விபரீத ராஜயோகம் ! 2
விபரீத ராஜயோகம் 2
சுக்கிரன் 12 ல் , புதன் 8 ல் , குரு 6 ல் இருந்தால் நன்மைகளையே செய்வர்கள் , 6,8,12 ல் இருக்கும் கிரகங்கள் நட்பு . ஆட்சி , உச்சமாக இருந்தாலும் , சுபக்கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நற்பலன்களை தருவார்கள்.
6,8,12 ல் இருக்கும் கிரகங்கள் பகை , நீசம் அஸ்தமனம் பெற்றிருந்தாலோ அல்லது கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்தால் இந்த கிரகங்கள் அமுகூலமான நற்பலன்கள் தரும் .
" ரந்த்ரே போவ்யயஷஷ்ட கோரிபுவதௌ பந்த்ரேவ்யயே வாஸ்திதே
ரிப்பே லோபி ததைவ ரந்தரரிபுவே யஸ்யாஸ்தி தம்மின் வதேத்!
அன்யோன்யர் கதாநிரீ சஷண யுதாஸ்சன்யையுத்தேசஷிதா
ஜாதோ சௌந்ருபதி : ப்ரஸஸ்த விபவோ ராஜாதி ராஜேஸ்வர : !!
(இ-ள்) ஆ8 ம் அதிபதி 6 அல்லது 12 ல் இருந்தாலும் , 6 ஆம் அதிபதி 8 ல் அல்லது 12 ல் இருந்தாலும் 12 ஆம் அதிபதி 6 ல் அல்லது 8 ல் இருந்தாலும் விபரீத ராஜயோகம் ராஜாதி ராஜனாவார்கள் .
6,8,12 ஆம் அதிபதிகள் தங்களுக்குள் இணைவு பரஸ்பரப்பார்வை அல்லது பரிவர்த்தளை ஆகிய ஏதேனும் ஒருவகைச் சம்பந்தம் பெற்றிருந்து மற்ற கிரகங்களோடு மேற்படி சம்பந்தம் பெறாமல் இருக்க வேண்டும் .
மேல்கண்ட அமைப்பில் பிறந்த ஜாதகள் கீர்த்தி மானாகவும் செல்வச்செழிப்பு மிக்கவர்களாகவும் , உயர் பதவியும் மிக உயர்ந்த நிலை அடைவார்கள் .
பாரப்பா பனிரெண்டு யெட்டு ஆறில்
பலமுனை படவரவு அதிலே தோன்ற
வீரப்பா வேல் விழியாள் கலகமெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்று
கூறப்பா கொழுநனால் குமரியாலும்
கொற்றவனே குழவியினால் குடிக்குக்கேடாம்
பாரப்பா படவாவு பொல்லாதப்பா
பல துன்பம் தருகுமடா திசையை நோக்க '
(இ-ள்) ராகு 6,8,12 ல் மறைந்து நின்றால் , அந்த ஜாதகளின் மனைவி குடும்பத்தில் கலகம் செய்பவனாக இருப்பாள் , மேலும் இவளுடைய கணவறுக்கு ரோகம் ஏற்படும் . மனைவியால் புத்திரர்களால் குடிக்குக்கேடு உண்டாகும்
ராகு கேதுக்கள் 6,8,12 ல் இருந்தால் பலவிதமான துன்பங்கள் தருவார்கள். நடப்பு தசா புத்திகளின் நிலையை அறிந்து தெளியாக ஆராய்ந்து கூறவும்.
சந்திரன் 6,8,12 ல் இருந்தால் ஜாதகர்க்கு - கஷ்டம் , நோய் பதிப்பு , தாய்க்கு நோயும் தரும் .
"சூரியன் மதிதான் பானி ரண்டினிற் தோன்றி நின்றால்
சீரியஇராசயோகம் சேரு மேல் திரவியநாசம்
காரிகை செவ்வாய் திங்கள் காத்துடன் இருக்கப் பார்க்க வீரியத்தானும் நாலாவிதத்திலும் திரவிய நாசம் '
(இ-ள்) சூரியனும் சந்திரன் இணைந்து 12 ல் இருப்பின் ராஜயோகம் ஏற்படும் . ஆனால் அரசு வகையில் பொருள் அழிவு ஏற்படும் .
செவ்வாய் ,சந்திரன் ஆகிய இரண்டு கோள்களும் ஒன்று கூடி 12 ல் இருந்து மூன்றாம் அதிபதி பார்த்தால் பல வழிகளில் பொருள்கள் அழிவுண்டாகும் .
