ஜோதிடத்தில் தற்கொலை

ஜோதிடத்தில் தற்கொலை 

       தினசரி பத்திரிக்கைகளில் , டி.வி. செய்திகளில் தற்கொலை செய்திகள் அதிகமாக காணப்படுகிறது . கடன் தொல்லையால் தற்கொலை , பிரபல தொழில் அதிபர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை , நடிகைகள் & நடிகர்கள் தற்கொலை , காதல் தோல்வியால் தற்கொலை , மாணவ & மாணவிகள் தற்கொலை பற்றிய செய்திகள் பார்க்கிறோம் . தற்கொலை செய்து கொள்வதால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி கவலை கொள்ளாமல் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியான பாதிப்பே பெரியதாக கருதி இறுதி முடிவாக எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் . 
  ஜோதிட ரீதியான காரணங்கள் கிரக நிலைகளை ஆராய்வோம் . ஜாதகத்தில் 
   மூன்றாம் பாவமும் முக்கிய பங்கு வகிக்கிறது . மூன்றாம் பாவத்தில் மளநிலையை அறியலாம் . மனம் செயல்படும் விதம் மளவலிமை , மனதைரியம் , மன அலைகள் , மனம் எடுக்கும் முடிவுகள் பற்றி மூன்றாம் பாவமும் , அதன் அதிபதியின் நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் .
   3 ஆம் அதிபதி பகை நீச்சம் பெற்றிருந்தாலும் , 3 ல் ராகு , கேது , சனி , மாந்தி , பகை கிரகம் , நீச்சகிரகம் இருந்தாலும் ஜாதகர்க்கு மனே தைரியம் குறையும் , நல்ல எண்ணங்கள் இருக்காது . சிந்தனைகளின் முடிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் . இவர்களுடைய திசாபுக்திகள் நடைமுறைக்கு வந்தால் தவறான முடிவுக்கு சொல்வார்கள் . 
    தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும் , அற்பமாய் ஆயுளை முடித்துக்கொண்டு உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொள்ள மனம் எண்ணம் ஏற்படும் . 
ஜாதகத்தில் கெட்ட கிரக திசாபுத்திகள் நடப்பில் இருக்க வேண்டும் அவ்வாறு கெட்ட திசாபுக்திகளை அறிந்து கொண்டால் அதிலிருந்து விடுபட முயற்சிக்கலாம் 
1.8 ஆம் வீடுகளில் ஆயுளின் நிலைகளை அளவிடப்படும் . 
  ஜாதகத்தில் 1,7 ம் வீடுகளின் ஆய்விலிருந்து தற்கொலையின் நிலைகளை அளவிட முடியும் .   
  லக்கினத்திற்குத் முக்கிய பங்கு உள்ளது . 

கிரக நிலைகள்
 1) லக்கினம்  செவ்வாய் , சனி , ராகு , கேது ஆகிய கிரக நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும் .
 2) லக்கினத்தில் செவ்வாய் , சனி , ராகு , கேது மாந்தியிருந்தாலும் அல்லது இணைந்திருந்தாலும் 
3 ) லக்னத்திற்கு பாதகாதிபதியின் கிரகநட்சத்திர சாரத்தில் லக்னம் நின்று இருப்பதும் , 
4 ) லக்கினம் ராசி தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் அதாவது ராசி சந்திப்பில் லக்கினம் ராசி அமைந்திருந்தால் பலம் குறைந்து காணப்படும் . 
5 ) லக்கினம் நின்ற ராசிகளில் கிரகயுத்தம் இருப்பினும் லக்னப்பாதிப்பு அடையக்கூடும் . 6 ) லக்கினாதிபதி பகை நீசம் பெறுவதும் , லக்கினாதிபதி பகை கிரகங்களுடன் இருப்பதும் லக்கினாதிபதி குறைந்திருப்பது லக்னாதிபதி 6 , 8 , 12 ல் மறைந்து இருப்பதும் . 

