பெண்களின் ஜாதக ரகசியம்
பெண்களின் ஜாதக ரகசியம்
வண்ணக் கலையழகு மாளாத சிலையழகு
கண்ணிற் கவியழகு கற்பனைக்குப் பேரழகு
பின்னற் சடையழகு பேதலிக்கும் மார்கபழகு
சின்ன நடையழகு சிங்காரக் கையழகு
மன்னம் படை கூட்டி முகப்பளக்கும் மெய்யழகு
எண்ணத் தொலையாத இடையழகு தேவனகம் பெண்ணைப் படைத்ததற்குப் பின்னழகே மண்ணழகு --கவிஞர் கண்ணதாசன்
சிலரைப் பார்த்தவுடன் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என தோன்றும் . இவர் இவ்வளவு அழகா ! எண்ணத் பெ தோன்றும் .
ஆனால் சிலரை பார்க்க சகிக்க முடியவில்லையே எண்ணுகிறோம் . அழகை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம் .
அழகு என்பது பார்க்கப்படும் இடத்தில் இருக்க வேண்டும் . இந்த அழகுக்கு ஈடுஇல்லை என்று வருணிக்கின்றன . இதற்குக் காரணம் என்ன ? என்று பார்க்கலாம் ஜோதிட சாஸ்தித்தில்
ஜென்ம லக்னம் , சந்திர ராசி இவை இரண்டும் இரட்டை ராசிகளாக அமைந்து இருந்தால் ஜாதகி நல்ல அழகுடன் இருப்பார்கள் .
உள்ளபிறை லக்கினமும் சன்மலக்னம் தானும்
உறுமிரட்டை யாகில்வடி வுடையமயிலாகும் !
(இ-ள்) ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் , ஜென்ம லக்கினமும் இரட்டைப்படை ராசிகளாக அமைந்தால் அழகு சுந்தரியாக வலம் வருவாள் .
சந்திரன் நின்ற ராசியும் , லக்னம் , ராசிக்கதிபதியும் பெண் ராசியில் இணைந்தாலும் அழகானவள் .
லக்னம் ராசியும் , உபய அமைந்தால் பார்ப்பவரை மயங்க வைக்கும் அழகுடையவர்கள் . மேலும் சுபரால் பார்க்கப்ட்டால் இவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் .
லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அனைவரையும் கவரும் அழகுடையவள் . பெண் ராசியாக இருந்தால் அவள் அழகுக்கு நிகர் எவரும் இல்லை எனலாம் .
கன்னிகேள் சன்மத்தில் பிறை சுங்கன் இருக்கி
கமழ்பெருமை யுடன்சுகியாய் காசினியில்
(இ-ள்) லக்னத்தில் சந்திரன் சுக்கிரன் இருந்தால் கற்பனைக்கு எட்டாத அழகுடையவள் . சுகபோக வாழ்வு அமையும் .
உருவதய லக்கினத்து இந் திருக்கில் அழ குள்ளால்
ஓரேழில் சசிஉறப்பார்த் தாஅழகுள் ளானே !
(இ-ள்) லக்கினத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகி அழகி - ஏழில் சந்திரன் இருந்தால் கணவன் அழகானவன் .
புதன் , சந்திரன் , லக்கினத்தில் இருந்தால் பல சாஸ்திரங்கள் கற்றளவள் , மிகவும் அழகுடையவள் .
இரட்டை ராசி லக்னமாகி அதில் பலம் பெற்று குரு , சுக்கிரன் , புதன் இருக்க பிறந்த பெண்கள் சாத்வீக குணம் உடையவராகவும் , உலக விஷயங்களும் அறிந்தவளாய் கலை ஞானங்களில் வல்லலாக புகழ் பெற்று விளங்குபவளே
பெண்கள் ஜாதகத்தில் குரு ,புதன் சுக்கிரன் இருந்தால் மிகவும் அழகானவள் ,நற்குணமுடையவள்
லக்னத்தில் புதன் , சுக்கிரன் இருந்தால் அழகுமங்கையாவாள் .
ரிசபம்/கடகம்/கன்னி/விருட்சிகம்/ மகரம்/மீனம் இந்த ராசிகள் லக்கினமாவும் அல்லது சந்திர ராசியாக அமைத்திருந்தால் மென்மையானவர்கள் அழகு அச்சம்,ஞானம், பயிர்ப்பு, அனைத்தும் அங்கலட்சணம் அமைந்திருக்கும் .
சுக்கிரன் , மேல்கண்ட ராசிகளுக்கு புதன் , குரு வளர் சந்திரன் தொடர்புடன் இருந்தால் கனவு கன்னியாக இருப்பான் .
லக்கினத்திற்கு சனி,ராகு ,கேது, தொடர்பிருந்தால் வாலிபத்தில் கிழத்தன்மையுடன் இருப்பாள்.
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் . தனுசு , கும்பம் இந்த ராசிகள் லக்கினமாக அமைந்திருந்தால் ஆண் தன்மையுள்ளவர்கள் , முரட்டுத் தன்மை உடையவன் , அழகற்றவர்கள்
ராசிக்கு சனியில் தொடர்பிருந்தால் , ஜாதகி வயதானவன் போல் காட்சியளிப்பான் செவ்வாய் தொடர்பிருந்தால் ஜாதகி ஆண் தன்மை உள்ளவள். ராகு தொடர்பிருந்தால் முகத்தில் பல தழும்புகள் இருக்கும்.
கொள்ளுமிரு மனைஒற்றை ஆகில் ஆண்சொ ரூபி
(இ-ள்) சந்திரன் நின்ற ராசியும் லக்கினமும் ஒற்றைப்படை ராசியாக அமைந்தால் ஜாதகியின் மென்மைத் தன்மை குறைந்து ஆண்தன்மை தன்மையுடன் இருப்பாள்.
கள்ளமுறும் பாவர் அந்தராசி
ராசி இரன் டிணிலே கலந்துதிக்கில் கண்டிடின்பொல் லாப்பாவக
(இ-ள்) ஜெனன லக்கினத்தில் , சந்திரனும் பாவிகள் தொடர்பிருந்தால் அழகற்றவன், தீய சிந்தனையும் , செயல்களும் உடையவளாக இருப்பாள்.
ஆகரெட்டை ராசிதனில் குருசெவ்வாய் புந்தி
அதிபலமாய் இருந்தக்கால் அவனியிமேற் குலமும்
வகுடனே பலகலைகள் அறிந்திடுநற் குணமும்
முக்கியமா மயிலும் ஆகுவளே!
(இ-ள்) இரட்டை ராசிகளில் ரிஷபம்,கடகம், கன்னி,விருச்சிகம், மகரம், மீனம் இவைகளில் குரு/புதன்/செவ்வாய் பலமுடன் இருந்தால் ஜாதகி உயர் குடும்பத்தில் பிறந்தவர்கள். அதிக கலைத்திறன் அறிவார்கள். நற்குணமுள்ளவள்.பெண்ணியம் மிகுந்தவள் மயில் போன்றவ.
தொடரும் ------------
Comments
Post a Comment