ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம்


வாழ்வியல் விஞ்ஞானம் 
 (ஜோதிட ஆய்வுகள்) 
  சூரியஜெயவேல்  9600607603 

     அண்டவெளி சித்தாந்தம் 

     மத்திய பூமி அகலம் 100 கோடி மைல்கள் இதற்கு மேரு நடுமையம் மேருவின் அகலச்சுற்று 50 கோடி மைல்கள் மேருவைச் சுற்றி நான்கு திக்குகளிலும் 100 கோடி மைல்கள்
பூமி முதல் துருவ மண்டலம் முடிவாக 15 லட்சம் மைல் தொலைவில் புவலோகம் இந்த புவலோகத்தில் வாயு ஆதாரமாக சகல மேகங்களும் ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்தும் , இந்த தத்துவ வாயுவில் உண்டாகும் அகண்டவாயு பூமியை அணைத்து இங்கு வாழும் ஜீவர்களுக்கு உணவு பொருள் உயிர்வாழும் சக்திகளையும் , ராக்ஷஸர் பட்சி முதலானவர்களுக்கு கமன ஆதாரமாகவும் இருந்து பிரசேதருனனென்கிற வாயு அக்கினியை எழுப்பி சுழல்காற்றாக சுழன்று வடவையை நிலைத்திருக்கச் செய்கிறது . ( கடலின் வடபக்கத்தில் நிலைபெற்றுள்ள ஊழித்தீ ) இதற்கு மேல் 100 யோசனை மைல் அளவில் ரெசனி என்னும் வாயு மூகம் என்ற மேகத்தை , சுத்த சமுத்திரம் , லவண சமுத்திரம் முதலியவற்றில் முழுக வைத்து அதில் குடித்த நீரை பூமிக்கு மேல் 450 யோசனை மைல் தூரத்துக்கு எழுப்பி மழையாக பெய்விக்கும் . அதற்குமேல் 450 யோசனை மைல்களுக்கு மேல் உள்ள ரெசனி என்னும் சத்துவவகம் .என்கிற மேகத்தால் மழை பொழிவித்து தவளை , மீன் முதலிய ஜல ஐந்துக்களை சாகச் செய்யும் அதன்மேல் 50 யோசனை மைல்கள் உயரத்தில் மோகம் என்னும் வாயு கௌஷதம் என்னும் மேகத்தால் அதிமழை பொழிந்து ஜனங்களுக்கு துக்கத்தை உண்டாக்கும் அதன்மேல் 50 யோசனை மைல் உயரத்தில் அமோகம் என்னும் வாயு மாருகம் என்னும் மேகத்தால் மழை பொழிந்து பூமியில் உள்ள பிராணிகளுக்கு மரணத்தை உண்டாக்கும் . அதன்மேல் 50 யோசனை மைல் உயரத்தில் உள்ள வாராங்கம் என்னும் வாயு பலகாம்யம் என்னும் மேகத்தால் மழை பொழிவித்து விருட்சங்கள் தளிர்க்க , பூக்க , காய்க்கள் செய்யும் அதன்மேல் 50 யோசனை மைல் உயரத்தில் உள்ள வைத்துதியம் என்னும் வாயு அதே பெயருள்ள மேகத்தால் பூமியை அதிரச் செய்யும் . அதற்குமேல் 50 யோசனை மைல் உயரத்தில் உள்ள ரைவகம் என்னும் வாயு விருஷ்டிவகம் என்னும் மேகத்தால் மனிதர்களுக்கு புஷ்டியை உண்டாக்கும் . அதன்மேல் 50 யோசனை மைல் உயரத்தில் உள்ள சம்வர்த்தன் எனும் வாயு குரோதம் என்னும் வாயுவால் பூமியில் வியாதிகளை உண்டாக்கும் . அதன் மேல் மோகன் என்னும் வாயு
 வாதார யோகத்தில் ததை விஷண காளிக வீமரூபிணி முதலான பிசாச சக்திகள்   சொத்திகள் பூலோகத்தில் சிகக்களுக்கு விகாரத்தை செய்து கொண்டிருப்பார்கள்.அதன்மேல் அமோக வாயு ஆதாரமான பட்டணத்தில் 30.000 விநாயகர்கள் பூமியில் துன்மார்க்கர்கள் செய்யும்  பூசையை ஏற்றிருப்பார்கள். இதன்மேல் வச்சிரகம்ப வாயு வாதாரமான லோகத்தில் பல வீர தேவதைகள் பூலோகத்தில் மசான பூத