" மேவியதோர் லக்கினத்தோள் மெலிந்தோனாகி 
    விரும்பியே ஆறெட்டுப் பன்னிரண்டில் 
தாவியே யமர்ந்தாலும் லக்கினத்தில்
    தனித்தனியாய்ப் பாவாதி பதிகள் கூடி 
மேவியே நின்றாலும் உடலுக்கீனம் 
     மெலிவுமே மிக நேரும் வேணதுன்பம் 
ஆவியே யுருகநிலை யடைந்து சேரும் 
   ஆழிவில்லா தென்றுமே யனுகும் நோயே " 
  (இ-ள்) லக்கினாதிபதி பலம் குறைந்து 6 - 8 - 12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தாலும்,  லக்கினத்தில் 6 - 8 - 12-ஆம் அதிபதிகள் தனித்தனியே & சேர்ந்திருந்தாலும் ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பை தரும். பல துன்பங்கள் நோய் பாதிப்பும் ஏற்படுத்தும். 

7 ) நீசத்திரிகோண ராசிகளில் அமைகிற கிரகங்களின் நிலை லக்கினமாகவோ 7 ஆம் வீடகவோ அமைதல் .
 8 ) லக்கினத்திலோ 7 ஆம் இடத்திலோ நீசத்திரிகோண ராசியாகிய நிலையில் ஒன்றில் கிரகம் அமைந்தல் மற்றொன்றில் நீசத்திரிகோண ராசிமையப்பில் பார்வை செய்தால் , 
9 ) லக்கினமும் 7 ஆம் இடமும் நீசத்திரிகோண ராசி அமைவில் நீச சம்பத்தப்பட்ட கிரகப்பார்வை பெறுதல் ,
 10 ) சனி , செவ்வாய் குருவை சூரியனை , சந்திரனை பார்க்கப் பெறுதல் , 
11 ) சூரியனும் , சந்திரனும் சனியால் பாதிப்படைய லக்கினாதிபதியான இயற்கை சுபக்கிரகம் 11 ல் ராகு ( அ ) கேதுவுடன் அமைந்திருத்தல்
 12 ) 1,7 ம் அதிபதி நீசத்திரிகோணராசியில் அமைந்து மற்றொன்று நீசத்திரிகோண ராசியாகி நீசபங்க கிரகப் பார்வை பெறுதல் , 
13 ) 7 ம் அறிபதி சூரியனும் நீசந்திரிகோன ராசியில் அமைந்து செவ்வாய் அல்லது சனியால் சூரியன் பாதிப்படைதால் .
14 ) சுக்கிரன் , குரு புதன் 6 , 8 , 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் அற்பாயுள்.

"பரந்திட்டேனின்ன மொன்று பகரக்கேளு   
   பானுமைந்தன் பால் மதிக்குயெட்டில் நிற்க 
சிறந்திட்டேன் ஜென்மனுக்கு அநேக துன்பம் 
   செத்திறந்து போவதற்கு யெண்ணம் கொள்வான் அறைந்திட்டேன் அகம் பொருளும் நிலமும் நஷ்டம்    
   அப்பனே அரசனிடம் தோஷ முண்டாம் 
குறைந்திட்டேன் குடிநாதன் கேந்திரிக்க 
    குற்றமில்லை புலிப்பாணிக்கூறக் கேளே " 
  (இ-ள் )சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு 8 ல் நின்றால் அந்த ஜாதகனுக்கு அதிக துன்பம் ஏற்படும் தற்கொலை செய்து கொள்வதற்கு எண்ணம் ஏற்படும் . பொருள் நிலமும் நஷ்டமாகும் . அரச தண்டளை கிடைக்கும் . லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் மேல் கூறிய துன்பங்கள் விலகி சுப பலன்கள் ஏற்படும் .

 ' ஆடுதேளி லக்கினமா யாறெட்டில் பாவர்களுங் 
கூடியே நின்றல் குறைவாகி - தேடிவரும் 
மஞ்சாயமானே மதி முகத்தாயவனுயிரும் 
நஞ்சாலே போமே நவில் "    
    (இ-ள்) மேஷம் அல்லது விருச்சிகமாகிய ராசிகளிலொன்று லக்கினமாக இருக்க இந்த லக்கினத்திற்கு 6-ல் அல்லது 8-ல் பாவிகள் இருந்தால் விஷத்தால் மரணம் ஏற்படும் . 

1 ) லக்னத்தில் செய்வால் , சனி , ராகு , கேது நின்று இவர்களுடன் மாந்தி இணைந்து திசாபுத்தி காலத்தில் பல்வேறு பிரச்சினைகளால் மனம் பலவீனம் பெற்று பாதிப்க்கு உள்ளவர்கள். 
2 ) மாந்தியோடு இணைந்த எந்த கிரக திசாபுத்தி நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்யத் தோன்றும். 
3 ) லக்கினத்திற்கு பாதகமானவர்களின் பாவாதிபதி திசாபுத்தி காலத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது . 
4 ) திசாநாதன் , பகை , நீசம் பெற்றும் கிரகயுத்தம் பெற்றும் திசாபுத்தி நடத்தினாலும் வாய்ப்புள்ளது . 
5 ) திசாநாதன் 6,12 ல் நின்று திசாபுத்தி நடத்தக்கூடாது .
 6 ) திசாநாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6,8,12 ம் பாவாதிபதிகளுடன் இணைவு பெற்றிருக்கக்கூடாது .         
   மேல்கண்ட அமைப்புகள் உடைய ஜாதகர் . ஜாதகிகளை எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும் . இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது . நல்ல எண்ணங்களையும் , சிந்தனைகளையும் இவர்களுக்கு உருவாக்க வேண்டும் . சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் . உலகைப் புரிந்து கொள்ள வேண்டுமா ? உன்னைப் புரிந்து கொள் ! " 
"உடலுயிர்க்கு மூன்றாமிடத்ததிபன் மந்தன்         
    உடன் கூடியொருராசி நின்ற ராகில்
திடமுடனே யவர் திசைகள் பொகப்பில் நஞ்சு 
   தின்றதனாலிவனுயிர்க்குச் சேதமாகும் 
    படமுடைய ராகுடனே யிவர்கள் கூடிற் 
 பாசத்தாயிவனுயிரைமாய்த்துக் கொள்வான் 
அடவுடனே போகருட கடாட்சத்தாலே 
  அரியநூல் புலிப்பாணி அரைத்திட்டேனே "
  (இ-ள்) உடல் காரகனாகிய சந்திரனுக்கும் , உயிர் ஸ்தானமாகிய லக்கினத்துக்கும் 3 ம் அதிபதியுடன் சனி இணைந்து ஏதாவது ஓர் ராசியில் இருந்தால் , இவர்களது தசாபுத்திக் காலங்களில் ஜாதகர் விஷம் சாப்பிட்டு தனது உயிரைமாய்த்துக் கொள்வார் . இவர்களுடன் ராகு இணைந்தாலும் , சுருக்குமாட்டித் தற்கொலை செய்து கொள்வார்  எனது குருவின் அருளால் உறுதியாக கூறுகிறேன்

"உடலுயிர்க்கு மூன்றாமிடத் ததிபன் மந்த
   னுடன் கூடியொரு ராசி நின்றாராகில் 
திடமுடனே யவர் திசைள் பொசிப்பில் நஞ்சு
   தின்றதினாலவனுயிர்க்குச் சேதமாகும் 
படமுடைய ராகுவுடனே யிவர்கள் கூடில்
   பாசத்தா லிவனுரை மாய்த்துக் கொள்வான் 
அடவுடனே யுலககிலுள்ளோ ரறியச் சொன்னார்
    அரிய நூலறக் கற்றோறறிந்து ஆய்தோர்   (சோதிட மாலை)
   ( இ-ள்)  லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்ந்து ஏதாவது ஒரு ராசியில் இருந்து இவர்களின் திசா புத்தியில் விஷம் சாப்பிட்டு தன்னுயிரை  தனோ மாய்த்துக் கொள்வார்கள் . 
   ராகு இவர்களுடன் சேர்ந்திருந்தால் கயிற்றில் தன்னுயிரை மாய்த்துக் கொள்வார்கள் . என ஜோதிட ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறுவார்கள்.
 விரிவுரை  ;- 
மேஷம் லக்கினம்  புதன் சனி 
ரிஷபம் லக்கினம் சந்திரன் சனி
மிதுனம் லக்கினம் சூரியன் சனி
கடகம் லக்கினம் புதன்  சனி
சிம்மம் லக்கினம் சுக்கிரன் சனி 
கன்னி லக்கினம் செவ்வாய் சனி 
துலாம் லக்கினம் குரு சனி 
விருச்சிகம் லக்கினம் ராகு சனி 
தனுசு லக்கினம் ராகு சனி 
மகரம் லக்கினம் குரு சனி 
கும்பம் லக்கினம் செவ்வாய் சனி
மீனம் லக்கினம் சுக்கிரன் சனி
  லக்கினத்திற்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்க்கை பெற்றிருந்து இவர்களின் திசாபுத்தி நடந்தால் உடல் & உயிருக்கும் பாதிப்பை தரும். கோச்சார நிளைகளையும் கவணிக்க வேண்டும் .

ஆறினுக்குடை யோனோடே லெக்கித்ததிபன் கூட
மீரியே ராகு சேரில் மிதியும் மருந்தில் சாவான்
தேரியே சனியுங் கூடில் ஜலத்தினால் மரணமாகும்
பாரினில் கோதை மாதே பலனிதை விளம்பலுற்றேன்
  ( இ-ள்)  லக்கினாதிபதியும் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க இவர்களுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதிகமான மருந்தை சாப்பிட்டதால் மரணத்தை அடைவர்கள்.
   லக்கினாதிபதியும் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க இவர்களுடன் சனி சேர்ந்தால் தண்ணீரால் மரணத்தை அடைவர்கள். (சோதிட மாலை) 

அஞ்சுமூன்(று)  ஒன்றுள் ளோர்கள்
    அரவுடன் கூடுமாகில்
துஞ்சுவன் கயிற்றி னாலே!
    (இ-ள்) ஐந்தாம் அதிபதி,  மூன்றாம் அதிபதி,  லக்கினாதிபதி மூவரும் சேர்ந்து இவர்களுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் கயிற்றில் தூக்குப் போட்டுக் கொண்டு மரணத்தை அடைவர்கள். 

சொல்லிய மகர கும்பம் 
விஞ்சுநா லிடமாய்த் திங்கள் 
இருபவ ருடனே கூடில் 
பஞ்சின்மெல் லடியாய் கேளாய்
படுங்கயி றதனால் மாய்வன்  !
  (இ-ள்) மகரம் & கும்பம் நான்காம் வீடாக அமைந்து அதில் சந்திரன் இரண்டு பாவிகளுடன் இருந்தால் கயிற்றில் தூக்குப் போட்டடு இறந்து விடுவான்.
(சாதக சிந்தாமணி) 

" சென்றதினி மீளாது மூடரேநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் 
சென்ற தனைக்குறித்தல் வேண்டாம் 
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு தின்று விளையாடி 
இன்புற்றிருந்து வாழ்வீர் தீமையெலாம் அழிந்து போம் திரும்பிவாரா ' 
என்று மாக கவி பாரதி மனதிற்கு கட்டளையிடுகிறார்

1 ) உங்களுக்கு மிகவும் பிடித்தவை எண் எவை ?
 2 ) திரும்பத் திருப்ப மனதில் நீங்கள் அசைபோடும் சந்தோஷ நிகழ்வுகள் எவை ? 
3 ) உங்களை கஷ்டப்படுத்தும் பக்க நினைவுகள் எவை ? 
4 ) உங்களுக்கு சுத்தமாக பிடிகாதலை  எவை ? 
 உங்களைப் புரிந்து கொள்ளவும் , உங்களை வெறுக்கவும் துன்பங்களைத் ண்டவும் இந்த கணக்கெடுப்புகள் ஆனந்த வாழ்விற்கு அஸ்திவாரமாக அமையும்  மிகவும் உறுதுணையாக இருக்கும் , உங்களின் இந்த வாக்கெடுப்புகள் வே ஆனந்த வாழ்வின் அஸ்திவாரமாக விருப்புவது கிடைக்கும் வரை மனிதனூள் பரபரப்பை உருவாக்கும். மனக்கருத்தானது கிடைத்தபின் மறைந்து போவதே ஆசையைத் தூண்டி அது கிடைத்ததும் மறைந்து கொள்ளும் தன்மை பெற்ற இந்த மனக்கறுத்து எல்லோரிடமும் இருக்கிறது.

