சந்தான பாக்கியம்

சந்தான பாக்கியம் 


ஏழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா

பண்புடை மக்கள் பெறின் (குறள்) 


குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொடும் கவ்வியும் துழிந்து 
நெய்யுடை அடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை (புற நானுறு)

இந்த பிரபஞ்சத்தில் பரிணாமத் தோற்றத்தில் தான் உயிரினங்கள் பல்கிப் பெருகியுள்ளன . இனப்பெருக்கக் காலங்களில் பெண் உயிரினங்களை கவருவதற்கு , போராட்டங்களில் வெல்லும் ஆண் உயிரினமே உறவு கொள்ளமுடியும் . அதன்  மூலம் வீரியமான இனக்கவர்ச்சியின் மூலமே , தங்களின் மரபணுக்களைக் ஒவ்வொரு எ தலைமுறைகளாக , காலங் காலமாக கடத்தி வருகின்றன.இதே நிலைதான் மனிதர்களுக்கும் நீடித்தது . எப்படி என்றால் , முரட்டுக் காளையை அடக்கினால்தான் பெண்தருவேன் என்பதும் , வாள் போரும் , மல்யுத்தப் போட்டிகளும் , மாப்பிள்ளை கல் தூக்கிப் போடுவதும் அடங்கும்.

   ஆனால் , நாகரீகம் மிக்கதாகக் கருதப்படும் ,  இக்காலத்தில் வலிமையானவன் தான் என்பதைக் காட்ட வேண்டிய சூழல் எந்த - ஆணுக்கும் நிகழவில்லை . இந்த பிரபஞ்சத்தில் எந்த உயிரினமாக இருந்தாலும் , தன்னுடைய சந்ததிகளை உருவாக்க முடியாதவைகளும் . உருவாக்க முடிந்தவைகளும் உண்டு . உருவாக்க முடியாதவை வீணான உயிரினமாகக் கருதப்படும்.அவைகளை," மலடு " என்று ஒதுக்கப்படுகிறது . 

வடமொழி நூல்களில் சொல்வது உண்மையான பட்சத்தில் , ஆண்பெண் வீடு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகள் மட்டுமே , புத்திர தோஷமற்றவர்கள் என்று  ஆகிறது . நம் முன்னோர் சொல்லிய கருத்தை ஆய்வு செய்வோம் . நம் சமூக அமைப்பு குழந்தைப் பேறு அற்றவர்களைப் பார்க்கும் பார்வை மிகக்கொடுமையானது .அவர்கள்  ஏதோ இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் . இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமூகம்தான் . மனதளவில் பெண் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள் . அந்த அளவுக்கு ஆணுக்குப் பாதிப்பில்லை . இந்த சமூகம் மலட்டுத்தன்மையை பெண்ணின் உடல் சார்ந்த நிகழ்வாகப் பார்க்கிறது .

  திருமணம் முடிந்து சிலமாதங்களிலே குழந்தைக்கு கருவுறவில்லை என்றால் , அதையொரு துக்கநிகழ்வாக உறவுகள் விசாரிக்கத் துவங்கும் . அந்த விசாரிப்பில் அக்கறை இருப்பதுபோல , மறைமுக வார்த்தைகளால் தாக்குதல் இருக்கும் . நல்ல & கெட்ட காரியங்கள் என்று எங்கும் செல்லமுடியாது . அன்றிலிருந்து கரு உருவாகும்வரை , அந்த பெண் பாவம்தான் . இனி குழந்தைப்பேறு கிடைக்காது என்று ஆனபின் , அவள் மலடி என்று முத்திரை குத்தப்படுகிறாள் . குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு பெண்தான் காரணம் என்று , நம் சமூகம் திட்டமிட்டுச் சொல்கிறது . ஆனால் , அறிவியலும் , ஜோதிடமும் பெண்மட்டும் காரணமல்ல . ஆணும்தான் காரணம் என்கிறது . 


   இன்று அறிவியல் மருத்துவம் புத்திரோற்பத்தி எளிதில் கிடைக்கச் செய்கின்றனர்  அவர்களு நன்றி நன்றி 

  இந்த மனிதகுலத்தின் "பேறு அற்றவைகளை" நான்கு வகையாக , நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவைகளை , " வந்தியை " தோஷம் என்று அழைக்கப்படுகிறது .

கதவீ வந்தியா 
பெண் குழந்தைகளை மட்டுமே யார் பெற்று எடுக்கிறாளோ அப்பெண் "புருஷ வந்தியை " என்றும் அழைக்கப்படுவாள் 

ஸ்திரீ வந்தியை
 எந்தபெண் ஆண்குழந்தையை மட்டும் பெறுபவளும் , பெண்குழந்தையை பெற
முடியாதவரையும் "ஸ்திரீ வந்தியை" என அழைக்கப்படுவாள். 

மிருத வந்தியை
எந்தபெண்ணுக்கு குழந்தைகள் பிறந்து  இறந்து விடுகின்றதோ , அவருக்கு , " மிருத வந்தியை " என அழைக்கப்படுவாள் . 

ஸாஷாத் வந்தியை 
 எந்த பெண் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறாளோ , அவளே , " ஸாஷாத் வந்தியை " என்று அழைக்கப் படுகிறாள் . 

