பன்னிரு பாவாதிபதிகளின் அசுப யோகங்கள்

 பன்னிரு பாவாதிகளின் அசுப யோகங்கள் ! 


    காளிதாஸர் கூறும் பாவாதிபதியால் உண்டாகும்  தீய பலன்கள் பற்றி அறிவோம் : 


ஒரு பாவத்தின் அதிபதி :


 1 ) தீய ஸ்தானாங்களாகிய 6,8,12 ஆகிய வீடுகளில் இருந்தாலோ ,


 2 ) நீசம் அல்லது பகை வீட்டில் இருந்தாலோ ,


 3 ) அஸ்தமனம் அடைந்திருந்தாலோ , 


4 ) சுபர்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெறாதிருந்தாலோ ,


 5 ) பாபிகளின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெறாதிருந்தாலோ , 


6 ) அம்ஸத்தில் பகை வீட்டில் இருந்தாலோ , 


7 ) நீசா அம்சத்தில் இருந்தாலோ , 


8 ) பாபர்களிடம் கிரக யுத்தத்தில் தோல்வியுற்று  இருந்தாலோ , அந்த பாவமானது முழுமையான பாதிப்பை அடைவதோடு பலனற்றும் போகும் .


 இவ்வாறு ஒவ்வொரு பாவங்களின் அமைப்பை ஆராய்ந்து தீய பலன்களைத் தீர்மானிக்க வேண்டும் . 

இனி பாவாதிபதியால் ஏற்படும் தீய பலன்களை பார்ப்போம்.

பன்னிரு பாவாதிபதிகளின் அசுப யோகங்கள் . ஒரு வீட்டின் அதிபதி 6 , 8 , 12 - ல் அமைவது அல்லது 6,8,12 - ஆம் அதிபதிகள் அவ்வீட்டில் இருப்பது அல்லது பார்ப்பது ஸ்தான பலமில்லாமல் அமைவது . 12 பாவங்களுக்கும் 12 வகையான தீய யோகங்கமாக அமையும் . 

1. அவயோகம் , 

2. நிஸ்வயோகம் , 

3. மிருதி யோகம் , 

4. குகுயோகம் , 

5. பாமரயோகம் , 

6 . ஹர்ஸயோகம் , 

7. துஸ்கிருதியோகம் , 

8 . சரளாயோகம் , 

9. நிர்பாக்யயோகம் , 

10 . தூர்யோகம் , 

11. தரித்திரயோகம் , 

12. விமலா யோகம் என  அமையும் . 


முதலாவது வீடு- அவயோகம் : லக்கினத்திற்கு ஏற்பட்டால் அவயோகம் என்று பெயர் அதனால் ஜாதகர் / ஜாதகியர் வறுமை , துன்பத்தை அனுபவிக்க நேரிடும் . ஆரோக்கியக் குறைவு , ஆயுள் பங்கமும் தரித்திர வாழ்வு ஏற்படும்  .


"மிக்க லக்னத்தானாறெட் டீராறின் மேவுமாகிற்

றக்கவே சரீரநோவாஞ் சார்ந்திடும் ராசிக்கோளை

யொக்கவே சனிபோய் நோக்க வுடலங்கணேவுமாகு

மைக்கருங் குழலாலே வகுத்தவர் மறைவல்லோரே

   (இ-ள்) லக்னாதிபதி 6 , 8 , 12 - ல் இருந்தால் உடல் நோயால் வருந்தும் . லக்னாதிபதி இருந்த வீட்டாதிபதியை சனி பார்த்தால் ஜாதகருக்கு அங்கஹீனம் ஏற்படும் .


 இரண்டாவது வீடு நிஸ்வ யோகம் : கல்வியில் குறைபாடு , கண் பார்வையில் பழுது , செல்வம் சேர்க்கை தடையுண்டாகும் . பேச்சு வன்மை குறையும் . எதிரிகளால் ஜாதகரின் செல்வம் பறிபோகும்

 படிப்போ , பணமோ இல்லாத வாழ்வு அமையும்.


"ஆனதோர் புதன் , வியாழ மடுத்தவாக் குடையோன் மூவர் 

தானமாறெட் டீராறிற் சார்த்திட வித்தை சாரான்

   (இ-ள்)  புதன் , குரு 2-ஆம் அதிபதி இணைந்து 6-8-12-ல்  இருந்தால் ஜாதகர் படிப்பறிவு இல்லாதவர்கள்.


   மூன்றாவது வீடு ;- மிருதி யோகம் 

      லக்கினத்திற்கு மூன்றாமிடம் பாபக் கிரகங்கள் சம்மந்தப்பட்டு மூன்றுக்குடைய கிரகம் 6,8,12 ஆகிய வீடுகளில் ஒன்றில்  இருந்தால் மிருதி யோகம் ஏற்படும் .


