ஜோதிட ரகசியம்
ஜோதிட ரகசியம்
ஒரு ஜாதகனுக்கு களத்திர ஸ்தான பலன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் 7 ம் பாவத்தைக் கொண்டோ அல்லது சுக்கிரனைக் கொண்டோ பலன் கூற இயலாது . களத்திரத்திற்கு சம்பந்தப்பட்ட பாவம் காரகர் பாதிப்பில்லாமல் பலமாக இருந்தால் நல்ல பலன் கிட்டும் . குடும்பம் ஏழாமிடம் லாபஸ்தானம் ஆகிய பாவமும் சுக்கிரனும் பலமாய் இருந்தால் ரூபாவதியான லட்சுமி கடாட்சம் நிறைந்த மனைவி அடைவான் , ஏகதாரம் , பலவீனம் ஆனால் பலதாரம் இதுபோல் மற்ற குறிப்பிட்ட பலன்களையும் காண்போம் .
கல்வி 2.4.5.11 வது பாவமும் , புதன் குரு பலம் பெற வேண்டும்
சகோதரம் - 3.11 வது பாவகம் செவ்வாய் குரு பலம் பெற வேண்டும் .
சுகம் - 2.4.7.12 பாவமும் , குருவும் பலம் பெற வேண்டும் .
பசுமாடுகள் 4 வது பாவமும் சுக்கிரனும் பலம் பெற வேண்டும் .
வாகனம் - 4.11 வது பாவமும் சுக்கிரனும் பலம் பெற வேண்டும் .
பூமி 2.4.10.11 வது பாவமும் செவ்வாயும் பலம் பெற வேண்டும் .
வீடு , கட்டிடம் : 4.10 வது பாவமும் , சுக்கிரனும் பலம் பெற வேண்டும் .
தாயார் 2.4.7 வது பாவமும் பகலில் பிறந்தவர்க்கு சுக்கிரனும் , இரவில் பிறந்தவர்க்கு சந்திரனும் பலம் பெற வேண்டும் .
தாய்மாமன் 5.6 வது பாவமும் , புதனும் பலம் பெற வேண்டும் .
புத்திரர் 5.7.9 வது பாவமும் , குருவும் பலம் பெற வேண்டும்
சத்ரு 6 வது பாவமும் , லக்கினாதிபதியும் பலம் பெறவேண்டும் சத்ரு பயமில்லை
கடன் 3.6.8 பாவமும் , செவ்வாயும் , சனியும் பலம் வேண்டும். கடன் கிடையாது
பங்காளி 6 வது பாவமும் வலிமொயானால் பங்காளிகள் நலம்
ஆயுள் ;- லக்கினாதிபதி அஷ்டமாதிபதி பத்தாமதிபதி சனிவலிமை பெற்றிடில் தீர்காயுள்
தந்தை :- 5,9 பாவமும் , பகலுக்கு சூரியன் , இரவுகு சனி பலம் தந்தைக்கு நலம் விளையும் .
ஜீவனம் : ( a ) 3,10,12 வது பாவமும் குரு சூரியன் சந்திரன் பலம் அரசு பணி MLA , MP ஆக வரலாம் .
( b ) 7.10,11 ஆம் பாவமும் , புதன் சனி பலம் வியாபரம்
( c ) 4.11 ஆம் பாவமும் சனியும் பலம் விவசாயம் :
யோகம் ;- 2,5,9,11 ஆம் பாவகமும் குரு சுக்கிரன் வலிமை :
விரையம் :- 12 வது பாவகமும் , சனியும் பலமானால் லாபம் உண்டு சம பலமானால் வரவுக்கேற்ற செலவுண்டு பலகீனமானால் அதிக செலவு நஷ்டம் உண்டு சுபர் சம்பந்தம் சுபச்செலவு பாபர் சம்பந்தம் வீண்செலவு யோகம் விரையம்
தொகுப்பு
சூரியஜெயவேல் 9600607603
Comments
Post a Comment