திருமண சடங்குகள்

 திருமணம் சடங்கு 


திருமணம்

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

திருமணம் என்பது திரு மாியதைக் கூரிய சொல் ,மணம் என்றால் கலத்தல் ,கூடுதல்,பொருத்துதல் என்று பொருள். ஆணும்,பெண்ணும் உடல்ரீதியாக உளரீதியாக இணைவுக்கு திருமணமாகும்.

   திருமணச் சடங்குகளின் காரண காாியங்களை நாம் சிலவற்றை அறிந்து கொள்வேம் .

தாலி : 
பொய்யும் வழுவு தோன்றிய பின்னர்
ஐயர்யாத்தனர் கரணம் என்ப
    பழங்கலத்தில் அணிகலங்கள் இல்லாதிருந்த போதும் ஒழக்கமுடன் இருந்த போது .
     தொல்காப்பியர்  கூற்றுப்படி பின்னாளில் மனித சமுதாயத்தை நெறிபடுத்த தாலி கட்டுதல் போன்ற சடங்குகளை மேற்கெண்டனர்.
   தாலம் என்பது பனையோலையைக் குறிக்கும் அந்தப் பனையோலையை ஒழுங்கு சய்து மஞ்சள் தடவி ,அதில் பிள்ளையர்  சுழியிட்டு இன்னார் மகளை ,இன்னாா்மகள் மணந்து கொண்டார்  வாழ்க ! என்றெழுதி ,அதை சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோா்த்து மணமகள் கழுத்தில் தாிப்பர் .தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் இதற்க்கு தாலி என்ற பெயா் வந்தது.நாகாரீகம் வளா்ந்தபிறகு பனை ஓலை தண்ணீர் பட்டு நைந்து போவதால் தாலியைத் தங்கத்தினால் செய்து அணிந்துக்கொண்டனர்
                   மனைவிக்கு கணவானே தெய்வமாதலின் கணவனாருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் ஆணிந்துகொண்டனர்.
       பெண்களுக்க திருமாங்கல்யம் என்ற அந்த மங்கல நாண் உயிாினும் சிறந்தது.பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும் திருமாங்கல்யத்தை மட்டும் கழற்றக்கூடது திருணத்திலே மணகள் கையை மணகன் பற்ற வேண்டும்.அதற்குப் பாணிக்கிரகம் என்று பெயர்(பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியைப் பார்த்து அவள் திருமணமானவள் என்பதை ஆண்கள் தொிந்து கொள்வான்.)

முன்று முடிச்சு : மணமகள் கழுத்தில் மணமகன் மங்கல நான்பூட்டும்போது மூன்றுமடிச்சு இடுவார் இதன் தாத்பாியம் கணவன் மனைவி இருவரும் மனமொழிமெய் ஆகிய தாிகரணசுத்தியோடு இருக்க வேண்டும் என்பதாகும்.
பெண் தலைவகிடு எடுக்கும் போது நேர்வகிடுதான் அந்நாளில் எடுப்பார்கள் *துணையோர் ஆய்ந்த இணையீர் ஒதி * என்று திருமுருகாற்றுப்படை கூறுவது சமமாக இருபிாிவாகக் கூந்தலைப் பிாித்துச் சடை பின்னுவாரம் ,இதன் குறிப்பு கணவனுக்கு வரும் சுகதுக்கத்தில் சாிபாதி எற்றுக்கொள்வேன் என்பதாகும்..
மங்கல நாண் அணிவிக்கும் போது மணமகளை இடப்பாகத்தில் அமர்ரச் செய்துதிட வேண்டும் .அர்த்தநாதீஸ்வா் வடிவம் சக்திக்கு சிவபெருமான் இடப்பாகத்தை தாந்துள்ளார் லெட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களின் இடது பக்கத்தல் அவரவர் துணைவியார்கள் அமர்ந்திரப்பதைக் காணலாம் .

அட்சதை : திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள் . ஷதம் என்றால் குத்துவது என்று பொருள் அகரம் என்றால் அன்மைப்பொருளைத் தொிவிக்கிறது .அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாத என்ற பொருள்.குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றால் உள்ளாது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து,முறையாக மஞ்சள்பொடி தூவி , பன்னீர் தெத்து அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவன்களை உண்டாகும் .

அம்மி மிதித்தல் : மணமக்கள் அக்னியை வலமாக வருகிற போது வடபுறத்திலே ஒரு கல் இருக்கும் , மணமக்களின் வலது பாதத்தை அந்தக்கல்லின் மீது வைக்குமாறு மனமகள் செய்வாள் ,அதன் பொருள் " இந்தக்கல்லைப்போல் உறுதியாக இரு "என்பதாகும் (அதிக பாரம் கல் தாங்கும் .)இன்பம்,துண்பங்களில் ஒரே மதிாியாக இருக்கவேண்டும் .

அருந்ததி பார்த்தல் : அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள் , அருந்ததி (அருந்ததி கணவனின் சொல்லுக்கு கட்டுப் பட்டாவள் கற்புடையவள் மனைமான்புடைய மகளி ரெல்லாம் தினமும் வணங்கும் பெருமை உடையவள் ) இன்னும் இவ்வுலகில் திருமணம் ஆனதும் கணவனாாின் கைத்தலத்தைப் பிடித்து மணவறையைச்சுற்றிவரும் சமயம் மணமகள் அருந்ததியை நினைத்து வாழ்த்தி வணங்குவது வழக்கம்.இச்சடங்குகள் அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல் என்று வழங்கப்படுகிறது.
      கற்பு நிலை குலைந்த அகலிகை கல்லாய் மண்ணில் இருந்தாள்,நிலைகுலையாத நட்சத்திரமாய் விண்ணில் உயர்ந்தாள்,ஆதலால் இழிவுக்கும் உயர்வுக்கும் உதாரணமாக ஒவ்வொரு மணமகளுக்கும் இவ்வுண்மை உணா்த்தப்படுகிறது .
     ( 2700 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றி வரும் இயல்புடைய மண்டலத்திற்கு சப்தாிஷி மண்டலத்தில் ) அதன் முற்பகுதியின் அடுயில் இருப்பது வஷிட்ட நட்சத்திரம் ,அதனை அடுத்து நுண்ணியதாய் தெறிவது அருந்ததி நட்சத்திரம் .இதனை மணமகள் தலைநிமிா்ந்து பார்ப்பது அருந்ததி பார்த்தல் என்பார்கள்.

மெட்டி அணிதல் : எதிாில் வரும் ஆண்கள் திருமணமானவர்கள் என்று பெண்கள் (அடுத்தவா்) அறிந்து கொள்ளஓ ஆண்களுக்கு மெட்டி அணிவிப்பார்கள். (ஆண்களுக்கு மட்டுமே மெட்டி )

தொகுப்பு :- சூரியஜெயவேல் 9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்