பெண்களின் ஜாதக ரகசியம்
பெண்கள் ஜாதக ரகசியம் (2 )
கிரக ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்
சூரியன் கண்கள் சிறிது மஞ்சள் கலந்து சிவந்திருக்கும் . மெலிந்த உடல்வாகு உள்ளவள் தலைமுடி குறைவாக இருக்கும் .
சந்திரன் கண்கள் அழகுடன் இருக்கும்.சிரித்த முகத்துடன் இருப்பாள். சிறந்த அழகுடன் இருப்பாள்,அனைவரிடமும் அன்புடனிருப்பாள்.
செவ்வாய் முரட்டுத் தனமுடைய உடல்வாகுடையவள் . உடலில் தழும்புகள் இருக்கும் . என்றும் ஒரே மாதிரியாக இருப்பாள். வயதானது போலத் தெரியாது ,
பெண்கள் பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6-8-12 - ஆம் அதிபதிகளின் சேர்க்கை செவ்வாய் பெறக் கூடாது .
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் சனி , ராகு , கேது சேர்க்கைப் பெறக் கூடாது .
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் சேர்க்கை ரிஷபம் , துலாம் , கன்னி , மகரம் , கும்பம் ராசிகளில் இருப்பின் பாதிப்பைத் தருவார்கள் .
செவ்வாயும் சந்திரன் சேர்க்கை நலம் தருவதில்லை .
செவ்வாய் பலமுடன் இருந்தால் பெண்களுக்கு அந்தஸ்து , பதவி தேடி வரும் .
செவ்வாய் பலம் குறைந்திருந்தால் மற்றவர்கள் அடக்கி ஆள நினைப்பார்கள் .
புதன் முகம் மாநிறமுடன் , அழகுடன் , கலையழகுடன் இருப்பாள் . உடல் சற்று மெலிந்து காணப்படும் .
குரு வட்டமான அழகான முகம் , பால் பருத்த உடல் வாகுடையவர்கள் . சுருள் , சுருளான தலைமுடி உள்ளவள்.
சுக்கிரன் பிறரை வசிகரிக்கும் தன்மையுடையவள் அங்க லட்சணம் பொருந்திய உடல் அழகுடையவாள் .
சனி வயதான முகத்தோற்றம் சுத்தமில்லாதவர்கள் , முகம் நீண்டு கண்கள் உள்வாங்கியிருக்கும் ஆண்தன்மை உள்ளவர்கள் எப்போதும் கவலையுடன் இருப்பாள் . தலைமுடி குறைவாக இருக்கும் .
ராகு பெரிய உடல்வாகுள்ளவர்கள் முகத்தில் தழும்புகள் இருக்கும் . அழகுடன் இருப்பாள்,நீண்ட தலைமுடி உள்ளவள்.
கேது விகாரமான முகம் , சுகாதார சுத்தமற்றவள் அழகு குறைந்தவள்
பிற கிரகங்கள் இணைந்தால் பலன்கள் மாறுபடும் .
சந்திரன் செவ்வாயில் திரியாம்சத்தில் சிறப்பான வேலைத் திறமையுள்ளவள் ,
புதனின் திரியாம்சத்தில் இருந்தால் அறிவாளி ; பல துண்கலை கற்றுணர்வாள் .
குருவின் திரியாம்சத்தில் இருந்தால் உத்தமி , குணவதியாவாள் .
சுக்கிரனின் திரியாம்சத்தில் இருந்தால் குணவதி மென்மைக் குணவதி ,
சனியின் திரியாம்சத்தில் இருத்தால் கணவனுக்கு துன்பம் தருவாள் .
இவைகள் பொது பலன் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ப திரியாம்ச பலன் மாறுபடும் . 2-5 - ஆம் அதிபதிகள் 1-4-7-10-11 - ல் இருந்தால் ஜாதகிக்கு சுக போக வாழ்க்கை அமையும் . ஆள் அடிமையும் யோகத்துடன் வாழ்வாள் .
5- ம் பாவம் குரு வீடாக அமைந்து , 5 - ம் அதிபதி குரு உச்சமுடன் இருக்குமானால் இளமையில் அழகான குணமுள்ள கணவரை திருமணம் செய்வாள் .
5 - ல் சுக்கிரன் பலமுடன் இருந்தால் செல்வந்தரை கணவனாக அடைவாள் .
5 - ம் அதிபதி சுபராகி 4 ல் இருந்தால் 9 ம் அதிபதி 11 - ல் இருந்தாலும் தந்தையின் சொத்து ஜாதகிக்கு கிடைக்கும் .
