பூர்வ புண்ணியம் & புத்திர பாக்கியம்

 பூர்வ புண்ணியம் சிறந்த மனத்திறனா?  புத்திரபாக்கியமா  ?


ஏழு பிறப்பும் தீயனை தீண்டா பழிபிறங்கா

 பண்புடை மக்கள் பெறின் . 

             மனிதனின் விதி நமது மனோபலத்தால் தீர்மானிக்கப்படுகிறது . மனிதப்பிறப்போ , இல்லை வேறு உயிர்களின் பிறப்புகள் ஒரு உயிரின் பயணத்தில் அது தன் செயல்களால் தீர்மானித்துக் கொள்கிறது .அது பஞ்ச பூதங்களும் ( நீர்-நிலம்-நெருப்பு , ஆகாயம்-காற்று சம அளவில் ஒன்றுபட்டு நிற்கும் போது ஒருவித ஜீவசக்தி உருவாகின்றது .இதுதான் உயிர் .

      இதில் ஒன்று விடுபட்டாலும் மற்றவை செய்லிழந்து விட்டால் ஜீவசக்தி மறைந்துவிடும் . நமது முன் வினைக்கு ஏற்ப பஞ்ச பூதங்களின் கலவைகளில் உருவாக்கப்படுகிறோம் . இதில் நாம் செய்யும் நற்செயலை நல்வினை என்றும் , தீய செயலை தீயவினை என்று குறிப்பிடுகிறோம் . அவை எந்த வினையாக இருந்தாலும் அது அதற்குரிய பலனை தராமல் அது நம்மை விடுவதேயில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் .

      ஒரு மனிதன் தன் சித்தத்தால் செய்யும் இச்செயல் அவனுக்குள்ளேயே பதிவாகிறது . அந்த பதிவுகள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்பவே எண்ணங்கள் தோன்றும் . எண்ணமே நமது செயலாகும் . அது மட்டுமல்ல நம் எண்ண அலைகள் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது . நமது பிள்ளைகள் யாரோ இல்லை , அவர்கள் நமது ரத்தம் , நம்முடைய பிரதிகள் , நமது சொத்தும் , பாசமும் அவர்களுக்கு வேண்டும் . ஆனால் நமது பாவ புண்ணியங்களிலும் பங்கு உண்டு .    

      இவை சரீர ரீதியாகவே ரத்த சம்பந்த முடையவர்கள் இடையே ஒருவித இணைவு அலை இருக்கிறது . அன்பு பாசத்தை மட் டும் கடத்து தில்லை . வினைச்செயலையும் இணைந்தே கடத்துகிறது .

       இந்த பாவமும் , புண்ணியமும் நம் செயல் பாடுகளால் நம்முயற்சியே பதிவாகி நம்மை அவைகளே ஆட்சி செய்கின்றன என்பதை நாம் நினைவில் கொளவது அவசியம் .

     மனிதனின் வாழவு தனக்காக என்றும் பிறருக்காக என்றும் மாறுவது குடும்ப உறவுகளில்தான் . ஆக நாம் தவறு செய்தால் நம் குடும்பம் கஷ்டப்படும் எனும் பொழுது நாம் மிக யோசிப்போம் . அதே சமயம் அவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றும் அவர்களுக்காகவது . நாம் தவறுகள் செய்யாமல் நெறியோடு வாழ முயலுவோம் . 

     இதை கர்மா , தர்மத்தாலும் , ஆன்மீக பலத்தால் மட்டுமே இதனை மாற்றமுடியும் . 


ஜோதிடம் மூலம் புத்திரபாக்கியம் அமையுமா ? அமை யாதா என்பது பற்றிய ஆய்வு 

ஜாதகம்  NO ;- 1

a ) 5 ல் குருவிலிருந்து  5 ம் அதிபதி சுபவர்கமாக இருந்தால் புருஷவந்தியா தோஷம் எனப்படும் .ஒரு புதல்வன் மட்டும் பிறக்கும் வேறு குழந்தை பிறக்காது .

    இவரது ஜாதகத்தில் 5 ல் குரு உச்சம் . சந்திரன் ஆண் ராசியில் ( 5 ஆம் அதிபதி ) சூரியன் , செவ்வாய்யுடன் உள்ளனர் .சுய பலத்துடன் உள்ளனர் . இவருக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார் . 

  இவருக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளார் .ஆனால் 6 ஆம் . 8 ஆம் அதிபதிகள் 5 ஆம் பாவதத்திற்கு தொடர்புடன் உள்ளதால் புத்திரால் நன்மையில்லை .



   ஜாதகம் NO ;- 2 

     b ) | 5 ல் சுக்கிரன் சந்திரன் இருந்து 5 ஆம் அதிபதியே அதிக பல முள்ளவனாய் இருந்தால்  ஸ்திரிவந்தியா தோஷம் எனப்படும் .அதாவது பெண் குழந்தை மட்டும் பிறக்கும் 

  இவரது ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி குரு பெண ராசியில் அதன் அதிபதி புதன் , சுக்கிரன் . சந்திரனுடன் இணைந்துள்ளது . அதன் அதிபதியும் பெண் ராசியில் உள்ளது . பெண் கிரகத்தின் ஆதிக்கத்தின் தன்மை அதிகம் உள்ளது . இவருக்கு பெண் குழந்தை மட்டும் உள்ளது . ஆண்குழந்தை பிறக்கவில்லை . 



ஜாதகம் NO ;- 3 

சந்திரன் சனி செவ்வாய் இவர்களின் தொடர்பு லக்கினத்திற்கு ( அ ) 5 ஆம் அதிபதிக்கு இருந்தாலும் ( அ ) 5 ஆம் பாவத்திற்கு 6 , 8 , 12 ஆம் அதிபதியின் தொடர்பிருந்தாலும் குரு  நீச்சம் , வக்கிரம் , அஸ்தமனம் , பெற்றிருந்தால் மிருகவந்தியா தோஷம்  எனப்படும் . இந்த தோஷம் அமைந்தவர்கள் குழந்தை கள் பிறக்க பிறக்க இறந்துவிடும் . ஒருவித மலட்டுத்தன்மை .

   இவரது ஜாதகத்தில் குரு வக்கிரகதியுள்ளார் 5 ஆம் பாவத்தை 8 ஆம் அதிபதி செவ்வாய் பார்க்கின்றார் . சனி சந்திரன் இணைந்துள்ளார்கள்.5 ஆம் பாவத்திற்கு வக்கிர குருவின் பார்வையும் உள்ளது . குருவுக்கும் 8 ஆம் அதிபதியின் பார்வை உள்ளது . 5 ஆம் பாவத்திற்கு 6 , 8 ஆம் அதிபதிகளின் தொடர்புள்ளது . இவருக்கு 2 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டது . 



ஜாதகப் NO ;- 4 

   5 ஆம் அதிபதி சனியாலும் ( அ ) 5 ல் சனி , குளிகன் . கூடியிருந்தாலும் , பார்த்தாலும் ( அ ) 5 ல் அதிபாபிகள் இருந்தாலும் ,5 ஆம்  பாவதிபதி நீசம் , வக்கிர அஸ்தமனத்தில் இருந்தாலும் குருவுக்கு ( அ ) லக்கினத்திற்கு  சந்திரனுக்கு 5 ல் அதிபாபிகள் இருந்தாலும்  ஸாசஷவந்தியா தோஷம் இந்த தோஷத்தில் பிறந்த பர்களுக்கு புத்திரபாக்கியம் அமைய வாய்ப்பில்லை . திரு எம்.ஜி.ஆர் அவர்களது ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி 12 ல் வக்கிரகதியுடன் அவர் இருந்த வீட்டின் அதிபதி சனியும் வக்கிரகதியுடன் உள்ளார். 5 ஆம் வீட்டில் கேது உள்ளார். 5 ஆம் அதிபதியும் பாவிகளுடன் உள்ளார். இவருக்கு புத்திர பாக்கியம் எட்டாக்கனியாகி விட்டது என்பதை அனைவரும் அறிவேம்.



இனி வேறு சில அமைப்புகள் : 

a)  ஜாதகத்தில் குரு , லக்கினாதிபதி 5,7 ஆம் அதிபதிகள் நீச்சம் , பலவீனமாகவோ ( அ ) அசுயவர்களின் பார்வை பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் இல்லை . 

b)  5 ல் சனியிலிருந்து குருவுடன் ராகு தொடர்பு ஏற்பட்டால் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடும் . 

 C ) லக்கினத்தில் சூரியன் 7 - ல் சனி ( அ ) சூரியன் , சனி கூடியிருந்தாலும் புத்திர பாக்கியம் கிட்டாது . 

d ) 10 ல் சந்திரன் இருந்து குருவின் பார்வையில்லை என்றால் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் அமையாது . 

e ) 1 , 4 , 7 , 10 , 5. 9 ஆம் வீடுகள் சுபர் பார்வை தொடர்பிருந்தால் புத்திர பாக்கியம் என்றேனும் அமையும் . 

f ) செவ்வாய் ஆட்சி உச்சம் , சுயசாரம் பெற்றிருந்தால் கருமம் செய்ய ஒரு புத்திரர் உண்டு . 

g ) 5 ஆம் அதிபதி 5 ல் சுபருடன் கூடியிருந்தாலும் , சந்திரன் கக்கிரன் , புதன் , குரு கூடியிருந்தாலும் , குரு சுப பலமுடன் இருந்தால் புத்திரன் அமையும் .

 1 ) லக்கினம் , சந்திர லக்கினம் , இவற்றிற்கு 5 ஆம் அதிபதிகள் குரு மூவரும் 2 , 3 , 4 , 5 , 7 , 9 , 10 , 11  ஆம் பாவங்களில் இருந்தால் ( அ ) 5 ல் முன் கூறிய பாவாதிபதிகள் இருந்தாலும் சுபர் தொடர்பிருந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் .

முன்னான்கிற்றேரவது முன்றிவரி லாபத்தில்

 நன்னாள் கிற் குருமதியும் " கேடிடினும் - பின்னலே

 ஒன்றைந்து ஒன்பதிலே யோ பளிங்கு நின்றிடினும் என்றைந்து பிள்ளையுண்டாமே

   ( இ - ள் ) 12 ல் சூரியனுருக்க , 1 1 ஆம்  இடத்திலாவது 3 - இடத்திலாவது ( அ ) 4 -ஆம்  இடத்திலாவது குருவும் , சந்திரனும் கூடி நிற்க லக்கினம் 5 -  9 - ஆம் இடத்தில் சுக்கிரன் நிற்கப் பிறந்தவர் . 5 பிள்ளைகளைப் பெற்றெடுப்பார்கள் .

அஞ்சு ஒன்பதில் ஒன்றில் அதற்குடைய யோர்தான் பலமாய் , மிஞ்சு கண்டங்கோணம் 

மிகவேறிடவே அஞ்சுலுடன் ஒரே சான்றள் வைத்து உட்பார்த்து புத்திரர்கள் நேராடும் என்பதறி 

( இ - ள் ) லக்னாதிபதி ஐந்தாமிடத்ததிபதி ஒன்பதாம் அதிபதி மூவரும் பலம் பெற்று திரிகோண கேந்திரங்களில் இருக்க குருவலுவுடன் இருந்து பார்க்கப் பிறந்தவர் மகாபலசாலிகளான அநேகம் பிள்ளைகளைப் பெறுவார்கள் . 


ஒன்று ஒன்பதுக்கு உடையோர் எழில் இருக்க மண்னுலகில் வாக்கேசன் வாழு யிரில் அன்றி ஒரஞ்சுக்குடையோன் உட்பலத்தக குருநோக்கி ஈரஞ்சு புத்திரராமென் 

  ( இன் ) லக்கினாதிபதியும் 9 - ஆம் அதிபதியும் 7 - ல் இருக்க , 2 - ஆம் அதிபதி லக்கினத்திலிருக்க 5 ஆம் அதிபதி பலமுடன் இருக்க இவர்கள் குரு பார்த்தால் 10  பிள்ளைகளைப் பெற்று வாழ்வார்கள் . 


தண்டு சிலையூயிராய் தாய் வேந்தனும் மதியும் 

கொண்டரவியும் இடத்தில் கூடினால் ஒண்டொடியே 

காரணமாயிரட்டையான் காதலுடனே பிறக்க 

ஆரணரே சொன்னதறி 

  (இள் ) மிதுன ராசி , தனுசு ராசி லக்கினமாக இருந்து கும்ப ராசியில் சந்திரனும் குருவும் கூடியிருக்கப் பிறந்தவர் இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கும் இரண்டு பேரும் வளமுடன் வாழ்வார்கள் , 


கன்னியா லக்கினமாய் கதிரவன் சேய்மதி கூடில் 

உன்னுங்கொடியர் சுபர் உள்நோக்கில் முன்னேழில்

மதிமகனே நிற்கில் மாறாமல் பெண் இரட்டை 

துதி பெறவே தோன்றிய தாய் சொல்

  ( இ - ள் ) கன்னியா லக்கினத்தில் சூரியன் . சந்திரன் , செவ்வாய் , கூடியிருக்கிற இவர்களை சுபகிரகங்களும் பார்க்க , பாப கிரகங்களும் பார்க்க 7 - ல் புதன் இருக்கப் பிறந்தவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள்  பிறக்கும்.

   லக்கினாதிபதி ரிசபம் , துலாம் , மிதுனம் , கன்னி , மகரம் , கும்பம் ,கடகம் ஆகிய ராசிகளில் ஒன்றில் இருந்தாலும்,  அலி மற்றும் பெண் கிரக ராசிகளில் ஒன்றில் இருப்பதும் , புதன் சனி , ராகு , கேது 6 , 8 , 12 ம் அதிபதிகள் இவர்களுடன் கூடியிருந்தால் ( அ ) பார்க்கப் பட்டாலும் நிச்சயமாக ஆண் குழந்தை ஏற்பட வாய்ப்பில்லை . 

   லக்னம் , லக்கினாதிபதி 5 - ஆம் அதிபதி 5 - ஆம் பாவம் , பெண் கிரகங்களாகி சந்திரன் , சுக்கிரன் மற்றும் அலி கிரகங்களாகிய புதன் , சனி , ஆண் கிரகங்களாகிய சூரியன் , செவ்வாய் , குரு இவர்களது ராசியில் இடம் பெற்றாலும் நீச்ச ராசியிலோ 6 , 8 , 12 ல் இருந்தாளும் கெட்டால் நிச்சயம் பெண் குழந்தை ஏற்பட வாய்பில்லை.

சூரியஜெயவேல் 9600607603




Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்