  தவறான மனக்கருத்துக்காக மனிதன் ஓடுவதும் ஆடுவதும் பரிதாபம். விதவிதமான எண்ணங்கள் மனிதனுக்குள் சமுதாயத்தாலூம் உறவினர்களாலுகளும் திணிக்கப்படுகிறது .எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ ஆனந்தத்திற்கு மாறானதாகவோ இருந்தால் மனமும் கூனாகவோ , குருடாகவோ மாறிவிடும் . ஆசை உங்களை ஆட்டுவிக்கும் காலங்களில் மிக கவனத்தோடு இருங்கள் . காரணம் அவை ஒரு தவறான மனக்கருத்தின் தூண்டுதல்கள் , தூண்டுவது துண்டிக்கப்பட வேண்டும் . தூண்டலில் இருந்து மீள் மீதிவாழ்வு உன் கையில் , தூண்டல்கள் வரும் இடம் வரை செல்லுங்கள் . அப்படிச் செல்வதின் உபவிளைவாக தூண்டல்களையே துண்டிக்கும் கலையைக் கற்றுக் கொள்வீர்கள் . தூண்டல்கள் துண்டிக்கப்பட்டபின் தான் மனிதன் முதல் முறையாக தன் வாழ்வை வாழ ஆரம்பிப்பான் .         ஒரு பெண்ணையோ , ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர் நீ அழகு , என்று சொல்லி விட்டால் போதும் தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கர்வமாக மாறிவிடும் . ஒரு பெண்ணையோ இல்லை  ஆணையோ நீ மோசம் என்று தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லிவிட்டால் போதும் தான் மோசமென்ற எண்ணம் வருத்தமாக மாறிவிடும் . மனிதமனமானது உறுதியாக இல்லாததால் தான் மற்றவர்கள் புகுந்து எண்ணங்கள் மனிதனை குரங்காட்டம் ஆட வைக்கிறது . ரிலாக்ஸே இல்லாதவர்களாக மனிதர்களை மாற்றிவிட்டது . 
   தவறான எண்ணங்களை தூக்கியெறிந்து விட்டு நல்ல எண்ணங்களை முழுவிழிப்புணர்வோடு நீங்களே உங்கள் மனத்திற்குள் நுழையச் செய்யுங்கள் . புதுமனதை நீங்களே வடிவமையுங்கள் . புதுஎண்ணங்களால் இது  சாத்தியமானதே . 
    உடலையும் உள்ளத்தையும் டென்ஷன் இல்லாமல், செய்யக்கற்றுக் கொள்ளுங்கள் , எண்ணங்களின் அழகைப்  பார்த்து அதனுடன் விளையாடுங்கள் , எண்ணங்களுடன் சண்டை போடாதீர்கள் மனதைக் காலியாக வைத்து கொள்ளுங்கள் . 

ஆனால் உஷார் . எந்தவிதப்பிரச்சினையையும் மிகைப்படுத்தாதீர்கள் அல்லது குறைவாகவும் மதிப்பிடாதீர்கள் . ஒரு பிரச்சினைக்குள் ஒரு பொக்கிஷம் நது அது மறைந்திருப்பதை உங்கள் மனக்கண்ணால் பார்க்கத் தெரிந்து கொள்ளுங்கள் , பொக்கிஷத்தை அடைய வேண்டுமே ஒழிய பிரச்சனையை பூதாகாரமாக்கி பொக்கிஷத்தை இழந்துவிடாதிர்கள் ,

 உங்களது வாழ்வு தேவகானமாக இருக்கட்டும் .!

வாழ்க வளமுடன் வாழ்த்துகள்!!

சூரியஜெயவேல்  
9600607603 


Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்