல ஞாபக சக்தியும் உண்டு கடகராசிக்காரர்கள் பாதுகாப்பற்ற உணர்வை உணர்வார்கள். இரவில் தனியாக சாலையில் நடந்து சென்றாலும் மிருந்த பதற்றத்துடன் இருப்பார்கள் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் தங்களை விமர்சிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்  கூடியவராகவும் இருந்தாலும் எதையும்  முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும்  பழகியபின் பிரிய முடியாது தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும்  செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு . பிடிவாத குணம் கொண்டவர்கள் . பிறர் விருப்பத்திற்கு மதிப்பு  கொடுக்காமல் தங்களுடைய கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள் பாசமாக பேசி காரியம் சாதிக்க வேண்டும். பயங்கர கோபம் வரும் அது  கோபமாகத் தெரியாது கோபத்தை உள்ளடக்கி மனதுக்குள்ளேயே திட்டம் தீட்டி  சிரித்துப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் . இவர்களின் கோபத்தை கிளறியவர்களின் பாடு படு சங்கடமாகி விடும்.

 சிம்ம ராசிக்காரர்கள் ; நெருப்பின் அம்சத்தில் பிறந்தவர்கள். விருப்பத்திற்கு எதிராக எது நடந்தாலும் , மிகுந்த கோபம் மற்றும் பதட்டம் கொள்வார்கள் வீரமும் தைரியமும் உள்ளவர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் உள்ளவர்கள் சிம்ம ராசிக்காரர்கள் பார்த்து விடாதீர்கள் கோபமாக இருக்கும் போது அவர்களை அவர்கள்  எவ்வளவு அன்பானவர்களாகவும் , கருணை உள்ளம் உடையவர்களாகவும் தெரிந்தாலும் , கோபம் என்று வந்துவிட்டால் போதும் யாரென்று பார்க்க மாட்டார்கள் இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் பழி வாங்க வேண்டும் என்றால் சிறிதும் யோசிக்காமல் செய்துவிடுவார்கள் .  
 முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிபுப்பு கேட்பார்கள்.  மற்றவர் செய்யும்  பெரிய தவறுகளை எனிதில் மன்னிக்கும் சுபாவம் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை   பெரிதாக்கி விடுவார்கள் , பயங்கரமாக கோபம் வரும். சமைய சந்தர்ப்பம் பார்க்காமல்  வெளிப்படையாக கோபத்தை கொட்டி விடுவர்கள்.  இவர்களின் கோபத்தை தாக்குப்பிடிப்பபது . பயங்கர கஷ்டம் அதிகரிக  மற்றவர்களுக்கு தொல்லையும் தொந்தரவும் அதிகரிக்கும். 

கன்னி ராசிக்காரர்கள் நிலத்தின் அம்சத்தில் பிறந்தவர்கள் ,  இவர்களின் பலவீனமே அளவுக்கு அதிகமாக சிந்திப்பது , அதிகமாக சிந்திக்கும் போது , சிறு பிரச்சனை வந்தாலும் , மனதை பெரிதாக பாதிக்கும் உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள் மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி  பிறரை வசியப்படுத்தும் பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள் . சூழ்நிலைக்கு  ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்  இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட  முடியாது . எனினும்  இவர்களிடமும் எச்சரிக்கையாக பழக வேண்டும் ஒரு சில சமய சந்தர்ப்பத்தில் 20 % சதவீதம் 
அளவுக்கு கோபம் வரும். அதாவது பட்டென்று தட்டினால் அது சட்டென்று உதிரும் கண்ணாம்பு போல  இவர்களின் கோபம் உடனே அடங்கி விடும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது .

