ஜோதிடத்தில் ஆயுள் காலம் (ஆய்வு)

ஜோதிடத்தில் ஆயுள் காலம்                             (ஆய்வு)

ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதனின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. நாட்டுக்கு நாடு வித்தியாசம் உள்ளது. அவராவர் பழக்கவழக்கம் & உணவு அடிப்படையில் மாற்றம் ஏற்படும். 

ஆயுள் காலம் பலவகை (கீழ் கண்டபடி இருந்தால்)

1) ஆறாம் அதிபதி ஏழாம் அதிபதி பாவராகிச் சுபர் பார்வையின்றி இருந்தால்  2-மாதம்

2) எட்டால் பாவர் சுபர் பார்வையின்றி இருந்தால்   4 - மாதம் 

3) லக்கினாதிபதி பாவனாய் பலமிழந்து சுபர் பார்வையின்றி இருந்தால்  6 - மாதம்

4) 6 - 8 - 12 - ல் லக்கினாதி பாவர் பார்வையுடன் இருந்தால் 8 மாதம்

5) 6 - 8 - 12 - ல் தேய் சந்திரன் + பாவர் பார்வையுடன் இருந்தால் 10 - மாதம் 

6) 1 - 8 - ல் பாவர் சுபர் பார்வையின்றி இருந்தால் 1 - வருடம்

7) 1 - 2 - 5 - 6 - 8 - 12 - ல் வக்கிர சனி + புதன் செவ்வாய் கூடிட 2 - வருடம் 

8) செவ்வாய்க்கு எட்டில் குரு இருந்து சூரியன் + சந்திரன் சேர்ந்து செவ்வாய் பார்த்திட 3 - வருடம்

9) 3 - 8 - வீட்டை சுபர் பார்த்துக திரிகோணத்தில் பார் இருந்தால் 4 - வருடம் 

10) லக்கினத்திதை பாவர் மட்டுமே  பார்த்தால் 5 - வருடம் 

11) 6 - 8 - 12 - ல் சனி இருந்து சூரியன் + குரு + சந்திரன் கூடினால் 6 -வருடம்

12) மிதுனம் / துலாம் லக்கினமாகி எட்டில் குரு + சுக்கிரன் பாவர் பார்வையுடன் 8 வருடம் 

13) எட்டில் சூரியன் + சந்திரன், 11-ல் சனி 9 வருடம்

14) 8-ல் சூரியன் + சந்திரன் குரு பார்க்காமல், சந்திரன் சுபர் பார்வையின்றி 9 வருடம்

15) கேந்திரத்தில் ராகு  கேது பாவர் பார்வை 10 வருடம் 

16) லக்கினத்தைச் சுபர் பார்க்காமல் சூரியன் + சந்திரன் கூடினால் 11 வருடம்

17) லக்கினத்தில் கேது + சூரியன் + சந்திரன் சுபர் பார்வையின்றி இருந்தால் 12 வருடம் 

18) லக்கினத்தில் எட்டோன் 6 - 4 - செவ்வாய் இருந்தால்  13 வருடம் 

19) 6 - 8 -ல் பாவர், 3-6-8-12-ல் லக்கினத்தில் 16 வருடம் 

20) குரு + லக்கினத்தில் + சூரியன் சுபர் பார்வையின்றிக் கேந்திரத்தில் 20 வருடம் 

21) 4 - ல் சந்திரன் அதற்கு இருபுறமும் ராகு, கேது,சனி,  செவ்வாய் இருந்தால் 25 வருடம் 

22) கன்னி லக்கினத்தில் சனி, 12 - 8 -ல் குரு இருந்தால் 26 வருடம்

23) லக்கினாதிபதி (அ) எட்டாம் அதிபதி நின்ற பாகைக்கு எட்டில் கேது இருந்தால் 27 வருடம்

24) சனி + கேது கூடி எட்டில் செவ்வாய் ராகு கூடிக் கேந்திரமின்றிப் பிற இடங்களில் சுக்கிரன் + புதன் + குரு கூடினால் 28 வருடம் 

25) கேந்திரத்தில் பாவர் எட்டில் லக்கினாதிபதி 28 வருடம் 

26) லக்கினத்தில் ராகு + சூரியன் + சந்திரன் 12-ல் குரு இருந்தால் 28 வருடம்

27) எட்டில் சூரியன்,  மூன்றில் சந்திரன், சனி + பாவர் கூடினால் 29 வருடம்

28) ஒன்பதில் தேய் சந்திரன் ,கேந்திரத்தில் எட்டோன், எட்டில் பாவர், லக்கினாதிபதி பலமின்றி இருந்தால் 30 வருடம் 

29) இரண்டில் செவ்வாய், பன்னிரண்டில் சந்திரன்,  ஏழில் ராகு, எட்டில் குரு இருந்தால் 30 வருடம் 

30) கேந்திரத்தில் எட்டோன், லக்கினம் பலமின்றி இருந்தால் 30 வருடம்

31) கேந்திரத்தில் குரு + சுக்கிரன், ஆபோக்லீயத்தில் லக்கினாதிபதி + பாவர், தேய் சந்திரன் 36 வருடம்

32) மிதுன லக்கினத்தில் சூரியன்,  2 - 12-ல் பாவர் குரு பார்வையின்றி இருந்தால் 37 வருடம்

33) கேந்திரத்தில் பாவர்,  12-ல் லக்கினாதிபதி,  லக்கினத்தில் எட்டோன் இருந்தால் 38 வருடம்

34) ஸ்திர லக்கினத்தில் எட்டோன்,  எட்டில் சுபர் இருந்தால் 40 வருடம்

35) கேந்திரத்தில் எட்டோன்,  லக்கினத்தில் செவ்வாய்,  ஆறு (அ) மூன்றில் சனி + சூரியன் இருந்தால் 40 வருடம் 

36) லக்கினத்தில்வர்கோத்தமச் சந்திரனை சுபரும் & பாவரும் பார்க்காமல் , ஆறு (அ) எட்டில் லக்கினாதிபதி எட்டோன் அங்கிஷத்தில் பாவருடன் இருந்தால் 50 வருடம்

37) சுபரின் அங்கிஷத்தில் லக்கினாதிபதி , ஆறு (அ) எட்டில் எட்டோன் இருந்தால் 50 வருடம்

38) லக்கினத்தில் உபய ராசியின் அதிபதி, உபய ராசியில் சந்திரன்,  (அ) 12-ல் சனி + சந்திரன் இருந்தால் 52 வருடம்

39) எட்டில் லக்கினாதிபதி, சந்திரனுக்கு எட்டில் சந்திரன் நின்ற வீட்டின் அதிபதி இருந்தால் 54 வருடம் 

40) 4-ஆம் வீட்டில் குரு ஆட்சி பெற்றிருக்க,  எட்டில் ராகு + செவ்வாய் இருந்தால் 54 வருடம் 

41) ஆறு எட்டில் பாவர்கள் 58 வருடம் 

42) எட்டோன் ஆட்சியில், இரண்டில் சந்திரன் + பாவர் இருந்தால் 58 வருடம்

43) கும்ப லக்கினம், எட்டில் குரு இருந்தால் 60 வருடம்

44) லக்கினத்தில் சனி, எட்டில் குரு , பத்தில் சூரியன் இருந்தால் 60 வருடம் 

45) லக்கினத்தில் சனி, 4-ல் சனி, ஏழில் செவ்வாய்,  பத்தில் சூரியன் + குரு + சுக்கிரன் + புதன் 60 வருடம்

46) சந்திரனுக்கு கேந்திர & திரிகோணத்தில் எட்டோன் பாவனாக இருந்தால் 65 வருடம்

47) பாவரங்கிசையில் எட்டில் சுபர், கேந்திரத்தில் பாவர் இருந்தால் 66 வருடம் 

49) லக்கினத்தில் சுபர், கேந்திரத்தில் சந்திரன், திரிகோணத்தில் சனி இருந்தால் 74 வருடம்

50) ஐந்தில் நாலோன் + செவ்வாய் , ஏழில் சூரியன், நீச சந்திரன் சனி இருந்தால் 75 வருடம்

51) தனுசு லக்கினத்தில் குரு, சந்திரன் + செவ்வாய் + ராகு கூடினால் 75 வருடன் 

52) கேந்திரத்தில் குரு + சந்திரன் சுபர் பார்வையுடன் 79 வருடம்  

53) லக்கினம் முதல் ஆறு வீடுகளில்  சுபர் இருக்க ,  ஏழு முதல் 12-ஆம் வீடுகளில் பாவர் இருந்தால்  80 வருடம் 

54) 11-ல் இருந்த அங்கிசாதிபன் அவ்வீட்டிலிருக்க அந்த வீட்டின் அதிபதி கேந்திரத்தில் இருந்தால் 80 வருடம் 

55) ஆறு எட்டில்  லக்கினாதிபதி + சந்திரன் + குரு,  3 + 11-ல் பாவர் இருந்தால் 96 வருடம்

56) லக்கினாதிபன் பலத்துடன் சுபர் பார்வை பெற்று கேந்திரத்தில் 100 வருடம் 

   இங்கு கூறப்பட்டுள்ள விதிகள் சாதக அலங்காரத்தில் உள்ளவைகள்.

குறிப்பு  ;-

வாசகர் & ஜோதிட ஆர்வலர்கள்

மேலே கண்ட விதிகள் சிலருக்கு பேருந்தி வரின்  அருகில் உள்ள ஜோதிட நண்பர்களின் ஆலோசனையை படி அறிந்து கொள்ளவும். நன்றி 

சூரியஜெயவேல் 9600607603



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்