குருச்சந்திர யோக முரண்பாடுகள்
குருச்சந்திர யோக முரண்பாடுகள்
சந்திரயோகங்களில் குருச்சந்திரயோகம் முக்கியமானது.குருவும், சந்திரனும் இணைந்திருந்தால் குருச்சந்திரயோகம் ஆனால் குருவும் சந்திரனும் இணைந்திருந்தால் ஜாதகருக்கு எந்தவிதத்திலும் நன்மையை தராது.
அனைத்து நூல் ஆசிரியர்களும் குரு, சந்திர இணைவு நன்மையை தராது என்று கூறுகின்றார்கள். குரு, சந்திரனுடன் இணைந்து ஒரே ராசியில் அமைந்தால் குருச்சந்திர யோகத்தை மட்டும் சிறப்பித்து கூறவில்லை, நாம் ஆராய்வோம்.
கூறப்பாயின்ன மொருபுதுமை சொல்வேன்
குமரனுக்கு குருச்சந்திர பலனைக் கேளு
சீரப்பா செம் பொன்னும் மனையுங்கிட்டும்
ஜெனித்த தொரு மனை தனிலே தெய்வங்காக்கும்
கூறப்பா கோதையரால் பொருளும் சேரும்
குவலயத்தில் பேர்விளங்கோள் கடாட்சமுள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானால்
அப்பலனை யறையாதே புவியுளோர்க்கே
(இ-ள்) குருச்சந்திரன் இணைந்திருந்தால் பொன் பொருள் தெய்வ அருள் பெண்களால் தனலாபம். புகழ் பெற்று வாழ்வார்கள். குரு சந்திரன் நின்ற ராசியாதிபதி மறைந்தால் சுப்பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது.
பிறையுடன் குருவுங் கூடியே வருங்கால்
பேதையாம் மனதினில் துக்கம்
குறையுடன் அரசர் பகையது உண்டாகும்
குறைமதியாகிடில் துண்பம்
நிறைமதியாகில் மன்னர்களுறவு
நேயரால் பூமிபொன்வரத்து
தசைமிசை சுகங்கள் தையலர் மைந்தர்
சகல பாக்கியங்களுமாமே
(இ-ள்) தேய்பிறை சந்திரனுடன் குரு இணைந்தால் தீமையான பலனைத்தரும். வளர்பிறைச் சந்திரனுடன் குரு இணைந்தால் நன்மையான பலன்களைத் தரும். இவர்களது தசை, புத்தியில் பெண்களால், புத்திரர்களால் நன்மையும் சகல சுகபோக வாழ்வு அமையும்
"நேசமாமூன்றில் வந்து நிகழ் குரு சோமன் கூடில்
நாசமே மிவற் கடம்மை நல்லவரைவன்மை போமோ
பாசமாஞ் சுபரேயென்று பார்கவுநம்பலாகா
மோசமஞ்சகோதரங்கண் முடிவது குறிதப்பாதோ "
(இ-ள்) மூன்றில் குருவும் சந்திரனும் இணைந்திருக்க நன்மமைகள் எதுவும் செய்யமாட்ட்டார்கள்.இவர்கள்
சுபர்கள் என தீர்மானிக்கக்கூடாது சகோதரர்க்கு நன்மையில்லை ஆயுள் பாதிக்கும்.
"குருமதி நான்கில் கூடக் கொம்பனையாளே கேளாய்
வருவது அன்னைக்காகா அங்கிச நாசமாகும்
திருகதுமில்லை கண்டாய் செல்வரும் பாரகில்
கருவுடன் மாதர் நாசங்கண்டிடுங்குறி தப்பாதே "
(இ-ள்) குருவும், சந்திரனும் இணைந்து நான்கில் இருந்தால் தாயருடைய வம்சம் நாசமாகும் சுபர்கள் இவர்களை பாராதிருக்கில் ஜாதகன் கர்ப்பத்தில் இருக்கும் போதே தாய் மரணமடைவாள்.
'வியாழமுந்திங்கள் கூடிவேறொரு கிரகம் பாரா
சகாய மறைந்தினிற்கச் சந்தம் புத்திரநாசம்
நியாய மாய்ச்சுபரே யேன்று நினைவதி நினைக்கலாகா
துபாமாய்ப் பார்த்துச் சொல்வாயுபமது குறிதப்பாதே
(இ-ள்) குருவும் சந்திரனும் இணைந்து ஐய்ந்தில் இருந்து இவர்களை வேறுஎந்தகிரங்கள் பார்க்காமல் இருந்தால் அந்த ஜாதகனுக்கு புத்திர நாசமாகும். இவர்கள் சுபர்கள் என எண்ண வேண்டாம் இவர்களின் நிலை அறிந்து பலன் கூற வேண்டும்.
