சாதக அலங்கரத்தில் திருமணம்
சாதக அலங்காரத்தில் திருமணம்
திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.
களத்திர யோகம் (ஆண் ஜாதகத்தில் அறிவது)
1) சுக்கிரன் குரு சேர்ந்தால் நற்குலபெண்
2) சுக்கிரன் சூரியன் அல்லது செவ்வாய் சேர்ந்தால் வீரப் பண்புடையவர்
3) சுக்கிரன் சந்திரன் அல்லது சேர்ந்தால் வியாபார தன்மையுள்ள பெண்
4) சுக்கிரன் சனி சேர்ந்தால் உழைக்கும் வர்க்க பெண்
5) சுக்கிரன் ராகு அல்லது கேது சேர்ந்தால் அழகற்ற பெண்
6) ஆறு ஆறு எட்டு பன்னிரண்டில் ஏழாம் அதிபதி சனியுடன் இருந்தால் விதவைப் பெண்
7) ஆறு எட்டு பன்னிரண்டில் அதிபதி ஏழாம் அதிபதி ராகு கேதுவுடன் இருந்தால் கீழ்இணப் பெண்
8) சுப கிரகங்கள் சுபர் வீட்டில் இருந்து ஏழோன் சுக்கிரன் சேர்ந்திருக்க, பத்தாம் அதிபதி பலமுடன் கூடியிருந்தால் மோகன பெண்
9) ஏழாம் அதிபதி குரு கூடி இருக்க சுக்கிரன் பலமுடன் இருந்தால் தர்மவதி பெண்
10) சுக்கிரன் சுபனாகிச் சுபர் பார்வை பெற்று உத்தம பெண்
11) சிம்மத்தில் சுக்கிரன் பனிரெண்டில் சுக்கிரன் இருந்தாள் மத்திம பெண்
12) ஏழாம் அதிபதி குரு பலத்துடன் சுக்கிரன் சேர்ந்து இரண்டாம் அதிபதி நட்பு அங்கிசம் இருந்தாள் அழகிய பெண்
13) ஏழில் சுக்கிரன் செவ்வாய் சேர்ந்தால் விதவைப் பெண் (பல பெண்களை சேர்வர்கள்)
14) ஏழில் சந்திரன் சுயாங்கிசத்தில் அழகிய பெண்
15) ஏழாம் அதிபதி பாவிகளுடன் சேர்ந்தால் & பார்த்தாள் பாவி மனைவி (தீய காரியவாதி)
16) ஏழில் சூரியன் இருந்தால் புத்திர பாக்கியம் குறைந்த மனைவி. (சுபர் சேர்க்கை பார்த்தால் நலம் தரும் )
17) எழில் பரிவேடன் இருந்தால் சண்டைக்காரி
18) ஏழில் செவ்வாய் இருந்தால் குழந்தைப் போறு இல்லாதவள்.
19)ஏழில் வளர்பிறை சந்திரன் இருந்தால் குணவதி புத்திரவதி.
20) எழில் வியாதிபாதன் இருந்தாள் கர்ப்பம் தரிக்காது
21). உச்சாங்கிசத்தில் குரு இருந்தால் இளமையான அழகிய மனைவி
22) இரண்டாம் வீட்டை பாவ கிரகங்கம் பார்த்தாள் ஏழை குடும்ப பெண்
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment