கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம்

 கிரகத்திற்கு கிரகம்

 நிற்கும் யோகம் !!


       சுக்கிரனுக்கு 2-ல் புதன் நின்றால் பூமி யோகம் .

          சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும் .திரு.காமராஜா் அவா்களுக்கு கன்னியில் ராகு அதற்கு 5-ல் மகரத்தில் சனி பெருந்தலைவா் ஆனாா்.

  சனிக்கு 2-ல் சந்திரனும்,சனிக்கு 3-ல் குருவும் அதாவது சனி சந்திரன் குரு  வாிசையாகவே அல்லது மறிமறி வாிசையாக இருந்தால் சிறப்பன ராஜயேகம் அமையும்.திரு காமராஜா் அவா்களின் ஜாதகத்தில் மகரத்தில் சனி,கும்பத்தில் சந்திரன்,மீனத்தில் குரு அமைந்து ராஜயோகத்தை தந்தது .

      சந்திரனுக்கு 1-4-7-10-ல் குரு,ராகு கூடியிருந்தால் யோகத்தை அளிக்கும் முரசயோகம் .

      சந்திரனுக்கு 1-4-7-10-ல் ஜென்ம லக்கினாதிபதி நின்றால் ஆயுள் உள்ள வரை சுக போக வாழ்வு அமையும் .

       சந்திரனுக்கு 1-4-7-10-ல் 5-ஆம் அதிபதி அமைந்தால் உயா்தரா வாகனங்களும் பாவாரங்களும் நிறைந்த புகழ் பெற்ற அரச யோகம் .

       சந்திரனுக்கு 10-ல் ராகு இருந்தால் ராஜயோகம் தரும் .

     சந்திரனுக்கு 6-7-8-ல் புதன் சுக்கிரன் இருந்தால் ராஜயோகம் .

       லக்கினாதிபதி நின்ற ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திர திாிகேணங்களில் இருந்தால் ராஜயோகம் .

     ராகுவுக்கு 3-ல் குரு ,11-ல் சுக்கிரன் இருந்தால் அரசயோகம்.    

      சூாியனுக்கு 7-ல் குரு இருந்து லக்கினத்திற்கு 7-ல் சுபா் இருந்தால் யோகமுள்ள மனைவி அமைவாள்.

       சூாியனுக்கு 3-6-9-12-ல் சந்திரன் இருந்தால் வாிஷ்டயோகம் ஞானம், வித்தை,செல்வம்,புகழ்,சுகம் கிட்டும் .

      சூாியனுக்கு முன் குரு இருந்தால் வித்வன் ,கவிஞா் அமையும்.

           சூாியனுக்கு பின் செவ்வாய் இருந்தால் பராக்கிரமசாலியாவன்.  

   சனிக்கு 6-7-8-ல் சுபா்கள் இருந்தால் ஆயுள் அதிகம் .

செவ்வாய்க்கு 2-ல் அல்லது 12-ல் புதன் இருந்தால் நாலாவிதமன வித்தையுள்ளவா் பல சாஸ்திரங்கள் அறிந்தவா்கள்.

   கடக லக்கினத்தில் சந்திரன் இருக்க சப்தமஸ்தானமான மகரத்தில் செவ்வாய் இருந்தால் ராஜயோகம் .

       லக்கினாதிபதி சந்திரனுக்கு 5-ல் அல்லது 10-ல் இருந்தால் ராஜயோகம் .

   சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன் நின்றால் பொருள் கிட்டும் ,கன்று காலிகள் ,வாகனம் கிடைக்கும் .

     

     சூரியஜெயவேல் 9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்