அமாவாசை யோகம்

 



அமாவாசை     யோகம்          

             அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன்,  சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.

        ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல்  இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல்  இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல்

இருந்தால் யோகம் ஏற்படும்.

              சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம்.

வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும்.

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு

பகலவனும் கலை மதியும் கோணமேற

சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்

செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு

ஆறப்பா அமடு பயமில்லை யில்லை

அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்

கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்

கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே

          சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு,  பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.

இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.

              மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல்  இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.

 கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க

துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்

அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி

விதியுடனிருப் பனின்ன                                              மேன்மையாமறிவுள்ளேனே

       சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.

     சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால்

ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.


      திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில்  10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியைவகித்தார்.

அனுபவத்தில் மிகச்சரியாக உள்ளது நீங்களும் ஆராய்ந்து பாருங்கள்.

சூரியஜெயவேல்

9600607603

Comments

Popular posts from this blog

லக்கினத்தில் சூரியன்

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

புத பகவானின் வாழ்கை வரலாறு