 துலாம் ராசிக்காரர்கள் :  காற்றின் அம்சத்தில் பிறந்தவர்கள் அதிகமாக சிந்தித்து , அதனாலேயே அதிக மன அழுத்தத்திற்குள்ளாவார்கள் . ஒரு செயலால் ஏற்படும் நன்மையை விட தீமைகளைப் பற்றி அதிகமாக சிந்திப்பது இவர்கள் செய்யும் பெரிய தவறு . நீதியையும் , நேர்மையையும் நிலைதாட்ட இவர்கள் விரும்புவதைப்  போவலே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்பபடி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக உதவுகிறதோ அதைப் போலத் தான் மற்றவர்களையும் தரம் பிரித்து  வைத்திருப்பார்கள் . பரம சாது! அத்திப் பூத்தது போல் அபூர்வமாக கோபம் வரும் கோபமாக இருக்கும்   இவர்களின் கோபத்தால் ஒரு சிறு துறும்புக்குக் கூட பாதிப்பு ஏற்பாடது.

 விருட்சிக ராசிக்காரர்கள்;  நீரின் அம்சத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு போதிய சுதந்திரம் கிடைக்காத போது மிகுந்த கோபம் கொள்வார்கள்.  இத்தகையவர்கள் தங்களுக்கு தனிச் சுதந்திரம் வேண்டும் எனவும், மற்றவர்கள் இவகளது உணர்வை மதிக்காமல் இருந்தால் , அவர்களை  வெறுப்பதோடு , இந்த ராசிக்காரர்கள் மிகுந்த டென்சன் பதற்றமடைவார்கள் . முன்கோபமும் , எளிதில் உணர்ச்சிவசப்படக்  கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது . முன்பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள் . இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது . கோபத்தில்  இருக்கும் விருட்சிக ராசிக்காரர்களைச் சீண்டுவது ஒரு மிகப் பெரிய தவறாகும் .  அவர்கள் மிகப் பெரிய தைரியசாலிகள் , அவர்களை யாராவது அவமானப்படுத்தினால் பயப்படாமல் அதற்குப் பதிலாக அவர்கள் மேல் இருக்கும் கோபத்தை அதிகப்படுத்திக் கொள்வர்கள் . அவர்கள் கோபப்படுவது தவறாக இருந்தாலும் கூட மற்றவரை அழிக்கத்தான் நினைப்பர் . வெடுக்கென்று பேசி நறுக்கென்று கோபத்தை கொட்டுவார்கள். தாக்குப்பிடிப்பது தர்மசங்கடமாகி விடும் . இவர்களின் கோபத்தால் மற்றவர்களுக்கு சற்று பாதிப்பு உண்டாகும் . 

தனுசு ராசிக்காரர்கள் ; " நெருப்பின் அம்சத்தில் பிறந்தவர்கள். மற்றவர்கள் அறிவுரை கூறுவது பிடிக்காது . மிகவும் ஓய்வற்றவர்களாக இருப்பதாலேயே , அதிக மனக் கவலையால் கஷ்டப்படுவார்கள் தனுசு ராசிக்காரர்களை  கோபப்படுத்திவிட்டால் அவர்களால் அவர்களது நாக்கினை அடக்க முடியாது . அவர்களது கோபத்தால் நாக்கே பிறரை தாக்க அவர்களது நாக்கே போதும் , பேசியே ஒருவரை காயப்படுத்துவதில் இவர்கள் வல்லவர்கள் . சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள் . இவர்களுக்கு பொய்   பேசுபவர்களையும் , தீய பழக்க வழக்கம் - இவர்களுக்கு கோபம் கண்டால் பிடிக்காது - வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது . ஆனால் , கோபம் போன அடுத்த நொடியே மன்னிப்பு - கேட்பதிலும் இவர்களை மிஞ்ச முடியாது . கோபத்தில் இந்த ராசிக்காரர்கள் பழிவாங்க முடிவெடுத்து விட்டால் , 
அது முடியும் வரை ஓயமாட்டார்கள் இவர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவிக்க சற்றும் பயப்பட மாட்டார்கள் இவர்கள் ஒரு நல்ல  கூட்டாளியாகவும் மிகவும் 
விசுவாசமானவர்களாகவும்  கருதப்படுவார்கள் . தனுசு வாயு வேகம் ஒரே சொல்லில் கோபத்தை ஏற்றி வீசுவார்கள் . ஆனால் அந்த வார்த்தையை ஈரேழு ஜென்மத்திலும் மறக்க முடியாது . அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக பேசி விடுவார்கள் . ஆனால் மற்றவர்களுக்கு மனம் வேதனைப்படுமே தவிர வேறு எந்தவிதமானபாதிப்பும் இருக்காது .

