ஒரைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
ஒரைகளை நினைவில் வைத்துக் கொள்ள எளிய வழி
சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
ஒரு வாரம் என்பது ஏழு நாட்களைக் குறிக்கிறது . ஒவ்வொரு நாளையும் , ஒவ்வொரு கிரகத்தின் பெயரையும் வைத்து தான் அழைக்கிறோம் . ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தை கிரகங்களும் , மணிக்கொருவராக ஆட்சி செய்கின்றன . ஒரு நாளுக்குள் ஆட்சி செய்யும் கிரகங்களின் வரிசை , கிழமைகளின் குறிப்பிடும் வரிசைப்படி இல்லாமல் , சற்றே மாறுபட்டு இருக்கும் .
ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது.
உதாரணமாக , ஞாயிற்றுக் கிழமையை ஆட்சி செய்யும் சூரியன் , அந்த நாளின் அதிபதியாகும் . சூரிய உதயம் ஆனதும் , முதல் ஒரு மணி நேரத்தை , சூரியன் ஆட்சி செய்வான் . அடுத்த ஒரு மணி நேரத்தை , கிழமையின் வரிசைப்படி சந்திரன் ஆளாமல் , சுக்கிரன் ஆள்வான் . இதே போல் ஒவ்வொரு மணி நேரமும் சிறிது மாறுபாட்டுடன் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன . இதை நினைவாற்றலுடன் மனதில் பதிய வைத்துக் கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம் .
முதலில் ஜாதகக் கட்டத்தை மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள் . ஏழுக் கிரகங்களின் சுபக்கிரகங்கள் , பாவக் கிரகங்கள் எதுவென , உங்களுக்குத் தெரிந்திருக்கும் . தெரியவில்லை என்றாலும் பராயில்லை . இப்போது தெரிந்து கொள்ளுங்கள் . பாவக்கிரகங்கள் , சூரியன் , செவ்வாய் , சனியாகும் . சுபக்கிரகங்கள் சந்திரன் , புதன் , குரு , சுக்கிரன் ஆகும் . நாம் நினைவில் வைத்திருக்கும் ஜாதகக் கட்டத்தில் , பாவக்கிரகங்களை அதன் உச்ச வீட்டில் நிரப்புங்கள் . முதலில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைவான் . அதனால் , சூரியனை மேஷத்தில் நிரப்பவும் . அடுத்து சனியின் உச்ச வீடான துலத்தில் சனியை நிரப்பவும், அதன் பின் மூன்றாவது பாவக்கிகமான செவ்வாயை அதன் உச்ச விடான மகரத்தில் நிரப்புங்கள்.
பாவக்கிரங்களை நிரப்பியது போல் , சுபக்கிரகங்களை , அதன் முதல் ஆட்சி வீடுகளில் நிரப்புங்கள் . சுக்கிரனை ரிஷபத்திலும் , புதனை மிதுனத்திலும் , சந்திரனைக் கடகத்திலும் , குருவை தனுசுவிலும் நிரப்புங்கள் . இங்கே கிரகத்தை இராசிகளில் அடைத்துள்ளதைப் போலவே , ஞாயிற்றுக் கிழமைக்கு , முதல் ஒரு மணி நேரம் ( சூரிய உதயம் துவங்கி ) சூரியனும் , அடுத்த ஒரு மணி நேரம் சுக்கிரனும் , அடுத்து புதனும் , சந்திரனும் , சனியும் , குருவும் , செவ்வாயும் ஒவ்வொரு மணி நேரத்தை ஆட்சி செய்வார்கள் . இதே கிரக வரிசைப் படி தான் ஒவ்வொரு நாளும் , நாளின் அதிபதியை முதலாக வைத்து , அதன்பின் உள்ள கிரக வரிசைப்படி , ஒவ்வொரு மணி நேரத்தையும் , ஒரு கிரகமாக ஆட்சி செய்யும் .
இவ்வாறு இந்த அட்டவணையை மனதில் பதிய வைத்துக் கொள்வது மிக எளிதாகும் .ஓரை என்பது பொதுவானதாகும் . நம் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலிமையைப் பொறுத்தே , அதாவது நம் ஜாதகத்தில் சூரியன் பலமுடன் இருந்தால் அன்றாடம் நம் பார்க்கும் சூரிய ஓராதிபதியும் பமுடன் இருக்கும். ஜாதகத்தில் பலம்குறைந்திருந்தால் தினமும் பலம் குறைந்த தின வலுக்குறைந்ததாக இருக்கும் ஒரைகளில் சுப காரிங்களை செய்யாமல் தவிர்ப்போம்.
தொகுப்பு
சூரியஜெயவேல்
9600607603
Comments
Post a Comment