"பாரப்பா இன்னுமொரு புதுமை கேளு
பால்மதியும் பரமகுரு ஏழில் நிற்க
சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை
செந்திருமால் தேவியும் விலகி நிற்பன்
கூறப்பா குமரிய வளில்லாமல் தான்
குமரனுட வங்கிசமும் நாசமாச்சு
ஆரப்பா அயன் விதியைக் கூறலுற்றேன்
அப்பனே புலிப்பாணி பாடினேனே"
(இ-ள்) வளர் சந்திரனும் குருவும் இணைந்து ஏழில் இருந்தால் ஜாதகருக்கு மனைவியில்லை, செல்வம் இல்லை, இவனது வம்சம் நாசமகும், பிரமன் எழுதிய விதியாகும்.
குருமதி கூடியேசிற் கோலமாய் நின்றாகில்
மருவிவர் சுபரேயென்று மகிழ்ச்சியாய்ச் சொல்ல வேண்டாம்
வருவது களத்திரவானி வங்கிஷ நாசமாகும்
திருகதுயில்லை கண்டாய் தெரிந்துரை குறிதப்பாதே
(இ-ள்) குருவும் சந்திரனும் இணைந்து ஏழில் இருந்தால் இவர்களை சுபர்கள் என எண்ணவேண்டாம். மனைவியில்லாமல் வம்சம் நாசமாகும்.மனைவிக்கு கண்டாம்.ஆராய்ந்து பலன் கூறவேண்டும்.
"சந்திரனோடு ஞான சதுர்மறை குருவே கூடி
வர்துயிர் லக்ன தெட்டில் வாழ்ந்து உதித்தமாந்தர்
பந்து நற்பாகம் விட்டு பரதேசியாகி தேவன்
சத்தம்வார் அடிபணிந்து கவலையற்றிருப்பராமே "
(இ-ள்) குருவும் சந்திரனும் இணைந்து எட்டில் இருந்தால் ஜாதகர் பந்தபாசம். குடும்ப சுகத்தைத் துறந்து இறைவன் புகழ் பாடி கவலையற்று திரிவர்கள்.
"திங்களுடனே பொன்னன் சேர்ந்து கேந்திரத்தினின்றால் மங்கள மாகயோகம் மகிழ்ச்சியாம் ஆறெட்டாகில்
சங்கையுண்டாகும் பூமி தனமெலாம் நாசமாகும்
மங்கையர் வெறாம் அன்னிய தேசம் போயலைகுவாரே
(இ-ள்) சந்திரனுடன் குரு இணைந்து கேந்திரத்தில் இருந்தால் மாகயோகம். மகிழ்ச்சியாகும்.ஆறு, எட்டில் இணைந்திருந்தால் செல்வம், மனைவி, பூமி எல்லாம் நாசமாகும்.இரண்டாம் திருமணம் ஏற்படும். வெளிநாடு சென்று ஆலைந்து திரிவார்கள் நன்மையிறது.
"மதியரசோடு கூடி மகிழ்ச்சியாய் நவத்தினிற்க
மிகுதியோரவரைப் பாராதிருக்கிலுமாதே கேளாய்
சதியவர் செய்யும் தீமை சத்துருபிதாவுக்கா
விதியது முடியுந்தப்பாக்குறியது கூறாய்மாதே "
(இ-ள்) சந்திரனும் குருவும் இணைந்து ஒன்பதில் இருக்க மற்றற கிரகங்கள் இவர்களைப் பாராமலிருந்தால் ஜாதகர் செய்யும் கொடுமைகள் தந்தைக்கு மரணத்தைத்தரும்.
"உதித்தது விரைய வெட்டி லொளிர்மதியரசன் கூடித்
திதித்தனிறாரகிற்றிற பலனுறுதியாகும் "
(இ-ள்) வளர்சந்திரனும், குருவும் இணைந்து 8-12-ல் இருந்தால் . இருவரும் தனித்தனியாக இருந்தாலும் பவத்திற்கு
உறிய பலன்கள் தருவார்கள். ஆயுள் பலம் கிட்டும்.