மிருதி யோகத்தில்  பிறந்தவன் மூன்றாம் வீட்டிற்கு இது மிருதி யோகமாகும் . இதனால் சகோதர நலத்திற்கு ஊறு விளையும் ,எதிரிகளால் அவமானம் அடைதல் சகோதரர் இன்மை மன உளைச்சல் பலமின்மை தனமில்லாமை  மெலிந்த திரேகம் குரூர குணம் தாழ்வு மனம் , உறுதியின்மை , மனக்குழப்பம். உடையவர்கள்.


நான்காவது வீடு- குருயோகம் : தாய் , நண்பர்கள் , உறவுகள் , வாகனங்கள் , சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் .


"காண்டகு நாலமிடந்தான் சரராசியாய் தீயர்கலப்பனைப் 

லாண்டகை பைத்திலிருப்பவருடைய வீறுடையீராறியா தன்

மாண்டகு மாறிடையாதல்வதிந்திடவே யிப்புவியில் வந்தமைத்து

னீன்குறையு மில்லமில்லை யென்பரன் பாற்றே சேமிக்கு மினையினைளே 

 (இ-ள்) மாதுர்த்தானம் எனும் 4- ஆம் பாவம் சர ராசியாக அமைந்து பாவர்கள் கூடினாலும் , பார்த்தாலும் , 6 8,12- ஆம் அதிபதிகள் 4 - ல் இருந்தால் ஜாதகருக்கு செல்வச் சேர்கையில் பல பாதிப்புகள் ஏற்படும் .


 ஐந்தாவது வீடு- பாமரயோகம்  லக்கினத்திற்கு ஐந்தாமிடம் பாபக்கிரக சம்மந்தம் பெற்று ஐந்துக்குடைய கிரகம் துர்த் ஸ்தானங்களாகிய 6,8,12-ஆம் ஆகிய வீடுகளில் ஒன்றில் பகை நீச்சம் மூடம் அமையப் பெற்று இருந்தால் பாமர யோகம் ஏற்படும்.

      பாமர யோகத்தில் பிறந்தவன் துக்கம் நிறைந்தவன், பொய் பேசுபவன், விவேகமில்லாதவன், புத்திரப் பாக்கியம் குறையும், கீழ் மக்களை நேசிப்பவன் கீழான குணமுடையவன்,

புத்ரதோஷம் , கள்ளமனம் . துரதிருஷ்டம் ஏற்படும். 


 கேடிலாவைந்தில்  ராகுகிளரவைந்துடையோ னாரேட்

டொடுன்னிரண்டி லேறவொரு பிள்ளையேதுமில்லை 

    (இ-ள்) 5 - ல் ராகு இருக்கவும் , 5 - ஆம் அதிபதி 6 , 8 12 - ல் இருக்கும் ஜாதகருக்கு ஒரு குழந்தையும் இருக்காது.


ஆறாவது வீடு- ஹர்ஸயோகம் நல்லயோகம் தரும். 


"மயிலனனாய்த்தான் மாறோன்னும் வாறெட்டீராறிற்

செயலிலர் நீசவித்த மனங்களைச் சேருமாகில்

வியனிலா விலக்கினத்தோன் வெகுபலவானாய் நிற்கிற்

பயனிலாச் சத்ருவாலே பயமில்லையென்பர் பாவாய்


  (இ-ள்) ஆறாம் அதிபதி 6-8-12 ல் நீசஅஸ்தானம் பெற்றிருந்தால் லக்கினாதிபதி பலம் பெற்று இருந்தால் எதிரியால் பயம் இல்லை . ஆதாயம் கிட்டும். 


 ஏழாவது வீடு துஸ்கிருதி யோகம் : 

அவயோகம் யோகமகும் ஏழாம்  வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் துஸ்கிருதி யோகத்தை ஏற்படுத்தும்  

  மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்வர்கள் ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். களத்திரவாைநோய் , துன்பம் சச்சரவு ஏற்படும்  பால்வினை நோய்கள் உண்டாகும். இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும்.


"பயனாரு மேழதிப னாரெட்டுப் பனிரெண்டில்

வயமான தற்றிருப்ப மழைக்கோள் மாபாவர்

வியமானவர் பார்க்க வுதித்துளோன் . மின்னனையாள் 

சயரோகந் தனையலைப் பக்காலனூர் சார்வாளே ! 

   (இ-ள்) 7 - ஆம் அதிபதி 6 , 8 , 12 - ல் இருக்க சுக்கிரனை பாவர்களும் , 12 - ஆம் அதிபதியும் பார்க்கப் பிறந்த ஜாதகருடைய மனைவிக்கு சயரோகம் ஏற்படும் . மரணம் ஏற்படும் .


 எட்டாவது வீடு- சரளாயோகம் : ராஜயோகம் யோகமானது, எட்டாம் அதிபதியினால் ஏற்படக் கூடிய ராஜயோகம் ஆகும். எட்டாம் அதிபதி 6-8-12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருப்பதனால் இந்த யோகம் ஏற்படுகின்றது. எட்டாம் அதிபதியின் தசா மற்றும் புத்தியிலேயே யோகத்தை செயல்படுத்தும்


 எதிரிகளின் மூலம் தொல்லை ஏற்படாது. இவர்களால் எவ்வளவுப் பெரிய கடனையும் எளிதாக அடைத்து விடுவர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

   எட்டாம் அதிபதிக்கு 12ம் இடம் என்பது ஐந்தாவது ஆகும். அதே போல், எட்டாம் அதிபதிக்கு 6ம் இடம் என்பது 11ம் இடம் ஆகும். இவை இரண்டுமே, அதிக நல்லப் பலன்களை வழங்க வல்லவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விபரீத ராஜயோகங்களிலேயே,  சரள ராஜயோகமகும்


"ஆறெட்டுக் குடையோர் சேர்ந்திட்டால் விரையத்தினீற்க 

மாறெட்டு விரையத்தானு மறுத்து மாறெட்டினிற்க

கூறெட்டு முதையந்தன்னிற் குருவாகி ச்சுங்கனிற்

ஏறிட்டு வயது நூறாயிருப்பனே புவியின் மாதே . 

    (இ-ள்) 6 , 8 - ஆம் அதிபதி இணைந்து 12 - ல் இருக்க 12 - ஆம் அதிபதி 6 , 8 - ல் இருக்க அல்லது 8 - ல் குரு , சுக்கிரன் இருக்க ஜாதகன் நூறு வயது வரை சுகமுடன் வாழ்வார் . 

பன்னிரு பாவாதிபகளின் அசுப யோகங்கள் .


எட்டாவது வீடு சரளாயோகம் சுப யோகமாகும் எட்டாம் வீட்டோன் 6,8,12 இல் இருப்பது நல்லது . நீண்ட ஆயுள் , உறுதி படைத்த உள்ளம் , அஞ்சாமை , அறிவாற்றல் , செல்வம் ஆகியவை அமையும் . செய்கின்ற தொழிலில் பெருமையும் புகழும் பெறுவார் .நற்பலன்கள், உடல் நலம்,சக்தியுடையவர், எட்டாம் அதிபதி பாவியாகி 12 - ல் இருப்பின் விரயம் குறைவு . 


"ஆறெட்டுக் குடையோர் சேர்ந்திட்டவ் விரையத்தினீற்க 

மாறெட்டு விரையத்தானு மறுத்து மாறெட்டினிற்க

கூறெட்டு முதையந்தன்னிற் குருவாகி ச்சுங்கனிற்க ஏறிட்டு வயது நூறாயிருப்பனே புவியின் மாதே "

    (இ-ள்) 6 , 8 - ஆம் அதிபதி இணைந்து 12 - ல் இருக்க , 12 - ஆம் அதிபதி 6 , 8 - ல் இருக்க அல்லது 8 - ல் குரு , சுக்கிரன் இருக்க ஜாதகன் நூறு வயது வரை சுகமுடன் வாழ்வார் . 


ஒன்பதாவது வீடு- நிர்பாக்ய யோகம் : ஜாதகருக்கு  பூர்வபுண்ணிய பாதிப்பு   அதிர்ஷ்டமற்ற நிலை . மூதாதையர் சொத்துகள் இழப்பார் . மனிதாபிமானம் இல்லாமல் போகும் . இன்பமான வாழ்வும் அமையாமல் போகும் .


"துர்க்குணப்பட்டொன் பான்கோட்டோன் றவாறெட்டீராறீற் 

சத்துரு நீச்சர் பார்க்கத்தான் கொடூராங்சமேறக்

தெத்திய நீசராகிற் சேர்ந்திடப் பிறந்தபேருக்கு

முத்திய பாக்யங்கண் முழுது நாசங்களாமே"

(இ-ள்) 9 ஆம் அதிபதி 6 , 8 , 12 - ல் பகைப்பெற்று , பாவிகளின் பார்வை பெற்று , பாபர் அங்கிஷம் பெற்று இருக்கவும் , ராசியில் சம்பந்த பெற்று   இருக்க பிறந்த ஜாதகனுக்கு சகல பாக்யமும் அழிந்துபோகும் .


 பத்தாவது வீடு- துர்யோகம் :  தன் முயற்சியில் தோல்வி , கடுமையாக உழைத்தாலும் வெற்றிக்கு இடமிராது . வெளிநாடு சென்று வாழ நேரிடும் . அங்கேயும் ப்பான நிலை உண்டாகாமல் போகலாம் .வெளியிட வாசம் , முயற்சி தோல்வி ஏற்படும். 


"அஷ்மாதிபனே பத்திலன்புட னிருப்பனாகில்

இறுமாம்பிதுர் செல்வத்தை யெய்துவா னென்னலாகும்"

   (இ-ள்) 8 - ஆம் அதிபதி 10 - ல் பலமுடன் இருந்தால் ஜாதகர் பிறர் செல்வங்களை நாசம் செய்வான் . பலவழியில் செலவுகள் செய்வான்.


பதினொன்றாவது வீடு- தரித்திரயோகமாகும்  அதாவது வறுமை என்று பொருள் . கடனாளியாக நேரிடும் . சகோதர நலத்திற்கு ஊறு விளையும்

காது நோய் , சகோதர உதவியின்மை ஏற்படுத்தும். 


"சொன்ன லாபத்திற் கோட்கடோன்றிடப் பிலமோவீர 

முன்ன தீ சம்மாம் ராசிக்கிரகமா யெட்டீராறு

மென்னமேயிரு மூன்றுக்கு முதல்வனாய்ச் சாதகர்கு

மன்னமே ரேகாயோகமாக வுந்தினமும் பிச்சை 

   (இ-ள்) 11 - ஆம் இடம் பலகீனமடைந்து , 11 - ஆம் அதிபதி நீச அஸ்தமனகதி அடைந்து 6 , 8 , 12 - ல் ' இருந்தால் ஜாதகர் பிச்சை எடுப்பார்கள்.


"வியமா றெட்டாதிபன் கூடிமேவினாலுந் தனியேனும் 

நடமாய்ப் பாவத்துறிற் பாவர்நன்னிற்பார்த்கில் லாபமில்லை"

  (இ-ள்) 11 - ல் 6 , 8 , 12 - ல் அதிபதிகள் நின்றாலும் , தனித்தனியே நின்றாலும் பாபிகள் இணைந்திருந்தாலும் ஜாதகருக்கு சிறிதும் லாபம் என்பது இருக்காது.


 பன்னிரணடாவது வீடு - விமலா யோகம் : அதிகம் செலவழிக்காத நல்லியல்பும் , சுதந்திர வாழ்வு , நல்ல தொழில் , நற்புகழ் வாழ்வும் தரும் ,


விபரீத விமல ராஜ யோகம்


 12ம் இடத்தின் அதிபதியானவர், லக்னத்திற்கு, ஆறாம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்திலோ, இருப்பதால் இந்த யோகம் உண்டாகும். இந்த யோகத்தின் மூலம் பல நன்மைகள் உண்டாகும்.


 விமல யோகத்தில் பிறந்த ஜாதகருக்கு, அதிக வழக்குகளை சந்தித்தாலும், அனைத்திலும் இவரே வெல்வார். கட்டப்பஞ்சாயத்துக்கு சென்றாலும், இவர் தரப்பினருக்கே வெற்றி கிடைக்கும். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் சூழ்நிலை உண்டாகும். இருப்பினும், அதற்குப் பின்னர், ஜதாகரின் உடல்நிலை வலிமை அடையும். மறைமுக எதிரிகளால் இவரை வெல்ல இயலாது.


 விபரீத ராஜ யோகங்களிலேயே சற்று குறைவானது 12 ஆம் அதிபதிக்கு, லக்னத்திற்கு ஆறாம் இடம் என்பது ஏழாம் இடம் ஆகும். அதே போல், எட்டாம் இடம் என்பது ஒன்பதாம் இடம் ஆகும். எனவே, தான் சற்று சுமாரானப் பலன்கள் தறுகின்றன.


"பன்னு பன்னி ரண்டுக்குடையவ னெட்டா

றதனிடைப் பயில்வுற வலது

சொன்னவெட்டதிபன் பன்னிரண்டுறினும்

பன்னிரண்டாதி பன்றொடர்பிற் 

பின்னமாய் நீசம் வகையிடை மருவ

வாறுளவன் பெறுகு பன்னிரண்டிற் 

றுன்னினுந் தனதானியம் பல பெற்றுச் 

சுகத்துட னிலத்திடை வாழ்வன் 

  (இ-ள்) 12 - ஆம் அதிபதி 6 , 8 , 12 - ல் இருந்தாலும் , 12 - ஆம் அதிபதி நீசம் . பகையுடனும் , பாவக்கிரகம் பார்த்தால் , 6 - ஆம் அதிபதி 12 - ல் இருந்தால் ஜாதகர் தன , தானிய லாபம் , பொருள் லாபம் பெற்று சகல சுகபோகமுடன் வாழ்வார்கள் ..

  செல்வ சேர்க்கையை உண்டு பண்ணும் . நல்லபடி தொழில் செய்து ஜாதகர் சிறப்பாக வாழ்வார்கள். 

சூரியஜெயவேல் 9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்