சூரியன் & சந்திரன்
சூரியன் & சந்திரன்
என்றும் வாழ்வில்
ஒளிமயத்தை தருவர்கள்
அனைவரும் மற்றவர்களைக் காட்டிலும் மேன்மையாகவும் சிறப்பாகவும் விளங்க வேண்டும்.என்ற ஒப்பிடும் எண்ணங்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கும்.இது அனைவரின் இயல்பன குணமாகும். ஆனால் அவ்வாறு வாழ்க்கையில் உயர்வடைந்து விடமுடியுமா? சிலர் வெற்றி பெறுகின்றனர்.சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஒரு மனிதனிடம் ஏற்படும் உணர்வுகளுக்கும்,ஊக்கங்களுக்கும்,செயல் திறனுக்கும்,கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளாது. வான மண்டலத்தில் நியதியான சுற்றளவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்.கிரகங்களிடமிருந்து வெளிப்படும் இரசாயன மாற்றத்திற்கும். மனிதர்களுடைய உணர்வுகளுக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை உள்ளாது.
ஒவ்வொரு கிரகத்திடமிருந்து ஒவ்வொரு வகையான உணர்வுஅலைகளை தோற்றுவிக்கும் காந்த சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் கிரகங்கள் சூரியன், சந்திரன் சிறப்பபுன் அமைந்திருந்தால் ஜாதகர்/ஜாதகியர் சிறப்பன, உயர்வான வாழ்வு அமையும்.
ஆத்மாவும் மனமும் சூரிய-சந்திர கிரக இயக்கத்தில் அமைகிறது. கிரக வரிசையில் முதல் இடத்ப் பெறும் சூரியன் இரண்டாவது இடத்திற்கு உரியவர் சந்திரன்.
ஆத்மா இவற்றை ஆளும் கிரகம் சூரியன் .
மனம் இவற்றை ஆளும் கிரகம் சந்திரன்.
சூரியன் (பிதுர்) தந்தைக் காரகன்.
சூரியனிடமிருந்து ஆத்ம பலத்திற்குத் தேவையான பலத்தையும்,லைமைச் சிந்தனையும்,தன்னம்பிக்கையும்,கௌரவம்,நிர்வாகம்,அரசு காரியம்,சமூக மதிப்பையும்,தந்தை, மாமானார்,ஆன்மீகத் தலைவர்கள்,பொது நலம் ஆகியவைகள்.
சந்திரனை (மதுர்) தாய்க் காரகன்.
சந்திரனிடமிருந்து கற்பனை வளம்,மனோதிடம், எண்ணங்கள், பயனம்,பொது மக்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள்,சாதுர்யம், மனித அபிமானம், முகப் பொலிவு, உணவு,இலவச பொருட்கள், தாயர்,மாமியார் ஆகியவைகள்.
சூரியனும் சந்திரனும் ராஜ கிரகங்கள் (அரசு) என்று அழைக்கப்படுவர்கள்.
சூரியனும்,சந்திரனும் நேருக்கு நேர் இயங்கும் கிரகங்கள். சந்திரனுக்கு பிரகாசத்தை சூரியன் தருகின்றார்.
சூரியன் நின்ற ராசிக்கு 3-6-9-12-ல் ஏதேனும் ஒரு வீட்டில் சந்திரன் இருந்தால் இக்கிரக அமைப்புள்ள ஜாதகர்/ஜாதகியர் மற்றவர்களைவிட வித்தியாசமான சிந்தனைகள், செயல்பாடுகள் உள்ளவர்களாகவும், அறிவுப் பூர்வமாகச் செயல்படக் கூடியவர்களாகவும்,செல்வம்,செழிப்புள்ளவர்களாகவும், பூகழ் பெற்று விளங்குவர்கள்.
"பகலவன் தனக்கு மூன்று
ஆறோன்பான் பன்னிரண்டினில்
மதியமர
மிகு தனம் புக்தி வினைய நல்
ஞானமேவு பல காரியயூகி
(இ-ள்) சூரியன் இருந்த வீட்டிற்கு 3-6-9-12-ல் சந்திரன் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் ஜாதகர்/ஜாதகியர் செல்வ வளம்,சாஸ்திர ஞானம் புத்திசலித்தானம்,காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.
சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் பலம் அவசியம் சுபர்கள் சேர்க்கை, பார்வை போன்ற வகையில் சாதகமாக அமைந்திருந்தால் மேன்மேலும் சிறப்பாக விளங்குவர்கள்.
திரு.கிருபானந்த வாரியார் அவர்கள் ஜாதகம்
சூரியன் சிம்மத்தில் உள்ளர் .
சந்திரன் துலாத்தில் உள்ளார்.
(சந்திரனை குரு பார்வை)
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.
திரு.ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்
சூரியன் உச்சம் பெற்றுள்ளார்
சந்திரன் சூரியனுக்கு 12-ல்
(சந்திரனை குரு பார்வை)
(குரு,சந்திரன் பரிவர்த்தனை)
புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களாவங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
Comments
Post a Comment