சனி பகவான்

 சனி பகவான்


 "நீல நிறத்தில், இருண்ட நீல நிறத்தில், நான்கு கைகளைக் கொண்ட, சூரியனின் மகன், பயத்துடன் தோன்றுகிறான், யாருடைய இயல்பு அமைதியானது, யாருடைய வாகனம் எருது, மெதுவாக நகரும், ஒரு திரிசூலம், வில் மற்றும் மெஸ்  அவரது கைகள், தலையில் நீல நிற சபையர் முகடு நகைகளுடன், வரங்களைக் கொடுக்கும் சைகையைச் செய்கின்றன, தெய்வீக சனி எப்போதாவது நமக்கு அருளைக் கொடுக்கட்டும். "


சனி ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்க்கு காரணம் இவரே . அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே.

இரவில் வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள் தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்ககூடிய செய்கை , இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

இவருக்கு 3,7,10 ஆகிய பார்வைகள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கி செல்வார்.

நிறம் - கறுப்பு

தேவதை - யமன்

பிரத்தியதி தேவதை -பிரஜாபதி

இரத்தினம் - நீலக்கல்

மலர் - கருங்குவளை

குணம் - குருரன்

ஆசன வடிவம் - வில்

தேசம் - சௌராஷ்டிரம்

சமித்து - வன்னி

திக்கு - மேற்கு

சுவை - கசப்பு

உலோகம் - இரும்பு

வாகனம் - காகம்

பிணி - வாதம் ,வாய்வு

தானியம் - எள்

காரகன் - ஆயுள்

ஆட்சி - மகரம், கும்பம்

உச்சம் - துலாம்

நீசம் - மேஷம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உறுப்பு - தொடை

நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பால் - அலி

திசை காலம் - 19 வருடங்கள்

கோசார காலம் - 2 1/2 வருடம்

நட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - வியாழன்

உபகிரகம் - குளிகன்

ஸ்தலம் - திருநள்ளாறு

சனியின் பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சனிபெயர்ச்சி என்றாலே பலருக்கும் பயம் வந்து விடுகிறது. 

சனி சூரியனின் மகனாவார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். சனி பகவான் தொழில்காரகன், ஜீவனகாரகனும் ஆவார்.

பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள். சனி திசை 19 வருடங்களாகும். சனி அலி கிரகமாகும். இவர் மெதுவாக நகர்வார்.

ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் இல்லை, 30 ஆண்டுகாலம் தாழ்ந்தவர்களும் இல்லை என்று கூறுவார்கள்.

சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். துலாம் ராசியில் உச்சமடைகிறார். மேஷம் ராசியில் நீசமடைகிறார். சிம்மம் சனிபகவானுக்கு பகை வீடு. சனி பகவான் 3,7,10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்.

சனி ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே . அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே.

இரவில் வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள் தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்ககூடிய செய்கை , இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

சனிபகவான் 3,6,9,11 ஆகிய இடங்களில் நின்றால் அந்த ஜாதகருக்கு ஆயுள் அதிகமாகும். எதிரிகள் தொல்லை ஒழியும். உலகில் புகழ் பெற்றவராக திகழ்வார். அரசாங்கத்தினால் லாபம் அதிகமாகும்.

ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டாகும்.

நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பால் அலி
நிறம் கறுப்பு
தேவதை யமன்
பிரத்தியதி தேவதைபிரஜாபதி
இரத்தினம் நீலக்கல்
மலர் கருங்குவளை
குணம் குருரன்
ஆசன வடிவம் வில்
தேசம் சௌராஷ்டிரம்
சமித்து வன்னி
திக்கு மேற்கு
சுவை கசப்பு
உலோகம் இரும்பு
வாகனம் காகம்
பிணி வாதம் ,வாய்வு
தானியம் எள்
காரகன் ஆயுள்
ஆட்சி மகரம், கும்பம்
உச்சம் துலாம்
நீசம் மேஷம்
மூலத்திரிகோணம் கும்பம்
நட்பு புதன், சுக்கிரன், இராகு, கேது
பகை சூரியன், சந்திரன், செவ்வாய்
சமம் வியாழன் உபகிரகம் குளிகன்
உறுப்பு தொடை
திசை காலம் 19 வருடங்கள்
கோசார காலம் இரண்டரை வருடம்
ஸ்தலம் திருநள்ளாறு, குச்சனூர்

தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர்.

சனி பகவான் உச்சம் ஆனால் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் மேலும் தொழில் துறை சார்ந்த சங்கங்களில் தலைமை பொறுப்புகளில் வருபவராகவும் ஆவார், கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செல்வாக்கு பெற்றவர், நீதிமானாக திகழ்வார், கர்ம வீரராக திகழ்வார், தன் இலட்சியத்தை நோக்கி பொறுமையாக நகர்ந்து வெற்றி அடைவார்

சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

சூரியஜெயவேல் 9600607603 



 

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்