விபரீத ராஜயோக! 3

 விபரீத ராஜயோகம்    3 


  புதன் நின்ற ராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டில் சனி இருந்தால் தவிர்க்க இயலாத காரணங்களால் இடம் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் .


   புதன் நின்ற ராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டில் குரு இருந்தால் கட்டாயத்தின் பேரில் இடம் மாறி வெளியிடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.


   லக்னத்திற்கு 6 8 12-ல் குரு இருந்தால் இடம் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்.


   சுக்கிரனுக்கு 6 8 12ல் குரு இருந்தால் இடம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.


லக்னத்திற்கு 6 8 12ல் சனி 

குருவிற்கு 6 8 12-ல் சனி  சுக்கிரனுக்கு 6 8 12-ல்  சனி இருந்தால் சொந்த ஊரில் முன்னேற முடியாது பல பாதிப்பும்,  கஷ்டங்கள் ஏற்படும்.


லக்கினம் 

மேஷம் ரிஷபம் 6 8 12-ல்  குருவும் சனியும் 

மிதுனம் மீனம் 6  12 செவ்வாயும் சனியும்

கன்னி 6 12-ல்  சந்திரன் சுக்கிரன் சிம்மம் மகரம் 6 12-ல்  செவ்வாய் புதன் 

துலாம் 6 12 சூரியன் புதன் விருச்சிகம் 6 12-ல்  சந்திரன் புதன் தனுசு 6 12-ல்  சூரியன் சுக்கிரன் இருந்தால் ஜாதகர்/ ஜாதகிக்கு வேறு காரணங்களால் எவ்வளவுதான் யோக பலன்கள்அளித்தாலும் அவைகளிலிருந்து சரிவும் / வீழ்ச்சிகளையும் உறுதியாக ஏற்படுத்தும் ஆகவே விழிப்புடன் எச்சரிக்கைகள் பக்குவமாக இருப்பது அவசியம்.


9 11ஆம் அதிபதி 12-ஆம்வீட்டிற்கு சம்பந்தப்படுவதால் ராஜயோகம் பங்கம் என்ற அடிப்படையில் அனுபவத்தில்  பொருந்தி வருகின்றது.


 லக்கினத்திற்கு 12-ல்  சந்திரன் இருந்தால் ஜாதகர் ஜாதகி எளிதில் வசீகராப்படுத்திவிடக்  கூடிய சாமர்த்திய சாலியாக இருப்பார்கள் தங்கள் வழியை விட்டு மாறவே மாட்டார்கள். பிறர் மயங்கும் படி பேசுவார்கள். பிறரை  எடை போடுவதில் கெட்டிக்காரர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள் அளந்து பேசக் கூடியவர்கள் எப்போதும் சோகமாகவே தோற்றமளிப்பார்கள் பிறரின் எதிர்காலம் பற்றி எடுத்துச் சொல்லக் கூடியவர்கள். கலைகளில் ஏதோனு மோர் வகையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் .


 லக்கினாதிபதியும் 12-ஆம்  அதிபதியும் ஒருவருக்கொருவர் 1 -  4 - 7 -10 ஆக இருந்து. அதேசமயம் லக்னத்திற்கு 6 8 ஆகிய இடங்களில் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி தங்கள் ஈடுபடும் துறையில் முதன்மை & தலைமை பெற்று சிறந்து விளங்குவார்கள்.


லக்கினத்திற்கு 2-8 ஆம் அதிபதிகள் சேர்க்கை பார்வை பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் ஜாதகிக்கு உயில் வகையில் அதாவது எவருடைய இறப்பிற்கு பிறகு மறைமுக வழிகளில் திடீர் செல்வம் வருமானம் அடைய வாய்ப்புகள் உண்டு .


   லக்கினத்திற்கு 8 -ஆம் பலமுடன் ஆட்சி உச்சம் நட்பு வீடுகளில் ஒன்றில் இருந்து குருவின் பார்வை சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகர் ஜாதகிக்கு திடீரென எதிர்பாராத வகையில் செல்வம் அடைவார்கள் .


தனுசு லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் திசையில் அல்லது புத்தியில் வீடு வாகனம் விரும்பும் சகலமும்  அடைவார்கள்.


லக்கினம் 

மேஷம் ஆறில் செவ்வாய் அல்லது எட்டில் புதன் அல்லது புதன் குரு சேர்க்கை 


ரிஷபம் குரு அல்லது எட்டில் சுக்கிரன் அல்லது செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை


மிதுனம் ஆறில் சனி அல்லது எட்டில் செவ்வாய் அல்லது செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை


கடகம் ஆறில் சனி அல்லது எட்டில் குரு அல்லது புதன் குரு சேர்க்கை


சிம்மம் ஆறில் குரு அல்லது எட்டில் சனி அல்லது சனி சந்திரன் சேர்க்கை 


கன்னி ஆறில் செவ்வாய் அல்லது எட்டில் சனி அல்லது சூரியன் சனி சேர்க்கை


துலாம் ஆறில் சுக்கிரன் அல்லது எட்டில் குரு அல்லது புதன் குரு சேர்க்கை 


விருச்சகம் எட்டில் செவ்வாய் அல்லது செவ்வாய் அல்லது சுக்கிரன் சேர்க்கை 


தனுசு ஆறில் சந்திரன் அல்லது எட்டில் சுக்கிரன் அல்லது செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை


மகரம் ஆறில் சூரியன் அல்லது எட்டில்  புதன் அல்லது புதன் குரு சேர்க்கை 


கும்பம் ஆறில் புதன் அல்லது எட்டில் சந்திரன் அல்லது சந்திரன் சனி சேர்க்கை 


மீனம் ஆறில் சுக்கிரன் அல்லது எட்டில் சூரியன் அல்லது சூரியன் சனி சேர்க்கை 


மேற்படி கிரக அமைப்பு இருந்தால் ஜாதகர் ஜாதகிக்கு விபரீதம் ராஜயோகம் அமையும் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.


லக்கினத்திற்கு ஆறாம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் எதுவும் பாதிக்காது ஜாதகர் / ஜாதகிக்கு அதிக சிரமமின்றி பணி தொழில் உத்தியோகம் அமையும் அரிய பல சாதனைகள் செய்வார்கள் ஆனால் தாய் மாமன் உறவில் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.


   பொதுவாக ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஆறில் குரு இருந்தால் ஜாதகர் ஜாதகிக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப பெயர் புகழ் பெறக் கூடியவர்களாக இருப்பார்கள் அதேசமயம் நிதானம் சோம்பல் எதிலும் முழுமையான ஈடுபாடு இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் .


லக்கினத்திற்கு எட்டில் புதன் இருந்தால் உடன் சேர்ந்த பார்த்த ஸ்தானாதிபதியின் பலத்தின் அடிப்படையில் ஜாதகர் ஜாதகிக்கு வாழ்வில் உறிய பதவி அந்தஸ்தும் மதிப்பும் தலைமை பொறுப்பும் அமையும் .


  லக்கினத்திற்கு எட்டாம் அதிபதி பத்தில் இருந்தாலும் அல்லது பத்தாம் அதிபதி எட்டில் இருந்தாலும் ஜாதகர் ஜாதகிக்கு எவ்வாறேனும் முயன்று வாழ்வில் உயர்வும் சிறப்படைய கூடியவர்களாக இருப்பார்கள்.


தொடரும் ---------

சூரியஜெயவேல்  9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்