நவகிரக புரணம் செவ்வாய் பகவான்
நவக்கிரக புரணம்
செவ்வாய் பகவான்
அங்காரகன் என்ற செவ்வாாய் ஜோதிட சாஸ்்திரத்தில் செவ்வாயின் பங்கு மிகமிக இன்றியமையாதது என்றால் ஒரு போதும் தவறாகாது . அங்காரகனை ' மங்களன் ' என்றும் , ' செவ்வாய் ' என்றும் காரணபெயர் சூட்டி அழைக்கின்றனர் . அங்காரகனுடைய பிறந்த வாழ்கையின் நிலையை ஆராய்வேம்.
புராணங்களில் அங்காரகனின் வரலாறு நாம் பன்னிரெண்டு மணி நேரத்தைக் கடந்தால் ஒரு பகல் நேரத்தைக் கழிக்கின்றோம் . அதைப்போல + படைப்புத் தொழிலைத் தொழிலாகக் கொண்ட பிரம்மன் 14 மனுக்களின் காலத்தைக் கழித்தால் ஒரு பகல் பொழுதைக் கழிக்கின்றார் . ஓர் மனுவின் காலம் என்பது பல லட்சக்கண ஆண்டுகளாகும் . இவ்வாறு உண்டாகும் அனேக பகல் பொழுதுகளையும் , அனேக இரவுப் பொழுதுகளையும் பிரம்ம தேவன் கழித்தார் என்று புராண வாயிலாக நாம் அறிகிறோம் . அவ்வாறு நடந்து வரும் பிரம்மாவின் பகற்பொழுதில் இப்பொழுது நாம் ஏழாவது மனுவின் காலத்தில் ( மன்வந்த ரத்தில் ) இருக்கிறோம் . இந்த மன்வந்தரத்தின் மனு " வைவசுத மனு ' ' என்று கூறப்படுகிறார் . ( பிரம்மனின் மகன் மரிசிமகரிஷி , மரிசியின் மகன் கசியபர் , கசியபரின் மகன் சூரியன் , சூரியனின் மகன் வைவசுத மனு ] மனுவின் காலத்து சப்தரிஷிகள் வசிஷ்டர் , கசியபர் அத்திரி , ஜமதக்கினி , கௌதமர் , விசுவாமித்திரர் , பரத்வாஜர் எனப்படுவார்கள் . ஒவ்வொரு மனுவின் காலத்திலும் சப்தரிஷிகள் இந்திரன் முதலானோர் மாறுவார்கள் .
( அதாவது M.L.A க்கள் , மந்திரிகள் , ஜனாதிபதிகள் மாறுவது போல ) . இப்போதைய இந்திரன் " புரந்தன் ' ' எனப்படுவான் . இந்த சப்தரிஷிகள் எழுவரில். " பரத்வாஜர் ' 'என்ற முனிவர் ஏழாவதாகக் கருதப்படுகிறார் . அம்முனிவர் பூர்வத்தில் ஓர் அழகிய புத்திரனைப் பெற்றார் . அப்புத்திரன் தான் நவ கோள்களில் நடுநாயகமாக விளங்கும் , மங்களகாரகன் எனப்படும் அங்காரகனாவார் . அவரை " குஜன் ' ' என்றும் , ' ' பூமிக் காரகன் ' ' என்றும் , " சகோதரக்காரகன் ' ' என்றும் "கர்மாதிபதி" என்றும் செவ்வாய் என்றும் பற்பல பெயரில் காரணம் கருதி பெயரிட்டு அழைக்கின்றார்கள் . இவ்வாறு அங்காரகன் ஜோதிட உலகில் பற்பல காரகங்கள் வகித்த போதிலும் , அவரை ' பூமிக்காரகன் ' அங்காரகன் ' என்பதே சரியாக பொருந்தும் என்பதைக் கீழே உள்ள அவருடைய பூர்வீகப் பிறப்பு வளர்ப்பு போன்ற பயன்களால் அறியலாம் . நர்மதை நதிக் கரையில் பரத்வாச முனிவர் தபோவனம் அமைத்து , விநாயகர் முதலான சர்வ வல்லமை பெற்ற தேவர்களைத் தமது தவவலிமையினால் பூஜித்து வந்தார் . ஒரு நாள் நதியில் நீராடச் சென்றார் . அப்போது அந்த நதியில் ஒரு அழகிய தேவமாது தோழிகள் புடைசூழ நீராடிக் கொண்டிருந்தாள் . அவள் அழகைக் கண்டு பரவசமடைந்த பரத்வாசர் அவள் மீது அலவிலா ஆசை கொண்டார் . அவர் முனிவர் என்ற காரணத்தால் அப்பெண்ணை அணுகி அவளிடம் தமது விருப்பத்தை வெளியிட முடியாமலும் , அவளை விட்டுப் பிரிந்து செல்ல முடியாமலும் , தவித்துப் போய்விட்டார் . சிறின்ப வேட்கையால் உந்தப்பட்டுச் சிறிது நேரம் தவியாய்த் தவித்தார் "ஆயினும் ஆசை வெட்கம் அறியாது " என்ற தத்துவத்திற்கு இணங்க அவர் காமாந்தகாரத்துக்கு அடிமையாகி , தாம் ஒரு முனிவர் என்பதையும் மறந்து துணிவுடன் , அந்த தேவமாதை அணுகி , அவளைக் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்தார் . அவரது ஆசை நிறைவேறிய சமயம் அவர் தமது ஆண்மையை ஓர் சோதிவடிவில் வெளிப்படுத்தி விட்டுத் தபோவனம் நோக்கித் தவமியற்றச் சென்று விட்டார் . தேவமாது அந்த சோதியை ஏற்று , அதன் மூலம் கர்ப்பமுற்று , " ரிஷிபிண்டம் இரவு தங்காது " என்ற தத்துவத்தின்படி , அந்த சோதியை ஒரு குழந்தையாக ஈன்றெடுத்து , அதனை நதிக் கரையிலேயே விட்டு விட்டுத் தமது இருப்பிடம் நோக்கிச் சென்றுவிட்டாள் . ஈன்ற தாயும் , தந்தையும் கைவிட்டுச் சென்ற அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்துத் தமது சொந்த மகன் போல வளர்த்து வந்தாள் . வளர்ப்பு அன்னையான பூமாதேவியிடம் , அக்குழந்தை எவ்வித மாற்றத்தையும் காணாமல் கவலையற்றுச் சர்வ சுதந்திரமாகப் உலகம் முழுதும் ஓடி ஆடி விளையாடி , நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது . உரிய வயதை அடைந்து அக்குழந்தை , வளர்ப்பு அன்னையைப் பார்த்து , இதுவரையில் நான் எனது தந்தையைப் பார்க்கவில்லையே ! அவர் யார் ? எங்கு இருக்கிறார் ? என்பதை நீங்கள் இதுவரையில் கூறவில்லையே ! நான் உடனடியாக அவரைப் பார்க்க வேண்டுமே ! என்று கூறினார் . இனியும் உண்மையை கூறமாால் மூடி மறைத்து வைப்பது பயனில்லை என்பதை உணர்ந்த பூமாதேவி குழந்தைக்கு அவனுடைய பூர்வ கதையை உள்ளது உள்ளபடியே எடுத்துச் சொன்னாள் . அத்துடன் குழந்தையை அதனுடைய தந்தையான பரத்துவாசரிடம் கொண்டு போய் முறைப்படி எடுத்துச் சொல்லி குழந்தையை அவரிடம் சேர்த்து விட்டுத் திரும்பினாள் . குழ்ந்தையைக் கண்ட பரத்துவாசர் அதிக அழகுடன் ஜெக ஜோதியாக விளங்கிய தன் மகனைப் பார்த்து அதற்கு அங்காரகன் என்று பெயரிட்டு உச்சி முகர்ந்து உளமாற ஆனந்தப் பரவசம் அடைந்தார்.தமது மகனுக்கு சாஸ்திர முறைப்படி சகல கலைகளையும் கற்றுத் தந்தார் . அத்துடன் ஆன்மீக ஞானத்தையும் உப தேசம் செய்தார் . இவ்விதம் தமது மகன் சாஸ்திர ரீதியாக ஓர் சிறந்த அறிஞனாக அமைவது மட்டுமல்லாமல் அவன் ஒரு ஒப்பற்ற படைத்தலைவனுக்குண்டான சகல கலைகளையும் அறிய வேண்டுமென்ற நோக்கத்தில் வில் வித்தை , வாள் போர் , யானை ஏற்றம் , குதிரை ஏற்றம் , அஸ்திர வித்தை , போன்ற சகல விதமான போர்ப் பயிற்சிகளையும் தாமே நேருக்கு நேராக நின்று கற்றுத் தந்தார் . தவிரவும் , சர்வ வல்லமை பெற்ற வினாயக பகவானின் மூல மந்திரங்களையும் அனுஸ்தானங்களையும் கடைபிடிக்கும் வகையில் அவனுக்கு தக்க உபதேசம் செய்து வினாயகரை குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் இருக்க அருளினார் . தந்தையின் ஆணையைத் தலைமேற்கொண்டு , அடுத்தகணமே ஆணை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டார் . அங்காரகன் செய்யும் கடுந்தவத்திற்கு மெச்சிய விளையகர் , அவர் முன் தோன்றி , " குழந்தாய் ! உன் தவத்திற்கு மெச்சினோம் . உனக்கு என்ன வரம் வேண்டும் ? " என்று கேட்டார் . அதற்கு அங்காரகன் தங்கள் மீது எனக்கு என்றும் மாறாத பக்தியும் , தேவர்களுடன் சம அந்தஸ்து பெற்று அமர்ந்து , அமுதுண்ணும் பாக்கியமும் தந்தருள வேண்டும் . என்று வேண்டினார் . மனமிரங்கிய கணபதியும் , அங்காரகனுக்கு அவ்விதமே அனுகிரகம் செய்து , நவகிரகங்களுள் ஒருவராக இராசி வீடுகளில் சஞ்சாரம் செய்து அவரவர்கள் செய்யும் பூர்வீக புண்ணியங்களுக்கு ஏற்ப காரகம் செய்து அருள்பாலிக்கும் வரத்தை வழங்கினார் . விநாயகர் அவ்விதம் காட்சி தந்தருளிய அன்றைய தினம் செவ்வாய்க் கிழமையாக இருந்ததால் அங்காரகனை " செவ்வாய் " என்றும் . ' ' மங்களன் " என்றும் , பெயர் சூட்டி , மேலும் காட்சி தந்த அன்றைய தினம் செவ்வாய்கிழமையோடு கூடிய சதுர்த்தி திதியாக இருந்ததால் , அன்றைய தினத்தை " சங்கட சதுர்த்தி " என்றும் பெயர் சூட்டினார் . அன்று முதல் செவ்வாய்க் கிழமையில் வரும் சதுர்த்தி திதி ( வளர்பிறை ( அ ) தேய்பிறைகளில் வருவதாயினும் சரி ) அன்று பத்தியோடு உபவாசம் இருப்பவர்கள் , வேண்டிய வரங்களைப் பெறுவார்கள் என்று விநாயகர் அருள்பாலித்து மறைந்தார் . விநாயகர் காட்சி தந்த அந்த இடத்தில் , அவருக்காக அங்காரகன் ஒரு கோவில் எழுப்பி அதில் விநாயகர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து , அவ்விக்கிரகத்தை " சிந்தாமணி விநாயகர் ' என்று பெயர் சூட்டி ஆராதித்து நவகிரக பதவியைப் பெற்றார் . இவ்வாறு விநாயகரின் அனுகிரகம் பெற்ற அங்காரகன் விநாயகரின் சகோதரரான ( முருகக்கடவுளான ) கந்தசாமியின் அம்சமாகவே கருதப்பட்டு , ஜோதிட உலகில் அங்காரகன் உலவி வருவதால் அவரைச் சகோதரக் காரகன் " என்றும் , ஒரு படைத் தலைவருக்கு உண்டான சகல கலைகளையும் கற்றுணர்ந்து இருப்பதால் அவரை நவகிரகங்களுள் ' ' ஒரு படைத்தலைவர் ' ' என்றும் அழைக்கின்றார்கள் . அதற்கேற்ப அங்காரகனும் , பக்தர்களுக்குப் பலன்களை அருளுகிறார் .அங்காரகன் தமது குழந்தைப் பருவத்தில் பூமாதேவியிடம் சர்வ சுதந்திரமாக வளர்ந்து வந்த காரணத்தால் , அவர் பூமிக்கு ஆதிபத்யம் செலுத்தக்கூடிய சக்தியை பெற்றார் . இதன் காரணமாக , அங்காரகனை ' பூமிக்காரகன் ' என்று காரணப்பெயர் சூட்டி அழைக்கின்றார்கள்
அங்காரகனைப் பற்றி மற்றுமொரு புரணக்கதையுண்டு பிரம்ம ரிஷிகள் பலரில் , அதிக வல்லமை பெற்றவர் தஜாபிரஜாபதி ஆவார் . அவர் சிவபெருமாஜடைய மாமானாராவார் . அதாவது , சிவசக்தியாகிய தாட்சாயணின் தந்தையே இந்த தஜாபிரஜாபதி ஆவார் .
நீண்ட காலமாக , சிவபெருமானுக்கும் தஜாபிஜாபதிக்கும் ஜென்மப்பகை உண்டு . ஒரு சமயம் தஜாபிரஜாபதி ஓர் இராஜ சுய யாகம் நடத்தினார் . அதற்கு ,சிவனுக்கும் தமது மகளான தாட்சாயணிக்கும் அழைப்பு அனுப்பாமல் மற்ற தேவர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பினார் . தமது தந்தை நடத்தும் ராஜசுய யாகத்திற்கு தமக்கு அழைப்பு அனுப்பாவிட்டாலும் தாம் எப்படியும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று துடியாய் துடித்தார் . சிவபெருமான் எவ்வளவு தூரம் தடுத்தும் அதனை இலட்சியம் செய்யாமல் தமது தந்தை நடத்தும் யாக சாலைக்கு தாட்சாயணி சென்றார் தமது வரவைக் கண்ட தஜாபிரஜாபதி அலட்சியப் படுத்தி தாட்சாயணிக்கு தக்க வரவேற்பு கொடுக்காமல் அவமரியாதை செய்தார் . தமது தன்மானம் பாதிக்கும் நிலைக்கு ஆளான தாட்சாயணி சிவபெருமானுடன் திரும்பி வந்து அவருடைய நெற்றிக் கண் அக்கினிக்கு இலக்காகி சாம்பலானார் . தஜாபிரஜாபதியின் அலட்சியற்திற்கு பாடம் கற்பிக்கும் வகையில் சிவபெருமான் அக்கினி வீரபத்திரர் என்ற ஒரு சக்தி வாய்ந்த தேவனை சிஷ்டித்து அத்தேவனை தஜாபிரஜாபதி யாக சாலைக்கு அனுப்பி அங்குள்ள அனைவருடைய.
தலைகளையும் வெட்டி வீழ்த்துமாறு கட்டளையிட்டு அனுப்பினார் .தமது எஜமானுருடைய ஆனையை நிறைவேற்றும் வகையில் அக்கினி வீரபத்திரர் கடுமையான தீப்பிழம்புடன் தட்சப்பிரஜாபதியின் யாக சாலைக்கு சென்று அங்கு வருகை தந்துள்ள அனைவருடைய தலைகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வீழ்த்திக் கொண்டே வந்தார் . முதல் தலை கொய்யப்பட்டது . தட்சப்பிரஜாபதியின் தலையா க இருந்தது . வாயு வேகத்தில் அக்கினி வீரபத்திரர் அந்த யாக சாலைக்கு வருகை தந்த அனைவருடைய சிரங்களையும் கொய்து கொண்டு வரும் , வகையில் அந்த யாகத்துக்கு வருகை தந்த அசுர குரு சுக்கராச்சாரியார் அக்கினி வீரபத்திரருடைய போக்கினைக் கண்டு பீதி அடைந்தார் . நிலைமை தன் வரையில் வருவதற்குள் சுக்கராச்சாரியார் அக்கினி வீரபத்திரரிடம் சென்று இரு கரம் கூப்பி வணங்கி , ஒரு வேண்டுகோள்
'நவக்கிரக பரி பாலனத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய பதவியை வாங்கிக் கொடுக்கின்றேன் என்பதால் என்னை மட்டும் இம்சிக்காமல் விட்டு விடும் , " என்று ரகசியமாக விடுத்தார் . பதவி ஆசைக்கு அடிமையான வீரபத்திரர் , தமது கடமையை மறந்து பிரதி பலன் கருதி , சுக்கிராச்சாரியா ருடைய தலையை வெட்டி வீழ்த்தாமல் அவரை அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு வழி செய்து விட்டார் . இதனை ஆகாயத்திலுள்ள சூரியன் பார்த்து , " அக்கினி வீரபத்திரா ! நீ உனது கடமையை பதவி ஆசைக் காரண மாகப் புறக்கணித்து விட்டாய் ! ஒரு வேளை நீ நவக்கிரகப் பரிபாலனத்தில் இடம் பெற்று , உனது நிர்வாகத்தை நடத்தும் சமயத்தில் , நான் உனக்கு பழி தீர்க்கும் வகையில் ஏதாவது ஒரு குறைப்பாட்டை செய்யாமல் விடமாட்டேன் , ' ' என்று எச்சரிக்கை செய்தார் . அக்கினி வீரபத்திரருடைய பணி முடிந்த சில காலத் திற்குப் பிறகு , அவர் சுக்கிராச்சாரியாருடைய வாக்குறுதிப் படி , நவக்கிரக பரிபாலனத்தில் அந்த அக்கினி வீரபத்திரர் உத்தியோகக் காரகம் வகிக்கும் வகையில் இடம் பெற்றார் . பிற்காலத்தில் அவர் அங்காரகன் என்று பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது .
சூரியன் அங்காரகனுடன் கூடியிருக்கும் ஜாதகத்தில் சூரியன் அங்காரகனைப் பழி தீர்க்கும் வகையில் அந்த ஜாதகருக்கு உத்தியோகத்துறையில் ஏதாவது ஒரு குறைப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என்பது அவரவர் அனுபவத்தில் கண்டு வரும் உண்மையாகவே அமைகிறது .
அங்காரகனுடைய தந்தை " பாரத்துவாசர் " இராமயண காலத்தில் வாழ்ந்தவராவார் . ஸ்ரீராமபிரான் சீதா - லட்சுமண சமேதராய் , காணகத்தில் , ஆரண்ய வாசம் செய்த காலத்தில் , பரத்துவாசர் , விந்தியமலைப் பருவத்தைச் சார்ந்த காட்டில் , நர்மதா நதிக் கரைையில் ஆஸ்ரமம் அமைத்துத் தவமியற்றி வந்தார் .
ஸ்ரீராமபிரான் , இராவணா வதத்தை முடித்துக் கொண்டு , விபூஷண ஆழ்வார் சகிதம் , தமது படையுடன் புஷ்பக விமானத்தில் அமர்ந்து , அயோத்திய மாநகரை நோக்கி வான மார்க்கத்தில் பிரயாணம் செய்த சமயத்தில் பரத்துவச முனிவர் அவர்களைக் கீழே இறக்கி , தம்மிடமுள்ள காமதேனுவின் அனுக்கிரகத்தினால் , அனைவருக்கும் , இதமான விருந்தளித்து வழி அனுப்பினார் . விஷ்ணு அம்சமான ஸ்ரீராமபிரானுக்குத் தமது இல்லத்தில் விருந்தளித்த பரத்துவாசருக்கு அருந்தவட் புதல்வராய்ப் பிறந்த மங்களன் என்னும் அங்காரகன் , நவக்கிரமா பாலவனத்தில் மிகவும் முக்கியமான அங்கம் வசித்து இருக்கிறார் என்று சொல்லுவது பெருமளவு பாராட்டுக் குறியதாகும் . இத்தகைய அங்காரகனுக்குத் தமிழ் கடவளாம் முருகப் பெருமான் அதிதேவதையாக அமைந்தது அதைவிட பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியதாக அமைகிறது .
நன்றி நவகிரக புரணம்
Comments
Post a Comment