வேதாளாச்ரியிகளாய் வீரர் பொருட்டு நாட்டியுள்ள கற்சிலைகளில் இருந்து பூசையை ஏற்றுக் கொள்வார்கள் அதன்மேல் வைத்து தீ என்னும் வாயு வாதார பட்டணத்தில் வீரசுவர்க்கம் அடைந்தவர்கள் இருப்பார்கள் அதன்மேல் ரைவதன் என்னும் வாயு வாதாரமான மேகாச்ரய பட்டணத்தில் சித்தர்கள் இருப்பார்கள் . அதன்மேல் சசம்வர்த்த வாய் ஆதாரமான மேகாச்ரய பட்டணத்தில் வித்யாதரர்கள் இருப்பார்கள் அதன்மேல் 100 யோசனை தசவாயு ஆதாரமான மேகாச்ரயம் இருக்கும் . இங்கு கந்தர்வர்கள் இருப்பார்கள் அதன்மேல் 10,000 யோசனை மைல்களுக்கு மேல் சத்தமாதாக்கள் - யோகினிகள் இருப்பார்கள் . அதன்மேல் தேவர்கள் இருப்பார்கள் . அதன்மேல் 10,000 யோசனை மைல்களுக்கு மேல் இந்திரனுடைய ஐராவதம் முதலியன இருக்கும் . அதன் மேல் 10,000 யோசனை மைல்களுக்கு மேல் கருடன் இருப்பார் . அதன்மேல் 10,000 யோசனை மைல்களில் தேவகங்கை நீர் அமைந்து பாபங்களை போக்கிக் கொண்டிருக்கும் அதன்மேல் 10,000 யோசனை மைல்களில் பிரம்ம கணங்கள் இருப்பார்கள் . அதன்மேல் 10,000 யோசனை மைல் உயரத்தில் தக்ஷ பிரஜாபதி இருப்பார் . அதன்மேல் 10.000 யோசனை மைல்களுக்கு மேல் ஒரு வாயு மேகங்களுக்கு விமான ஸ்தானமாக இருக்கும் . இதற்குமேல் சூரியன்
புவலோகம் இருக்கும் . இது பூமிக்குமேல் லட்சம் யோசனை தூரமாகும் சூரியன் தனது தடி நி - வாலநி - துமு - மரீசி - ஜ்வாலிநி - ருசி - சுவீந்துணை - போக்தா - விஸ்வா - போதினி - தாரினி - க்ஷேமா முதலிய 12 கலைகளுடன் ஹேமகிரணம் 333. உஷ்ண கிரணம் 333 , வருஷகிரணம் 333 . அமிர்தகிரணம் 1 ஆக 1000 கிரணங்களோடும் 99 ஆயிரம் யோசனை உயரமும் , 27000 யோசனை அகலமும் , மண்டலமும் கூடி 136000 யோசனை விசாலமுள்ள இடமும் பெற்றிருப்பான்
அதன்மேல் 200,000 யோசனை உயரத்தில் சந்திரலோகம் இருக்கும் . இதில் தக்ஷர் முதலான ஏழு விச்வ தேவதைகளுடனும் , பிதுர் தேவதைகளுடனும் சந்திரன் இருப்பான் . சந்திரனுடைய ரதத்தை துருவன் - சம்பகம் என்னும் கயிற்றைக் கொண்டு நடத்துவான் .
 அதன்மேல் லட்சம் யோசனை மைல்கள் உயரத்தில் நட்சத்திர மண்டலம் இருக்கும் அதன்மேல் 2 லட்சம் யோசனை உயரத்தில் செவ்வாய் மண்டலம் இருக்கும் அதன்மேல் 2 லட்சம் யோசனை உயரத்தில் புதன் மண்டலம் இருக்கும் . அதன்மேல் 2 லட்சம் யோசனை உயரத்தில் பிரகஸ்பதி மண்டலம் இருக்கும் அதன்மேல் 2 லட்சம் யோசனை உயரத்தில் சுக்கிரன் மண்டலம் இருக்கும் அதன்மேல் 2 லட்சம் யோசனை உயரத்தில் சனி மண்டலம் இருக்கும் சூரியன் - சுக்கிரன் தவிர மற்ற கிரக மண்டலங்களை துருவன் , வராகவாயு கயிற்றால் இயக்குவிப்பான் சனி மண்டலத்துக்குள் ராகு கேதுக்கள் இருப்பார்கள் சனி மண்டலத்துக்கு மேல் 805 யோசனை உயரத்தில் சப்தரிஷி மண்டலம் இருக்கும் இதற்குமேல் லட்சம் யோசனை உயரத்தில் சிஞ்சுமாரசக்ரம் இருக்கும் . இது முதலை வடிவமாக இருக்கும் . இதன் உடலில் சகல தேவதைகளும் வசிப்பார்கள். இதற்கு மேல் 2 லட்சம் யோசனையில் தேவேந்திரன் லோகம் இருக்கும் . இதற்குமேல் 2 கோடி யோசனையில் மகாலோகம் இருக்கும் . இங்கு மார்க்கண்டர் முதலிய ரிஷிகள் இருப்பார்கள் . இதற்கு மேல் 8 கோடி யோசனையில் ஜனலோகம் இருக்கும் . இதுதான் பிதுர்லோகம் வஸிட்டர் தலைமேல் பிதுர்தேவதைகள் வசித்துக் கொண்டிருப்பார்கள் . அதற்குமேல் 12 கோடி யோசனையில் தபோ லோகம் இருக்கும் . இங்கே சனகர் முதலிய மகரிஷிகள் இருப்பார்கள் . அதற்குமேல் 16 கோடி யோசனையில் சத்திய லோகம் இருக்கும் . இதுதான் பிரம்மலோகம் . அதற்குமேல் 4 கோடி யோசனையில் வைகுண்டம் இருக்கும் . இதுதான் லட்சுமிதேவி சமேத மகாவிஷ்ணு உலகம் . அதற்குமேல் கோடி யோசனை தூரத்தில் கந்தபுவனம் இருக்கும் . அதற்குமேல் கோடி யோசனையில் கோவுலகம் இருக்கும் . இங்கே காமதேனு முதலிய சுரபிகள் வாழும் . இதற்குமேல் 3 கோடி யோசனையில் ருத்திரபுவனம் இருக்கும் . இதுவே கைலாசம் ! இதற்குமேலே கடாகாந்தம் இருக்கும் . இதற்கு பிரமாண்டலட்சணம் என்று பெயர் . இதன் உச்சியில் சிவலோகம் இருக்கும் என்பதை மெஞ்ஞானப்பூர்வமாக கண்டறிந்த முன்னோர்கள் அண்டத்தில் உள்ள அதிசயங்கள் யாவும் பிண்டமாக நமது உடலில் இருப்பதாக உணர்ந்தார்கள் . ( யோசனை என்பது 8 மைல் ) 
     அண்டத்தின் அதிசயம் பிண்டத்தில் இருக்கிறது என்பதாக , பிண்டத்தின் அதிசயமாக உள்ளங்கால் அதலம் , கணைக்கால் - விதலம் . முழங்கால் - சுதலம் . அதற்குமேல் குஹ்யம் - தராதலம் . இடை - ரசாதலம் . முன்பக்கம் - மகாதலம் , பின்பக்கம் - பாதாளம் . நாபி - பூலோகம் , வயிறு - புவர்லோகம் இருதயம் - சுவர்க்கலோகம் , தோள் - மகாலோகம் , முகம் -ஜனலோகம் . நெற்றி -தபோலோகம் , சிரம் - சத்தியலோகம் . திரிகோணம் - மேரு . கீழ்க்கோணம் மந்தரம் .   
     அக்கோணத்துக்கு வலப்பக்கம் - கைலாசம் , இடப்பக்கம் - இமயம் , மேற்பக்கம் - நிஷதம் , தென்பக்கம் - கந்தமாதனம் , இடது உள்ளங்கை - வருண பருவதம் , எலும்பு - நாவலந்தீவு , மேதசு - சாகத்தீவு , தசை குசத்தீவு , நரம்பு- கிரவுஞ்ச தீவு , தொக்கு -சாண்மலி தீவு . மயிர்திரள் - லக்ஷ தீவு , உயிர் -புஷ்கர தீவு . மூத்திரம் - உப்புக்கடல் , நீர் - பாற்கடல் , கபம் - சுராக்கடல் , மச்சை - நெய்கடல் , வாய்நீர் - கருப்பங்கடல் , இரத்தம் - தயிர்கடல் ,
     சரீரத்தில் நாதசக்கரமாகிய வலது கண்ணில் - சூரியன் , பிந்து சக்கரமாகிய இடது கண்ணில் - சந்திரன் , வலது காதில் செவ்வாய் , இடது காதில்- புதன் , வாயில் - குரு . வலது மூக்கில் - சுக்கிரன் , இடது மூக்கில் சனி , முன்பக்கம் - கருவிடும் வாசலில் - ராகு , பின்பக்கம் எருவிடும் வாசலில் கேது அமர்ந்திருக்கிறார்கள் .