  புருஷ வாந்தியை எனும் காகவந்தியா தோஷம் இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் சனியும் , சூரியனும் கூடியிருந்தாலும் , அல்லது இவர்களின் ஆட்சி வீடுகளில் கூடியிருந்தாலும் , 

இதே அமைப்பில் சந்திரனும் , புதனும் கூடினாலும் , அவர்களின் ஆட்சி வீடுகளில் கூடியிருந்தாலும் , ஜாதகர்க்கு ஆண் சந்ததி  கிடைக்கவாய்ப்பில்லை . பெண் சந்ததியே உண்டாகும் . இந்த அமைப்பு  என்னுடைய நண்பரின் ஜாதகத்தில் உள்ளது . அவர்க்கு இரண்டுமே பெண்குழந்தைகள் . 

சுக்கிரனும் , புதனும் ஐந்தாமிடத்தில் இருந்து , புத்திர ஸ்தானாதிபதி பலக்குறைவாய் இருந்தால் , பெண்குழந்தையே பிறக்கும் . பிரபல நடிகரின் ஜாதகத்தில் உள்ளது.

 மிருத வந்திய தோஷம் 
 ஜாதகத்தில் சுக்கிரன் , குருவுடன்  செவ்வாய் கூடியிருந்தால் , கர்ப்பம் அழியும் , அல்லது குழந்தை இறக்கும் . இந்த அமைப்புடையவர்க்கு இலக்கினத்திலோ ,
எட்டாமிடத்திலோ கிரகங்கள் இருப்பது இந்த தீய பலனை மாற்றி , நல்ல  நிலையை உருவாக்கும் .

 மேஷம் , விருச்சிகத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்து , லக்கினத்தில் சந்திரன் இருந்து , பாவர்களால் பார்க்கப்பட்டால் , அந்த ஜாதகரோ , ஜாதகியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள இயலாதவராக இருப்பார்கள் . 

 லக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்து , சனியால் பார்க்கப்பட்டால் , கருச்சிதைவு ஏற்படும் . 
 லக்கினத்திற்கு ஏழில் சூரியனும் , ராகுவும் கூடியிருந்தாலும் ,     லக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்து ராகுவின் சாரம் வாங்கியிருந்தாலும் , அல்லது ராகு இருந்து சூரியன் சாரம்  வாங்கியிருந்தாலும் கருச்சிதைவோ , குழந்தை பிறந்து இறப்பு ஏற்படும் . 

   குழந்தையைத் தரும் ஐந்தாமதிபதிக்கோ , ஐந்தாமிடத்துக்கோ .  சந்திரன் , சனி , செவ்வாய் மூன்றுக் கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் , மிருத வந்தியா தோஷம் ஏற்படும் . அதாவது கருச்சிதைவு ஏற்படும் . 

ஸ்திரி வந்தியாம்
  மகரமோ , கடமோ ஐந்தாமிடமாக. அதில் நீசமாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் , அது ஸ்திரி வந்திய தோஷமாகும் . மேலும் , இந்த இடங்களில் சந்திரனும் , சுக்கிரனும் இருந்தாலும் தோஷம் உண்டாகும் . 

  லக்கினத்தில்  ராகுவும் , அதற்கு ஐந்தாமிடமான புத்திர  ஸ்தானத்தில் குருவிருக்க , அதற்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிடத்தில் சனியிருக்க ஜாதகர்க்கு ஒரே புத்திரன்தான் இருப்பான் . 

ஸாசஷாத் வந்தியா தோஷம்      
   லக்கினத்துக்கு ஐந்தாமிடம் புதன் , அல்லது சனியின் வீடாக இருந்து , அதில் சனியும் மாந்தியும் கூடியிருந்தால் , அல்லது பார்வைப் பட்டால் புத்திரவர்க்கம் இல்லை . 

   ஐந்தாமிடத்தில் பல பாவக்கிரகங்கள்  கூடியிருந்தால் குழந்தைகள் இல்லை . 
  புத்திர ஸ்தானாதிபதி நீச வர்க்கம் பெற்றால் , குழந்தைகள் இல்லை . 

 லக்கினம் , சந்திரன் மற்றும் குருவுக்கு ஐந்தாமிடத்தில் பாவக்கிரகங்கள் சூழ்ந்து இருந்தால் குழந்தைகள் இல்லை . 
 ஐந்தாமதிபதி பாவக் கிரகங்களுடன் கூட ஸாக்ஷாத் வந்தியா தோஷம் ஆகும்  
இது போன்ற கிரக அமைப்புகளை அவயோக அமைப்பாகும் . இவைகளை வந்தியை தோஷம் என்பார்கள் . 

இவர் பிரபலமன நடிகர் இவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஐந்தில் புதன் சுக்கிரன் பெண் குழந்தை மட்டுமே அமைந்தது.

இவர் எனது நண்பர் இவரது ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டில் சூரியன் சனி பெண் குழந்தை மட்டுமே உள்ளது.

இவர் எனது நண்பர் இவரது ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஐந்தில் குருவும் ராகுவும் உள்ளார்கள்.
சந்திரன் சுக்கிரன் சேர்க்கை சனி வீடில்  புத்திர பாக்கியமே அமையவில்லை.

சூரியஜெயவேல்  9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்