பரியோகம்
பரியோகம்
தாயும் தந்றையும் தகரினியேறிட .
ஆயும் அப்பனும் அக்காளையேறிட பாயுமேயரை பாங்கக் குறைவிலா மாயுங் காலம் வரை பரி யோகம்
(இ-ள்) தாய் காரகனான சந்திரனும் , தந்தை காரகனான சூரியனும் தகர் என்னும் மேஷத்தில் இருப்பதும் , ஆயி என்னும் நாலாம் அதிபதியும் அப்பன் என்னும் ஒன்பதாம் அதிபதியும் அக்காளை என்னும் ரிஷபத்தில் இருக்க பிறந்தவர்கள் ஆயுள் முடியும் வரை சிறப்பன யோகத்தை அடைவார்கள். இது பரியோகம் ஆகும் .
அண்ணனும் தம்பியும் அக்கானையேறிட
வண்ணானும் முன்பின் வலுவாய் இருந்திட
கண்ணனே திரி கோணங்க ளேறிட
எண்ணுமே பரி யோகவான் சாதகன்
(இ-ள்)அண்ணன் என்னும் 11 ஆம் அதிபதியும் , தம்பி என்னும் 3 ஆம் அதிபதியும் , அக்காளை என்னும் ரிஷபத்தில் இருக்க , வண்ணான் என்னும் சனி ரிஷயத்திற்கு முன்பின் ராசிகளில் ஒன்றில் இருக்க, கண்ணே என்னும் 2 ம் குரு அதிபதி 1,5,9 ல் இருந்திடில் பரியோகம் .
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment