அமலாயோகம் !
16 வகை வெற்றிகளை வாரி வழங்கும் அமலாயோகம் !
ஜோதிடச்சுடர் சூரியஜெயவேல்
சந்திரனுக்கு 10 - ல் சுபர்கள் அல்லது குரு இருந்தால் அமலா யோகம் ஏற்படும் .
வளர்பிறை சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய நன்மை தரும் சுபக்கிரகங்களுடன் தொடர்புடைய அமல யோகம் சிறப்பான யோகத்தை தரும்.
ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டிற்கு (அதாவது ராசி) பத்தாவது இடத்தில் குரு அல்லது சுக்ரன் அமல யோகம் ஏற்படுகிறது.
லக்னத்துக்குப் பத்தாம் இடத்தில் சுபக் கிரகங்கள் இருந்தாலும் அமல யோகம் உண்டாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அழகிய முகத்தோற்றமும், நல்ல உடல் அமைப்பும் கொண்டவர்கள். சிறந்த அறிவாற்றல் மற்றும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பதுடன், பெற்ற தாயின் மீது அதிக பாசம் உள்ளவர் களாகவும் இருப்பார்கள்.
கலைகளின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, ஒரு சில கலைகளை சுயமாகவே கற்று அதில் தேர்ச்சியும் அடைவார்கள். ஜோதிடம் மற்றும் அமானுஷ்யம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, அவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் , வியாபாரத்தில் ஈடுபட்டால் பெரும் லாபம் ஈட்டக்கூடியதாக மாற்றும் திறமையுள்ளவர்கள்.
வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். மக்களிடம் மதிப்பு பெற்றவர்கள் என்பதால் அரசியலில் பெரும் பதவிகளை அடையும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. ஆன்மிக பணிகளில் விரும்பி ஈடுபடுவதுடன், கோவில்களை புனர் நிர்மாணம் செய்யும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கும்.
சந்திரனுக்கு 10 - ல் குரு இருந்து 2 , 4 , 6 , 9 - ல் பாவிகள் சூரியன் , செவ்வாய் , சனி , ராகு கேது இருக்ககூடாது . இருந்தால் அமலாயோகம் பங்கம் ஆகிவிடும் .
லக்னபாபிகளும் 3 , 8 , 10 , 11 - ல் இருப்பின் சுபபலன் ஏற்படும் .
" மாது கேண் மாலா யோகமம் புலிக்கு
மன்னிய பத்தினிற் குருவும் வந்துதானிருக்கிற் மனபதியாகிய
மருவு சேனைக்கு அதிபனுமாம் '
(இ-ள்) அமலா யோகம் என்பது சந்திரனுக்கு 10 - ல் குரு இருந்தால் செல்வந்தர் ராணுவப் படைக்குத் தலைவனாகவும் இருப்பான்.
" வளர்மதி லக்னபத்தில் வகையியா கோள் வாழ
தளர்விலா செல்வம் கீர்த்தி சற்குண செயலும் வாச
மலர் எனும் துணைவியோடு மகிழ்ச்சியும் பெறுவர் தீய செயலவர்புரியார் அற்பர் சேரிடம் சேராராமே
(இ-ள்) சத்திரறுக்கும் , லக்கினத்திற்கும் 10-ல் புதன் குரு சுக்கிரன் இவர்களில் யாராவது ஒருவர் இருப்பின் அமலாபோகம் செல்வம் , புகழ் , நல்ல குணம் , அன்பான துணைவி , மகிழ்ச்சியான வாழ்வும் , தீயசெயல் செய்யமாட்டார் .
இவர்கள் ஆட்சி , உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருந்தால் பலன் சிறப்புடன் அமையும் .பாவிகள் செவ்வாய் சனி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் குறுக்கு வழியில் செல்வம் சேர்ப்பார்கள், புகழ் கிட்டும்.
"ஞமலியஞ் சாயுஞ் சாயலாக்கேள் நண்ணும் பூரண மதிக்குத்
தமதெனப் பத்தில் புந்தி சல்லியன் கூடி நிற்கில்
கமலைதன் பீடமாகிக் கனப்பிர பந்தவாக்கி
இமகரன் உள்ள மட்டும் யாப்பு சொல்வித்துவானே !
(இ-ள்) வளர்பிறை சந்திரனுக்கு 10-ல் புதனும் சுக்கிரனும் இணைந்து இருக்க ஜாதகர்க்கு புகழ் பெற்றவர்கள், அனைவரையும் வசிகரம் செய்யும் மேடைப் பேச்சில் திறமையுள்ளவர்கள். கடைசி காலம் வரைக்கும் இலக்கண காவிதை படைப்பாளிகள்.
சூரியஜெயவேல் 9600607603
அய்யா வணக்கம், ரிஷப லக்னம் , 3ல் சந்திரன், 12 ல் செவ்வாய் கேது , சந்திரனுக்கு 10 ல் மேஷத்தில் செவ்வாய் ஆட்சி, உடன் கேது என்ன பலன் அய்யா
ReplyDeleteசார் வணக்கம் என் பெயர் பெ ஆனந்த் DB. 5.6.1967.துலாலக்கினம் லக்கினத்தில் கேது 7ல் சந்திரன் ராகு 8ல் சூரியன் 9ல் புதன் 10சுக்கிரன் குரு 12.செவாய் பிறந்த இடம் சென்னை சார் இனி காலம் எப்படி இருக்கும் தயவு செய்து பார்த்து சொல்லணும் வணக்கம்
Delete