பன்னிரு பாவாதிபதிகளின் சுப யோகங்கள்

 பன்னிரு பாவாதிபதிகளின் சுபயோகங்கள்

12 சுப யோகங்களும்

      ஒரு பாவத்தின் அதிபதி கீழ்க்கண்ட அமைப்பிலிருந்தால அந்த பாவாதிபதி இருந்தால்  , ஜாதகனுக்கு மிகக்குறுகிய காலத்தில் அளவிட முடியாத அதிக நற்பலன்களை வாரி வழங்குவார் . 

1 ) பாவாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத் திலிருத்தல் , 

2 ) குறிப்பிட்ட அந்த பாவத்திற்கு 3 , 11 ல் இருத்தல் , 

3 ) உச்சம் அல்லது நட்பு வீட்டில் இருத்தல் , 

4 ) ராசி அல்லது நவாம்சத்தில் ஆட்சி பெறுதல் , 

5 ) சுபக் கிரஹங்களின் நடுவிலிருத்தல் ,

6 ) பாவாதிபதி நின்றிருக்கும் கேந்திர , கோண , வீட்டின் அதிபதிகள் , 3-11க்குரிய அதிபதிகள் உச்ச மடைதல் . 

7 ) அந்த பாவத்தின் அதிபதி சுபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருத்தல் .


காளிதாஸர்  இவ்வாறு விளக்கமளிக்கிறார்.


பன்னிரு பாவாதிபதிகளின் சுபயோகங்கள்


   ஒரு வீட்டில் சுபர்களிலிருந்து , அவ்வீட்டினைச் சுபர்கள் பார்த்து . அவ்வீட்டதிபதி நட்பு , ஆட்சி , உச்சமாக பலம் பெற 12 வீட்டிற்கும்   12 வகையான யோகங்கள் ஏற்படும் .

 1 -  ஆவது வீடு சாமரயோகம் , 

2 -   ஆவது வீடு தேனுயோகம் , 

3 -   ஆவது வீடு சௌரியயோகம் , 

4 -   ஆவது வீடு ஜலதி யோகம் ,

5 -   ஆவது வீடு க்ஷத்ர யோகம் , 

6 -   ஆவது வீடு அஸ்திர யோகம் , 

7 -   ஆவது வீடு காம யோகம் , 

8 -   ஆவது வீடு அகர யோகம் , 

9 -   ஆவது வீடு பாக்ய யோகம் , 

10 - ஆவது வீடு கியாதி யோகம் ,

11 - ஆவது வீடு சுபஜதா யோகம் ,

12 - ஆவது வீடு முகல யோகம்

 என 12 வகையான யோகம்  அமைகின்றது .


முதலாவது வீடு- சாமர யோகம் 

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி 1 - 4 - 7 - 10 ஆகிய கேந்திரங்களில் ஒன்றில் உச்சம் பெற்றிருக்க அதை குரு பார்த்தால் சாமர யோகம் ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சிறந்த குலத்தில் பிறந்தவர் வேகமாக முன்னேறுவார்கள். ஆன்மிக ரீதியான வளர்ச்சிகளையும் அடைவார்கள். அரசின் உயர்ந்த பதவி அவரைத் தேடி வரும். சமூகத்தில் செல்வாக்கும் பாராட்டும் பெறுவார்கள்.

வாழ்வில் படிப்படி உயர்வும் புகழ் கிடைக்கும் .


"அருட்சாமி கேந்திரமாக வலது தானுச்சமாகத் 

தருக்கான பொன்னே பார்க்கிற் சாமரை யோகமென்பர்

உருக்காணு மழகு கீர்த்தி யுயர்தனம் சாஸ்திரங்கள்

புருக்கானு மநேகமைந்தர் செல்வமுமுடைய யோனாமே"

 (சாதகசிந்தாமணி )

   (இ-ள்) லக்கினாதிபதி கேந்திரத்தில் உச்சம் பெற்று பலமுடன் இருக்க இவரை குரு பார்த்தால் சாமர யோகம். ஜாதகர்  / ஜாதகியர் அழகு, பூகழ் (கீர்த்தி) அடைவர்கள். பல சாஸ்திரங்கள் படைப்பர்கள். அதிக குழந்தைகள்,  செல்வமும் உடையவர்கள்.


ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் லக்னாதிபதி ஆட்சி பெற்றுள்ளார் . சுபரான குரு உச்சமுடன் உள்ளார் . லக்ன சுபரான செவ்வாய் பார்வை செய்கிறார் . இதனால் ' சாமரயோகம் அமைந்து புகழ் பெற்றார் . அனைவரும் வணங்கும் தெய்வமானார் .


