விபரீத ராஜயோகம்! 1

 விபரீத ராஜயோகம்  !   1


இந்த யோகம் சற்று விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் . இதில் பல் வேறு கருத்துக்கள் காணப் படுகின்றன .

    6 ஆம் அதிபதி 8,12 ல் , 8 ஆம் அதிபதி 6,12 ல் , 12 ஆம் அதிபதி 6,8 ல் இருந்தாலும் இருந்தாலும் இவர்களுக்குள் பரிவர்த்தனை பெற்றாலும் 6,8,12 ம் அதிபதிகள் ஒன்றாய் இருந்தாலும்,இவர்களில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் இவர்கள் பரஸ்பர கேந்திரத்திலிருந்தாலும் , திரிகோணங்களில் இருந்தாலும் - விபரீத ராஜயோகம் அமையும் .

இந்த யோகம் - அமைந்தவர்கள் திடீர் யோகத்தை அனுபவிப்பார்கள் . எதிர்பாரத வகையில் கிடைக்கும் . எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும் , புகழ் கிட்டும் , 


   6 ம் அதிபதி 6 ல் ஆட்சியாக இருப்பது ஹர்ஷயோகம் , ஜாதகர்க்கு பலம் பொருந்திய உடல் அமைப்பு , அதிர்ஷ்டம் , சுகம் , பாக்கியம் , நல்ல பெயர் , புகழ் , எதிரிகளை வெல்பவர்கள் தீமைகளை செய்யாதவர்கள் .

கிரமத் தலைவர் , புத்திரபாக்கியம் , தனயோகம் அமையும் .


    8 ஆம் அதிபதி 8 ல் ஆட்சியானால் ஸரளயோகமாகும் . ஜாதகர்க்கு தீர்க்காயுள் , நல்ல படிப்பு , திடபுத்தி , புகழ் , தைரியம் , புத்திரபங்கியங்கள் , பெரிய தனவான் எதிரிகளை நடுங்க வைப்பான் பயனுள்ள காரியங்களையே செய்வார்கள் .


     12 ஆம் அதிபதி 12 ல் ஆட்சி பெற்றால் விமலயோகம் ஆகும் . ஜாதகர் புத்தி சதுர்யம் உள்ளவர் , பெரும்தனம் பெ பெருபவர் , அனுகூலம் கிட்டும் , சுதந்திரமானவன் , குணங்களால் புகழ்பெறுபவன் சுப்பலன்கள் கிட்டும் . 


   6 ஆம் பா இடம் சுபர்களின் பார்வை பெற்று பலம் பெற்று 6 ஆம் அதிபதி ஆட்சி , உச்சமே பெற்று உச்சமே பெற்று இருந்தால் அஸ்திரயோகமாகும் . இதன் பலன் அன்புடையவன் எதிரியை வெல்பவன் , பலசாலி , விவாதம் செய்பவன் , 


   சனி , சூரியன் , செவ்வாய் ஆகிய பாபிகள் , கேந்திராதிபதிகளாகி 6 ல் இருந்தால் ராஜயோகமாகும் . 6 ஆம் அதிபதி 12 ல் நீசம் அல்லது அஸ்தங்கம் அடைந்தால் எதிரிகள் அழிவர் . வசதி வாய்ப்புக்கள் கிட்டும் . 


   லக்னத்திற்கு 6-ஆம் பாவத்தில் வரும் கிரகம் நன்மை தரும் . 8 ஆம் அதிபதி 6 ல் பலமுடன் இருப்பின் 8 ஆம் & அதிபதியின் திசாபுக்தி காலங்களில் ஜாதகர் மண்ணைத்  தொட்டாலும் பொன்னாகி அதிக தளலாபம் பெறுவர்கள் , 


    6 ம் பாவம் உப ஜெய ஸ்தானங்களில் ஒன்றாவதால் இதில் பாவர் , சுபர் இருந்தாலும் நன்மைகளைத் தரும் .


"மயிலனனாய்த்தான் மாறோன்னு மெவாறெட்டீராறிற் 

செயலிலாநீ சவத்த மனங்களைச்சேருமாகில்

வியனிலாவிலக்கினத்தோன் வெகுபலவானாய் நிற்கில்

பயனிலாச்சத்ருவாலே பயமில்லை யென்பர்பாவாய்"

   (இ-ள்)  6 ம் அதிபதி 6,8,12 ல் நீசம் , அஸ்தமன கதியை அடைந்து வானாதிபதி பலம் பெற்று இருக்க எதிரிகளால் பயம் இல்லை .


" ஆறினையெட்டை மற்றை யீராறைய டைந்த கோளு

நீறுமாறெட்டீ ராறாங் கோளொடு நிறை கோளுஞ் 

சிறிய பகை நீசத்திற்றீக் கோளைச் சேர்ந்த கோளு 

முறிடு மென்பதல்லாற் பயனொன்று முதவிடாதால்"

  (இ-ள்)  எந்த கிரகங்களும் 6,8,12 ல் இருந்தாலும் , 6.8.12-ஆம் அதிபதிகளுடன் இணைந்தாலும் பகை நீசவீட்டிலிருந்த கிரகங்களும் , விபரீத பலன்களைத் தருவர்கள் .


   (இ-ள்)  12 ஆம் அதிபதி மூலத்திரிகோணம், கேந்திரத்தி லிருக்க இவரை சுபகிரகங்கள் பார்க்க 12 ல் கிரகம் உச்சம் பெற்றிருக்க ராஜயோகம். 