"பொன்னனை சோமன்றன்னிற்பதுமையா மூன்றிலாறில்
வின்னமா மெட்டில்பந்தில் விளங்கு பன்னிரண்டினின்றால்
தன்னுடன் பிறந்தார் சேதந்தானிய மாடு மக்கள்
வின்னமாய்ப்பதியை விட்டும் வீட்டை விட்டோடு மன்னே
(இ-ள்) குரு சந்திரன் இணைந்து 3-6-8-10-12-ல் இருந்தால் ஜாதகரின் சகோதரம் பாதிக்கும் தானியம், மாடு, மக்கள், சுகம், பாதிக்கும். கணவன் /மனைவி பிரிவு ஏற்படும், வாழ்வில் சுகம் கிடைக்காது
" மதிகுரு வொன்றாய்க் கூடில் மதுரமாம் வாக்குண்டாகும்
பதியதில் வந்த பாலன் பாரக்ரமவந்தனாகி
நிதிதனமதிலேயிச்சை நீடு சௌபாக்யம் கீர்த்தி
அதுதனையடைவனென்று வன்புடன் கூறுவாயே "
(இ-ள்) சந்திரனும், குருவும் இணைந்திருக்கப் பிறந்தவர்கள். பராக்கிரமசாலி உறவினர்களுக்கு நட்புறவுடையவர்கள் .தன வந்தனாகவும் சபல எண்ணம் உள்ளவனாக இருப்பர்கள்.
குருச்சசந்திரயோகம் சில நன்மையையை தந்தாலும் இல்லற வாழ்வில் மனக்கசப்பையும் பிரிவினையும் தரும். இவர்கள் தன் நலம் காத்தலைவிட. பிறர் நலம் காத்தலில் பெரிதும் சிறந்து விளங்குவார்கள். பொது விழ்கையில் வெற்றி கண்பர்ககள்.சன்னியாச வாழ்வு நலம் தரும் இவர்கள் சொல் புத்தி கேட்பவர்கள், சுயபுத்தி, சுயசிந்தனையில்லாதவர்கள். இவர்களை வழி நடத்தும் நபர்கள் நல்லவர்களா இருக்க வேண்டும்.
குருவும், சந்திரனும் கூடி
1-ல் இருந்தால் உடல் உறுப்புக்களை இழத்தல், பழவீனம், கௌரவபாதிப்பு ஏற்படும்.
2-ல் இருந்தால் குடும்பத்தில் நிம்மதியின்மை, குடும்ப சொத்துகளை அனூபவிவவப்பதில் சிக்கல்.
3-ல் இருந்தால் சகோதர வகையில் சிக்கல், துணிவை தவறாகப் பயன்படுதது்தல், தற்கொலை, எதிர்பாராவகையில் மரனம்.
4-ல் இருந்தால் தாய்க்கு கஷ்டம், வாகனச் நஷ்டம், மன்மனை பாதிப்பு சுகவீனம் ஏற்படும்.
5-ல் இருந்தால் மனக்குழப்பம், புத்திரதோஷம், மாமனுக்காகாது சொத்துரிமையில் சிக்கல்.
6-ல் இருந்தால் கடன் தொல்லை எதிரிகளால் கஷ்டம் , நோய்நொடிகள், எதிர்பாராத மரணம், தரித்திரம் எறபடும்.
7-ல் இருந்தால் திருமணவாழ்வில் தோல்வி, மணமற்ற நிலை, மணமானாலும் வம்ச விருத்தியின்மை, மனைவியிழப்பு எற்படும்.
8-ல் இருந்தால் மனைவி பிரிவு,திடீர்விபத்து, எதிர்பாராமரணம் எற்படும்.
9-ல் இருந்தால் தந்தைக்கு வழியில் புகழின்மை, பாக்கியக்குறைவு, நாத்திகம் பெரியோர்களை பளித்தல்.
10-ல் இருந்தால் தொழில் உத்தியோகபங்கம், கௌரவம், அந்தஸ்தும் பதிக்கும்.
11-.ல் இருந்தால் மூத்தசகோதர வழி பாதிப்பு, சிதத்தாப்பாவுக்குத் தீமை, லாபமான வரவுகளில் தொல்லை எற்படும்.
12-ல் இருந்தால் எதிர்பாரத பல்வேறு இழப்புகள், மனநிம்மதியின்மை, ரகசிய மரணம், குழப்பமான முடிகள் ஏடுப்பார்கள்.
மேலே கண்ட விளக்கங்கள்பொதுவான பலன்கள். ஜாதகத்தில் குரு சந்திர கிரகங்களின் பலம், பலவீனம் மற்றும் இவர்களுடன் சம்பந்தம் முடிவு செய்ய வேண்டும். என்பதே சரியான வழியாகும்.
அனுபவத்தில் யோகத்தை தருவதில்லை பல பாதிப்புகளைத் தருகின்றர்கள்.
சூரியஜெயவேல்
9600607603
Comments
Post a Comment