பெண்களின் ஜாதக ரகசியம் 3
பெண்களின் ஜாதக ரகசியம் 3
குருவும் , சுக்கிரனும் ( அல்லது ) சூரியனும் , சந்திரனும் லக்கினத்தில் பலமற்று இருப்பது இளமையில் விதவையாவாள் அல்லது கணவனை பிரிந்து வாழ்வாள் .
7 - ம் பாவத்தில் மூன்று பரவிகள் இரு கூடியிருந்தால் கணவரை இழக்கும் நிலை ஏற்படும் .
6 - ம் அதிபதியின் தொடர்பு 4 - ஆம் அதிபதி ( அல்லது ) 4 - ஆம் பாவத்திற்கு ஏற்பட்டால் ஒழுக்கக் குறையுடையவர்கள் .
லக்கினாதிபதியும் 7 - ஆம் அதிபதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெறுமானால் மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும் .
குருவும் , சுக்கிரனும் லக்கினம் அல்லது ராசியைப் பார்த்தால் இளமையில் திருமணம் இரும் நடக்கும் .
குருவும் , 9 - ம் அதிபதியும் பலமுடன் அமைந்தால் ஆண்குழந்தை பிறக்கும் .
தேள்இடபம் கன்னியெனும் மூன்றில்
கலைமதிமே வில்புத்தி ரர்அற்பம்தான் காணும் !
(இ-ள்) ரிஷபம் , கன்னி , விருட்சிகம் ஆகிய ராசிகளில் ஒன்றில் சந்திரன் நின்றிருந்தால் ஜாதகிக்கு ஆண்குழந்தைகள் குறைவுடன் அமையும் .
மகரம் , கும்பம் லக்னமாக அமைந்து 5 - 9 - ல் சுக்கிரன் ஜாதகி மலடியாவாள் .
ரிசபத்திற்கு ஐந்தாம் வீடு கன்னி , ஜாதக கன்னிக்கு ஐந்தாம் வீடு மகரம் , இரண்டு வீடுகளும் அலிக்கிரகத்தின் வீடுகளாகும் . பெண் ராசிகளாகும் . விருட்சிகம் ஐந்தாம் அவை வீடு : மீனம் பெண்ராசியாகும் . அனுபவத்தில் ரிசபம் , கன்னி சரியாக உள்ளது .
3.6 - ல் பாவிகள் இருந்தால் ஜாதகி விதவையான பின்பு வாழ்க்கையில் மிகவும் முன்னேற்றம் காண்பான் கணவன் உயிரோடு இருக்கும் போது அனுபவித்த வாழ்கையை விட மிகப் பபலமடங்கு சந்தோசமாக சுகபோக வாழ்கை அமையும்.
பெண்களுடைய ஜாதகத்தை தகுந்த பெரியோர்களின் ஜோதிடப் ஆலோசனைப்படி முடிவு செய்ய வேண்டும்.
லக்கினம் அல்லதடாசியில் கிரகம் இருக்கும் பலன்கள்
சூரியன் இருந்தால் மெலிந்த உடலும் , வறண்ட தோல் உள்ளவள் ,
சந்திரன் இருந்தால் சிறப்பான அழகு வனப்புடன் இருப்பாள் , தேய் சந்திரன் இருந்தால் மெலிந்த உடல் , வயதான தோற்றம் உள்ளவர்கள் ,
செவ்வாய் இருந்தால் ஆண்கள் போன்று இருப்பாள் . வசீகரத்தன்மை குறைவுடன் இளமையாக இருப்பாள் ,
புதன் இருந்தால் இனமைத்தோற்றம் அமையும் . கருநீலநிறம் வனப்பும் , வக்கிரத் தன்மையுடையவர்கள் .
குரு இருந்தால் அழகுடன் உடல் உறுதியுடன் பெரிய உடல்வாகுடன் இருப்பார்கள் .
சுக்கிரன் இருந்தால் சிறந்த அழகி , அன்புடன் இருப்பாள் .
சனி இருந்தால் வயதான தோற்றம் உள்ளவள் அதிக கருமை நிறமுடன் இருப்பாள் .
ராகு இருந்தால் அழகுடன் ல் இருந்தாலும் முகத்தில் தழும்புகள் இருக்கும் .
கேது இருந்தால் அழகற்றவள் , சுத்தமில்லாதவள் .
கிரகங்ககள் ராசிகளில் உள்ள தொடர்பினால் பலன்களில் மாற்றம் ஏற்படும் . அழகு , அழகற்ற தன்மை மாறும் . நமது பிறந்த ஜாதகத்தில் அந்தஸ்தும் , புகழ் , மனை, வீடு, மக்கள் உயர்கல்வி . நல்லவர்கள் , தொழில்கள் , கெட்டவர்கள் அனைத்தையும் ஜாதகத்தின் அறியலாம் . அதற்கு ஏற்றது போல நடந்து கொண்டால் வாழ்வில் வளமைகள் கிடைக்கும் .
தொடரும் -----------
சூரியஜெயவேல்
9600607603
Comments
Post a Comment