    10 ஆம் அதிபதி 12 ஆம் அதிபதியடன் இணைந்தாலும் பார்த்தாலும் , இவர்களை சுபர் பார்த்தாலும் எதிரிகள் இல்லாத நாட்டுக்கு ராஜா ஆவான்.


"புகலும் வியநாதன் சுபனாய்க் கேந்திர முச்சம் 

               புக்கவியத்திர் சுபரிருக்க பொங்குசுடர் தங்குமணி யங்கமதிலி ங்கிதனும்

       புனிதசாமரைவீசத் துயில்பவனாம் " 

    (இ-ள்) 12 ஆம் அதிபதி ஓசுபக்கிரகமாகி 1,4,7,10 ல் ஒன்றில் இருக்க 12 ல் சுபக்கிரகங்கள் தங்கியிருக்கப் பிறந்த ஜாதகன் தீபத்தின் சுடர் போன்ற நிறம் , மென்மையான படுக்கையில் , வேலைக்காரர்களுடன் ஏர்க்கண்டியன் அறையில் உறங்குவர்கள் 

( 6 ம் வீட்டில் பாவிகள் நின்று ,6-ஆம் அதிபதி பாவிகளால் பாதிப்படைந்து சனி , ராகு

 தொடர்பிருந்தால் ஜாதகருக்கு நோய் ஏற்படும் . 

( பாரசாரஹோரை )


" திடமுறு மாறமாதி பாவனாய்க் கேந்திரத்தில் 

வடிவுறு நல்லோர் காணமருவின் மந்திரியுமாகிப் 

படிமிசையெவரும் போற்றப்பயில் பிரதாபனாகிக் 

கொடியவர் தமக்கு மிண்டே கூறுவன் குணவானாகும் "     

   (இ-ள்)தைரிய ஸ்தானமென்னும் 6 ஆம் அதிபதி பாபியாாகி லக்கினத்திற்கு 1,4,7,10 ல் ஏதாவது ஒன்றில் இருந்து சுபகிரகங்களால் பார்க்கப்பட்டால் ஜாதகர் அமைச்சராவர் . உலகில் பூகழுடன் பிரபலமாகியிருப்பர் . தீயவர்களுடன் இருந்தால் இனிமையான சொற்களையுடையவர்கள் . 

" தீதெனும் வியமாறெட்டினிலதி பனிவர்களிற் பலன் களில்லாம்

போது றுந்தனக் கேயவன் மகாதிசையிற்பொருந்திய கண்ட காலமதாம

ஈதினில் விய மாறெட்டினிலதிபன் மேவியதிசைகளுங்கூடி 

ஏதுறு நடக்குமவர் திசையந்தத் தியல்புடன் மூமாம் "

    (இ-ள்)  கொடிய வீடுகளாகிய 6,8,12 ஆம் ராசியதிபதி நல்ல பலனைத்தரமாட்டார்கள் . அவர்கள் திசை நடக்கும்காலங்களிலும் 6,8,12 ஆம் ராசியதிபர்கள் நின்ற ராசிநாதர்கள் திசை புத்தி நடக்கும் காலங்களிலும் நிச்சயமாய் கெண்டத்தைத் தருவார்கள் . ஒவ்வொரு லக்கினத்திற்கும் பொதுவாகச் சொன்னதாகையால்

இவைகளை பலம் பலவீனம் நிலைகள் அறிந்து பலனைக் கூறுங்கள் .


 " வார்மை சேர் வியத்தானத்தின் மன்னவன் சுபக்கோளாகிச் 

சீர்மை சேர் கேந்திரத்து முச்சத்துஞ்செறிந்து நிற்கில்

யார்மை சேர் வியத்தினல் லோர் பரிந்து நிற்பார்க்கில் மேலாம் கூர்மை சேர்  பரியங்கத்திற் குலவுபூச்சரங்கள் சூழ "

    (இ-ள்)  12 ஆம் அதிபதி சுபக்கிரகமாக இருந்து உச்சம் ஆட்சி 1,4,7,10 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் , 12 ல் சுபகிரகங்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஜாதகருக்கு சுப்பலன்களை தரும் வாகன வசதிகள் சுகவாழ்வு அமையும் . 


" ரி : பாஷ்டாரிகதஸ்ய ராஸிரஸு தத்பேஸயுக்ம த்ருஷ்டபம் 

ப்ரஷ்டம் ஸ்யாத்க்ரமஸ : ஸிதஞ்குரவ : ஸ்யுஸ்தேஷி சௌக்யப்ரதா !

மித்ரோச்சஸ்வபகா : ஷடந்த்யம்ருதிகாவா சௌம்யத்ருஷ்டா : ஸுபஸ்

தந்நாதா ரிபுநீசமூட விஜிதாஸ் சேத்தத் க்ருஹஸ்தா : ஸுவா !!

  (இ-ள்)  ஒரு பாவத்தின் அதிபதி லக்னத்திற்கு 6,8,12 ல் இருக்குமானால் அந்த பாவத்திற்குரிய பலன்கள் தீயதாக இருக்கும் . அதுடோல் 6,8,12 ஆம் அதிபதிகள் இருக்கும் இடமும் அவர்களால் பார்க்கப்படும் இடமும் பலவீனப்படும்


தொடரும் --------------


சூரியஜெயவேல்    9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்