புதனும் , சந்திரனும் 7 - ல் இருந்தால் கண்வர் உயர்கல்வி பெற்றவர் .
8 - ல் ராகு அல்லது 8 - ம் அதிபதி 6 - ல் இருந்தாலும் , 6 - ஆம் பாவத்தை பார்த்தாலும் கர்ப்பப்பையில் கோளாறு ஏற்படும் .
1-7-8 - ல் சந்திரன் பாவியுடன் இருந்து , அழகில்லாதவர்கள்.
சுபர்களின் பார்வை இல்லாமல் இருந்தால் அழகில்லாதவர்ள்.
லக்கினாதிபதி , லக்கினம் ராசியாதிபதி , ஆண் ராசியில் இருந்தால் ஆண் போன்ற தோற்றம் உடையவர்கள் அதிகாரம் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள் பிறருக்கு அடிபணிய மாட்டார்கள் .
7- ல் சனி இருந்தாலும் , வயதான மவன் கணவர் அமைவார் . சனி பலமற்று இருப்பின் கணவரை ஏமாற்றும் குணமுடையவள்.
காணியாம் சனியமே பலத்திருக்க வேதான்
கணக்கன்மதி பிருகு)ஈனக் காரர்அகத் திருக்க
ஆணியந்த ராசிற்றை ஆகவுமே சன்மம்
அடுக்கமற்றோர் ஒற்றைகளில் அன்புடனே இருக்க
நீணிலத்தில் பிறந்தான் புருடனுக்கோ அரசாய்
நிருபதியாய்ச் சுவாமியாய் நேசமுடன் இருப்பாள்
(,சாதக அலங்காரம்)
(இ-ள்) பெண்களின் ஜாதகத்தில் சனி பலம் பெற்று இருக்க , சந்திரன் , புதன் , சுக்கிரன் இவர்கள் பாவிளின் வீட்டிலிருந்து. அந்த ராசிகள் ஒற்றை (ஆண்) ராசியாக அமைந்தால் , லக்கினமும் ஒற்றை (ஆண்) ராசியாக அமைந்தால் கனவனை அதிகாரம் செலுத்தும் அதிகாரிபோல் இருப்பாள் கனவனை அடிமைப்படுத்தி அன்புடன் இருப்பாள் ,
6 - ல் சுக்கிரன் குரு கூடியிருந்தால் நோயையுடைய கணவர் அமைவார் .
சுக்கிரனும் , சந்திரனும் 7 - ஆம் பாவத்தில் கூடியிருந்தால் வயது அதிகமுள்ள கணவர் அமையும் .
7 - ஆம் வீடு சுக்கிரன் வீடாக அமைந்தால் கணவர் . காம சுகம் அதிகம் உள்ளவனாக இருப்பான் .
7 - ஆம் அதிபதிக்கு 7 - ல் சுக்கிரன் , சுக்கிரனுக்கு 9 - ல் பாவிகள் இருந்தால் ஒழுக்கம் குறைந்தவளாக இருப்பார்கள் ,. சுபர்கள் பார்த்தால் யாருக்கு தெரியாமல் பிறருடன் இன்பம் காண்பாள்
7 - ல் செவ்வாய் , ராகு கேது இருந்தாலும் , 7 - ஆம் அதிபதியுடன் இணைத்திருந்தால் கணவரால் நன்மையில்லை .
9 - ஆம் அதிபதி சுபர்களின் வீட்டில் இருந்தால் மத்திம வயதில் விதவையாவாள்
8 - ல் புதன் , செவ்வாய் இருந்தால் 40 வயதில் விதவை .
8 - ல் பலமற்று , சந்திரன் இருந்தால் விதவையாவாள் .
இருசெவ்வாய் கதிர்கூடி எங்கேநின் றாலும்
இவளும்வா லிபம் தன்னில் அமங்கலையே யாவள்
(இ-ள்) செல்வாயும் சூரியனும் சேர்ந்து எவ்விடத்தில் இருந்தாலும் ஜாதகி இனம் வாதில் விதவையாவாள்.
உள்ளபல பாவர்எட்டில் இருந்தக்கில் விதவை
(இ-ள்) எட்டாம் வீட்டில் பாவிகள் இருந்தாலும் விதவையாவாள்.
இரண்டினில்நல் லோர்கள் மேவில்அவள்
கணவனைத்தான் விட்டுமுன்போய் விடுவள்
(இ-ள்) பெண்களின் ஜாதகத்தில் இரண்டில் சுபர்கள் இருந்தால் கணவனுக்கு முன்னே இறப்பாள்.
தொடரும் ---------
சூரியஜெயவேல்
9600607603
Comments
Post a Comment