" தானும் ஜென்மவிய மேட்டிற் சனிசேய் பவாருற நிற்க மானே புதல்வர்தாமில்லை "
(இ-ள்) லக்னம் 8,12 ல் சனி , செவ்வாய் போன்ற பாபிகள் இருந்தால் சனி , செவ்வாய் பார்த்தால் ஜாதகருக்கு புத்திரர்கள் இல்லை
திரு.எம்.ஜி.ஆர் . அவர்கள் ஜாதகத்தில் 12 ல் செவ்வாய் , சூரியன் உள்ளார்கள் . சனி 12 ம் வீட்டை பார்க்கிறார் . புத்திரார்கள் இவருக்கு இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம் .
பாரப்பா பகலவனும் சனிசேய் பாம்பு
பகருகின்ற இக்கோள்களாறில் நிற்க
கூறப்பா குமரனையும் சத்குரு கண்டால்
குவலயத்தில் புலி கண்ட பசு போலாவர்
சீரப்பா செம்பொன்றும் சென்னாடுண்டு
செயலாக வாழ்ந்திருப்பின் விதியும் தீர்க்கம்
ஆரப்பா அந்தவத்தோன் விழிந்து கெட்டால்
அப்பனே அரியை போயிருப்பன் பாரே "
(இ-ள்) 6-ல் சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது பாவிகள் இருந்தால் ஜாதகரை கண்ட எதிரிகள் புவியைக் கண்ட பசுவைப் போல் அடங்கி விடுவார்கள் . அதிக செல்வங்களும் ,உயர் பதவியும் , தலைமை பொறுப்பும் கிட்டும் சகல விதம் வசதிகளுடன் சிறப்பாக வாழ்ந்திருப்பான் , தீர்காயுள் உள்ளவர்கள் - 6-ஆம் அதிபதி பலம் குறைந்தால் அந்த சாதகன் சிங்கத்தைப் போல் ஒரு பெரிய வீரனா இருப்பான்
லக்கினத்திற்கு 10 க்குரியோன் 6,8,12 ல் ஏதேனும் ஓரு வீடுகளில் இருந்தாலும் துர்வழிகளில் சம்பாதித்த . சொத்துக்கள் , பணம் இவைகள் நிறையவே இருக்கும் .
6,8,12 ல் உச்சம் பெற்ற கிரகங்களால் நன்மையான பலன் இல்லை . பாபகிரகங்கள் உச்சம் பெற்றால் நன்மையில்லை . அவர்கள் ராஜயோகத்தை தந்தாலும் அந்த யோகத்தோடு இன்னல்களையும் சட்டத்தின் கெடுபிடிகளையும் அராஜக குணத்தையும் ஜாதகருக்கு தந்து விடும் .
விபரீத ராஜயோகம் ஜாதர்க்கு தான் யோகம் தரும் ஆனால் ஜாதகரின் குழந்தைக்கு யோகம் தராது . 6 ஆம் வீடு 5 க்கு 2 ஆம் வீடாகும் . ஜாதகரது 8 ஆம் வீடு 5 க்கு 4 ஆம் வீடாகும் . ஜாதகரது 12 ஆம் வீடு 5 க்கு 8 ஆம் வீடாகும் . இதனால் ஜாதகருக்கு குழந்தைக்கு ஆயுள் குறைவு , வறுமை , சுகம் இன்மை , குழப்பமான வாழ்வு அமை.யும் .
6,8,12 ல் பாவிகள் , துர்ஸ்தனாதிபதிகள் இருந்தால் அமையும் யோகத்தை ஜாதக அலங்காரம் வலியுறுத்துகின்றது . அனுபவத்தில் சரியாக உள்ளது கிரகநிலைகளை நன்றாக ஆராய்ந்து பலன்களை , கூற வேண்டும் .
இந்திய பிரதமர் திரு . மன்மோகன்சிங் அவர்கள் லக்கினத்திற்கு 8 ல் 12 ஆம் அதிபதி 8 ஆம் அதிபதி 6 ஆம் அதிபதிகள் இணைந்து அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தந்தது . புகழ்பெற்றார். மத்திய நிதித்துறை அமைச்சர் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பதவியை தந்தது உலக அளவில் புகழ் பெற்றார் .
திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னாள் முதல்வர் 12 ஆம் அதிபதி சனி 6 ல் , 8 ஆம் அதிபதி 12 ல் உள்ளார் . விபரீத ராஜயோகத்தை தந்தது நீண்டகாலம் தமிழகத்தை ஆட்சி புரிந்தார் நீங்கா புகழ்ம் பெற்றார் .
தொடரும் ---------------
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment