திருமணம் நடக்கும் திசை

 திருமணம் நடக்கும் திசை 

              ஒருவருடைய பூர்வ புண்ணிய கர்ம வினைகளுக்கு ஏற்றவாறே அவர்களின் வாழ்வில் நல்லதும் கெட்ட பலன்கள் நடைபெறும்.

    ஒரு ஜாதகருக்கு திருமணம் என்றால் ஏழாம் அதிபதி , அவர் நின்ற வீட்டதிபதி, ஏழில் நின்றவர், ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள், நவாம்சத்தில் ஏழாம் அதிபதியின் நிலை, ஆண்களுக்கு சுக்கிரனின் & பெண்களுக்கு செவ்வாய்யின் நிலைகளை இவற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்கிறோம்.

கிரகங்களின் திசை

சூரியன்   - கிழக்கு திசையின் அதிபதி இந்திரன்

சந்திரன் – வடமேற்கு திசையின் அதிபதி வாயு , 

செவ்வாய் - தெற்கு திசையின் அதிபதி யமன்

 புதன்  - வடக்கு திசையின் அதிபதி குபேரன் 

  குரு -.வடகிழக்கு திசையின் அதிபதி ஈசாணன் 

சுக்கிரன்  - தென்கிழக்கு திசையின் அதிபதி அக்கி  

சனி  - மேற்கு திசையின் அதிபதி வருணன்  

ராகு & கேது – தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி


சூரியன் : - ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சூரியனாகில் வாழ்க்கைத்துணைவர்கள் கிழக்கு திசையிலிருந்து அமைவர்கள். ஆடம்பரத்தை அதிகமாக விரும்புவர்கள். தன்னை அலங்கரிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.தன்னைப் போல் அறிவாளி உலகில் இல்லை என்ற குணம் மேலோங்கி இருக்கும்.தற்புகழ்ச்சி கொள்வர்கள் பெருமை பேசிக் கொள்வதில் நேரத்தை செலவிடுவர்கள் . சினிமா, சங்கிதம் நாட்டியத்தில் விரும்புவர்கள்.பேராசை உள்ளவர்கள். இவர்களது பூர்வீகம் நல்ல  வழிவம்சமாக இருக்கும். தந்தையின் மீது அன்புடையவர்கள்.மற்றவர்களை மதிக்கும் குணம் குறைவுடன் இருக்கும்.புகழ்மாலை கிட்டும்.

சந்திரன் :- ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சந்திரனாகில்   வடமேற்கு திசையிலிருந்து வாழ்க்கைத் துணைவர்கள்அமைவர்கள்.எப்பொழுதும் கலகலவென பேசுவர்கள் தனக்குத்தானோ பாடிக் கொண்டிருப்பர்கள். அழகும், அமைதியும் மனக்கட்டுப்பாடுகள் உள்ளவர்கள். ஆனால் மனச்சஞ்சலம் இருக்கும் . துணைவர்களை சந்தேகிப்பர்கள். அனைவரையும் நேசிப்பர்கள்.வழிபாட்டில் சிறந்வர்கள். சில நேரங்களில் சோம்பேறித்தனம் இருக்கும். அறுசுவை உணவு விரும்பி உண்ணுவர்கள்.சிறப்பக சமைப்பர்கள்.செலவீனம் அதிமிருக்கும்.

செவ்வாய் :- ஒருருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி செவ்வாயாகில் தென் திசையிலிருந்து வாழ்க்கைத் துணைவர்கள் அமையும். இவர்கள் கோபமும் முரட்டுத்தனம் உள்ளவர்கள். மற்றொவர்களை எடுத்தெறிந்து பேசுவர்கள்.மறைமு காரியங்களைச் செய்வர்கள். காரியங்களைத் திறமையுடன் செய்வர்கள். சிக்கனம் உள்ளவர்கள். குழந்தை நலன் காப்பர்கள். அதிகாரம் உள்ளவர்கள். 

புதன் :-

 ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் அபதி புதனாகில் வடக்கு திசையிலிருந்து வாழ்க்கைத்துணைவர்கள் அமைவர்கள். அழகும்,செல்வக்கும்,செல்வச்செழிப்பும் உள்ளவர்கள். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். அறிவுத்திறமை உள்ளவர்கள். மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும். எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலைகளை செய்வர்கள். அழைகை ரசிப்பர்கள் வருங்காலத்தைப்பற்றிய தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்கள். சேமிப்பிருக்கும்.


குரு :- 

ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி குருவாகில் வடகிழக்கு திசையிலிருந்து வாழ்க்கைத்துணைவர்கள்  அமைவர்கள். ஒழுக்கம், அனைவரையும் மதிக்கும் குணம், ஆன்மீகத்தில் இடுபாடும்.சமூகத்தில் மதிப்பும்/மரியாதையும் அடைவர்கள். நற்ச்சிந்தனையும்.சாஸ்திரங்களில் இடுபாடும்.மகான்களின் தரிசனமும்,இறை வழிபாடும்,உறவினர் அன்பும் கிட்டும்.

சுக்கிரன் :- 

ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சுக்கிரனாகில் தென்கிழக்கு திசையிலிருது வாழ்கைத்துணைவர்கள் அமைவர்கள்.சிறந்த அழகும், பூரிப்பும் நிறைந்திருப்பர்கள். அச்சம், நாணம்,பயிர்ப்பு,முகமலர்ச்சி, சந்தோஷம் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருப்பர்கள் .அனைவரிடத்தில் அன்பும், பாசமுடன் இருப்பர்கள். விருந்தினர் உபசரிப்பு, குணத்திலும், அந்தஸ்திலும் சிறப்புடன் இருப்பர்கள்.


சனி:-

ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சனியாகில் மேற்கு திசையிலிருந்து வாழ்க்கைத்துணைவர்கள் அமைவர்கள் அழகில் குறைபாடு ,சுமாரன நிறம், முகத்தில் மூப்பு தெரியும்.சுறுசுறுப்பு குறைந்திருக்கும். வயது வித்தியாசம் இருக்கும்.நரைமுடி இருக்கும். தன்னம்பிக்கை உள்ளவர்கள். கௌரவத்தை காப்பர்கள். பொய்மை குணமிருக்கும்.வறுமை நிலை ஏற்படுத்தும். சுய முயற்சியில் முன்னோற்றம் அடைவர்கள். அடிமைத்தனம் இருக்கும்.


ராகு & கேது 

ஏழில் இருந்தால் தென்மேற்கு திசையிலிருந்து வாழ்க்கைத்துணைவர்கள்.அமைவர்கள்.எதிர்பார்புகள் ஏமாற்றத்தில் முடியும். அதிக ஆசையுள்ளவர்கள். வரட்டு கௌரவம் நிறைந்தவர்கள்.அதிக கற்பனை மிகுந்தவர்கள். பொருளாசை நிறைந்தவர்கள்.அடிக்கடி நோய்வாய்ப்படுர்கள்.


பிற கிரகங்களின் சேர்க்கைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் .


சூரியஜெயவேல்    9600607603





Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்