 மகராசிக்காரர்கள் :  நிலத்தின் அம்சத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள் . தனக்குத்தாளே அதிக  அழுத்தத்தைக் கொடுத்துக் கொள்வார்கள் . இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தத்திற்கு முழுகாரணம் அவர்களே தான் இவர்கள் தங்களது இலக்குகளை அடையாத போது மிருத்த எரிச்சலுக்குள்ளாவார்கள் இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும் .மற்றவர்களின் தேவையற்ற துன்பத்தால் மனம் பாதிக்கப்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களின் கோபத்தை வெளிக்காட்டும்  விதமே தனி அலாதி ! தாமரை இலையில் விடும் . தண்ணீர் எப்படி பட்டும் படாததும் போலிருக்கும் . அப்படி இவர்கள் நாசுக்காக கால நேரமறிந்து கனகச்சிதமாக கோபத்தை கொட்டுவார்கள் இவர்களுக்கு கோபம் வத்தால் இவர்களுக்கு ஆதாயம் பிறருக்கு பாதிப்பும் ஏற்படும். 

 கும்பராசிக்காரர்கள் : காற்றின் அம்சத்தில் பிறந்தவர்கள் எதையும் தங்களுக்கு விருப்பத்தின் வழியிலே செய்ய விரும்புவார் .அனைத்து விஷயமும் தங்களது விருப்பத்தின் படியே நடக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டால் எந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை . தனக்கு பிடித்தவர்களிடம்  நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை எறெடுத்தும் பாரிக்க மாட்டார்கள் . எவ்வளவு  பெரிய பெயர் , புகழ் , கௌரவம் , அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துச்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள் உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின்  பேச்சிற்கு  எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள் . இவர்களுக்கு கோபம் வருமா ? என்று அடுத்த வீட்டுக்காரர் கேட்கும்படியாக , ஒரு சில சமய சந்தர்ப்பத்தில் யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே கோபத்தை வெளிக்காட்டுவார்கள் . பிறருக்கு பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள் . 

மீன ராசிக்காரர்கள் : நீரின் அம்சத்தில் பிறந்தவர்கள் . ஒரு உணவ விஷயத்தை அளவுக்கு அதிகமாக வெளிக்காட்டும் மனக்கவலை அடைவார்கள் . இவர்களது பேச்சுக்கள் பதற்றத்தை உண்டாக்கும் . பெரிய மக்கள் நல்ல கூட்டத்தைக் கண்டால் , கோபம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும் . தமக்குத் தாமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள் . வீண் விவாகரங்களில் அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள் . தங்களது அந்தரங்க விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை வெறுப்பார்கள் . பார்வையில் பயங்கர முன் கோபக்காரர்களாக தோற்றமளிப்பார்கள் . ஆனால் நெருங்கிச் சென்றால் நீர் பூத்த நெருப்பு போல கோபம் பஸ்பமாகி விடும் . இவர்களின் கோபத்தால் அடுத்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது.
  
      சிலமாற்றங்கள் தொடபுள்ள பார்வையுள்ள கிரங்களின் நிலைக்கோற்ப மாறுபடும். 
     உற்சாகத்துக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டு ஆரோக்கியமான. மனநிலையைத் தரும். துரித உணவுகள், தீயபழக்கங்கள் மோசமான உணர்வுளையே ஏற்படுத்தும்.
    மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க ஆரோக்யமான உணவுகளை உண்பது தான் நல்லது. மகிழ்ச்சியான சூழலும் மனநிலையும் வேண்டுமெனில் நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள் சிந்திப்பது பேசுவது செய்வது என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணங்களில் செய்து வந்தால் மகிழ்சியான சூழல் உங்களைத் தழுவிக் கொள்ளும்.

சூரியஜெயவேல்
9600607603

 சூரியஜெயவேல் 9600607603 

Comments

  1. அனுபவ உண்மை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்