கால நிர்ணயம்

மனிதன் 21,600 முறை சுவாசம் விடும் காலம் 1 நாள்
சூரியன் 21,600 கலையை சுற்றி வரும் காலம் 1 வருடம்
அதாவது 360 நாட்களை நாழிகை 60 - ல் பெருக்கினால் 21.600 
குரு 21,600 பாகையை சுற்றி வரும் காலம் 60 வருடம் ஒரு பரிவிருத்தி 
அதாவது 360 நாட்களை 60 ( வருடங்களால் ) பெருக்கினால் 21.600
     ஒரு வருடம் என்பது நிதிகளின் அடிப்படையில் 360 நாள்களுக்கு மேல் இல்லை என்பது தான் ஆதிகால கணக்கு 
    தமிழ் , ஆங்கில மாதங்களின் நாட்கள் 365 1/4 தினங்கள் என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கு !   
     திதியை அனுசரித்ததுதான் இஸ்லாமிய வருடக்கணக்கு ஆதிகாலம் முதல் 100 நாட்களுக்குள்தான் இருக்கிறது
    மனிதனுடைய ஒரு நாள் சுவாசம் 21,600 . இதை சதுரக் கூறாக்கினால் 80 சதுரங்கள் வரும் . 
    21,600 தொகையை 80 சதுரக் கூறால் பெருக்கினால் 17.28,000 வருடங்கள் கொண்டது கிரேதாயுகம் தரும தேவதை மண்ணில் நான்கு கால்களுடன் நிற்கும் காலம் . 
   21,600 தொகையை 60 சதுரக் கூறால் ( முக்கால் பங்கு பெருக்கினால் 12,96,000 வருடங்கள் கொண்டது திரேதாயுகம் , தரும் தேவதை மண்ணில் மூன்று கால்களுடன் நிற்கும் காலம்
     216000  தொகையை 40 சதுரக் கூறால் ( அரை பங்கு பெருக்கினால் 8.64,000 வருடங்கள்கொண்டது துவாபரயுகம் , தரும தேவதை மண்ணில் இரண்டு கால்களுடன் நின்ற காலம்.
   21.600 தொகையை 20 சதுரக் கூறால் ( கால் பங்கு ) பெருக்கினால் 4,32,000 வருடங்கள் கொண்டது கலியுகம் தரும் தேவதை மண்ணில் ஒரு காலுடன் நிற்கும் காலம்
   சதுரக் கூறின் வித்தியாசங்களுக்கு உட்பட்டு முழுபங்கு , முக்கால் பங்கு , அரை பங்கு , கால் பங்கு என்ற விகிதத்தில் மனிதர்களுடைய தருமமும் , ஆயுளும் குறையும் என்பது வேதத்தின் நிர்ணயம் !
   ஆங்கில வருட தொகையை நான்கு கூறாக்கினால் மீதமில்லாமல் இருந்தால் அது லீப் வருடமாகும் . அந்த வருடம் பிப்ரவரி மாதம் 29 தேதிகள் வரும் மற்ற வருடங்களில் பிப்ரவரி மாதம் 28 தேதிகள்.
     ஜனவரி , மார்ச்சு , மே , ஜூலை , ஆகஸ்ட் , அக்டோபர் , டிசம்பர் ஆகிய ஏழு மாதங்களுக்கு 31 தேதிகளும் , 
   ஏப்ரல் , ஜூன் , செப்டம்பர் , நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு 30 தேதிகளும் வருகிறது.

சூரியஜெயவேல்  9600607603



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்