 இரண்டாவது வீடு- 

தேனு யோகம் :


ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெற்றால் தேனு யோகம் உண்டாகிறது.


பலன் நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும்,

பெரிய குடும்பம் , உணவு , வசதி , சுகவாழ்வு கிட்டும் . 


தேனு மிரண்டோன் சுபவர்க்கமாகத் 

திரிகோண கேந்திரச் சுபவர்க்கமாம் 

திய்யோர் விதிசெய்யாரெனில் ஜாவிலன்வை யந்தனில் 

தேடும் மூவாயிரம் செம் பொன்னுள்ளான் . 

  (இ-ள்) இரண்டாம் அதிபதி லக்னத்திற்கு 1 , 4 , 5 , 7, 9 , 10 - ஆம் வீடுகளில் ஒன்றில் (கேந்திர திரிகோணத்தில்) பகை பெறாமல் ஆட்சி , உச்சம் பெற்றிருப்பின் உலகில் சிறப்புடன் , மூவாயிரம் பொன் செல்வம் அடைந்து சுகமுடன் வாழ்வர் .


"சமா பூஸ்மஸ்ச்ச சம்பூர்ண வித்யாவான் பவதிந்ருவம் 

வாக்யஸ்தௌ நபோவாக் பதிச்ச கேத்ரகோனஷு சம்ஸ்திதௌ

சர்வவித்யாப்ரவீணஸ்ஸாத் சபா பூஜ்யோந சம்ய :

  (இ-ள்)  இரண்டாம் அதிபதியும் குருவும் இணைந்து கேந்திர கோணங்களில் இருந்தால் பல கலைகளைக் கற்ப்பார்கள். பொது வாழ்வாவில் கௌரவமாக பூகழடன் வாழ்வர்கள்.   


மூன்றாவது வீடு சௌரிய யோகம் ;-


சௌரிய யோகம்  மூன்றாமாதி ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானம் பலம் பெற்றிருந்து மூன்றாமிடத்தை சுபர் சேர அல்லது பார்க்க உண்டாகும் யோகம் சௌரிய யோகமாகும் . இந்த யோகம் படைத்தவர்கள் பராக்கிரமசாலியாகவும் , எடுத்தக் காரியத்தை முடிக்கும் தீரனாகவும் , நல்ல சகோதரம் உடையவனாகவும் , புகழுடனும் ப்பார் .

சகோதரன் மதிப்பு பெறுபவன் ஜாதகனுக்குப் புகழ் , அரசுப்பணி, ஆபரணச் சேர்க்கை கிட்டும் 


டாக்டர் ராதகிருஷ்ணன் அவர்களது ஜாதகத்தில்

3 - ஆம் அதிபதி ஆட்சியுடன் குருவுடன் இணைந்துள்ளார் . சௌமிய யோகம் அமைந்து அரசுத்துறையில் உயர் பதவியான இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார் .


 நான்காவது வீடு - ஜலதி யோகம் :-   நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானத்தில் பலம் பெற்றிருந்து நான்கிலும் சுபக்கிரகம் இருக்க அல்லது பார்க்க ஆடையாபரண அலங்காரப் பிரியராகவும் , வாகன சுகம் , பந்து மித்திரர்களால் சௌக்கியம்  தாய் நலம் உள்ளவராகவும் , அரசர்களால் மதிக்கப்படத்தக்கவராகவும் குளம் , கிணறு , தர்ம சத்திரம் போன்றவை ஏற்படுத்தி நற்பெயரை அடைவார் .


"கேந்திரத்திற் புகர் நிற்க நான் காதியுங்

கிட்டிச் சுபவர்கம் பெற்றினும் 

கிளர்மதியின் ஒளிவதனக் கிளிமொழியாட் குளவயது

கிருபை யாய்த்திர் கமென் றோதிடுவாய் 

  (இ-ள்) லக்னத்திற்கு 4 - ஆம் அதிபதி சுபர் வீடுகளில் இருந்து , 1 , 4 , 7 , 10 - ஆம் வீடாக அமைந்தாலும் , நான்காம் அதிபதி சுபவர்க்கத்தில் இருந்தாலும் ஜாதகர் அழகானவர் , இனிமையான குரல் வளம் இளவயது முதல் யோகம் , ' தீர்காயுள் , 


ஐந்தாவது வீடு- சஷத்ரயோகம் ;- ஐந்தாம் அதிபதியும் , பஞ்சமஸ்தானமும் பலம் பெற்றிருந்தால் சிறந்த புத்திமானாகவும் , மந்திரி பதவியடையக் கூடியவராகவும் மனைவி மக்களால் சுகம் நிரம்பியவராகவும் புகழ் , பொருள் சேர்க்கை , நல்ல மனைவி , உயர் கல்வி , நல்ல குழந்தை ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்கள்


 ஆறாவது வீடு- அஸ்திர யோகம் : ஆறுக்குடையவனும் , ஆறாமிடத்தில் இருந்தால்  

 எதிரியை வெல்வான் வலிமை . தீய எண்ணம் உள்ளவர், சாகசமாகக் காரியங்களைச் செய்து வெற்றி பெறக் கூடியவராகவும் , எதிரிகளை தோற்றோடச் செய்பவராகவும் , தேகத்திடம் , மனோதிடம் , வாக்குதிடம் உள்ளவராகவும்.


 பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் புட்டோவிற்கு இந்த யோகம் இருந்தது . இவர் சர்வாதிகாரிபோல் செயல்பட்டார் . நேர்மையற்ற வழியில் செயல்பட்டார் . 

6-ஆம் அதிபதி ஆட்சி , சுக்கிரன் , செவ்வாய் . ' சனி இணைத்துள்ளது . 


ஏழாம் வீடு காம யோகம்

   ஏழாமிடமும் , ஏழுக்குடையவன் பலன் பெற்றிருந்தால் மனைவியால் நிறைவு பெற்ற வாழ்க்கை அடைந்தவராகவும் , எப்போதும் பந்துமித்திரர்களால் சூழப்பட்டவராகவும் , தனவானாகவும் , தந்தையைவிடச் சிறந்த நிலையை டைந்தவராகவும் இருப்பர் .நல்ல இறைம் , தந்தையை விட உயர்வு தொழில் வாபம் , அரசு சன்மானம்,

ஏகதார விரதனாயிருத்தல் யோகமுள்ள களத்தில் புத்திர பந்துப் பேறு நல்ல குணம் காமயோக பலன்களாகும்


 7குடைய ஆட்சி பெற்று குரு பார்வையும் பெற்றதால் காம யோகத்தால் இன்புறுவான்


 மகாராஜா வீர சிவாஜியின் ஜாதகத்தில் 7 - ஆம் அதிபதிம் உச்சம் , 7-ல் லக்கினாதிபதியுடன் குரு இணைந்துள்ளர்,சனியை குரு பார்வை யிடுகிறார் . சுக்கிரனும் பார்வையிடுகிறார் . காமயோகம் அமைந்து ராஜவம்சத்தில் பிறக்காத சிவாஜி ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் . தந்தையைவிட உயர்ந்த நிலைக்கு வந்தார் . உலகம் போற்ற வரலாற்றில் இடம் பெற்றார் . 


எட்டாவது வீடு-

அசுர யோகம் : லகினதிற்கு 8 ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் , மூலத்திரிகோணம் , நட்பு வீடுகளில் பலம் பெற்று  இருக்க , 8 - ல் சுபகிரகங்கள் இருந்தோலோ அல்லது பார்த்தாலோ அசுர யோகம் உண்டாகும் .

  தன் காரியத்துலே கருத்தாக இருப்பார் . அவப்பெயர் எடுப்பார் . மற்றவர் காரியத்தை கெடுப்பதில் வல்லவர் . கஷ்டங்களையே  அனுபவிப்பார் .ஆயுள் பலம் , தீய குணம் , தீயசெயல் செய்வர்கள்.


"அற்பமா வாயு நாதன் சொச்சேத்திருச்சனாக  தெற்பமாஞ் சனியுமுச்சமிருந் திடற்றீர் காயத் 

தற்பெல லக்கினாதிபதிக்கு மப்படியே அட்டமந்

தற்பரப்பானு மித்ரஞ்சமமெனு மாயத்தானே"

(இ-ள்) 8 - ஆம் அதிபதி ஆட்சி வீட்டிலிருந்து , (அ) உச்சம் பெற்றிருக்க,  சனியும் சுபக்கிரகங்களுடன் இணைந்து உச்சத்திலிருந்தால் தீர்க்காயுள் வக்னாதிபதியும் 8 - ஆம் அதிபதியும் நட்பு வீட்டில் இருந்து சுபர் பார்த்தால் தீர்க்காயுள் .


ஜாதகரின் ஜாதகத்தில் கிரகங்கள் அமைகின்ற தன்மையை பொருத்து யோகங்கள் மாறுபடும்


 சுப பலன்கள் தரும் யோகங்கள் என்று அந்தக் கிரகம் அந்த வீட்டில் அமர்ந்திருந்தால் உண்டாவதை முதலில் குறிப்பிட்டுள்ளார்கள்.


ஒன்பதாம் வீட்டுக்கு  ஒன்பதாம் வீட்டை பாக்கிய ஸ்தானம் அல்லது தர்மத்தின் வீடு என்றும் அழைப்பார்கள். 

  ஒன்பதாம் அதிபதி ஆட்சி உச்சம் கேந்திரம் & கோணத்தில் இருந்தால் பாக்யயோகம் : இந்த பாக்கிய யோகத்தால் எல்லாவித நற்பாக்கியங்களும் உண்டாகும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார். மதிப்புடையவராவார். செல்வம் சேர்ப்பார். வாழ்க்கையில் உன்னதமான, ஸ்தானம் அமையப் பெறுவார். கடவுள் பக்தி, மனிதாபிமானம் அனைத்தும் நிறையப் பெற்றிருப்பார் மிக அதிர்ஷ்டம் , புகழ் , தந்தை நலம் , பூர்வீகம் , ஆன்மிக ஈடுபாடு , வளமான வாழ்வு அமையும் .


 "பாக்யாதி ரவியொன்பதி லேயுறப்

 பதியு மந்தராசி திரமெனிலோ

 பாதவமூ லாதிநிலம் ஞாதிகளால் வாதைஜெயம்

 பற்றிப்பிதுர் செல்வத்தால் இருப்பார் .

   (இ-ள்)  9 - ஆம் அதிபதி 9 - ல் ஆட்சி பெற்றிருக்க , அந்த வீடானது ஸ்திர ராசிகளான ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பமானால் ஜாதகன் பிறந்த வேளையில் அவனது தந்தை தனது முன்னோர் சொத்து வழக்கிலிருந்து மீட்டெடுத்து செல்வச் செழிப்புடன் வாழ்வார் .


  பத்தாவது வீடு-

 கியாதியோகம் : கியாதி என்றால் புகழ் என்று பொருள். செல்வம், செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்நிலையை அடைதல், நாடாளும் தகுதியும், நிர்வாகம் செய்யும் ஆற்றலும் ஏற்படும். புனிதப் பணிகளில் ஈடுபடுவார். நல்ல கல்வி அறிவும், திறனும் அடைவார். சிறப்பான புகழ் , உயர்பதவி , அரசு சன்மானம் கிடைக்கும்.


  பதினொன்றாவது வீடு-

  சுபரிஜதா யோகம் : வரவதிகம் , செல்வம் அடைவார்கள் .


 "லாபதி யுச்சனாய்ப் புங்கவர் மத்தியம்

 நண்ணிட லாபத்திற் சுபரிருக்க

 நஞ்சாதிகள் பஞ்சாதியில் செஞ்சாலியில் துஞ்சாததி

 லாபமா மெத்தொழி ஊதியமே


    (இ-ள்) 11 - ஆம் அதிபதி வசம் பெற்றிருக்க , குரு இணைத்திருக்கால் கபர்கள் இருக்க நன்செய் , புன்செய் பயிர்கள் , விவசாயத் தொழில்கள் முதல் எல்லா தொழிலையும் செய்து பெரும் லாபம் குவிப்பார்கள் . அதிக செல்வம் அடைவார்கள் .


 "தப்பிலாலா பத்தானத்த திபனுப மத்தானத்தில்

 ஒப்பிலா ஆட்சியுச்சங் கேந்திர கோணஞ் சேர்ந்தால்

 நட்பிலாத் தனமும் பூமிசாஸ்திர வேதஞானம்

 இப்புவி தனிலுள்ளோர் வணங்க சன்யாசியாவான்"


   ( இ-ள்)  லாபாதிபன் ஆட்சி , உச்சம் , கேந்திரம் அல்லது கோணத்தில் இருக்க  அதிக தனம் , பூமி உடையவனாகவும் , வேத சாஸ்திரஞானம் உடையவனாகவும் , உலகத்தார் வணங்க சந்நியாசியாவான் .


  பன்னிரண்டாவது வீடு -

  முசலயோகம் : கடின உழைப்பு , நல்வரவு , பயனுள்ள செலவு , சுறுசுறுப்புடன் இருப்பார்கள் .

 12 - ஆம் அதிபதி பாபரானால் அதிகச் செலவு , சற்று தீமை .

சூரியஜெயவேல் 9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்